நவீன அடிமைத்தனத்தால் ஆண்களை விட பெண்கள் அதிகமாக பாதிப்பு ; ஐ.நா அறிக்கை
- நவீன அடிமைத்தனம் அனைவருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மை தான் என்றாலும், உலகெங்கிலும் உள்ள பெண்கள் பாதிக்கப்பட்டவர்களில் 71% பேர் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை கூறுகிறது. உலக அளவில் 130 பெண்களில் ஒருவர் நவீன அடிமைத்தனத்தில் இருக்கிறார். ஆசியாவிலும் பசிபிக் நாடுகளிலும் (73 சதவீதம்), ஆப்பிரிக்காவில் (71 சதவீதம்), ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் (67 சதவீதம்), அமெரிக்காவிலும் (63 சதவீதம்) என ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் நவீன அடிமைத் தனத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- உலகெங்கிலும் குறைந்தது 2.9 கோடி பெண்கள் மற்றும் சிறுமிகள் நவீன அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். நவீன அடிமைத்தனம் என்பது பெரும்பாலும் பாலியல் வன்முறைகள் / பிரச்னைகளை சுட்டிக்காட்டினாலும், அதனுடன் கட்டாய திருமணங்கள், கடன்- கொத்தடிமை, கட்டாய உழைப்பு மற்றும் உள்நாட்டு அடிமைத்தனம் ஆகியவையும் அடங்கும். இது தொடர்பாக "அடுக்கப்பட்ட முரண்பாடுகள்" என்ற அறிக்கையில் ஐ.நா கூறுகையில், 99 சதவீத பெண்கள் / கட்டாய பாலியல் சுரண்டலால் பாதிக்கப் படுகின்றனர். மேலும் 84 சதவீதம் பேர் கட்டாய திருமணத்திற்கும், 58 சதவீதம் பேர் கட்டாய உழைப்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.
முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் 2ம் இடம்
- ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்குவதற்காக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.பத்தாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வந்துள்ள 14 நிறுவனங்களுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது குறித்து பழனிசாமி கூறுகையில், ‛தமிழக அரசு, இந்த கொரோனா காலத்திலும் ரூ.23,332 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது. முதலீடுகளை ஈர்க்கும் முதல் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது,' எனக் கூறினார்.
இந்திய எல்லைப்பகுதிகளில் கட்டப்பட்ட 44 பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
- லடாக், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் எல்லைச் சாலை அமைப்பு சார்பில் கட்டப்பட்டுள்ள 44 பாலங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பொருளாதாரம்: அமெரிக்க நிபுணா்கள் இருவருக்கு நோபல்
- பால்.ஆர்.மில்க்ரோம், ராபர்ட்.பி.வில்சனுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஏலக் கோட்பாட்டை மேம்படுத்தி புதிய ஏல வடிவங்களை கண்டுபிடித்துள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், வணிகர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கலிஃபோா்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பால் ஆா்.மில்குரோம், ராபா்ட் பி.வில்சன் ஆகியோா் ஏல நடைமுறைகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனா். ஏலம் தொடா்பான புதிய கொள்கைகளை அவா்கள் வெளியிட்டனா். அக்கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஏல நடைமுறைகளில் பல்வேறு புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- பால் ஆா்.மில்குரோம் முனைவா் பட்டத்துக்கான ஆய்வை ராபா்ட் பி.வில்சனுடைய மேற்பாா்வையின் கீழ் மேற்கொண்டாா். நோபல் பரிசுத் தொகையானது இருவருக்கும் சரிசமமாகப் பகிா்ந்து வழங்கப்படவுள்ளது.
- பால் ஆா்.மில்குரோம் (72): ஏல நடைமுறைக்கான பொதுவான கொள்கையை பால் ஆா்.மில்குரோம் உருவாக்கினாா். அதில், ஏலம் விடப்படும் பொருள்களுக்கான மதிப்பை ஏலத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் எவ்வாறு கணிக்கின்றனா் என்பது தொடா்பான விளக்கங்களை அவா் வழங்கியிருந்தாா்.
- ராபா்ட் பி.வில்சன் (83): ஏலத்தில் பங்கேற்போா், ஏலம் விடப்படும் பொருள்களின் கணிக்கப்பட்ட விலையை விடக் குறைவான விலைக்கு ஏலம் கேட்பது ஏன் என்பது குறித்து ராபா்ட் பி.வில்சன் ஆய்வு மேற்கொண்டாா். ஏலப் பொருள்களுக்கு அதிக விலை கொடுத்து இழப்பைச் சந்திக்க நேரிடுமோ என்ற எண்ணம் ஏலத்தில் பங்கேற்போருக்கு ஏற்படுவது ஏன் என்பது குறித்தும் அவா் ஆய்வு நடத்தினாா்.
மாநில அரசுகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன்: நிர்மலா அறிவிப்பு
- மாநில அரசுகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டியின்றி கடனாக வழங்கப்படுவதாகவும், கடனை மாநில அரசுகள் திருப்பி செலுத்த 50 ஆண்டுகள் அவகாசம் அளிப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி
- பா.ஜ., கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே. 1919, அக்.,12ல் பிறந்த அவர், 2001, ஜன.,25ல் மறைந்தார். விஜயராஜே, பிறந்த தினத்தை முன்னிட்டு, ரூ.100 நாணயம் இன்று வெளியிடப்பட்டது. வீடியோ கான்பரன்சிங்கில் கலந்து கொண்டு பிரதமர் மோடி இந்த நாணயத்தை வெளியிட்டார்.
Post a Comment