-->

TNPSC Current Affairs Important Notes: 09.10.2020

மெர்சிடெஸ் நிறுவனம் இந்தியாவில் முதல் மின்சார கார் அறிமுகம்
 • பன்னாட்டு கார் நிறுவனமான மெர்சிடெஸ் பென்ஸ் முதல் மின்சார காரான ‛இக்யூசி' ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக இந்தியாவின் ஆறு நகரங்களில் மட்டுமே இது அறிமுகம் ஆகிறது. சென்னை, டில்லி, பெங்களூரு, மும்பை, புனே மற்றும் ஐ தராபாத் நகரங்களில் உள்ள ஷோ ரூம்களில் மொத்தம் 50 கார்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளது. இதன் அறிமுக விலை 99.3 லட்சம் ரூபாயாக உள்ளது. 
 • இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதலாவது மின்சார எஸ்யுவி யான இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 350 கி.மீ., வரை செல்லும் எனவும் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் வாரண்டி உண்டு என்றும் தெரியவருகிறது.
மருந்துபொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு :மோடி
 • இந்தியா கனடா , வணிக உறவுகள் இருநாட்டு பொருளாதாரம் குறித்து வீடியோ கான்பரன்சிங்முறையில் பிரதமர் மோடி பேசியதாவது: எந்தஒரு நாட்டிலும் முதலீடு செய்வதற்கு முன்பாக ஜனநாயகம் இருக்கிறதா அரசியல் ஸ்திரத்தன்மை உள்ளதாக என்பதை காணுங்கள்.இந்தியா இன்று மட்டுமல்ல நாளைக்கும் வலிமையாக இருக்கும். இதுவரையில் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருந்து பொருட்களை விநியோகித்து உள்ளது. அன்னிய நேரடி முதலீட்டில் மேலும் பலதளர்வுகள் தரப்பட்டுள்ளது. முதலீடுகளை அதிகரிப்பதற்காகவே அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ளது.
 • தொழில் துவங்க ஏற்ற நாடுகளின் பட்டியலில் கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது.2019-- -20 ம் நிதியாண்டில் இந்தயாவின் அன்னிய நேரடி முதலீடு 23 சதவீதம் அதிகரித்துள்ளது. முதல் ஆறு மாதங்களில் இந்தியா 20 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீட்டை ஈர்த்துள்ளது.
சீனா மூன்றாம்தர அடியாள்போல அராஜகம் செய்துகொண்டு இருக்கிறது: தைவான்
 • தைவான் அதிபர் ட்சாய் இங் வென் ஜனநாயகத்தை பின்பற்றும் தலைவராவார். ஆசியாவின் பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவுடன் சிறந்த நட்பு உறவை வைத்துக் கொள்ள அவர் முடிவெடுத்தார். சிறு தீவு நாடான தைவான் தொழில்நுட்பத்திலும் தொழில்களிலும் வளர்ந்து வருகிறது. சீனாவின் இரும்புக் அதிலிருந்து விடுபட நினைக்கிறது. 
 • இந்தியாவுக்கும் தைவானுக்கும் நேரடி வர்த்தகத் தொடர்பு இல்லை என்றாலும் சீனாவை எதிர்க்க இந்தியாவை தைவான் துணைக்கு அழைத்துக்கொண்டது. இதற்கு மோடி அரசும் ஒத்துழைக்கிறது. இந்தியாவில் உள்ள சீன தூதரகம், குடியரசு தினத்தை குறித்த செய்தியை இந்திய பத்திரிகைகள் வெளியிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனை தைவான் கடுமையாக எதிர்த்துள்ளது. சீனா மூன்றாம் தர அடியாள்போல அராஜகம் செய்துகொண்டு இருக்கிறது என தைவான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!: அமெரிக்காவின் லூயிஸ் க்ளுக்
 • 2020 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசினை லூயிஸ் க்ளுக் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் பெறுகிறார். இவர் 1943 இல் நியூயார்க்கில் பிறந்தார். மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் வசிக்கிறார். இவர் கவிஞர் மட்டுமின்றி, நியூ ஹெவனில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
 • இலக்கியப் பரிசு பெற்ற லூயிஸ் க்ளுக், 1968 ஆம் ஆண்டில் ‘பர்ஸ்ட் பார்ன்’ என்ற கவிதை மூலம் அறிமுகமானார். பின்னர் அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராக பாராட்டப்பட்டார். அவர் 12 கவிதைத் தொகுப்புகளையும், கவிதைகள் குறித்த சில கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். இவரது படைப்புகள் தெளிவுக்கான முயற்சிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ‘அவெர்னோ(Averno)’ (2006) ‘Faithful and Virtuous Night’ (2014) உள்ளிட்ட பல படைப்புகளை தந்துள்ளார்.
போர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் பட்டியல்; 13வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்
 • போர்ப்ஸ் (Forbes) பத்திரிகை இந்தியாவின் ‛டாப்-100' பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருக்கிறார். மேலும் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து தற்போது 6 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. போர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13வது ஆண்டாக முதலிடத்தை பிடித்துள்ளார்.
 • இரண்டாம் இடத்தில் கவுதம் அதானி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக உள்ளது. மூன்றாம் இடத்தில் ஹெச்.சி.எல் நிறுவனர் சிவ நாடார், 4வது இடத்தில் அவன்யூ சூப்பர்மார்க்கெட் நிறுவன உரிமையாளர் ராதாகிஷண் தமானி, 5வது இடத்தில் அசோக் லேலாண்ட்டின் இந்துஜா சகோதரர்கள் உள்ளனர்.
நாட்டிலேயே முதல் முறையாக கேரளத்தில் விவசாயிகள் நலநிதி வாரியம்
 • நாட்டிலேயே முதல் முறையாக, கேரள மாநிலத்தில் விவசாயிகள் நலநிதி வாரியம் அமைக்க அந்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கேரளத்தில் 5 சென்ட் முதல் 15 ஏக்கர் வரையிலான நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், குத்தகைக்கு வேளாண்மை செய்யும் விவசாயிகள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக இணையலாம். அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயிகள் பட்டியலில் தோட்டக்கலை பயிர்கள், மருத்துவப் பயிர்கள் பயிரிடுவோர், நர்சரி வைத்திருப்பவர்களும் அடங்குவார்கள். அத்துடன், மீன் வளர்ப்பு, அலங்கார மீன் வளர்ப்பு, சிப்பி, பட்டுப்புழு, கோழி, வாத்து, ஆடு, முயல், கால்நடைகள் வளர்ப்பில் ஈடுபட்டிருப்பவர்களும் இந்த வாரியத்தில் சேர முடியும்.
உலகளவில் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையைப் பதிவு செய்த செப்டம்பர் மாதம்
 • உலகில் பல்வேறு பகுதிகளிலும் காலநிலை மாற்றத்தின் தீவிரம் உணரப்பட்டு வருகிறது. உலகின் வெப்பநிலை உயர்ந்து வருவதால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உடைந்து கடல்நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஐரோப்பிய அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த மாதம் முன்னெப்போது இல்லாத அளவிற்கு வெப்பமான செப்டம்பர் மாதமாக பதிவாகியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தை விட 0.05 செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகப் பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கு, தென் அமெரிக்காவின் சில பகுதிகள், ஆஸ்திரேலியா மற்றும் சைபீரிய ஆர்க்டிக் உள்ளிட்ட உலகின் பிற பகுதிகளில் வெப்பநிலை சராசரியை விட அதிகமாக பதிவாகி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த 25 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிமம்
 • மேற்கு வங்கத்தின் நான்கு பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக சோட்டானக்பூர் பீடபூமியின் வண்டல் பகுதிகளில்  புதைபடிவங்களைத் தேடி வருகின்றனர். சித்தோ-கன்ஹோ-பிர்ஷா பல்கலைக்கழகத்தின் தாவரவியல் உதவி பேராசிரியர் மகாசின் அலிகான் தலைமை தாங்கிய இந்த தேடுதல் பணியில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேஹர் மாவட்டத்தில் மண்ணின் மேற்பரப்பில் இருந்து சுமார் 5 மீ ஆழத்தில் தட்டான் பூச்சியின் புதைபடிமத்தைக் கண்டறிந்தனர். 
 • மேற்கு வங்க விஞ்ஞானிகளின் இந்தக் கண்டுபிடிப்பு இந்தியாவில் கிடைத்த முதல் தட்டான் புதைபடிவமாகும். இந்தப் புதைபடிவமானது நியோஜீன் காலத்தின் பிற்பகுதியைச் சேர்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 3 செ.மீ நீளமும், 2.5 செ.மீ உள்ள இந்தப் புதைபடிமம் 25 லட்சம் ஆண்டுகளுக்கும் முந்தையது ”என்று கல்கத்தா பல்கலைக்கழக தாவரவியல் துறையின் பேராசிரியர் சுபீர் பெரா தெரிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டில், 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரூ. 4 ஆயிரம் கோடி மதிப்பில் 33 வீட்டுவசதி திட்டங்களுக்கு ஒப்புதல்
 • ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் 33 வீட்டுவசதி திட்டங்களின் கீழ் 25 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கான திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் உ.பி சிறைகளில் பொறியியல் பட்டதாரிகள் அதிகம்
 • மற்ற மாநிலங்களைக் காட்டிலும் உத்தரப்பிரதேச சிறைகளில் சிறைக்கைதிகளாக பொறியியல் பட்டதாரிகள் அதிகம் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் தொழில்நுட்ப திறமையுள்ள மொத்தம் 3 ஆயிரத்து 740 பேர் தங்களது குற்றச்செயல்களுக்காக சிறைக் கைதிகளாக உள்ளனர். இதில் மொத்தம் 20 சதவிகிதம் பேர் உத்தரப்பிரதேச சிறைகளில் உள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
 • தொழில்நுட்ப திறமை உள்ள கைதிகளில் உத்தரப்பிரதேச சிறைகள் அதிகபட்சமாக முதுகலை பட்டதாரி கைதிகளைக் கொண்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப திறமையுள்ள 5 ஆயிரத்து 282 கைதிகளில் 2 ஆயிரத்து 10 பேர் உத்தரப்பிரதேச சிறைகளில் உள்ளனர். இந்திய சிறைகளில் மொத்தம் உள்ள 3 லட்சத்து 30 ஆயிரத்து 487 கைதிகளில் 1.67 சதவீதம் பேர் முதுகலை பட்டதாரிகள். அவர்களில் 1.2 சதவீதம் பேர் பொறியாளர்கள். அதேபோல் மகாராஷ்டிரத்தில் 495 சிறைக்கைதிகளும், கர்நாடகத்தில் 362 பேரும் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக்காப்பகம் தெரிவித்துள்ளது.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting