Showing posts with label Current Affairs - 2020. Show all posts
Showing posts with label Current Affairs - 2020. Show all posts

11/29/2020

Current Affairs Questions for All Competitive Exams

11/29/2020 0
Current Affairs Questions for All Competitive Exams

 Q.1. When is Indian organ donation day celebrated?

Answer: 27 November

Q.2. Where has MG Motor in association with Tata Power launched the first Superfast EV charging station?

Answer: Agra

Q.3. Which state has launched the Abhayam app for the safety of women travelers?

Answer: Andra Pradesh

Q.4. Which film has been counted as India's official entry for the Oscars?

Answer: Jalli Kattu

Q.5. Who has been appointed as the new Director General of Border Roads Organization?

Answer: Rajiv Chaudhary

Q.6. Who topped the released FIFA ranking?

Answer: Belgium

Q.7. Which company has appointed 'Michael Clarke' as its new CO?

Answer: Hero Motocorp

Q.8. Who has launched the Climate Change Knowledge Portal?

Answer: Prakash Javadekar

Q.9. Which version of the National Science Film Festival was launched in a virtual twist?

Answer: 10 way

Q.10. Foreign Minister 'S Jaishankar' has gone on a two-day visit to which country?

Answer: Seychelles

10/18/2020

TNPSC Current Affairs 2019 and 2020 Download Tamil PDF

10/18/2020 1

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Monthly Edition and Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS since 2015. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service commission examinations. Presently, we (TNSPC MASTER) update most important notes published everyday for Current Affairs Sections. All the best...


Current Affairs 2020 Download PDF


TNPSC Current Affairs September 2020

TNPSC Current Affairs Important Notes 20.10.2020
TNPSC Current Affairs Important Notes 19.10.2020

TNPSC Current Affairs September 2020


TNPSC Current Affairs August 2020



TNPSC Current Affairs Important Notes: 17.10.2020 & 18.10.2020

10/18/2020 0
TNPSC Current Affairs Important Notes: 17.10.2020 & 18.10.2020
நம்பகமான செய்திகளை தருவதில் அச்சு ஊடகம் முதலிடம்: ஆய்வில் தகவல்
  • நம்பகமான செய்திகளை வழங்குவதில், அச்சு ஊடகங்கள் முதலிடம் வகிப்பதாக, ‛சி - வோட்டர்' நடத்திய ஆய்வில் 66 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மக்கள் அதிகம் சார்ந்திருப்பது காட்சி ஊடகமா? அல்லது அச்சு ஊடகமா? என்ற ஆய்வு, ‛சி - வோட்டர்' சார்பில் நடத்தப்பட்டது. இதில் அச்சு ஊடகங்கள் நம்பகமான செய்திகளை தருவதாக, 66 சதவீதம் கூறியுள்ளனர். குறிப்பாக கொரோனா பரவல் காலகட்டத்தில், அச்சு ஊடகங்களில் வரும் செய்திகள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருப்பதாக 63 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
பூர்வகுடிகள் பட்டியலில் படுகர் மக்கள் சேர்ப்பு : ஐ.நா., அறிவிப்பு
  • நீலகிரி படுக மக்களை பூர்வகுடியினருக்கான பட்டியலில் சேர்த்து, ஐ.நா., மலைகளுக்கான கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின், மலைகளுக்கான கூட்டமைப்பு, உலக பூர்வகுடியினருக்கான பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. 'நீலகிரி ஆவண மைய காப்பகம்' சார்பில், நீலகிரி படுக சமுதாயம், உலக பூர்வகுடியினருக்கான பட்டியலில் இடம்பெற வேண்டி, அனைத்து ஆவணங்களுடன், விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகளின் மலைகளுக்கான கூட்டமைப்பு, விண்ணப்பத்தை ஏற்று, அக்., 12ல், படுகர் சமுதாயத்தை உலக பூர்வ குடியினர் பட்டியலில் இடம்பெற செய்தது. அதற்கான அறிவிப்பு சான்றிதழை, படுகர் இன தலைவர் அய்யாரு, நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து வழங்கினர்.
விவசாய கழிவுகளை எரிப்பதை தடுக்க குழு
  • விவசாய கழிவுகளை எரிப்பதை தடுக்க, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, மதன் பி லோக்குர் தலைமையில், ஒரு நபர் குழு அமைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு ஆணையம், ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், லோக்குர் குழுவுக்கு தேவையான உதவிகளையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டும். இந்த குழு, கள நிலவரங்களை ஆய்வு செய்து, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
நியூசிலாந்து பொது தேர்தல்: ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் வெற்றி
  • நியூசிலாந்தில் பொதுதேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி நேரடியாக எதிர்கொண்டது. அதில், பிரதமர் ஜெசிந்தாவின் ஆளும் தொழிலாளர் கட்சி 49 சதவிகித ஓட்டுக்களை பெற்று அபார வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி 27 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. பார்லிமென்டில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஜெசிதாவின் ஆளும் கட்சி கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டெர்ன் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார்.
ரஷ்ய தடுப்பு மருந்தை இந்தியாவில் பரிசோதிக்க ஒப்புதல்
  • ரஷ்யா உருவாக்கியுள்ள ‛ஸ்புட்னிக்-வி' தடுப்பு மருந்தை இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதனை செய்ய டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அமைப்பு(டிசிஜிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், முதலாவதாக ரஷ்யா மட்டும் கொரோனா வைரசுக்கு ‛ஸ்புட்னிக்-வி' என்ற மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது. இந்த மருந்தின் பாதுகாப்பு குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இந்த மருந்து தற்போது 3ம் கட்டமாக 40 ஆயிரம் பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 
  • இந்த மருந்தை இந்தியாவில் பரிசோதனை செய்யவும், விற்பனை செய்யவும் ரஷ்யாவுடன், இந்தியாவை சேர்ந்த டாக்டர் ரெட்டி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, 10 கோடி டோஸ் மருந்தை டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு ரஷ்யா வழங்கும்.
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 10 ஆண்டுகள் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்
  • இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக 10 ஆண்டுகள் அதிகரித்து உள்ளதாக லான்செட் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 1990ம் ஆண்டு 59.8 ஆக இருந்த சராசரி ஆயுட்காலம் 70.8 ஆண்டுகளாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது. லான்செட் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையின் படி, இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 1990 ல் 59.6 ஆண்டுகளில் இருந்து 2019 ல் 70.8 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இருப்பினும், கேரளா போன்ற பல மாநிலங்களுக்கிடையில் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கேரளாவில் ஆயுட்காலம் 77.3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. மறுபுறம், உத்தரபிரதேசத்தில் 66.9 ஆண்டுகளாக இருந்தது.
  • இந்தியாவில் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருப்பதில் இதய நோய் 5வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது முதலிடத்தில் உள்ளது. மேலும் புற்றுநோய் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 10.67 லட்சம் இதய நோய்களாகவும், உயர் இரத்த அழுத்தம் (10.47 லட்சம் இறப்புகள்), பபுற்றுநோய் (10.23 லட்சம் இறப்புகள்), உணவு பிரச்சனைகள் (10.18 லட்சம் இறப்புகள்), மற்றும் உயர் இரத்த சர்க்கரை அளவு (10.12 லட்சம் இறப்புகள்) காரணமாக உள்ளது.
பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து விரைவில் முடிவு-பிரதமர் மோடி அறிவிப்பு
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 
  • பிரதமர் மோடி கடந்த சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது, இது பற்றி ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டுவிழாவையொட்டி, ரூ.75 மதிப்புள்ள நினைவு நாணயத்தை காணொலி காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பெண்களின் திருமண வயது, ஊட்டசத்து குறைபாடு, விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து குறிப்பிட்டார்.
குளிர்சாதனப் பெட்டி இறக்குமதிக்கு தடை : மத்திய அரசு அறிவிப்பு
  • வெளிநாடுகளில் இருந்து குளிர்சாதனப் பெட்டி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்தியாவில் கிடைக்கும் சில பொருட்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்து வருகிறது. முன்னதாக கார்கள், பேருந்துகள், லாரிகள், பைக்குகளில் பயன்படுத்தப்படும் டயர்கள், டிவி உள்ளிட்ட பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், தற்போது குளிர்சாதனப்பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
  • இதன்படி ஏர் கண்டிஷனர் எனப்படும் குளிர்சாதனப் பெட்டிகளை இறக்குமதி செய்ய தடை விதித்து, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. ஏர் கண்டிஷனர் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் கம்ப்ரஸர் உள்ளிட்ட பொருள்கள் சீனா மற்றும் தாய்லாந்திலிருந்து சுமார் 90% இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் தற்போது ஏசி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த இரு நாட்டு வர்த்தகமும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய பசி குறியீட்டு 2020 பட்டியலில் இந்தியாவுக்கு 94 வது இடம்!
  • 2020 ஆம் ஆண்டில், உலகளாவிய பசி குறியீட்டில் 107 நாடுகளில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது. உலகளாவிய பசி குறியீட்டு 2020 (Global Hunger Index 2020) இல் 107 நாடுகளில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 27.2 மதிப்பெண்களுடன், இந்தியாவில் பசி அளவு உள்ளது, அது "தீவிரமானது". கடந்த ஆண்டு 117 நாடுகளில் இந்தியாவின் தரவரிசை 102 ஆக இருந்தது.
  • இந்த குறியீட்டில், நேபாளம் (73), பாகிஸ்தான் (88), பங்களாதேஷ் (75), இந்தோனேசியா (70) ஆகியவற்றுக்கு பின்னால் இந்தியா இடம்பெற்றுள்ளது. மொத்த 107 நாடுகளில், ருவாண்டா (97), நைஜீரியா (98), ஆப்கானிஸ்தான் (99), லைபீரியா (102), மொசாம்பிக் (103), சாட் (107) உள்ளிட்ட நாடுகள் உட்பட இந்தியாவை விட 13 நாடுகள் மட்டுமே மோசமானவை. அந்த அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள்.

10/16/2020

TNPSC Current Affairs Important Notes: 15 10.2020 & 16.10.2020

10/16/2020 0
TNPSC Current Affairs Important Notes: 15 10.2020 & 16.10.2020
மியான்மருக்கு நீர்மூழ்கி கப்பலை வழங்குகிறது இந்தியா
  • ஐஎன்எஸ் சிந்துவிர் என்ற நீர்மூழ்கி கப்பலை மியான்மருக்கு வழங்க இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்மையில் ராணுவத்தளபதி மனோஜ் நரவானேவின் மியான்மர் சுற்றுப்பயணத்தின் போது, ராணுவ தளவாடங்களை வழங்க இந்தியா ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அந்நாட்டுக்கு நீர்மூழ்கி கப்பலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  ‛மியான்மரின் ராணுவத்தில் இதுவே முதலாவது நீர்மூழ்கி கப்பல் ஆகும். அண்டை நாடான மியான்மருடன் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான முயற்சி இது'
ஆஸ்கர் விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் பானு அத்தையா காலமானார்
  • காந்தி திரைபடத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது பெற்ற பானு அத்தையா,91 உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார். மும்பையைச் சேர்ந்த இவர் "சி. ஐ. டி."(1956) என்ற இந்தி திரைப்படத்தில் ஆடை வடிவமைப் பாளராக அறிமுகமாகி , முன்னணி பாலிவுட் ஜாம்பவான்களான குரு தத், யஷ் சோப்ரா, ராஜ் கபூர் போன்றவர்களின் படங்கள் என 100 -க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 1983ம் ஆண்டு, இயக்குனர் ரிச்சர்டு ஆட்டென்பரோ இயக்கத்தில் வெளியான, "காந்தி' படத்தில், சிறந்த ( ஆடை வடிவமைப்பாளர் ) காஸ்ட்யூம் டிசைனுக்காக பானு அத்தையாவுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தனது 50 வருட சினிமா வாழ்வில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
அமெரிக்க தமிழர் விளக்கு விருதுக்கு கலாப்ரியா, பேரா.பஞ்சாங்கம் தேர்வு
  • அமெரிக்க வாழ் தமிழர்களின் விளக்கு இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் புதுமைப்பித்தன் நினைவாக கலை - இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பாளர்களுக்கு விருது வழங்குகின்றனர். ஏற்கனவே விளக்கு விருது சி.சு.செல்லப்பா, பிரமிள், பூமணி, தேவதச்சன் உள்ளிட்ட சிறந்த படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக ஒரே ஆண்டில் இருவருக்கு வழங்குகின்றனர். 2019 ஆண்டுக்கான விளக்கு விருது தேர்வு குழு உறுப்பினர்கள் எழுத்தாளர் திலகவதி, பேரா.சு.சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகியோர் கவிஞர் கலாப்ரியா, பேராசிரியர் க.பஞ்சாங்கம் ஆகியோரை விருதுக்கு தேர்வு செய்தனர்.
தமிழக அரசு கூடுதலாக ரூ.9,627 கோடி கடன் வாங்க அனுமதி
  • தமிழக அரசு கூடுதலாக ரூ.9,267 கோடி கடன் வாங்கி கொள்ள மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜிஎஸ்டி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. இதனை உடனடியாக வழங்கும்படி மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்துக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான ரூ.4 ஆயிரத்து 321 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. மாநிலங்களுக்கான இழப்பீடுகளை அளிப்பது தொடர்பாக, சமீபத்தில் நடந்த கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்த இழப்பீட்டுத் தொகையை, மாநிலங்கள் கடனாக பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன.
சிவகங்கை அருகே பெருங்கற்கால கல்வட்டம் கண்டுபிடிப்பு!
  • சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர், அண்ணாநகர் பகுதியில் 2,500 முதல் 3,500 ஆண்டுகள் பழமையான சங்க காலத்தோடு தொடர்புடைய கல் வட்டங்கள் உள்ளன. ஒக்கூர் மாசாத்தியார் பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. மாசாத்தியார் காலத்து ஈமக்காடாக இந்த கல் வட்டங்கள் இருந்திருக்கலாம். மலைப்பகுதியில் வெள்ளைக்கல், மற்ற செம்மண் பகுதிகளில் செம்பூரான் கற்களால் கல் வட்டங்கள் அமைக்கப்படும். ஆனால் இவ்விடத்தில் 2 கற்களும் கலந்துள்ளது வியப்பாக உள்ளது.
  • பெருங்கற்காலத்தில் இறந்த மனிதனை புதைத்து சடங்குகள் முடித்து வழிபட்டு வந்தனர். இறந்த உடலை அல்லது எலும்புகளை பாதுகாக்க புதைத்து அதைச்சுற்றி பெரும் கற்களை அடுக்கி வைத்துள்ளனர். இவ்வாறான கல்வட்டங்கள் பல பகுதிகளில் காணக் கிடைக்கின்றன. பலகை கற்களை நான்கு பகுதிகளிலும் குத்தாக்க நிறுத்தி வைத்து அறை போல வடிவமைத்து, அதில் உடல் அல்லது எலும்புகளை வைக்கும் முறை கற்பதுக்கை என வழங்கப்படுகிறது. 
ஜி.எஸ்.டி. வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட மாநிலங்கள் சார்பில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்குகிறது
  • பொருளாதார மந்தநிலை காரணமாக, கடந்த நிதி ஆண்டில் இருந்தே மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் வீழ்ச்சி அடைய தொடங்கியது. மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க சொகுசு பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் மீது விதிக்கப்படும் உபரிவரி மூலம் கிடைக்கும் வருவாயை மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஆனால், அந்த வருவாயும் குறைந்து விட்டது. அதனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம்வரை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டு நிலுவைத்தொகை ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் கோடியாக உள்ளது.
  • இந்த இழப்பீட்டு நிலுவையை ஈடுகட்ட ரிசர்வ் வங்கி மூலமோ அல்லது வெளிச்சந்தையில் இருந்தோ கடன் வாங்கிக்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு 2 விருப்ப தேர்வுகளை மத்திய அரசு முன்வைத்தது. அதில், வெளிச்சந்தை கடன் விருப்ப தேர்வை 21 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன. அந்த மாநிலங்கள், வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக ரூ.68 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது. அனைத்து மாநிலங்களும், தற்போதைய கடன் வரம்புக்கு மேல் கூடுதலாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்க யோசனை தெரிவித்தோம். இந்த தொகையை மாநிலங்கள் சார்பில் மத்திய அரசே வெளிச்சந்தையில் கடன் வாங்கும். பின்னர், ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்கு பதிலாக, மாநிலங்களுக்கு அந்த பணம் கடனாக வழங்கப்படும்.

10/14/2020

TNPSC Current Affairs Important Notes: 14.11.2020

10/14/2020 0
TNPSC Current Affairs Important Notes: 14.11.2020
பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய்
  • விண்வெளியில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரிய நிகழ்வு  14.10.2020 அன்று வானில் நடைபெற உள்ளது. இதில் பூமி, செவ்வாய் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் சந்திக்க உள்ளது. மேலும் பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வருவதால் தொலைநோக்கி இல்லாமல் வெற்றுக்கண்களால் அந்த கிரகத்தை அமீரகத்தில் பார்க்க முடியும்.
  • பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40 கோடியே 13 லட்சம் கி.மீ தொலைவு ஆகும். இதில் நீள் வட்ட பாதை பயணத்தில் மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது இரு கிரகங்களுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. தொலைவாக இருக்கும். இந்த நீள்வட்ட பாதை தொலைவு காரணமாகவே பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர 365 நாட்களும், செவ்வாய் கிரகம் சூரியனை சுற்றி வர 687 நாட்களும் ஆகிறது.
40 கோடி வாடிக்கையாளர்களை பெற்று ரிலையன்ஸ் ஜியோ சாதனை
  • இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்கள பெற்ற முதல் நெட்வொர்க் நிறுவனம் என்ற சாதனையை ஜியோ படைத்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 35 லட்சம் பேரைத் தனது சேவைக்குள் இணைத்துள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது. தற்போது 40 கோடியே 8 லட்சத்து 3 ஆயிரத்து 819 வாடிக்கையாளர்களுடன் ஜியோ முதல் இடத்தில் உள்ளதாக டிராய் கூறியுள்ளது.
‛ஆரோக்கிய சேது' செயலிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
  • மத்திய அரசு வெளியிட்டுள்ள ‛ஆரோக்கிய சேது' செயலிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ், குறித்து விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்க, மத்திய அரசு ‛ஆரோக்கிய சேது' செயலியை அறிமுகம் செய்தது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் இந்த செயலியை வெளியிட்டுள்ளது. 
  • ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, வங்க மொழி, ஒரியா, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், நாம் வசிக்கும் இடம் அருகே கொரோனா வைரஸ், தொற்றுள்ள பகுதிகளை சுட்டிக்காட்டும். தொற்று பாதித்தவர்களை சந்திப்பதை தவிர்க்க முடியும். மேலும், கொரோனா வைரஸ் தொற்றில், இருந்து தற்காத்து கொள்வது குறித்து தகவல்களை வழங்கும்.
  • இந்த செயலி தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரஸ் அத்னோம் கூறியதாவது: ஆரோக்கிய சேது செயலியை இந்தியாவில் 150 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். சோதனையை இலக்கை எட்டவும், ஹாட்ஸ்பாட்டாக எதிர்பார்க்கக்கூடிய பகுதிகளை அடையாளம் காணவும் பொது சுகாதார துறைகளுக்கு இது உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு
  • பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்றங்களால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும். அதன்படி, பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.4 லட்சத்தில் இருந்து அதிகபட்ச இழப்பீடாக ரூ.7 லட்சம் வரை வழங்கப்படும். மிக கடுமையான பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும். பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை; கடுமையான பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை;
  • மறுவாழ்வு தேவைப்படும் அளவுக்கு மன ரீதியான அல்லது உடல் ரீதியாக கொடுங்காயம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை; ஆபாசப் படம் எடுக்கப்பட்டிருந்தால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை; பாலியல் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்துவிட்டால் குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை; பாலியல் குற்றத்தினால் கர்ப்பிணியாக்கப்பட்டால் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை; கர்ப்பிணியாக்கப்பட்டு, கரு கலைக்கப்பட்டு, கர்ப்பமாகும் தகுதியை இழந்துவிட்டால் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம், அதிகபட்சம் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
ஜி.எஸ்.டி. இழப்பீடு பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.68,825 கோடி கடன் திரட்ட 20 மாநிலங்களுக்கு அனுமதி
  • கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால், நடப்பு நிதியாண்டில், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை ஈடுகட்ட ரிசர்வ் வங்கி மூலம் ரூ.97 ஆயிரம் கோடி கடன் அல்லது வெளிச்சந்தையில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடி கடன் திரட்டுமாறு மாநிலங்களுக்கு 2 விருப்ப தேர்வுகளை மத்திய அரசு முன்வைத்துள்ளது. வெளிச்சந்தை கடன் விருப்பத்தேர்வை 20 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.
  • இந்த மாநிலங்கள், வெளிச்சந்தையில் இருந்து ரூ.68 ஆயிரத்து 825 கோடி கடன் திரட்ட மத்திய அரசு நேற்று அனுமதி அளித்தது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின துறை இந்த அனுமதியை அளித்துள்ளது.

10/13/2020

TNPSC Current Affairs Important Notes: 13.10.2020

10/13/2020 0
TNPSC Current Affairs Important Notes: 13.10.2020
நவீன அடிமைத்தனத்தால் ஆண்களை விட பெண்கள் அதிகமாக பாதிப்பு ; ஐ.நா அறிக்கை
  • நவீன அடிமைத்தனம் அனைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மை தான் என்றாலும், உலகெங்கிலும் உள்ள பெண்கள் பாதிக்கப்பட்டவர்களில் 71% பேர் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுகிறது. உலக அளவில் 130 பெண்களில் ஒருவர் நவீன அடிமைத்தனத்தில் இருக்கிறார். ஆசியாவிலும் பசிபிக் நாடுகளிலும் (73 சதவீதம்), ஆப்பிரிக்காவில் (71 சதவீதம்), ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் (67 சதவீதம்), அமெரிக்காவிலும் (63 சதவீதம்) என ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் நவீன அடிமைத் தனத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • உலகெங்கிலும் குறைந்தது 2.9 கோடி பெண்கள் மற்றும் சிறுமிகள் நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நவீன அடிமைத்தனம் என்பது பெரும்பாலும் பாலியல் வன்முறைகள் / பிரச்னைகளை சுட்டிக்காட்டினாலும், அதனுடன் கட்டாய திருமணங்கள், கடன்- கொத்தடிமை, கட்டாய உழைப்பு மற்றும் உள்நாட்டு அடிமைத்தனம் ஆகியவையும் அடங்கும். இது தொடர்பாக "அடுக்கப்பட்ட முரண்பாடுகள்" என்ற அறிக்கையில் ஐ.நா கூறுகையில், 99 சதவீத பெண்கள் / கட்டாய பாலியல் சுரண்டலால் பாதிக்கப் படுகின்றனர். மேலும் 84 சதவீதம் பேர் கட்டாய திருமணத்திற்கும், 58 சதவீதம் பேர் கட்டாய உழைப்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.
முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் 2ம் இடம்
  • ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்குவதற்காக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ள 14 நிறுவனங்களுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது குறித்து பழனிசாமி கூறுகையில், ‛தமிழக அரசு, இந்த கொரோனா காலத்திலும் ரூ.23,332 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது. முதலீடுகளை ஈர்க்கும் முதல் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது,' எனக் கூறினார்.
இந்திய எல்லைப்பகுதிகளில் கட்டப்பட்ட 44 பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
  • லடாக், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் எல்லைச் சாலை அமைப்பு சார்பில் கட்டப்பட்டுள்ள 44 பாலங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பொருளாதாரம்: அமெரிக்க நிபுணா்கள் இருவருக்கு நோபல்
  • பால்.ஆர்.மில்க்ரோம், ராபர்ட்.பி.வில்சனுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஏலக் கோட்பாட்டை மேம்படுத்தி புதிய ஏல வடிவங்களை கண்டுபிடித்துள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வணிகர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • கலிஃபோா்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பால் ஆா்.மில்குரோம், ராபா்ட் பி.வில்சன் ஆகியோா் ஏல நடைமுறைகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனா். ஏலம் தொடா்பான புதிய கொள்கைகளை அவா்கள் வெளியிட்டனா். அக்கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஏல நடைமுறைகளில் பல்வேறு புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • பால் ஆா்.மில்குரோம் முனைவா் பட்டத்துக்கான ஆய்வை ராபா்ட் பி.வில்சனுடைய மேற்பாா்வையின் கீழ் மேற்கொண்டாா். நோபல் பரிசுத் தொகையானது இருவருக்கும் சரிசமமாகப் பகிா்ந்து வழங்கப்படவுள்ளது.
  • பால் ஆா்.மில்குரோம் (72): ஏல நடைமுறைக்கான பொதுவான கொள்கையை பால் ஆா்.மில்குரோம் உருவாக்கினாா். அதில், ஏலம் விடப்படும் பொருள்களுக்கான மதிப்பை ஏலத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் எவ்வாறு கணிக்கின்றனா் என்பது தொடா்பான விளக்கங்களை அவா் வழங்கியிருந்தாா்.
  • ராபா்ட் பி.வில்சன் (83): ஏலத்தில் பங்கேற்போா், ஏலம் விடப்படும் பொருள்களின் கணிக்கப்பட்ட விலையை விடக் குறைவான விலைக்கு ஏலம் கேட்பது ஏன் என்பது குறித்து ராபா்ட் பி.வில்சன் ஆய்வு மேற்கொண்டாா். ஏலப் பொருள்களுக்கு அதிக விலை கொடுத்து இழப்பைச் சந்திக்க நேரிடுமோ என்ற எண்ணம் ஏலத்தில் பங்கேற்போருக்கு ஏற்படுவது ஏன் என்பது குறித்தும் அவா் ஆய்வு நடத்தினாா்.
மாநில அரசுகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன்: நிர்மலா அறிவிப்பு
  • மாநில அரசுகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டியின்றி கடனாக வழங்கப்படுவதாகவும், கடனை மாநில அரசுகள் திருப்பி செலுத்த 50 ஆண்டுகள் அவகாசம் அளிப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
  • பா.ஜ., கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே. 1919, அக்.,12ல் பிறந்த அவர், 2001, ஜன.,25ல் மறைந்தார். விஜயராஜே, பிறந்த தினத்தை முன்னிட்டு, ரூ.100 நாணயம் இன்று வெளியிடப்பட்டது. வீடியோ கான்பரன்சிங்கில் கலந்து கொண்டு பிரதமர் மோடி இந்த நாணயத்தை வெளியிட்டார்.

10/12/2020

TNPSC Current Affairs Important Notes: 12.10.2020

10/12/2020 0
TNPSC Current Affairs Important Notes: 12.10.2020
அமெரிக்கா, இங்கிலாந்தை தொடர்ந்து இந்திய குழந்தைகளை மிரட்டும் 'மிஸ்-சி'
  • அமெரிக்கா, இங்கிலாந்தை தொடர்ந்து 'மிஸ்-சி' என்னும் புதிய நோய் இந்திய குழந்தைகளை மிரட்ட துவங்கியுள்ளது. இதுவரை சென்னையில் 55, மதுரையில் 12 பேரை இந்நோய் பாதித்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்தில் அதிகளவில் தென்பட்டுள்ளது. இறுதியில் இந்திய குழந்தைகள் மீதும் 'மிஸ்-சி' தாக்குதல் தொடுக்க துவங்கியுள்ளது. இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் பாதிப்பு தென்படுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரையில் 'மிஸ்-சி' தாக்கிய குழந்தைகளை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இதுவரை 55 பேருக்கும், மதுரை அரசு மருத்துவமனையில் 12 பேருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. 
  • 'மிஸ்-சி' கைக்குழந்தை முதல் 14 வயது வரையிலான குழந்தைகளை குறி வைக்கிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு இப்பாதிப்பு தென்படுகிறது. இந்தியாவில் ஜூனில் தான் 'மிஸ்-சி' பற்றி கேள்விப்பட முடிந்தது. கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இப்பாதிப்பு நேரலாம் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் கொரோனாவை வீழ்த்தும் ஆன்டிபாடிகள் அவர்களது உடம்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வைரஸின் தொடர்ச்சியாக 'மிஸ்-சி' ஏற்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் கொரோனா தாக்கிய அனைத்து குழந்தைகளுக்கும் இப்பாதிப்பு நேர்வதில்லை. அபூர்வமாக சிலரை பாதிக்கிறது.
சீன-இந்திய ஒற்றுமையை வலியுறுத்தும் துவாரகநாத் பிறந்தநாள் விழா
  • சீனாவின் ஹூபே மாகாணத்தில் புகழ்பெற்ற இந்திய மருத்துவர் துவாரகநாத் சாந்தாராம் கோட்நிஸ்ஸின் சிலை உள்ளது. சீன அரசால் அதிகம் மதிக்கப்படும் இந்தியர்களில் ஒருவர் இவர். சீன-ஜப்பான் போரின்போது 1938-ஆம் ஆண்டு இவரது மருத்துவ பங்களிப்பே இதற்கு இதற்கு முக்கிய காரணம். 1938 முதல் 1942 வரை சீன-ஜப்பானிய போர் உச்சத்தில் இருந்தது. அப்போது சீனாவின் நட்பு நாடாக இருந்த இந்தியா சார்பாக ஐந்து மருத்துவர்கள் கொண்ட ஓர் குழு சீனாவுக்கு உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஒருவர்தான் துவாரகநாத். பயிற்சி பெற்ற சிறந்த இந்திய மருத்துவர்களில் ஒருவரான அவர் சீன ராணுவ படைக்கு உதவிகள் செய்துள்ளார். இதனால் சீனாவுக்கு அவர்மீது என்றும் தனி மரியாதை உண்டு.
  • இதில் துவாரகநாத் பங்களிப்பை போற்றும் வகையில் அவரது பிறந்த நாள் அன்று அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் சமீபத்திய லடாக் எல்லை பிரச்னை குறித்த ஓர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதுபோன்ற வேறுபாடுகளை களைந்து இந்தியாவும் சீனாவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என சீன-இந்திய நல்லுறவை விரும்பும் அமைப்பு தெரிவித்துள்ளது.
சாதனை படைக்கும் ஷிவாங்கி! 'ரபேல்' போர் விமானத்தின் முதல் பெண் விமானி
  • இந்திய விமானப் படையில், சமீபத்தில் சேர்க்கப்பட்ட, அதிநவீன, 'ரபேல்' போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற சிறப்பை பெறுகிறார், ஷிவாங்கி சிங், 25. இவரது சொந்த ஊர், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புண்ணிய ஸ்தலமான, வாரணாசி. தந்தை குமரேஷ்வர், சுற்றுலா நிறுவனம் நடத்தி வருகிறார். தாய் சீமா சிங், இல்லத்தரசி.
‘ஒரு நாள் பிரிட்டன் தூதரான’ தில்லி பெண்: சைதன்யா வெங்கடேஸ்வரன்
  • இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டன் தூதராக தில்லியைச் சோ்ந்த சைதன்யா வெங்கடேஸ்வரன் (18) நியமிக்கப்பட்டாா். உலகம் முழுவதும் பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதை வலியுறுத்தும் தூதரக நிகழ்ச்சியின் ஒருபகுதியாக அவருக்கு அந்த ஒரு நாள் அடையாளப் பதவி வழங்கப்பட்டது. பெண்களுக்கு அதிகாரமளித்தலை வலியுறுத்தவும் அவா்கள் எதிா்கொண்டுள்ள சவால்களை வெளிப்படுத்தவும் ‘ஒரு நாள் தூதா் பதவி’க்கான போட்டியை பிரிட்டன் தூதரகம் கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. இந்தப் போட்டில் பங்கேற்க, 18 முதல் 23 வயது வரை கொண்ட இளம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
  • 2020-ஆம் ஆண்டுக்கான அந்தப் போட்டியில் தில்லியைச் சோ்ந்த சைதன்யா வெங்கடேஸ்வரன் வெற்றி பெற்றாா். அதையடுத்து, இந்தியாவுக்கான பிரிட்டன் தூதராக அவருக்கு கடந்த புதன்கிழமை பொறுப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து 3 பெண்கள் ஒரு நாள் பிரிட்டன் தூதராகப் பொறுப்பேற்ற நிலையில், 4-ஆவதாக சைதன்யா வெங்கடேஸ்வரன் அந்தப் பதவியை வகித்தாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சா்வதேச பெண் குழந்தைகள் தினம்: ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்த ஆந்திர மாணவி
  • சா்வதேச பெண் குழந்தைகள் தினம் (11.10.2020) கொண்டாடப்பட்டதை யொட்டி ஆந்திரம் மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்திலுள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.ஸ்ரவாணி ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தாா். 11.10.2020 அன்று அனந்தபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலத்துக்கு புடவை கட்டி வந்த கஸ்தூா்பா காந்தி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரவாணியை, மாவட்ட ஆட்சியா் டி.சி. காந்தம் சந்த்குடு உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனா். அதன்பின்பு மாவட்ட ஆட்சியா் இருக்கையில் அமா்ந்த ஸ்ரவாணி ஒரு நாள் ஆட்சியராக முறைப்படி பொறுப்பேற்றாா். அப்போது கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. பதவியேற்றவுடன், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீதான அட்டூழியங்களுக்கு எதிரான தடுப்பு சட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.25,000 நிவாரண உதவி வழங்கும் கோப்பில் முதல் கையெழுத்திட்டாா்.
பிரெஞ்சு ஓபன்: பட்டம் வென்று நடால் சாதனை
  • பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஃபேல் நடால் பட்டம் வென்றார். இதில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் மோதினர். இது நடாலின் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதன்மூலம், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாதனையை நடால் சமன் செய்துள்ளார். இந்த வரிசையில் ஜோகோவிச் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் உள்ளார்.
கரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம்: ஹர்ஷ வர்தன்
  • கரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார். சண்டே சம்வாத் 5-ஆவது நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், தனது சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியவர்களுக்கு பதில் அளித்தார். கொவைட் தொற்று மேலும் பரவாமல் தடுக்க, அடுத்த 2 மாதங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்த மக்கள் இயக்க பிரசாரத்தில் மக்கள் இணைய வேண்டும் என ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தினார். கரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். 2000 நோயாளிகளுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், முடிவுகள் 98 சதவீதம் துல்லியமாக இருந்ததாக அவர் கூறினார்.

10/11/2020

TNPSC Current Affairs Important Notes: 11.10.2020

10/11/2020 0
TNPSC Current Affairs Important Notes: 11.10.2020
கிராமங்களில் 100% குடிநீர் குழாய் இணைப்பு: முதல் மாநிலமாக மாறிய கோவா
  • கிராமப்புறங்களில் மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றவும் ஸ்வட்ச் பாரத் மிஷன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் நடவடிக்கை மூலம் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பெரும்பாலான கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது 2.30 லட்சம் வீடுகளை உள்ளடக்கிய கிராமப்புறங்களில் 100 சதவீத குழாய் நீர் இணைப்புகளை வழங்கும் முதல் மாநிலமாக கோவா மாறியுள்ளது என்று ஜல் சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
  • அரசாங்கத்தின் ஜல் ஜீவன் மிஷன் 2024 க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் நீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2.30 லட்சம் கிராமப்புற வீடுகளை உள்ளடக்கிய கிராமப்புறங்களில் 100 சதவீத செயல்பாட்டுடன் வீட்டு குழாய் இணைப்புகளை (FHTCs) வெற்றிகரமாக வழங்குவதால், கோவா நாட்டின் முதல் 'ஹர் கர் ஜல்' மாநிலமாக திகழ்கிறது என்ற தனித்துவமான தனித்துவத்தை பெற்றுள்ளது".
மத்திய அரசு மற்றும் ரிலையன்ஸ் உடனான கப்பல் கட்டும் ஒப்பந்தம் ரத்து
  • மத்திய அரசு மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உடனான கப்பல்கள் கட்டும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. உரிய காலத்தில் கப்பல்களை கட்டி தராத காரணத்தால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உடனான கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
  • கடந்த 2011ம் வருடம் ரூ 2,500 கோடி செலவில் இந்திய கப்பற்படைக்கு தேவையான 5 ரோந்து கப்பல்கள் கட்டி முடிக்க ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ஆனால், 9 வருடங்கள் கடந்த பிறகும் கப்பல்கள் கட்டி முடிக்கப்படாததால் இரு வாரங்களுக்கு முன்பு அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்
  • உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமான இளைஞர்கள் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஜம்மு - காஷ்மீரில் ஆங்காங்கே நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பெண்குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறி வரும் வன்முறைகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அரசு பணிகளுக்கான நேர்காணல் 23 மாநிலங்களில் ரத்து
  • அரசு கீழ்நிலை பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்கு நேர்காணல் நடத்தும் நடைமுறை ரத்து செய்யப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த பணிகளில் நேர்காணல் முறை ஊழலுக்கு வழிவகுப்பதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி அல்லாத குரூப் பி, சி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசு பணிகளுக்கு 2016 ஜனவரி 1 முதல் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது.
  • இந்த நிலையில், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் 28 மாநிலங்களில் 23 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களும் கீழ்நிலை அரசு பணிகளுக்கான நேர்காணலை ரத்து செய்து உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் பதற்றத்துக்கு மத்தியில் 35 நாட்களில் 10 ஏவுகணைகளை பரிசோதித்த இந்தியா
  • லடாக் மோதலால் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் கடந்த 35 நாட்களில் 10 ஏவுகணைகளை இந்தியா சோதித்து வருகிறது. வருகிற ஓரிரு நாட்களுக்குள் சப்-சானிக் ஏவுகணையான நிர்பயை சோதிக்க உள்ளது. இந்த ஏவுகணையையும் சேர்த்து 10 ஏவுகணைகள் 35 நாட்களில் சோதிக்கப்பட்டு இருக்கின்றன. இதுவரை நடந்துள்ள 9 பரிசோதனைகளில் பிரமோஸ் ஏவுகணை (400 கி.மீ.), அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்ற சவுரியா சூப்பர்சானிக் ஏவுகணை, நீர்மூழ்கி எதிர்ப்பு டார்பிடோக்களை செலுத்தும் ஏவுகணை, அணு ஆயுத திறன்பெற்ற பிரித்வி-2 (இரவு நேர சோதனை) போன்ற ஏவுகணைகள் முக்கியமானவை ஆகும்.
  • விரைவில் பரிசோதிக்க இருக்கும் நிர்பய் ஏவுகணை லடாக்கின் மலைப்பாங்கான பகுதிகளுக்கு மிகுந்த பலனளிக்கும். இதைப்போல புதிய தலைமுறை ஆயுதமான சவுரியா ஏவுகணை 200 கிலோ வரையிலான அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு வினாடிக்கு 2.4 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் பெற்றவை ஆகும். இந்த ஏவுகணைகளை படைகளில் சேர்க்க மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அஜர்பைஜான், ஆர்மேனியா இடையிலான சண்டை முடிவுக்கு வந்தது
  • முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் எல்லையில் உள்ள நாகோர்னோ காராபாக் எனும் மலைப் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை நிலவுகிறது.  நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளின் ராணுவத்துக்கு இடையே நடந்த கடுமையான சண்டையில் அப்பாவி மக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.
  • ரஷிய அதிபர் புதினின் அழைப்பின் பேரில் அந்த நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் ரஷியா, அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் இடையே நேற்று முன்தினம் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
  • 10 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா ஆகிய இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. சர்ச்சைக்குரிய பகுதியில் கிடக்கும் இருதரப்பு மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பது மற்றும் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் முதல் நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் மேலும் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் ‘சாம்பியன்’
  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் முதல்முறையாக ‘சாம்பியன்’ பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். இதில் அதிரடியான ஷாட்டுகளால் எதிராளியை திணறடித்த ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் 21 வயதான சோபியா கெனினுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக ‘கிராண்ட்ஸ்லாம்’ சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை உச்சிமுகர்ந்த முதல் போலந்து வீராங்கனை என்ற பெருமையை பெற்ற அவர் ரூ.14 கோடியை பரிசாக அள்ளினார்.19 வயதான ஸ்வியாடெக் இந்த தொடரில் ஒரு செட்டை கூட இழக்கவில்லை. 2007-ம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் எந்த ஒரு செட்டையும் இழக்காமல் பட்டத்தை வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பையையும் தனதாக்கினார்.

10/10/2020

Noble Award Winner for Peace - 2020: World Food Organisation (WFO)

10/10/2020 0
உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

நார்வே தலைநகர் ஆஸ்லோவில்  2020-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு  உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பசிப்பிணிப் போக்குதல் மற்றும் போரைத்தவிர்த்து அமைதியை காப்பதால் இந்த விருதுக்கு உலக உணவுத்திட்ட அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 53 ஆண்டுகளாக  83 நாடுகளில் 9 கோடிப் பேருக்கு உணவு வழங்கி சேவையாற்றி வந்ததால் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 



TNPSC Current Affairs Important News: 10.10.2020

10/10/2020 0
TNPSC Current Affairs Important News: 10.10.2020
‛ருத்ரம்' ரேடார் ஏவுகணை சோதனை வெற்றி
  • சுகோய் 30 ரக போர் விமானம் மூலம் கிழக்கு கடற்கரை பகுதியில், இந்த ருத்ரம் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு தயாரித்துள்ள இந்த ஏவுகணை மூலம், எதிரிகளின் இலக்குகளை, வானில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ரேடார் ஏவுகணையை தயாரிக்கும் வல்லமையை இந்தியா பெற்றுள்ளது.
  • இந்த ஏவுகணைகளை ரேடாரால் கண்டறிய முடியாது. அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளே இத்தகைய ரேடார் எதிர்ப்பு ஏவுகணையை வைத்துள்ளன. டிஆர்டிஓவின் முயற்சிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
'ஒருநாள்' பிரதமரான 16 வயது சிறுமி
  • பின்லாந்தில் 16 வயது சிறுமி ஒருவர் ‛ஒருநாள் பிரதமராக' பதவி வகித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஐரோப்பிய நாடான பின்லாந்தில் சன்னா மரின் (வயது 34) என்ற பெண் தலைவர் பிரதமர் பதவி வகிக்கிறார். இங்கு அவர் ஆண், பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார். இந்நிலையில், சர்வதேச பெண் குழந்தைகள் தினம், 11-ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி, 16 வயது சிறுமியான ஆவா முர்டோவை, பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்த்துள்ளார். ஆவா முர்டோ, ஒருநாள் பிரதமர் பதவியையும் வகித்துள்ளார்.
  • சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பிளான் இன்டர்நேஷனல் அமைப்பு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் என்ற திட்டத்தின்கீழ், உலகம் முழுவதும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிற துறைகளின் தலைமைப்பதவிக்கு பெண் குழந்தைகள் வருவதற்கு அனுமதித்துள்ளது. அந்த வகையில் பின்லாந்தில் 4வது ஆண்டாக இது பின்பற்றப்பட்டுள்ளது.
  • ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படாதபோதும், தான் பதவி வகித்த அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்தில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்த பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு பணி வயது உச்ச வரம்பு அதிகரிப்பு
  • தமிழக அரசு துறையில், நேரடியாக பணி நியமனம் செய்யப்படும் பணிகளில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் ஆகியோருக்கு, வயது உச்ச வரம்பு, 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், சில பணிகளுக்கு, நேரடியாக நியமனம் நடக்கிறது. இந்தப் பணிகளில் சேர, குறைந்தபட்ச பொது கல்வித் தகுதியாக, 10ம் வகுப்புக்கு கூடுதலான கல்வி இருக்கக் கூடாது.அதேபோல, இப்பணியில் சேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் ஆகியோருக்கு, வயது உச்ச வரம்பு, 30 ஆக இருந்தது. தற்போது, வயது உச்ச வரம்பை, 32 ஆக உயர்த்தி, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை, அரசாணை வெளியிட்டுள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோதுமைக்கு அர்ஜென்டினா அரசு அனுமதி
  • மரபணு மாற்றம் செய்யப்பட்ட வறட்சியைத் தாங்கும் வகையிலான கோதுமைக்கு அர்ஜென்டினா அரசு அனுமதி வழங்கியுள்ளது. 
  • உலகின் நான்காவது கோதுமை ஏற்றுமதி நாடாக உள்ள அர்ஜென்டினா, மரபணு மாற்றம் செய்யப்பட்ட வறட்சியை தாங்கும் எச்.பி 4 கோதுமை வகைக்கு அனுமதி வழங்கிய முதல்நாடு எனும் பெயரைப் பெற்றுள்ளது. மரபணு தொழில்நுட்ப நிறுவனமான பயோசெரஸால் உடன் இணைந்து அந்நாட்டு அரசு வறட்சியைத் தாங்கும் வகையிலான அதிக விளைச்சல் தரும் கோதுமை உற்பத்தியை மேற்கொள்ள உள்ளது. அர்ஜென்டினாவின் முக்கிய கோதுமை ஏற்றுமதி நாடாக உள்ள பிரேசிலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோதுமைக்கு அனுமதி வழங்கியவுடன் வணிகரீதியிலான ஏற்றுமதியை அர்ஜென்டினா தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் வறட்சிகாலங்களிலும் விளைச்சல் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும் என பயோசெரஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஃபெடரிகோ ட்ரூக்கோ தெரிவித்துள்ளார்.
உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு
  • நார்வே தலைநகர் ஆஸ்லோவில்  2020-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு  உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பசிப்பிணிப் போக்குதல் மற்றும் போரைத்தவிர்த்து அமைதியை காப்பதால் இந்த விருதுக்கு உலக உணவுத்திட்ட அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 53 ஆண்டுகளாக  83 நாடுகளில் 9 கோடிப் பேருக்கு உணவு வழங்கி சேவையாற்றி வந்ததால் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 
ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு 
  • மத்திய ரிசர்வ் வங்கி, 2020-ஆம் ஆண்டில், தன்னுடைய நான்காவது நிதிக்கொள்கைக் குழு கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவே தொடரும் என தெரிவித்துள்ளது.  வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கைக் குழு கூட்டம் நடைபெறும். அதன்படி, மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீகிதத்தில் இருந்து மாற்றாமல் இருக்க நிதிக்கொள்கைக் குழு ஒருமனதாக வாக்களித்துள்ளது. குறைந்தபட்சம் நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த ஆண்டு தேவைப்படும் வரை நிதிக்கொள்கையின் இதே நிலைப்பாட்டை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். 

10/09/2020

Nobel Award Winner for Literature - 2020

10/09/2020 0
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!: அமெரிக்காவின் லூயிஸ் க்ளுக்
2020 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசினை லூயிஸ் க்ளுக் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் பெறுகிறார். இவர் 1943 இல் நியூயார்க்கில் பிறந்தார். மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் வசிக்கிறார். இவர் கவிஞர் மட்டுமின்றி, நியூ ஹெவனில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

லூயிஸ் க்ளுக்: இலக்கியப் பரிசு பெற்ற லூயிஸ் க்ளுக், 1968 ஆம் ஆண்டில் ‘பர்ஸ்ட் பார்ன்’ என்ற கவிதை மூலம் அறிமுகமானார். பின்னர் அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக பாராட்டப்பட்டார். அவர் 12 கவிதைத் தொகுப்புகளையும், கவிதைகள் குறித்த சில கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் தெளிவுக்கான முயற்சிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ‘அவெர்னோ(Averno)’ (2006) ‘Faithful and Virtuous Night’ (2014) உள்ளிட்ட பல படைப்புகளை தந்துள்ளார்.



TNPSC Current Affairs Important Notes: 09.10.2020

10/09/2020 0
TNPSC Current Affairs Important Notes: 09.10.2020
மெர்சிடெஸ் நிறுவனம் இந்தியாவில் முதல் மின்சார கார் அறிமுகம்
  • பன்னாட்டு கார் நிறுவனமான மெர்சிடெஸ் பென்ஸ் முதல் மின்சார காரான ‛இக்யூசி' ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக இந்தியாவின் ஆறு நகரங்களில் மட்டுமே இது அறிமுகம் ஆகிறது. சென்னை, டில்லி, பெங்களூரு, மும்பை, புனே மற்றும் ஐ தராபாத் நகரங்களில் உள்ள ஷோ ரூம்களில் மொத்தம் 50 கார்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இதன் அறிமுக விலை 99.3 லட்சம் ரூபாயாக உள்ளது. 
  • இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதலாவது மின்சார எஸ்யுவி யான இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 350 கி.மீ., வரை செல்லும் எனவும் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் வாரண்டி உண்டு என்றும் தெரியவருகிறது.
மருந்துபொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு :மோடி
  • இந்தியா கனடா , வணிக உறவுகள் இருநாட்டு பொருளாதாரம் குறித்து வீடியோ கான்பரன்சிங்முறையில் பிரதமர் மோடி பேசியதாவது: எந்தஒரு நாட்டிலும் முதலீடு செய்வதற்கு முன்பாக ஜனநாயகம் இருக்கிறதா அரசியல் ஸ்திரத்தன்மை உள்ளதாக என்பதை காணுங்கள்.இந்தியா இன்று மட்டுமல்ல நாளைக்கும் வலிமையாக இருக்கும். இதுவரையில் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருந்து பொருட்களை விநியோகித்து உள்ளது. அன்னிய நேரடி முதலீட்டில் மேலும் பலதளர்வுகள் தரப்பட்டுள்ளது. முதலீடுகளை அதிகரிப்பதற்காகவே அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ளது.
  • தொழில் துவங்க ஏற்ற நாடுகளின் பட்டியலில் கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது.2019-- -20 ம் நிதியாண்டில் இந்தயாவின் அன்னிய நேரடி முதலீடு 23 சதவீதம் அதிகரித்துள்ளது. முதல் ஆறு மாதங்களில் இந்தியா 20 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீட்டை ஈர்த்துள்ளது.
சீனா மூன்றாம்தர அடியாள்போல அராஜகம் செய்துகொண்டு இருக்கிறது: தைவான்
  • தைவான் அதிபர் ட்சாய் இங் வென் ஜனநாயகத்தை பின்பற்றும் தலைவராவார். ஆசியாவின் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவுடன் சிறந்த நட்பு உறவை வைத்துக் கொள்ள அவர் முடிவெடுத்தார். சிறு தீவு நாடான தைவான் தொழில்நுட்பத்திலும் தொழில்களிலும் வளர்ந்து வருகிறது. சீனாவின் இரும்புக் அதிலிருந்து விடுபட நினைக்கிறது. 
  • இந்தியாவுக்கும் தைவானுக்கும் நேரடி வர்த்தகத் தொடர்பு இல்லை என்றாலும் சீனாவை எதிர்க்க இந்தியாவை தைவான் துணைக்கு அழைத்துக்கொண்டது. இதற்கு மோடி அரசும் ஒத்துழைக்கிறது. இந்தியாவில் உள்ள சீன தூதரகம், குடியரசு தினத்தை குறித்த செய்தியை இந்திய பத்திரிகைகள் வெளியிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனை தைவான் கடுமையாக எதிர்த்துள்ளது. சீனா மூன்றாம் தர அடியாள்போல அராஜகம் செய்துகொண்டு இருக்கிறது என தைவான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!: அமெரிக்காவின் லூயிஸ் க்ளுக்
  • 2020 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசினை லூயிஸ் க்ளுக் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் பெறுகிறார். இவர் 1943 இல் நியூயார்க்கில் பிறந்தார். மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் வசிக்கிறார். இவர் கவிஞர் மட்டுமின்றி, நியூ ஹெவனில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
  • இலக்கியப் பரிசு பெற்ற லூயிஸ் க்ளுக், 1968 ஆம் ஆண்டில் ‘பர்ஸ்ட் பார்ன்’ என்ற கவிதை மூலம் அறிமுகமானார். பின்னர் அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக பாராட்டப்பட்டார். அவர் 12 கவிதைத் தொகுப்புகளையும், கவிதைகள் குறித்த சில கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் தெளிவுக்கான முயற்சிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ‘அவெர்னோ(Averno)’ (2006) ‘Faithful and Virtuous Night’ (2014) உள்ளிட்ட பல படைப்புகளை தந்துள்ளார்.
போர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் பட்டியல்; 13வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்
  • போர்ப்ஸ் (Forbes) பத்திரிகை இந்தியாவின் ‛டாப்-100' பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து தற்போது 6 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. போர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார்.
  • இரண்டாம் இடத்தில் கவுதம் அதானி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக உள்ளது. மூன்றாம் இடத்தில் ஹெச்.சி.எல் நிறுவனர் சிவ நாடார், 4வது இடத்தில் அவன்யூ சூப்பர்மார்க்கெட் நிறுவன உரிமையாளர் ராதாகிஷண் தமானி, 5வது இடத்தில் அசோக் லேலாண்ட்டின் இந்துஜா சகோதரர்கள் உள்ளனர்.
நாட்டிலேயே முதல் முறையாக கேரளத்தில் விவசாயிகள் நலநிதி வாரியம்
  • நாட்டிலேயே முதல் முறையாக, கேரள மாநிலத்தில் விவசாயிகள் நலநிதி வாரியம் அமைக்க அந்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கேரளத்தில் 5 சென்ட் முதல் 15 ஏக்கர் வரையிலான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், குத்தகைக்கு வேளாண்மை செய்யும் விவசாயிகள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக இணையலாம். அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயிகள் பட்டியலில் தோட்டக்கலை பயிர்கள், மருத்துவப் பயிர்கள் பயிரிடுவோர், நர்சரி வைத்திருப்பவர்களும் அடங்குவார்கள். அத்துடன், மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு, சிப்பி, பட்டுப்புழு, கோழி, வாத்து, ஆடு, முயல், கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட்டிருப்பவர்களும் இந்த வாரியத்தில் சேர முடியும்.
உலகளவில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையைப் பதிவு செய்த செப்டம்பர் மாதம்
  • உலகில் பல்வேறு பகுதிகளிலும் காலநிலை மாற்றத்தின் தீவிரம் உணரப்பட்டு வருகிறது. உலகின் வெப்பநிலை உயர்ந்து வருவதால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உடைந்து கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஐரோப்பிய அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த மாதம் முன்னெப்போது இல்லாத அளவிற்கு வெப்பமான செப்டம்பர் மாதமாக பதிவாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட 0.05 செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகப் பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கு, தென் அமெரிக்காவின் சில பகுதிகள், ஆஸ்திரேலியா மற்றும் சைபீரிய ஆர்க்டிக் உள்ளிட்ட உலகின் பிற பகுதிகளில் வெப்பநிலை சராசரியை விட அதிகமாக பதிவாகி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த 25 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிமம்
  • மேற்கு வங்கத்தின் நான்கு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக சோட்டானக்பூர் பீடபூமியின் வண்டல் பகுதிகளில்  புதைபடிவங்களைத் தேடி வருகின்றனர். சித்தோ-கன்ஹோ-பிர்ஷா பல்கலைக்கழகத்தின் தாவரவியல் உதவி பேராசிரியர் மகாசின் அலிகான் தலைமை தாங்கிய இந்த தேடுதல் பணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேஹர் மாவட்டத்தில் மண்ணின் மேற்பரப்பில் இருந்து சுமார் 5 மீ ஆழத்தில் தட்டான் பூச்சியின் புதைபடிமத்தைக் கண்டறிந்தனர். 
  • மேற்கு வங்க விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பு இந்தியாவில் கிடைத்த முதல் தட்டான் புதைபடிவமாகும். இந்தப் புதைபடிவமானது நியோஜீன் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 3 செ.மீ நீளமும், 2.5 செ.மீ உள்ள இந்தப் புதைபடிமம் 25 லட்சம் ஆண்டுகளுக்கும் முந்தையது ”என்று கல்கத்தா பல்கலைக்கழக தாவரவியல் துறையின் பேராசிரியர் சுபீர் பெரா தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டில், 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பில் 33 வீட்டுவசதி திட்டங்களுக்கு ஒப்புதல்
  • ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் 33 வீட்டுவசதி திட்டங்களின் கீழ் 25 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் உ.பி சிறைகளில் பொறியியல் பட்டதாரிகள் அதிகம்
  • மற்ற மாநிலங்களைக் காட்டிலும் உத்தரப்பிரதேச சிறைகளில் சிறைக்கைதிகளாக பொறியியல் பட்டதாரிகள் அதிகம் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் தொழில்நுட்ப திறமையுள்ள மொத்தம் 3 ஆயிரத்து 740 பேர் தங்களது குற்றச்செயல்களுக்காக சிறைக் கைதிகளாக உள்ளனர். இதில் மொத்தம் 20 சதவிகிதம் பேர் உத்தரப்பிரதேச சிறைகளில் உள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
  • தொழில்நுட்ப திறமை உள்ள கைதிகளில் உத்தரப்பிரதேச சிறைகள் அதிகபட்சமாக முதுகலை பட்டதாரி கைதிகளைக் கொண்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப திறமையுள்ள 5 ஆயிரத்து 282 கைதிகளில் 2 ஆயிரத்து 10 பேர் உத்தரப்பிரதேச சிறைகளில் உள்ளனர். இந்திய சிறைகளில் மொத்தம் உள்ள 3 லட்சத்து 30 ஆயிரத்து 487 கைதிகளில் 1.67 சதவீதம் பேர் முதுகலை பட்டதாரிகள். அவர்களில் 1.2 சதவீதம் பேர் பொறியாளர்கள். அதேபோல் மகாராஷ்டிரத்தில் 495 சிறைக்கைதிகளும், கர்நாடகத்தில் 362 பேரும் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தெரிவித்துள்ளது.

10/08/2020

Nobel Award Winner for Chemistry - 2020

10/08/2020 0
வேதியியலுக்கான நோபல் பரிசு: இரு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு
  • இந்தாண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுனா ஆகிய இரு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக பெண் விஞ்ஞானிகளான  இம்மானுவெல்லே சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுனா ஆகிய இருவருக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
  • இவர்கள் இருவரும் பாக்டீரியத்தின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆய்வு செய்தபோது, ஒரு மூலக்கூறு கருவியைக் கண்டுபிடித்தனர். இது மரபணுவில்  துல்லியமான கீறல்களை மேற்கொள்ள உதவுகிறது. மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளில் ஒன்றாக CRISPR / Cas9 மரபணு கத்தரிக்கோலை பயன்படுத்தி, விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் டி.என்.ஏ.வை மிகத் துல்லியமாக மாற்ற முடியும். மூலக்கூறு அறிவியலில் இது புரட்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, தாவர இனப்பெருக்கத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. புற்றுநோய் சிகிச்சைகளுக்கும், பரம்பரை நோய்களைக் குணப்படுத்தவும் பெரிதும் பயன்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 


Nobel Award 2020 Announced for Physics

10/08/2020 0
2020 இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு: மூவருக்கு பகிர்ந்தளிப்பு
2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. 

கருந்துளை உருவாக்கம் குறித்த பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவான கணிப்பை கண்டறிந்ததற்காக ரோஜர் பென்ரோஸ்-க்கும், விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள ஒரு அதிசய சிறு பொருளை கண்டறிந்ததற்காக ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ்-க்கும் வழங்கப்படுகிறது. ரோஜர் பென்ரோஸ்-க்கு விருதின் பரிசுத் தொகையில் 50 சதவீதமும், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியாவுக்கு தலா 25 சதவீதமும் வழங்கப்படுவதாக ராயல் ஸ்வேதிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் அறிவித்துள்ளது. 





Nobel Award Winner for Medicine - 2020

10/08/2020 0


நோபல் கமிட்டியின் தலைவர் தாமஸ் பெர்ல்மன் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்களை அறிவித்தார். 
2020 ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹார்வே ஜே. ஆல்டர், மைக்கேல் ஹாஃப்டன் மற்றும் சார்லஸ் எம். ரைஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. 'ஹெப்படைட்டிஸ் சி வைரஸ்' என்ற வைரஸை கண்டறிந்ததற்காக மூவரும் இணைந்து மருத்துவத்துறைக்கான இந்த நோபல் பரிசை பெறுகின்றனர். இதில், ஹார்வே ஜே. ஆல்டர், வைரஸ் பரவும் விதம் குறித்தும், மைக்கேல் ஹாஃப்டன் ஹெப்படைட்டிஸ் சி வைரஸின் ஜீனோமை தனிமைப்படுத்தியும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், 'ஹெப்படைட்டிஸ் சி வைரஸ்' மட்டுமே ஹெப்படைடிஸை ஏற்படுத்தும் என்பதற்கான இறுதி முடிவை சார்லஸ் எம். ரைஸ் உறுதி செய்துள்ளார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நோபல் பரிசு: உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும். 

TNPSC Current Affairs Important Notes: 08.10.2020

10/08/2020 0
TNPSC Current Affairs Important Notes: 08.10.2020
தேசிய விமானப்படை தினம்: வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து
  • இந்திய விமானப்படையின் 88 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஒன்றான விமானப் படை, உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதனை அடுத்து  ஒவ்வோரு ஆண்டும் அக்டோபர் 8ந்தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. 
இந்தியா முழுவதும் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை : யுஜிசி
  • இந்தியா முழுவதும் அங்கிகாரம் இல்லாமல் செயல்பட்ட போலியான 24 பல்கலைக்கழகத்தின் பெயர்களை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்திற்கு புறம்பாகவும், அங்கிகாரம் பெறாமலும் இயங்கிய 24 பல்கலைக்கழகத்தின் பெயரை வெளியிட்டுள்ளனர். இதுவரை அந்தப் பல்கலைக்கழகங்கள் எந்த சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதில், அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் (8), தில்லி (7), ஒடிசா (2), மேற்கு வங்காளம் (2), கர்நாடகம் (1), கேரளம் (1), மகாராஷ்டிரம் (1), ஆந்திரம் (1) மற்றும் புதுச்சேரி (1) பல்கலைக்கழகங்கள் போலியானதாக யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கூறினார்.
வேதியியலுக்கான நோபல் பரிசு: இரு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு
  • இந்தாண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுனா ஆகிய இரு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக பெண் விஞ்ஞானிகளான  இம்மானுவெல்லே சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுனா ஆகிய இருவருக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
  • இவர்கள் இருவரும் பாக்டீரியத்தின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆய்வு செய்தபோது, ஒரு மூலக்கூறு கருவியைக் கண்டுபிடித்தனர். இது மரபணுவில்  துல்லியமான கீறல்களை மேற்கொள்ள உதவுகிறது. மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளில் ஒன்றாக CRISPR / Cas9 மரபணு கத்தரிக்கோலை பயன்படுத்தி, விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் டி.என்.ஏ.வை மிகத் துல்லியமாக மாற்ற முடியும். மூலக்கூறு அறிவியலில் இது புரட்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, தாவர இனப்பெருக்கத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. புற்றுநோய் சிகிச்சைகளுக்கும், பரம்பரை நோய்களைக் குணப்படுத்தவும் பெரிதும் பயன்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
இணைய பாதுகாப்பில் ஜப்பானுடன் ஒப்பந்தம்: அமைச்சரவை ஒப்புதல்
  • சீனாவால் நம் நாட்டில் சமீப காலமாக இணைய வழித் தாக்குதல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் சீனாவுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இணைய பாதுகாப்பில் ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திறந்த நம்பகமான நியாயமான மற்றும் பாதுகாப்பான இணைய சுற்றுச்சூழலை உருவாக்குவதில், இந்தியாவும் ஜப்பானும் உறுதியாக உள்ளன. இதன் ஒரு கட்டமாக இணைய பாதுகாப்புத் துறையில் இந்தியா - ஜப்பான் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்து கொள்வதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்பந்தம் வாயிலாக ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச அரங்கங்களில் இருதரப்பும் ஒத்துழைப்பை உறுதிபடுத்தியுள்ளோம். தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் உள்கட்டமைப்பு பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் மேலும் வலுபடுத்தும்.
சீனாவின் மனித உரிமை விவகாரம்: ஐ.நா.,வில் 39 நாடுகள் கடும் கண்டனம்
  • அமெரிக்காவில், ஐ.நா., பொது சபையின் மனித உரிமைகள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட, 39 நாடுகள் ஒன்றிணைந்து வெளியிட்ட அறிக்கையை, ஐ.நா.,விற்கான ஜெர்மனியின் நிரந்தர துாதர், கிறிஸ்டோப் ஹெஸ்கன் வாசித்தார். அறிக்கைஇந்த அறிக்கை வாசிக்கப்பட்டதும், 55 நாடுகள் சார்பாக, சீனாவிற்கு ஆதரவான அறிக்கையை, பாக்., வெளியிட்டது. அதில், 'ஹாங்காங் பிரச்னை, சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால், அதில் பிற நாடுகள் தலையிடக் கூடாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும், மேற்கத்திய நாடுகளின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
லண்டனில் ஹிந்துக்களுக்கு எதிரான பள்ளி புத்தகம் 'வாபஸ்'
  • பிரிட்டனின் லண்டனில் உள்ள ஒரு பள்ளியில், மதம் தொடர்பான பாடத் திட்டம் இடம்பெற்றுள்ளது. அதில் ஹிந்து மதத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:நமக்கு சரி என்று தெரிந்தால், போரும் புரியலாம் என்று ஹிந்து மதம் நம்பு கிறது. அதனால் தான், இந்தியா அணு ஆயுதங்களை தயாரித்துள்ளது. ஹிந்துக்கள் சிலர், ஹிந்து மதத்தை பாதுகாக்க பயங்கரவாத வழியைப் பின்பற்றுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, பிரிட்டன் ஹிந்து அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையடுத்து, இந்தப் புத்தகம், பாடத் திட்டத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.

10/07/2020

TNPSC Current Affairs Important Notes: 07.10.2020

10/07/2020 0
TNPSC Current Affairs Important Notes: 07.10.2020
என்-95 ரக முகக்கவசங்களுக்கான ஏற்றுமதித் தடை நீக்கம்
  • என்-95 ரக முகக்கவசங்களுக்கான ஏற்றுமதித் தடையை நீக்கி மத்திய வர்த்தகத் துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத் துவக்கத்தில் இந்தியாவில் கரோனா பெருந்தொற்றின் பரவல் அதிகரிக்க துவங்கியவுடன், பொதுவாக மருத்துவத் துறையினரால அதிக அளவில் பயன்படுத்தப்படும் என்-95 ரக முகக்கவசங்களுக்கான உள்நாட்டுத் தேவை அதிகரித்தது. இதையடுத்து அந்த கவசங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
  • பின்னர் உற்பத்தி நிலைமை வெகுவாக சீரடைந்தவுடன், தொழில் நிறுவனங்களின் வேண்டுகோளையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, ஒரு மாதத்திற்கு 50 லட்சம் முகக்கவசங்களை மட்டும் ஏற்றுமதி செய்யலாம் என்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.
  • இந்நிலையில் என்-95 ரக முகக்கவசங்களுக்கான ஏற்றுமதித் தடையை நீக்கி மத்திய வர்த்தகத் துறை தற்போது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அயல்நாட்டு வர்த்தகத்திற்கான தலைமை இயக்குநர் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘என்-95 / எப்.எப்.பி 2  ரகங்கள் அல்லது அதற்கு இணையான முகக்கவசங்களுக்கான ஏற்றுமதிக் கொள்கையானது, எளிதான வர்த்தகத்திற்கு வழி செய்யும் விதமாக ‘கட்டுப்படுத்தப்பட்டது’ என்ற பிரிவில் இருந்து ‘தாராளம்’ என்ற பிரிவிற்கு மாற்றப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு: மூவருக்கு பகிர்ந்தளிப்பு
  • 2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
  • கருந்துளை உருவாக்கம் குறித்த பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவான கணிப்பை கண்டறிந்ததற்காக ரோஜர் பென்ரோஸ்-க்கும், விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள ஒரு அதிசய சிறு பொருளை கண்டறிந்ததற்காக ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியா கெஸ்-க்கும் வழங்கப்படுகிறது. ரோஜர் பென்ரோஸ்-க்கு விருதின் பரிசுத் தொகையில் 50 சதவீதமும், ரெயின்ஹார்டு கென்செல் மற்றும் ஆண்ட்ரியாவுக்கு தலா 25 சதவீதமும் வழங்கப்படுவதாக ராயல் ஸ்வேதிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் அறிவித்துள்ளது. 
உலகளவில் 58 சதவீத இளம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு
  • சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இளம் பெண்களில் 58 சதவீதம் பேர் பாலியல் தொந்தரவை சந்திப்பதாக தனியார் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் சிறுமிகளுக்கான உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்காக செயல்படும் தனியார் தொண்டு நிறுவனமான பிளான் இன்டர்நேஷனல், சர்வதேச பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு நடத்திய கணக்கெடுப்பில் இணையதளம் உபயோகிக்கும் பெண்களில் 58 சதவீதம் பேர் பாலியல் தொந்தரவை எதிர்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளனர்.
  • இந்த கணக்கெடுப்பானது, பிரேசில், இந்தியா, நைஜீரியா, ஸ்பெயின், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா உள்பட 22 நாடுகளில் உள்ள 15 முதல் 25 வயதுடைய 14 ஆயிரம் இளம் பெண்கள் இந்த ஆய்வில் வாக்களித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சமூக ஊடகங்கள் வாயிலாக முகநூலில் 39 சதவீதமும், அதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் 23 சதவீதமும், வாட்ஸ்அப் 14 சதவீதமும், ஸ்னாப்சாட்டில் 10 சதவீதமும், ட்விட்டரில் 9 சதவீதமும் மற்றும் டிக்டாகில் 6 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முதல் திருநங்கை தேர்தல் அதிகாரியாகும் மோனிகா தாஸ்
  • பிகாரில் இருந்து முதல் திருநங்கை தேர்தல் அதிகாரியாக மோனிகா தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  வருகிற அக்டோபர் 28 முதல் துவங்கவுள்ள பிகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிக்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். பாட்னா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து தங்கப்பதக்கம் வென்றவர். தற்போது 32 வயதாகும் மோனிகா தாஸ், 2015 முதல் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிந்து வரும் மாநிலத்தின் முதல் திருநங்கை ஆவார். தற்போது தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதன் மூலமாக, முதல் முறையாக ஒரு திருநங்கையை தேர்தல் அதிகாரியாக நியமித்த மாநிலம் என்ற பெருமையை பிகார் பெற்றுள்ளது. முன்னதாக 2016 ஆம் ஆண்டில், திருநங்கையான ரியா சர்க்கார், மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
உலகின் புதிய கரன்சி 'டேட்டா' தான்: முகேஷ் அம்பானி
  • ரெய்ஸ் 2020 என்ற சமூக முன்னேற்றத்திற்கான செயற்கை நுண்ணறிவு பற்றிய மாநாட்டை அக்டோபர் 05, 2020 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொழில்முனைவோர்கள், செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று, தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். செயற்கை நுண்ணறிவு சார்ந்த திட்டங்களில் அதிக முதலீடுகளை செய்து வரும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி நான்காம் தொழிற் புரட்சியில் 'டேட்டா' தான் உலகின் புதிய கரன்சியாக இருக்கும் என, தெரிவித்துள்ளார்.
பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிப்பதில் உறுதி: ஜெய்சங்கர்

  • பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கள் தெரிவித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா இடம்பெற்றுள்ள நடந்த ‛குவாட்' அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தோ பசுபிக் பகுதியை திறந்து வைப்பது குறித்தும்,பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.