-->

TNPSC Current Affairs Important Notes: 12.10.2020

அமெரிக்கா, இங்கிலாந்தை தொடர்ந்து இந்திய குழந்தைகளை மிரட்டும் 'மிஸ்-சி'
  • அமெரிக்கா, இங்கிலாந்தை தொடர்ந்து 'மிஸ்-சி' என்னும் புதிய நோய் இந்திய குழந்தைகளை மிரட்ட துவங்கியுள்ளது. இதுவரை சென்னையில் 55, மதுரையில் 12 பேரை இந்நோய் பாதித்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்தில் அதிகளவில் தென்பட்டுள்ளது. இறுதியில் இந்திய குழந்தைகள் மீதும் 'மிஸ்-சி' தாக்குதல் தொடுக்க துவங்கியுள்ளது. இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் பாதிப்பு தென்படுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரையில் 'மிஸ்-சி' தாக்கிய குழந்தைகளை டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இதுவரை 55 பேருக்கும், மதுரை அரசு மருத்துவமனையில் 12 பேருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. 
  • 'மிஸ்-சி' கைக்குழந்தை முதல் 14 வயது வரையிலான குழந்தைகளை குறி வைக்கிறது. கொரோனா பரவலுக்குப் பிறகு இப்பாதிப்பு தென்படுகிறது. இந்தியாவில் ஜூனில் தான் 'மிஸ்-சி' பற்றி கேள்விப்பட முடிந்தது. கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இப்பாதிப்பு நேரலாம் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் கொரோனாவை வீழ்த்தும் ஆன்டிபாடிகள் அவர்களது உடம்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வைரஸின் தொடர்ச்சியாக 'மிஸ்-சி' ஏற்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் கொரோனா தாக்கிய அனைத்து குழந்தைகளுக்கும் இப்பாதிப்பு நேர்வதில்லை. அபூர்வமாக சிலரை பாதிக்கிறது.
சீன-இந்திய ஒற்றுமையை வலியுறுத்தும் துவாரகநாத் பிறந்தநாள் விழா
  • சீனாவின் ஹூபே மாகாணத்தில் புகழ்பெற்ற இந்திய மருத்துவர் துவாரகநாத் சாந்தாராம் கோட்நிஸ்ஸின் சிலை உள்ளது. சீன அரசால் அதிகம் மதிக்கப்படும் இந்தியர்களில் ஒருவர் இவர். சீன-ஜப்பான் போரின்போது 1938-ஆம் ஆண்டு இவரது மருத்துவ பங்களிப்பே இதற்கு இதற்கு முக்கிய காரணம். 1938 முதல் 1942 வரை சீன-ஜப்பானிய போர் உச்சத்தில் இருந்தது. அப்போது சீனாவின் நட்பு நாடாக இருந்த இந்தியா சார்பாக ஐந்து மருத்துவர்கள் கொண்ட ஓர் குழு சீனாவுக்கு உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஒருவர்தான் துவாரகநாத். பயிற்சி பெற்ற சிறந்த இந்திய மருத்துவர்களில் ஒருவரான அவர் சீன ராணுவ படைக்கு உதவிகள் செய்துள்ளார். இதனால் சீனாவுக்கு அவர்மீது என்றும் தனி மரியாதை உண்டு.
  • இதில் துவாரகநாத் பங்களிப்பை போற்றும் வகையில் அவரது பிறந்த நாள் அன்று அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் சமீபத்திய லடாக் எல்லை பிரச்னை குறித்த ஓர் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதுபோன்ற வேறுபாடுகளை களைந்து இந்தியாவும் சீனாவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என சீன-இந்திய நல்லுறவை விரும்பும் அமைப்பு தெரிவித்துள்ளது.
சாதனை படைக்கும் ஷிவாங்கி! 'ரபேல்' போர் விமானத்தின் முதல் பெண் விமானி
  • இந்திய விமானப் படையில், சமீபத்தில் சேர்க்கப்பட்ட, அதிநவீன, 'ரபேல்' போர் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற சிறப்பை பெறுகிறார், ஷிவாங்கி சிங், 25. இவரது சொந்த ஊர், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள புண்ணிய ஸ்தலமான, வாரணாசி. தந்தை குமரேஷ்வர், சுற்றுலா நிறுவனம் நடத்தி வருகிறார். தாய் சீமா சிங், இல்லத்தரசி.
