-->

TNPSC Current Affairs Important News: 10.10.2020

‛ருத்ரம்' ரேடார் ஏவுகணை சோதனை வெற்றி
  • சுகோய் 30 ரக போர் விமானம் மூலம் கிழக்கு கடற்கரை பகுதியில், இந்த ருத்ரம் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்பு தயாரித்துள்ள இந்த ஏவுகணை மூலம், எதிரிகளின் இலக்குகளை, வானில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ரேடார் ஏவுகணையை தயாரிக்கும் வல்லமையை இந்தியா பெற்றுள்ளது.
  • இந்த ஏவுகணைகளை ரேடாரால் கண்டறிய முடியாது. அமெரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளே இத்தகைய ரேடார் எதிர்ப்பு ஏவுகணையை வைத்துள்ளன. டிஆர்டிஓவின் முயற்சிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
'ஒருநாள்' பிரதமரான 16 வயது சிறுமி
  • பின்லாந்தில் 16 வயது சிறுமி ஒருவர் ‛ஒருநாள் பிரதமராக' பதவி வகித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஐரோப்பிய நாடான பின்லாந்தில் சன்னா மரின் (வயது 34) என்ற பெண் தலைவர் பிரதமர் பதவி வகிக்கிறார். இங்கு அவர் ஆண், பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார். இந்நிலையில், சர்வதேச பெண் குழந்தைகள் தினம், 11-ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி, 16 வயது சிறுமியான ஆவா முர்டோவை, பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்த்துள்ளார். ஆவா முர்டோ, ஒருநாள் பிரதமர் பதவியையும் வகித்துள்ளார்.
  • சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பிளான் இன்டர்நேஷனல் அமைப்பு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் என்ற திட்டத்தின்கீழ், உலகம் முழுவதும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிற துறைகளின் தலைமைப்பதவிக்கு பெண் குழந்தைகள் வருவதற்கு அனுமதித்துள்ளது. அந்த வகையில் பின்லாந்தில் 4வது ஆண்டாக இது பின்பற்றப்பட்டுள்ளது.
  • ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படாதபோதும், தான் பதவி வகித்த அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்தில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்த பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு பணி வயது உச்ச வரம்பு அதிகரிப்பு
  • தமிழக அரசு துறையில், நேரடியாக பணி நியமனம் செய்யப்படும் பணிகளில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் ஆகியோருக்கு, வயது உச்ச வரம்பு, 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், சில பணிகளுக்கு, நேரடியாக நியமனம் நடக்கிறது. இந்தப் பணிகளில் சேர, குறைந்தபட்ச பொது கல்வித் தகுதியாக, 10ம் வகுப்புக்கு கூடுதலான கல்வி இருக்கக் கூடாது.அதேபோல, இப்பணியில் சேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் ஆகியோருக்கு, வயது உச்ச வரம்பு, 30 ஆக இருந்தது. தற்போது, வயது உச்ச வரம்பை, 32 ஆக உயர்த்தி, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை, அரசாணை வெளியிட்டுள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோதுமைக்கு அர்ஜென்டினா அரசு அனுமதி
  • மரபணு மாற்றம் செய்யப்பட்ட வறட்சியைத் தாங்கும் வகையிலான கோதுமைக்கு அர்ஜென்டினா அரசு அனுமதி வழங்கியுள்ளது. 
  • உலகின் நான்காவது கோதுமை ஏற்றுமதி நாடாக உள்ள அர்ஜென்டினா, மரபணு மாற்றம் செய்யப்பட்ட வறட்சியை தாங்கும் எச்.பி 4 கோதுமை வகைக்கு அனுமதி வழங்கிய முதல்நாடு எனும் பெயரைப் பெற்றுள்ளது. மரபணு தொழில்நுட்ப நிறுவனமான பயோசெரஸால் உடன் இணைந்து அந்நாட்டு அரசு வறட்சியைத் தாங்கும் வகையிலான அதிக விளைச்சல் தரும் கோதுமை உற்பத்தியை மேற்கொள்ள உள்ளது. அர்ஜென்டினாவின் முக்கிய கோதுமை ஏற்றுமதி நாடாக உள்ள பிரேசிலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கோதுமைக்கு அனுமதி வழங்கியவுடன் வணிகரீதியிலான ஏற்றுமதியை அர்ஜென்டினா தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் வறட்சிகாலங்களிலும் விளைச்சல் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும் என பயோசெரஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஃபெடரிகோ ட்ரூக்கோ தெரிவித்துள்ளார்.
உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு
  • நார்வே தலைநகர் ஆஸ்லோவில்  2020-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு  உலக உணவுத்திட்ட அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பசிப்பிணிப் போக்குதல் மற்றும் போரைத்தவிர்த்து அமைதியை காப்பதால் இந்த விருதுக்கு உலக உணவுத்திட்ட அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 53 ஆண்டுகளாக  83 நாடுகளில் 9 கோடிப் பேருக்கு உணவு வழங்கி சேவையாற்றி வந்ததால் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 
ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு 
  • மத்திய ரிசர்வ் வங்கி, 2020-ஆம் ஆண்டில், தன்னுடைய நான்காவது நிதிக்கொள்கைக் குழு கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவே தொடரும் என தெரிவித்துள்ளது.  வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கைக் குழு கூட்டம் நடைபெறும். அதன்படி, மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீகிதத்தில் இருந்து மாற்றாமல் இருக்க நிதிக்கொள்கைக் குழு ஒருமனதாக வாக்களித்துள்ளது. குறைந்தபட்சம் நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த ஆண்டு தேவைப்படும் வரை நிதிக்கொள்கையின் இதே நிலைப்பாட்டை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting