Showing posts with label Current Affairs - 2020. Show all posts
Showing posts with label Current Affairs - 2020. Show all posts

11/29/2020

Current Affairs Questions for All Competitive Exams

11/29/2020 0
Current Affairs Questions for All Competitive Exams

 Q.1. When is Indian organ donation day celebrated?

Answer: 27 November

Q.2. Where has MG Motor in association with Tata Power launched the first Superfast EV charging station?

Answer: Agra

Q.3. Which state has launched the Abhayam app for the safety of women travelers?

Answer: Andra Pradesh

Q.4. Which film has been counted as India's official entry for the Oscars?

Answer: Jalli Kattu

Q.5. Who has been appointed as the new Director General of Border Roads Organization?

Answer: Rajiv Chaudhary

Q.6. Who topped the released FIFA ranking?

Answer: Belgium

Q.7. Which company has appointed 'Michael Clarke' as its new CO?

Answer: Hero Motocorp

Q.8. Who has launched the Climate Change Knowledge Portal?

Answer: Prakash Javadekar

Q.9. Which version of the National Science Film Festival was launched in a virtual twist?

Answer: 10 way

Q.10. Foreign Minister 'S Jaishankar' has gone on a two-day visit to which country?

Answer: Seychelles

10/18/2020

TNPSC Current Affairs 2019 and 2020 Download Tamil PDF

10/18/2020 1

Welcome to the Current Affairs Section of TNPSC Master.COM. This section is a store house of  Monthly Edition and Multiple Choice questions based on DAILY CURRENT AFFAIRS since 2015. These questions mainly focused for TNPSC / TRB - TET / UPSC  / SSC and other state public service commission examinations. Presently, we (TNSPC MASTER) update most important notes published everyday for Current Affairs Sections. All the best...


Current Affairs 2020 Download PDF


TNPSC Current Affairs September 2020

TNPSC Current Affairs Important Notes 20.10.2020
TNPSC Current Affairs Important Notes 19.10.2020

TNPSC Current Affairs September 2020


TNPSC Current Affairs August 2020



TNPSC Current Affairs Important Notes: 17.10.2020 & 18.10.2020

10/18/2020 0
TNPSC Current Affairs Important Notes: 17.10.2020 & 18.10.2020
நம்பகமான செய்திகளை தருவதில் அச்சு ஊடகம் முதலிடம்: ஆய்வில் தகவல்
  • நம்பகமான செய்திகளை வழங்குவதில், அச்சு ஊடகங்கள் முதலிடம் வகிப்பதாக, ‛சி - வோட்டர்' நடத்திய ஆய்வில் 66 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மக்கள் அதிகம் சார்ந்திருப்பது காட்சி ஊடகமா? அல்லது அச்சு ஊடகமா? என்ற ஆய்வு, ‛சி - வோட்டர்' சார்பில் நடத்தப்பட்டது. இதில் அச்சு ஊடகங்கள் நம்பகமான செய்திகளை தருவதாக, 66 சதவீதம் கூறியுள்ளனர். குறிப்பாக கொரோனா பரவல் காலகட்டத்தில், அச்சு ஊடகங்களில் வரும் செய்திகள், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருப்பதாக 63 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
பூர்வகுடிகள் பட்டியலில் படுகர் மக்கள் சேர்ப்பு : ஐ.நா., அறிவிப்பு
  • நீலகிரி படுக மக்களை பூர்வகுடியினருக்கான பட்டியலில் சேர்த்து, ஐ.நா., மலைகளுக்கான கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின், மலைகளுக்கான கூட்டமைப்பு, உலக பூர்வகுடியினருக்கான பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. 'நீலகிரி ஆவண மைய காப்பகம்' சார்பில், நீலகிரி படுக சமுதாயம், உலக பூர்வகுடியினருக்கான பட்டியலில் இடம்பெற வேண்டி, அனைத்து ஆவணங்களுடன், விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
  • ஐக்கிய நாடுகளின் மலைகளுக்கான கூட்டமைப்பு, விண்ணப்பத்தை ஏற்று, அக்., 12ல், படுகர் சமுதாயத்தை உலக பூர்வ குடியினர் பட்டியலில் இடம்பெற செய்தது. அதற்கான அறிவிப்பு சான்றிதழை, படுகர் இன தலைவர் அய்யாரு, நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து வழங்கினர்.
விவசாய கழிவுகளை எரிப்பதை தடுக்க குழு
  • விவசாய கழிவுகளை எரிப்பதை தடுக்க, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, மதன் பி லோக்குர் தலைமையில், ஒரு நபர் குழு அமைக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு ஆணையம், ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், லோக்குர் குழுவுக்கு தேவையான உதவிகளையும், பாதுகாப்பையும் வழங்க வேண்டும். இந்த குழு, கள நிலவரங்களை ஆய்வு செய்து, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
நியூசிலாந்து பொது தேர்தல்: ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் வெற்றி
  • நியூசிலாந்தில் பொதுதேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி நேரடியாக எதிர்கொண்டது. அதில், பிரதமர் ஜெசிந்தாவின் ஆளும் தொழிலாளர் கட்சி 49 சதவிகித ஓட்டுக்களை பெற்று அபார வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான தேசிய கட்சி 27 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. பார்லிமென்டில் மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை ஜெசிதாவின் ஆளும் கட்சி கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து தேர்தலில் ஜெசிந்தா ஆர்டெர்ன் மகத்தான வெற்றியை பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்தின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டன் இரண்டாவது முறையாகப் பதவி ஏற்க உள்ளார்.
ரஷ்ய தடுப்பு மருந்தை இந்தியாவில் பரிசோதிக்க ஒப்புதல்
  • ரஷ்யா உருவாக்கியுள்ள ‛ஸ்புட்னிக்-வி' தடுப்பு மருந்தை இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதனை செய்ய டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அமைப்பு(டிசிஜிஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், முதலாவதாக ரஷ்யா மட்டும் கொரோனா வைரசுக்கு ‛ஸ்புட்னிக்-வி' என்ற மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தது. இந்த மருந்தின் பாதுகாப்பு குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இந்த மருந்து தற்போது 3ம் கட்டமாக 40 ஆயிரம் பேருக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 
  • இந்த மருந்தை இந்தியாவில் பரிசோதனை செய்யவும், விற்பனை செய்யவும் ரஷ்யாவுடன், இந்தியாவை சேர்ந்த டாக்டர் ரெட்டி நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, 10 கோடி டோஸ் மருந்தை டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு ரஷ்யா வழங்கும்.
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 10 ஆண்டுகள் அதிகரிப்பு – ஆய்வில் தகவல்
  • இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக 10 ஆண்டுகள் அதிகரித்து உள்ளதாக லான்செட் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 1990ம் ஆண்டு 59.8 ஆக இருந்த சராசரி ஆயுட்காலம் 70.8 ஆண்டுகளாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது. லான்செட் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையின் படி, இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 1990 ல் 59.6 ஆண்டுகளில் இருந்து 2019 ல் 70.8 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இருப்பினும், கேரளா போன்ற பல மாநிலங்களுக்கிடையில் கடுமையான ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கேரளாவில் ஆயுட்காலம் 77.3 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. மறுபுறம், உத்தரபிரதேசத்தில் 66.9 ஆண்டுகளாக இருந்தது.
  • இந்தியாவில் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருப்பதில் இதய நோய் 5வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது முதலிடத்தில் உள்ளது. மேலும் புற்றுநோய் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 10.67 லட்சம் இதய நோய்களாகவும், உயர் இரத்த அழுத்தம் (10.47 லட்சம் இறப்புகள்), பபுற்றுநோய் (10.23 லட்சம் இறப்புகள்), உணவு பிரச்சனைகள் (10.18 லட்சம் இறப்புகள்), மற்றும் உயர் இரத்த சர்க்கரை அளவு (10.12 லட்சம் இறப்புகள்) காரணமாக உள்ளது.
பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து விரைவில் முடிவு-பிரதமர் மோடி அறிவிப்பு
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்துவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 
  • பிரதமர் மோடி கடந்த சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது, இது பற்றி ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டுவிழாவையொட்டி, ரூ.75 மதிப்புள்ள நினைவு நாணயத்தை காணொலி காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பெண்களின் திருமண வயது, ஊட்டசத்து குறைபாடு, விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து குறிப்பிட்டார்.
குளிர்சாதனப் பெட்டி இறக்குமதிக்கு தடை : மத்திய அரசு அறிவிப்பு
  • வெளிநாடுகளில் இருந்து குளிர்சாதனப் பெட்டி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு, இந்தியாவில் கிடைக்கும் சில பொருட்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்து வருகிறது. முன்னதாக கார்கள், பேருந்துகள், லாரிகள், பைக்குகளில் பயன்படுத்தப்படும் டயர்கள், டிவி உள்ளிட்ட பொருள்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், தற்போது குளிர்சாதனப்பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
  • இதன்படி ஏர் கண்டிஷனர் எனப்படும் குளிர்சாதனப் பெட்டிகளை இறக்குமதி செய்ய தடை விதித்து, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. ஏர் கண்டிஷனர் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் கம்ப்ரஸர் உள்ளிட்ட பொருள்கள் சீனா மற்றும் தாய்லாந்திலிருந்து சுமார் 90% இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் தற்போது ஏசி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த இரு நாட்டு வர்த்தகமும் பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய பசி குறியீட்டு 2020 பட்டியலில் இந்தியாவுக்கு 94 வது இடம்!
  • 2020 ஆம் ஆண்டில், உலகளாவிய பசி குறியீட்டில் 107 நாடுகளில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது. உலகளாவிய பசி குறியீட்டு 2020 (Global Hunger Index 2020) இல் 107 நாடுகளில் இந்தியா 94 வது இடத்தில் உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 27.2 மதிப்பெண்களுடன், இந்தியாவில் பசி அளவு உள்ளது, அது "தீவிரமானது". கடந்த ஆண்டு 117 நாடுகளில் இந்தியாவின் தரவரிசை 102 ஆக இருந்தது.
  • இந்த குறியீட்டில், நேபாளம் (73), பாகிஸ்தான் (88), பங்களாதேஷ் (75), இந்தோனேசியா (70) ஆகியவற்றுக்கு பின்னால் இந்தியா இடம்பெற்றுள்ளது. மொத்த 107 நாடுகளில், ருவாண்டா (97), நைஜீரியா (98), ஆப்கானிஸ்தான் (99), லைபீரியா (102), மொசாம்பிக் (103), சாட் (107) உள்ளிட்ட நாடுகள் உட்பட இந்தியாவை விட 13 நாடுகள் மட்டுமே மோசமானவை. அந்த அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள்.

10/16/2020

TNPSC Current Affairs Important Notes: 15 10.2020 & 16.10.2020

10/16/2020 0
TNPSC Current Affairs Important Notes: 15 10.2020 & 16.10.2020
மியான்மருக்கு நீர்மூழ்கி கப்பலை வழங்குகிறது இந்தியா
  • ஐஎன்எஸ் சிந்துவிர் என்ற நீர்மூழ்கி கப்பலை மியான்மருக்கு வழங்க இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அண்மையில் ராணுவத்தளபதி மனோஜ் நரவானேவின் மியான்மர் சுற்றுப்பயணத்தின் போது, ராணுவ தளவாடங்களை வழங்க இந்தியா ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அந்நாட்டுக்கு நீர்மூழ்கி கப்பலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  ‛மியான்மரின் ராணுவத்தில் இதுவே முதலாவது நீர்மூழ்கி கப்பல் ஆகும். அண்டை நாடான மியான்மருடன் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான முயற்சி இது'
ஆஸ்கர் விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் பானு அத்தையா காலமானார்
  • காந்தி திரைபடத்தில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான ஆஸ்கர் விருது பெற்ற பானு அத்தையா,91 உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார். மும்பையைச் சேர்ந்த இவர் "சி. ஐ. டி."(1956) என்ற இந்தி திரைப்படத்தில் ஆடை வடிவமைப் பாளராக அறிமுகமாகி , முன்னணி பாலிவுட் ஜாம்பவான்களான குரு தத், யஷ் சோப்ரா, ராஜ் கபூர் போன்றவர்களின் படங்கள் என 100 -க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 1983ம் ஆண்டு, இயக்குனர் ரிச்சர்டு ஆட்டென்பரோ இயக்கத்தில் வெளியான, "காந்தி' படத்தில், சிறந்த ( ஆடை வடிவமைப்பாளர் ) காஸ்ட்யூம் டிசைனுக்காக பானு அத்தையாவுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தனது 50 வருட சினிமா வாழ்வில் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
அமெரிக்க தமிழர் விளக்கு விருதுக்கு கலாப்ரியா, பேரா.பஞ்சாங்கம் தேர்வு
  • அமெரிக்க வாழ் தமிழர்களின் விளக்கு இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் புதுமைப்பித்தன் நினைவாக கலை - இலக்கியத்தில் சிறந்த பங்களிப்பாளர்களுக்கு விருது வழங்குகின்றனர். ஏற்கனவே விளக்கு விருது சி.சு.செல்லப்பா, பிரமிள், பூமணி, தேவதச்சன் உள்ளிட்ட சிறந்த படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.கடந்த சில ஆண்டுகளாக ஒரே ஆண்டில் இருவருக்கு வழங்குகின்றனர். 2019 ஆண்டுக்கான விளக்கு விருது தேர்வு குழு உறுப்பினர்கள் எழுத்தாளர் திலகவதி, பேரா.சு.சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகியோர் கவிஞர் கலாப்ரியா, பேராசிரியர் க.பஞ்சாங்கம் ஆகியோரை விருதுக்கு தேர்வு செய்தனர்.
தமிழக அரசு கூடுதலாக ரூ.9,627 கோடி கடன் வாங்க அனுமதி
  • தமிழக அரசு கூடுதலாக ரூ.9,267 கோடி கடன் வாங்கி கொள்ள மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜிஎஸ்டி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. இதனை உடனடியாக வழங்கும்படி மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்துக்கான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையான ரூ.4 ஆயிரத்து 321 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. மாநிலங்களுக்கான இழப்பீடுகளை அளிப்பது தொடர்பாக, சமீபத்தில் நடந்த கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்த இழப்பீட்டுத் தொகையை, மாநிலங்கள் கடனாக பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன.