‘ஒரு நாள் பிரிட்டன் தூதரான’ தில்லி பெண்: சைதன்யா வெங்கடேஸ்வரன்
  • இந்தியாவுக்கான ஒரு நாள் பிரிட்டன் தூதராக தில்லியைச் சோ்ந்த சைதன்யா வெங்கடேஸ்வரன் (18) நியமிக்கப்பட்டாா். உலகம் முழுவதும் பெண்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதை வலியுறுத்தும் தூதரக நிகழ்ச்சியின் ஒருபகுதியாக அவருக்கு அந்த ஒரு நாள் அடையாளப் பதவி வழங்கப்பட்டது. பெண்களுக்கு அதிகாரமளித்தலை வலியுறுத்தவும் அவா்கள் எதிா்கொண்டுள்ள சவால்களை வெளிப்படுத்தவும் ‘ஒரு நாள் தூதா் பதவி’க்கான போட்டியை பிரிட்டன் தூதரகம் கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. இந்தப் போட்டில் பங்கேற்க, 18 முதல் 23 வயது வரை கொண்ட இளம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
  • 2020-ஆம் ஆண்டுக்கான அந்தப் போட்டியில் தில்லியைச் சோ்ந்த சைதன்யா வெங்கடேஸ்வரன் வெற்றி பெற்றாா். அதையடுத்து, இந்தியாவுக்கான பிரிட்டன் தூதராக அவருக்கு கடந்த புதன்கிழமை பொறுப்பு வழங்கப்பட்டது. ஏற்கெனவே கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து 3 பெண்கள் ஒரு நாள் பிரிட்டன் தூதராகப் பொறுப்பேற்ற நிலையில், 4-ஆவதாக சைதன்யா வெங்கடேஸ்வரன் அந்தப் பதவியை வகித்தாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சா்வதேச பெண் குழந்தைகள் தினம்: ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்த ஆந்திர மாணவி
  • சா்வதேச பெண் குழந்தைகள் தினம் (11.10.2020) கொண்டாடப்பட்டதை யொட்டி ஆந்திரம் மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்திலுள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.ஸ்ரவாணி ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தாா். 11.10.2020 அன்று அனந்தபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலத்துக்கு புடவை கட்டி வந்த கஸ்தூா்பா காந்தி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரவாணியை, மாவட்ட ஆட்சியா் டி.சி. காந்தம் சந்த்குடு உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனா். அதன்பின்பு மாவட்ட ஆட்சியா் இருக்கையில் அமா்ந்த ஸ்ரவாணி ஒரு நாள் ஆட்சியராக முறைப்படி பொறுப்பேற்றாா். அப்போது கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டன. பதவியேற்றவுடன், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீதான அட்டூழியங்களுக்கு எதிரான தடுப்பு சட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.25,000 நிவாரண உதவி வழங்கும் கோப்பில் முதல் கையெழுத்திட்டாா்.
பிரெஞ்சு ஓபன்: பட்டம் வென்று நடால் சாதனை
  • பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஃபேல் நடால் பட்டம் வென்றார். இதில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் மோதினர். இது நடாலின் 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதன்மூலம், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாதனையை நடால் சமன் செய்துள்ளார். இந்த வரிசையில் ஜோகோவிச் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் உள்ளார்.
கரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம்: ஹர்ஷ வர்தன்
  • கரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார். சண்டே சம்வாத் 5-ஆவது நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், தனது சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியவர்களுக்கு பதில் அளித்தார். கொவைட் தொற்று மேலும் பரவாமல் தடுக்க, அடுத்த 2 மாதங்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்த மக்கள் இயக்க பிரசாரத்தில் மக்கள் இணைய வேண்டும் என ஹர்ஷ் வர்தன் வலியுறுத்தினார். கரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். 2000 நோயாளிகளுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், முடிவுகள் 98 சதவீதம் துல்லியமாக இருந்ததாக அவர் கூறினார்.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting