-->

TNPSC Current Affairs Important Notes: 08.10.2020

தேசிய விமானப்படை தினம்: வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்து
  • இந்திய விமானப்படையின் 88 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தின் முப்படைகளில் ஒன்றான விமானப் படை, உலக அளவில் சக்தி வாய்ந்த படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இதனை அடுத்து  ஒவ்வோரு ஆண்டும் அக்டோபர் 8ந்தேதி இந்திய விமான படை தினம் கொண்டாடப்படுகிறது. 
இந்தியா முழுவதும் 24 பல்கலைக்கழகங்கள் போலியானவை : யுஜிசி
  • இந்தியா முழுவதும் அங்கிகாரம் இல்லாமல் செயல்பட்ட போலியான 24 பல்கலைக்கழகத்தின் பெயர்களை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்திற்கு புறம்பாகவும், அங்கிகாரம் பெறாமலும் இயங்கிய 24 பல்கலைக்கழகத்தின் பெயரை வெளியிட்டுள்ளனர். இதுவரை அந்தப் பல்கலைக்கழகங்கள் எந்த சான்றிதழ்களும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதில், அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் (8), தில்லி (7), ஒடிசா (2), மேற்கு வங்காளம் (2), கர்நாடகம் (1), கேரளம் (1), மகாராஷ்டிரம் (1), ஆந்திரம் (1) மற்றும் புதுச்சேரி (1) பல்கலைக்கழகங்கள் போலியானதாக யுஜிசி செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் கூறினார்.
வேதியியலுக்கான நோபல் பரிசு: இரு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு
  • இந்தாண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு இம்மானுவேல் சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுனா ஆகிய இரு பெண் விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக பெண் விஞ்ஞானிகளான  இம்மானுவெல்லே சார்பென்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுனா ஆகிய இருவருக்கு பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
  • இவர்கள் இருவரும் பாக்டீரியத்தின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆய்வு செய்தபோது, ஒரு மூலக்கூறு கருவியைக் கண்டுபிடித்தனர். இது மரபணுவில்  துல்லியமான கீறல்களை மேற்கொள்ள உதவுகிறது. மரபணு தொழில்நுட்பத்தின் கூர்மையான கருவிகளில் ஒன்றாக CRISPR / Cas9 மரபணு கத்தரிக்கோலை பயன்படுத்தி, விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் டி.என்.ஏ.வை மிகத் துல்லியமாக மாற்ற முடியும். மூலக்கூறு அறிவியலில் இது புரட்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, தாவர இனப்பெருக்கத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. புற்றுநோய் சிகிச்சைகளுக்கும், பரம்பரை நோய்களைக் குணப்படுத்தவும் பெரிதும் பயன்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
இணைய பாதுகாப்பில் ஜப்பானுடன் ஒப்பந்தம்: அமைச்சரவை ஒப்புதல்
  • சீனாவால் நம் நாட்டில் சமீப காலமாக இணைய வழித் தாக்குதல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் சீனாவுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இணைய பாதுகாப்பில் ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. திறந்த நம்பகமான நியாயமான மற்றும் பாதுகாப்பான இணைய சுற்றுச்சூழலை உருவாக்குவதில், இந்தியாவும் ஜப்பானும் உறுதியாக உள்ளன. இதன் ஒரு கட்டமாக இணைய பாதுகாப்புத் துறையில் இந்தியா - ஜப்பான் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை செய்து கொள்வதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்பந்தம் வாயிலாக ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச அரங்கங்களில் இருதரப்பும் ஒத்துழைப்பை உறுதிபடுத்தியுள்ளோம். தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் உள்கட்டமைப்பு பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் மேலும் வலுபடுத்தும்.
சீனாவின் மனித உரிமை விவகாரம்: ஐ.நா.,வில் 39 நாடுகள் கடும் கண்டனம்
  • அமெரிக்காவில், ஐ.நா., பொது சபையின் மனித உரிமைகள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட, 39 நாடுகள் ஒன்றிணைந்து வெளியிட்ட அறிக்கையை, ஐ.நா.,விற்கான ஜெர்மனியின் நிரந்தர துாதர், கிறிஸ்டோப் ஹெஸ்கன் வாசித்தார். அறிக்கைஇந்த அறிக்கை வாசிக்கப்பட்டதும், 55 நாடுகள் சார்பாக, சீனாவிற்கு ஆதரவான அறிக்கையை, பாக்., வெளியிட்டது. அதில், 'ஹாங்காங் பிரச்னை, சீனாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால், அதில் பிற நாடுகள் தலையிடக் கூடாது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவும், மேற்கத்திய நாடுகளின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.
லண்டனில் ஹிந்துக்களுக்கு எதிரான பள்ளி புத்தகம் 'வாபஸ்'
  • பிரிட்டனின் லண்டனில் உள்ள ஒரு பள்ளியில், மதம் தொடர்பான பாடத் திட்டம் இடம்பெற்றுள்ளது. அதில் ஹிந்து மதத்தை தவறாக சித்தரிக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:நமக்கு சரி என்று தெரிந்தால், போரும் புரியலாம் என்று ஹிந்து மதம் நம்பு கிறது. அதனால் தான், இந்தியா அணு ஆயுதங்களை தயாரித்துள்ளது. ஹிந்துக்கள் சிலர், ஹிந்து மதத்தை பாதுகாக்க பயங்கரவாத வழியைப் பின்பற்றுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கு, பிரிட்டன் ஹிந்து அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதையடுத்து, இந்தப் புத்தகம், பாடத் திட்டத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting