-->

Current Affairs in Tamil Medium - 19.08.2020

 வந்தே பாரத் திட்டத்துக்கு 2 வாரங்கள் தடை விதித்தது ஹாங்காங்
  • கொரோனா பரவல் காரணமாக, இந்திய அரசின் 'வந்தே பாரத்' திட்டத்துக்கு, ஹாங்காங் அரசு இரண்டு வாரங்கள் தடை விதித்துள்ளது. ஹாங்காங்கிலிருந்து டில்லிக்கு ஆகஸ்ட 18 மற்றும் 21 தேதியில், இரண்டு வந்தே பாரத் திட்டங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக 'வந்தே பாரத்' திட்டத்துக்கு 2 வாரங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது. விமான பயணங்களுக்கு முன்பாக, பயணிகளுக்கு முறையான கொரோனா பரிசோதனை செய்யவில்லை என தெரிவித்துள்ள ஹாங்காங் அரசு, ஆகஸ்ட்18 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை தடை விதித்துள்ளது.
சட்லஜ்-யமுனா கால்வாய் திட்டம்: பஞ்சாப் பற்றி எரியும் என அமிரீந்தர் ஆவேசம்
  • சட்லஜ்- யமுனா கல்வாய் இணைப்பு திட்டத்தை துவக்கினால் பஞ்சாப் மாநிலமே பற்றி எரியும் என அம்மாநில காங். முதல்வர் அமிரீந்தர்சிங் கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பாயும் சட்லஜ் உள்ளிட்ட நதிகளின் தண்ணீரை அரியானா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வகை செய்திருக்கும் திட்டம் தான் சட்லஜ்-யமுனா இணைப்பு கால்வாய் திட்டம். இந்த திட்டத்தின்கீழ் பஞ்சாப், அரியானா மாநில அரசுகள் 214 கி.மீ. கால்வாய் அமைக்க 1976-ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது.திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் வழக்கு தொடர்ந்தது. இதில் பஞ்சாப்பிற்கு எதிராக தீ்ர்ப்பு வெளியானது.
ஆறு விமான நிலையங்கள் தனியார் மயம்: 19 ம் தேதி ஆலோசனை
  • தமிழகத்தின் திருச்சி விமானநிலையம் உள்ளிட்ட ஆறு விமான நிலையங்களை தனியார் மயமாக்குவது குறித்து மத்திய அரசு வரும் 19ம் தேதி முடிவு செய்யப்படஉள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏஏஐ, நாடு முழுவதும் 100 க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை சொந்தமாக நிர்வகித்து வருகிறது. வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் நாட்டில் உள்ள அமிர்தசரஸ், இந்தூர், ராஞ்சி, திருச்சி, புவனேஷ்வர், ராய்ப்பூர் உள்ளிட்ட ஆறு விமான நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து முடிவு செய்யப்படும்.
கோவா கவர்னர் மேகாலயாவுக்கு இடமாற்றம்; மஹா., கவர்னருக்கு கூடுதல் பொறுப்பு
  • கோவா கவர்னர் சதய்பால் மாலிக்கை, மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். மஹா., மாநில கவர்னர் கோஷ்யாரிக்கு, கூடுதல் பொறுப்பாக கோவா ஒதுக்கப்பட்டுள்ளது.
கேல் ரத்னா விருது: மாரியப்பன், ரோஹித் சர்மா பெயர்கள் பரிந்துரை
  • விளையாட்டுத்துறையில் ஜொலிக்கும் இந்திய நட்சத்திரங்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் 'கேல் ரத்னா', 'அர்ஜுனா' உள்ளிட்ட விருது வழங்கப்படும். இதற்கான பரிந்துரை பட்டியலை வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதன்படி, பல்வேறு தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், வீரர், வீராங்கனைகளை பரிந்துரை செய்து வருகின்றன. இந்நிலையில், டில்லியில்  நடந்த தேசிய விருது குழுவினர் கூட்டத்தில், கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. 
  • கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, 2016 ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பாத்ரா, இந்திய மகளிர் ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் ஆகியோரின் பெயர்கள் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ராஜினாமா
  • ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தனது பதவியை ராஜினாமா செய்தார். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அடுத்த இடத்தில் அசோக் லவாசா உள்ளார். இவர் சமீபதத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த பதவியில் பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். லவாசாவின் தேர்தல் ஆணைய பதவி காலம் நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில், ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத்தலைவர் பதவியை ஏற்பதற்காக அசோக் லவாசா தனது தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவர், தன்னை ஆக.,31 அன்றுடன் பதவியில் இருந்து விடுவிக்கும்படி கேட்டு கொண்டுள்ளார்.
கொரோனாவால் தமிழகத்தில் தனிநபர் இழப்பு ரூ.40 ஆயிரம்
  • கொரோனாவால், ஒட்டு மொத்த இந்தியாவில் தனிநபர் இழப்பு, 27 ஆயிரம் ரூபாயாகவும்; தமிழகத்தில், 40 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாகவும் எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை கணித்து அறிவித்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில், 16.8 சதவீதமாக உள்ளது. மஹாராஷ்டிராவில் இது, 14.2 சதவீதமாகவும்; தமிழகத்தில், 9.2 சதவீதமாகவும்; உத்தர பிரதேசத்தில், 8.2 சதவீதமாகவும் உள்ளன. 
  • மேலும், தனிநபர் இழப்பை பொறுத்தவரை, அகில இந்திய அளவில், 27 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இதில் தமிழகம், குஜராத், தெலுங்கானா, டில்லி, ஹரியானா, கோவா ஆகிய மாநிலங்களில், கொரோனாவால் தனிநபர் இழப்பு, 40 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.

மருத்துவப்படிப்பில் அகில இந்திய இட ஒதுக்கீடு: மத்திய அரசு குழுவில் ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் உமாநாத் நியமனம்
  • மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோருக்கு பின்பற்றப்படும் 50 சதவீத இடஒதுக்கீட்டை, அகில இந்திய இட ஒதுக்கீட்டில் இடம் பெறும் தமிழக மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பின் அடிப்படையில், இப்போது மத்திய அரசு அகில இந்திய இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்க ஒரு குழு அமைத்துள்ளது. அந்த குழுவில் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழகத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.உமாநாத்தை நியமன உறுப்பினராக நியமித்து, தமிழக அரசின் தலைமைச்செயலாளர் க.சண்முகம் அரசாணை வெளியிட்டுள்ளார்.
பள்ளி படிப்பு முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர் விகிதம் அமெரிக்காவை விட தமிழகத்தில் அதிகம்
  • அமெரிக்காவை விட தமிழகத்தில் பள்ளி படிப்பை முடித்து உயர் கல்வியில் சேரும் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகமாக இருப்பது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. அகில இந்திய அளவில் உயர்கல்வி குறித்த கணக்கெடுப்பு (ஏ.ஐ.எஸ்.எச்.இ.) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2018-2019-ம் ஆண்டுக்கான உயர்கல்வி குறித்த கணக்கெடுப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. மாநில அளவில் கல்லூரிகள் அதிகம் இருக்கும் மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு 6-வது இடத்தில் இருக்கிறது. பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வியில் சேர்ந்து படிக்கும் மாணவர்களின்  மொத்த விகிதத்தை  பார்க்கும்போது, இந்தியாவில் 26.3 சதவீதம் மாணவர் சேர்க்கை இருக்கிறது. அகில இந்திய அளவில் தமிழ்நாடு 49 சதவீதத்துடன் 3-வது இடத்தில் இருக்கிறது. இதில் முதலிடத்தில் சிக்கிமும், 2-வது இடத்தில் சண்டிகாரும் உள்ளன. 
  • அமெரிக்காவில் பள்ளி படிப்பை நிறைவு செய்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் மொத்த விகிதம் 41 சதவீதமாக இருக்கிறது. அதோடு ஒப்பிட்டு பார்க்கையில் தமிழகத்தில் மொத்த மாணவர்களின் விகிதம் 49 சதவீதம் ஆக உள்ளது. இதன்மூலம் அமெரிக்காவைவிட தமிழகத்தில் உயர்கல்வியில் அதிக மாணவர்கள் சேர்ந்து படிப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.
கண்டுபிடிப்பு சாதனை தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம்
  • 2020-ம் ஆண்டுக்கான புதுமையான கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார். அதில் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய நிதி அளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரிவுகளில் 674 நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி. முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. தொடர்ந்து 2-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. கடந்த ஆண்டு இந்த பிரிவுகளின் கீழ் 496 நிறுவனங்களில் முதல் இடத்தை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. கண்டுபிடிப்பு சாதனைகள் குறித்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மதிப்பீடு செய்யும் குழுவின் தலைவராக பி.வி.ஆர்.மோகன்ரெட்டி இருந்தார்.
அசாம் வெள்ள நிவாரணத்திற்கு ரூ.1 கோடி : நடிகர் அக்ஷய் குமார்
  • அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். பருவமழை காரணமாக அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது. அசாமில் 28 மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக இதுவரை வெள்ளத்திற்கு 128 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அசாம் வெள்ள நிவாரண பணிகளுக்கு பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் , ரூ. 1 கோடி நிதி வழங்கியுள்ளார்.
ஹிந்தி ஆலோசனைக் குழு உறுப்பினராக ஐசரி கே கணேஷ் நியமனம்
  • மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் சாா்பில், மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியின் தலைமையில் ஹிந்தி ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், மத்திய அமைச்சக செயலா்கள், இணைச் செயலா்கள் உள்ளிட்ட 30 உறுப்பினா்கள் இடம்பெற்றுள்ளனா். இதில், தமிழகத்தில் இருந்து சென்னைப் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் உயா்கல்வி நிறுவனத்தின் நிறுவனரும், வேந்தருமான டாக்டா் ஐசரி கே கணேஷ், உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
தமிழகத்தில் நகா்ப்புற வனத் திட்டத்தின்கீழ் 1.55 கோடி மரங்களை நட இலக்கு
  • நாட்டில் உள்ள அனைத்து மாநில வனத் துறை அமைச்சா்கள் கூட்டம் காணொலி மூலம் 18.08.2020 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக வனத் துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது: தமிழ்நாடு வனத் துறை சாா்பில் நகா்ப்புற வனத் திட்டத்தைச் செயல்படுத்த சென்னை, வேலூா், சேலம், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்கள் தோந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒவ்வொரு நகா்ப் பகுதியிலும் 10 ஹெக்டோ பரப்பளவு மற்றும் வன நிலத்தில் 50 ஹெக்டோ பரப்பளவு தோந்தெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்த ஒவ்வொரு நகா்ப் பகுதியிலும் 10 ஹெக்டோ பரப்பளவு மற்றும் வன நிலத்தில் 50 ஹெக்டோ பரப்பளவு தோந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், 2020-21 ஆம் ஆண்டுக்கு 23,999 ஹெக்டோ பரப்பளவில் 1.55 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
சீன மருத்துவர் தினம் - ஆகஸ்ட் 19
  • ஆகஸ்ட் 19ஆம் நாள் சீன மருத்துவர் தினமாகும். இந்நாளை முன்னிட்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் சார்பில், சீனாவின் அனைத்து மருத்துவர்களுக்கும் நல்வாழ்த்தையும் வணக்கத்தையும் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியைக் காணும் ஒரேயொரு நாடு சீனா
  • சீனப் பெருநிலப்பகுதி கொள்வனவுக்காக செல்ல விரும்பும் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக உலகிலுள்ள சுமார் 90 சதவீதம் தொழில் நிறுவனங்களால் கருதப்படுவதாக புதிய ஆய்வு முடிவு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் உலக வினியோகச் சங்கிலியில் சீனா ஆற்றி வரும் முக்கிய பங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையில், இவ்வாண்டில் வளர்ச்சியை நிலைநிறுத்தும் ஒரேயொரு பொருளாதாரச் சமூகமாக சீனா இருக்கக்கடும் என்றும் பிரிட்டனின் பிபிசி நிறுவனம் 17ஆம் நாள் செய்தி வெளியிட்டுள்ளது.
மாலி நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்: அதிபர், பிரதமர் கைது
  • மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டதையடுத்து அந்நாட்டு அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் மெய்கா பவ்வ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குஆப்ரிக்க நாடான மாலி நாட்டின் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவிற்கு எதிராக கடந்த ஒரு மாதங்களாக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் ராணுவத்தில் பணியாற்றி வந்தவர்கள் திடீரென கிளர்ச்சியாளர்களாக மாறினர் மேலும் ஆயுதங்களுடன் தலைநகர் பமாகோவில் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே சென்றதாக தெரிகிறது. மேலும், ராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம் வந்தன. இதையடுத்து நாட்டில் ராணுவ புரட்சி வெடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா மற்றும் பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு கட்டுப்பாட்டை ராணுவ கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதால், மாலியில் ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று ஆகஸ்ட் 19 - உலக புகைப்பட நாள் (World Photographic Day)
  • 19-ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை  வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி  "பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ்” இம்முறைக்கு  ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி, பிரான்ஸ் அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை "ப்ரீ டூ தி வேர்ல்டு" என உலகம் முழுவதும் அறிவித்தது.  இதனை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.

Related Posts

Post a Comment

Labels

General Knowledge 902 General Studies 719 Central Govt. Job 308 General Tamil 177 Mock Test 133 PAPER - I 120 Civics 101 Indian Constitutions 91 Library Science Quiz 80 Anna University Jobs 72 Library and Information Science Paper II 71 Librarian Jobs 69 Computer Science Quiz 64 History Quiz 59 General English 56 NEET 2017 Model Questions 53 Geography 45 Library and Information Science 35 Computer Science 34 Computer Science PAPER - III 32 History Paper II 32 6th Tamil 30 Computer Science PAPER - II 22 Library and Information Science Paper III 19 PAPER - II 18 10th Science 17 General Science Mock Test 17 Life Science Quiz 17 6th Standard Science 16 9th Science 14 Nobel Awards 14 CBSC NET 13 History Mock Test 13 PAPER - III 13 Medical Physicist 12 Economics Paper II 10 8th Science 9 7th Tamil 8 Commerce Paper-2 8 Economics Paper III 8 History Paper III 8 NCERT Text Book 8 General Tamil Quiz 7 Home Science Paper II 7 Labour Welfare Paper III 7 8th Tamil 6 Anthropology Paper II 6 Anthropology Paper III 6 Arab Culture and Islamic Studies Paper II 6 Arab Culture and Islamic Studies Paper III 6 Archaeology Paper II 6 Archaeology Paper III 6 Comparative Literature Paper II 6 Comparative Literature Paper III 6 Comparative Study of Religions Paper II 6 Comparative Study of Religions Paper III 6 Criminology Paper II 6 Criminology Paper III 6 Education Paper - II 6 Education Paper - III 6 English Paper - II 6 English Paper - III 6 Environmental Sciences Paper - II 6 Environmental Sciences Paper - III 6 Forensic Science Paper II 6 Forensic Science Paper III 6 Geography Paper II 6 Geography Paper III 6 Home Science Paper III 6 Human Rights and Duties Paper II 6 Human Rights and Duties Paper III 6 Indian Culture Paper - II 6 Indian Culture Paper - III 6 International and Area Studies Paper II 6 International and Area Studies Paper III 6 Labour Welfare Paper II 6 Law Paper - II 6 Law Paper - III 6 Management Paper - II 6 Management Paper - III 6 Mass Communication Paper II 6 Mass Communication Paper III 6 Museology and Conservation Paper II 6 Museology and Conservation Paper III 6 Music Paper II 6 Music Paper III 6 Performing Arts Paper II 6 Performing Arts Paper III 6 Philosophy Paper II 6 Philosophy Paper III 6 Physical Education Paper - II 6 Physical Education Paper - III 6 10th Tamil 5 Commerce Paper-3 5 Folk Literature Paper II 5 Folk Literature Paper III 5 Geography Mock Test 5 Linguistics Paper II 5 Linguistics Paper III 5 7th Science 4 9th Tamil 4 Chemistry 4 Geography Quiz 4 11th Tamil 3 6th Standard History 3 7th Tamil Mock Test 3 9th standard Tamil Quiz 3 CSIR-NET - Chemistry 3 Computer Science Video 2 Mathematics Paper II 2 CSIR-NET - Physics 1 Civil Engineer Mock Test 1 Computer Science Paper II 1 General Knowledge Mock Test 1 Geology 1 Interview Questions 1 January Current Affairs - 2016 1 LIS Questions 1 Library Science Paper II 1 Life Science 1 Life Science Paper II 1 Mathematics Quiz 1
Subscribe Our Posting