சிவகங்கை அருகே பெருங்கற்கால கல்வட்டம் கண்டுபிடிப்பு!
  • சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர், அண்ணாநகர் பகுதியில் 2,500 முதல் 3,500 ஆண்டுகள் பழமையான சங்க காலத்தோடு தொடர்புடைய கல் வட்டங்கள் உள்ளன. ஒக்கூர் மாசாத்தியார் பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. மாசாத்தியார் காலத்து ஈமக்காடாக இந்த கல் வட்டங்கள் இருந்திருக்கலாம். மலைப்பகுதியில் வெள்ளைக்கல், மற்ற செம்மண் பகுதிகளில் செம்பூரான் கற்களால் கல் வட்டங்கள் அமைக்கப்படும். ஆனால் இவ்விடத்தில் 2 கற்களும் கலந்துள்ளது வியப்பாக உள்ளது.
  • பெருங்கற்காலத்தில் இறந்த மனிதனை புதைத்து சடங்குகள் முடித்து வழிபட்டு வந்தனர். இறந்த உடலை அல்லது எலும்புகளை பாதுகாக்க புதைத்து அதைச்சுற்றி பெரும் கற்களை அடுக்கி வைத்துள்ளனர். இவ்வாறான கல்வட்டங்கள் பல பகுதிகளில் காணக் கிடைக்கின்றன. பலகை கற்களை நான்கு பகுதிகளிலும் குத்தாக்க நிறுத்தி வைத்து அறை போல வடிவமைத்து, அதில் உடல் அல்லது எலும்புகளை வைக்கும் முறை கற்பதுக்கை என வழங்கப்படுகிறது. 
ஜி.எஸ்.டி. வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட மாநிலங்கள் சார்பில் மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்குகிறது
  • பொருளாதார மந்தநிலை காரணமாக, கடந்த நிதி ஆண்டில் இருந்தே மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. வருவாய் வீழ்ச்சி அடைய தொடங்கியது. மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க சொகுசு பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் மீது விதிக்கப்படும் உபரிவரி மூலம் கிடைக்கும் வருவாயை மத்திய அரசு பயன்படுத்துகிறது. ஆனால், அந்த வருவாயும் குறைந்து விட்டது. அதனால், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம்வரை மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய இழப்பீட்டு நிலுவைத்தொகை ரூ.1 லட்சத்து 51 ஆயிரம் கோடியாக உள்ளது.
  • இந்த இழப்பீட்டு நிலுவையை ஈடுகட்ட ரிசர்வ் வங்கி மூலமோ அல்லது வெளிச்சந்தையில் இருந்தோ கடன் வாங்கிக்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு 2 விருப்ப தேர்வுகளை மத்திய அரசு முன்வைத்தது. அதில், வெளிச்சந்தை கடன் விருப்ப தேர்வை 21 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன. அந்த மாநிலங்கள், வெளிச்சந்தையில் இருந்து கூடுதலாக ரூ.68 ஆயிரம் கோடி திரட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது. அனைத்து மாநிலங்களும், தற்போதைய கடன் வரம்புக்கு மேல் கூடுதலாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கடன் வாங்க யோசனை தெரிவித்தோம். இந்த தொகையை மாநிலங்கள் சார்பில் மத்திய அரசே வெளிச்சந்தையில் கடன் வாங்கும். பின்னர், ஜி.எஸ்.டி. இழப்பீட்டுக்கு பதிலாக, மாநிலங்களுக்கு அந்த பணம் கடனாக வழங்கப்படும்.

