கிராமங்களில் 100% குடிநீர் குழாய் இணைப்பு: முதல் மாநிலமாக மாறிய கோவா
- கிராமப்புறங்களில் மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றவும் ஸ்வட்ச் பாரத் மிஷன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் நடவடிக்கை மூலம் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பெரும்பாலான கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது 2.30 லட்சம் வீடுகளை உள்ளடக்கிய கிராமப்புறங்களில் 100 சதவீத குழாய் நீர் இணைப்புகளை வழங்கும் முதல் மாநிலமாக கோவா மாறியுள்ளது என்று ஜல் சக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
- அரசாங்கத்தின் ஜல் ஜீவன் மிஷன் 2024 க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் நீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2.30 லட்சம் கிராமப்புற வீடுகளை உள்ளடக்கிய கிராமப்புறங்களில் 100 சதவீத செயல்பாட்டுடன் வீட்டு குழாய் இணைப்புகளை (FHTCs) வெற்றிகரமாக வழங்குவதால், கோவா நாட்டின் முதல் 'ஹர் கர் ஜல்' மாநிலமாக திகழ்கிறது என்ற தனித்துவமான தனித்துவத்தை பெற்றுள்ளது".
மத்திய அரசு மற்றும் ரிலையன்ஸ் உடனான கப்பல் கட்டும் ஒப்பந்தம் ரத்து
- மத்திய அரசு மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உடனான கப்பல்கள் கட்டும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. உரிய காலத்தில் கப்பல்களை கட்டி தராத காரணத்தால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உடனான கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
- கடந்த 2011ம் வருடம் ரூ 2,500 கோடி செலவில் இந்திய கப்பற்படைக்கு தேவையான 5 ரோந்து கப்பல்கள் கட்டி முடிக்க ரிலையன்ஸ் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ஆனால், 9 வருடங்கள் கடந்த பிறகும் கப்பல்கள் கட்டி முடிக்கப்படாததால் இரு வாரங்களுக்கு முன்பு அந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்
- உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமான இளைஞர்கள் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஜம்மு - காஷ்மீரில் ஆங்காங்கே நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பெண்குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறி வரும் வன்முறைகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அரசு பணிகளுக்கான நேர்காணல் 23 மாநிலங்களில் ரத்து
- அரசு கீழ்நிலை பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்வதற்கு நேர்காணல் நடத்தும் நடைமுறை ரத்து செய்யப்படும் என்று கடந்த 2015-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த பணிகளில் நேர்காணல் முறை ஊழலுக்கு வழிவகுப்பதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி அல்லாத குரூப் பி, சி பிரிவு உள்ளிட்ட மத்திய அரசு பணிகளுக்கு 2016 ஜனவரி 1 முதல் நேர்காணல் ரத்து செய்யப்பட்டது.
- இந்த நிலையில், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டின் 28 மாநிலங்களில் 23 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர், லடாக் உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களும் கீழ்நிலை அரசு பணிகளுக்கான நேர்காணலை ரத்து செய்து உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் பதற்றத்துக்கு மத்தியில் 35 நாட்களில் 10 ஏவுகணைகளை பரிசோதித்த இந்தியா
- லடாக் மோதலால் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் கடந்த 35 நாட்களில் 10 ஏவுகணைகளை இந்தியா சோதித்து வருகிறது. வருகிற ஓரிரு நாட்களுக்குள் சப்-சானிக் ஏவுகணையான நிர்பயை சோதிக்க உள்ளது. இந்த ஏவுகணையையும் சேர்த்து 10 ஏவுகணைகள் 35 நாட்களில் சோதிக்கப்பட்டு இருக்கின்றன. இதுவரை நடந்துள்ள 9 பரிசோதனைகளில் பிரமோஸ் ஏவுகணை (400 கி.மீ.), அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்ற சவுரியா சூப்பர்சானிக் ஏவுகணை, நீர்மூழ்கி எதிர்ப்பு டார்பிடோக்களை செலுத்தும் ஏவுகணை, அணு ஆயுத திறன்பெற்ற பிரித்வி-2 (இரவு நேர சோதனை) போன்ற ஏவுகணைகள் முக்கியமானவை ஆகும்.
- விரைவில் பரிசோதிக்க இருக்கும் நிர்பய் ஏவுகணை லடாக்கின் மலைப்பாங்கான பகுதிகளுக்கு மிகுந்த பலனளிக்கும். இதைப்போல புதிய தலைமுறை ஆயுதமான சவுரியா ஏவுகணை 200 கிலோ வரையிலான அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு வினாடிக்கு 2.4 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் பெற்றவை ஆகும். இந்த ஏவுகணைகளை படைகளில் சேர்க்க மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அஜர்பைஜான், ஆர்மேனியா இடையிலான சண்டை முடிவுக்கு வந்தது
- முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளான அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியாவின் எல்லையில் உள்ள நாகோர்னோ காராபாக் எனும் மலைப் பிரதேசம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை நிலவுகிறது. நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளின் ராணுவத்துக்கு இடையே நடந்த கடுமையான சண்டையில் அப்பாவி மக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர்.
- ரஷிய அதிபர் புதினின் அழைப்பின் பேரில் அந்த நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் ரஷியா, அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் இடையே நேற்று முன்தினம் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
- 10 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா ஆகிய இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டன. சர்ச்சைக்குரிய பகுதியில் கிடக்கும் இருதரப்பு மோதலில் உயிரிழந்தவர்களின் உடல்களை ஒப்படைப்பது மற்றும் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதனைத் தொடர்ந்து நேற்று மதியம் முதல் நாகோர்னோ காராபாக் பிராந்தியத்தில் மேலும் சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் ‘சாம்பியன்’
- பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் முதல்முறையாக ‘சாம்பியன்’ பட்டத்தை வென்று வரலாறு படைத்தார். இதில் அதிரடியான ஷாட்டுகளால் எதிராளியை திணறடித்த ஸ்வியாடெக் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் 21 வயதான சோபியா கெனினுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக ‘கிராண்ட்ஸ்லாம்’ சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை உச்சிமுகர்ந்த முதல் போலந்து வீராங்கனை என்ற பெருமையை பெற்ற அவர் ரூ.14 கோடியை பரிசாக அள்ளினார்.19 வயதான ஸ்வியாடெக் இந்த தொடரில் ஒரு செட்டை கூட இழக்கவில்லை. 2007-ம் ஆண்டுக்கு பிறகு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் எந்த ஒரு செட்டையும் இழக்காமல் பட்டத்தை வென்ற முதல் வீராங்கனை என்ற சிறப்பையையும் தனதாக்கினார்.
Post a Comment