10/14/2020

TNPSC Current Affairs Important Notes: 14.11.2020

10/14/2020 0
TNPSC Current Affairs Important Notes: 14.11.2020
பூமிக்கு மிக அருகில் வரும் செவ்வாய்
  • விண்வெளியில் 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரிய நிகழ்வு  14.10.2020 அன்று வானில் நடைபெற உள்ளது. இதில் பூமி, செவ்வாய் மற்றும் சூரியன் ஆகியவை ஒரே நேர் கோட்டில் சந்திக்க உள்ளது. மேலும் பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வருவதால் தொலைநோக்கி இல்லாமல் வெற்றுக்கண்களால் அந்த கிரகத்தை அமீரகத்தில் பார்க்க முடியும்.
  • பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையிலான அதிகபட்ச தூரம் 40 கோடியே 13 லட்சம் கி.மீ தொலைவு ஆகும். இதில் நீள் வட்ட பாதை பயணத்தில் மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும்போது இரு கிரகங்களுக்கும் இடையிலான தூரம் 6 கோடியே 20 லட்சம் கி.மீ. தொலைவாக இருக்கும். இந்த நீள்வட்ட பாதை தொலைவு காரணமாகவே பூமி ஒருமுறை சூரியனை சுற்றி வர 365 நாட்களும், செவ்வாய் கிரகம் சூரியனை சுற்றி வர 687 நாட்களும் ஆகிறது.
40 கோடி வாடிக்கையாளர்களை பெற்று ரிலையன்ஸ் ஜியோ சாதனை
  • இந்தியாவில் 40 கோடி வாடிக்கையாளர்கள பெற்ற முதல் நெட்வொர்க் நிறுவனம் என்ற சாதனையை ஜியோ படைத்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 35 லட்சம் பேரைத் தனது சேவைக்குள் இணைத்துள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது. தற்போது 40 கோடியே 8 லட்சத்து 3 ஆயிரத்து 819 வாடிக்கையாளர்களுடன் ஜியோ முதல் இடத்தில் உள்ளதாக டிராய் கூறியுள்ளது.
‛ஆரோக்கிய சேது' செயலிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
  • மத்திய அரசு வெளியிட்டுள்ள ‛ஆரோக்கிய சேது' செயலிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ், குறித்து விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்க, மத்திய அரசு ‛ஆரோக்கிய சேது' செயலியை அறிமுகம் செய்தது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் இந்த செயலியை வெளியிட்டுள்ளது. 
  • ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, வங்க மொழி, ஒரியா, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம், நாம் வசிக்கும் இடம் அருகே கொரோனா வைரஸ், தொற்றுள்ள பகுதிகளை சுட்டிக்காட்டும். தொற்று பாதித்தவர்களை சந்திப்பதை தவிர்க்க முடியும். மேலும், கொரோனா வைரஸ் தொற்றில், இருந்து தற்காத்து கொள்வது குறித்து தகவல்களை வழங்கும்.
  • இந்த செயலி தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரஸ் அத்னோம் கூறியதாவது: ஆரோக்கிய சேது செயலியை இந்தியாவில் 150 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். சோதனையை இலக்கை எட்டவும், ஹாட்ஸ்பாட்டாக எதிர்பார்க்கக்கூடிய பகுதிகளை அடையாளம் காணவும் பொது சுகாதார துறைகளுக்கு இது உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு
  • பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்றங்களால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும். அதன்படி, பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு குறைந்தபட்ச இழப்பீடாக ரூ.4 லட்சத்தில் இருந்து அதிகபட்ச இழப்பீடாக ரூ.7 லட்சம் வரை வழங்கப்படும். மிக கடுமையான பாலியல் வல்லுறவினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும். பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை; கடுமையான பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை;
  • மறுவாழ்வு தேவைப்படும் அளவுக்கு மன ரீதியான அல்லது உடல் ரீதியாக கொடுங்காயம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை; ஆபாசப் படம் எடுக்கப்பட்டிருந்தால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை; பாலியல் கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்துவிட்டால் குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை; பாலியல் குற்றத்தினால் கர்ப்பிணியாக்கப்பட்டால் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை; கர்ப்பிணியாக்கப்பட்டு, கரு கலைக்கப்பட்டு, கர்ப்பமாகும் தகுதியை இழந்துவிட்டால் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம், அதிகபட்சம் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
ஜி.எஸ்.டி. இழப்பீடு பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.68,825 கோடி கடன் திரட்ட 20 மாநிலங்களுக்கு அனுமதி
  • கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையால், நடப்பு நிதியாண்டில், மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை ஈடுகட்ட ரிசர்வ் வங்கி மூலம் ரூ.97 ஆயிரம் கோடி கடன் அல்லது வெளிச்சந்தையில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரம் கோடி கடன் திரட்டுமாறு மாநிலங்களுக்கு 2 விருப்ப தேர்வுகளை மத்திய அரசு முன்வைத்துள்ளது. வெளிச்சந்தை கடன் விருப்பத்தேர்வை 20 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.
  • இந்த மாநிலங்கள், வெளிச்சந்தையில் இருந்து ரூ.68 ஆயிரத்து 825 கோடி கடன் திரட்ட மத்திய அரசு நேற்று அனுமதி அளித்தது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவின துறை இந்த அனுமதியை அளித்துள்ளது.