2/28/2018

TN Police Exam Mathematics Model Questions:- Dinamalar (Dated: 28.02.2018)

2/28/2018 0

Demand of TNPSC Exam Aspirants: TNPSC Group 2 Exam Method Need to Change

2/28/2018 0
TNPSC Group 2 Exam Method Need to Change: Demand for TNPSC Aspirants: Presently TNPSC will conducted for Group 2 exam separately  like Interview Post and Non-Interview Posts. But Educational qualification its same like any degree. TNPSC Aspirants want to change like Group 4 exam (Merged Group 4 and VAO). Aspirants and Training Institute demand for Group 2 exam should conduct in Single Method for selection and No Need for Group 2 & Group 2 A.

TNPSC Group 2 மற்றும் Group 2 A என்று தனியாக நடத்தாமல் இரண்டையும் ஒன்றாக நடத்த கோரிக்கை
TNPSC Group 2 தேர்வு தற்பொழுது நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத தேர்வு என்ற வகையில் நடத்தப்படுகிறது. ஆனால் தற்போதைய TNPSC தேர்வுக்கு தயாராகும் போட்டியாளர்கள் நடந்து முடிந்த TNPSC Group 4 தேர்வை போன்று (Group 4 & VAO) TNPSC Group 2 மற்றும் Group 2A தேர்வையும் ஒன்றாக நடத்த வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


World Junior Squash Championship at Chennai 2018

2/28/2018 0
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் - சென்னை
  • ஆடவர் மற்றும் மகளிருக்கான உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் ஜூலை 18 முதல் 29-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா உள்பட 23 நாடுகள் பங்கேற்கின்றன.
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் - சிறப்பு 

  • ஆடவர் மற்றும் மகளிருக்கான உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் ஜூலை 18 முதல் 23-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. 
  • ஆடவர் ஜூனியர் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டி ஜூலை 24 முதல் 29-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. 
  • கடந்த சாம்பின்யஷிப் போட்டியில் எகிப்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
  • ஆடவர் ஜூனியர் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்துவது இது 2-ஆவது முறையாகும். 
  • கடந்த 2002-ஆம் ஆண்டும் இப்போட்டி சென்னையில் நடைபெற்றது.  2009-இல் உலக மகளிர் ஜூனியர் அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது.

India-Korea trade summit and Asian Infrastructure Investment Bank Conference

2/28/2018 0
இந்தியா-கொரியா வர்த்தக உச்சி மாநாடு மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏஐஐபி) மூன்றாவது வருடாந்திரக் கருத்தரங்கு
  • 27.02.2018 அன்று நடைபெற்ற இந்தியா-கொரியா வர்த்தக உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியாதவது.
  • நாடு முழுவதும் சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) ஒரே விகிதத்தில் அமல்படுத்துவது சாத்தியமில்லை. 
  • அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும். 
  • இந்தியாவில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் நமது பொருளாதாரம் 7 முதல் 8 சதவீத வளர்ச்சியை எட்டுவது இயல்பான விஷயம் என்றே கருதுகின்றனர். ஆனால் அந்த விகிதத்தையும் தாண்டும் வகையில் இந்தியாவின் உண்மையான திறன் உள்ளது.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏஐஐபி) மூன்றாவது வருடாந்திரக் கருத்தரங்கு
  • பெய்ஜிங்கைத் தலைமையிடமாகக் கொண்ட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏஐஐபி) மூன்றாவது வருடாந்திரக் கருத்தரங்கு தில்லியில் 27.02.2018 அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று ஜேட்லி பேசுகையில் 'இந்தியாவுக்கு ஏஐஐபி அதிக நிதியை கடனாக அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Indo-Pacific Regional Dialogue at New Delhi

2/28/2018 0
இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை (27.02.2018)

  • தில்லியில் இந்திய கடற்படை சார்பில் இருநாள் 'இந்திய-பசிபிக் பிராந்திய பேச்சுவார்த்தை' செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கடற்படை தளபதி சுனில் லாம்பா, இலங்கை கடற்படை தலைமைத் தளபதி ரவீந்திரா சி.விஜேகுணரத்னே, பிரிட்டன் பாதுகாப்புத் துறை நிரந்தரச் செயலாளர் ஸ்டீபன் லவ்குரோவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
  • இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட கடல்சார் விதிகளை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை என்று  தெரிவித்தார்.

13th Edition of Annual India-Nepal Surya Kiran Joint Military Exercise

2/28/2018 0
இந்தியா-நேபாள ராணுவ கூட்டு ஒத்திகை - பிதோராகர் (சூர்ய கிரண்)
  • இந்தியா, நேபாள நாடுகளின் ராணுவம் இடையே ஒவ்வொரு ஆண்டும் கூட்டு ராணுவ ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, 12 வது இந்தியா-நேபாள ராணுவ கூட்டு ஒத்திகை நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் கடந்த ஆண்டு 2017 - ல்  நடைபெற்றது.

இந்தியா-நேபாள ராணுவ கூட்டு ஒத்திகை சிறப்பம்சம்
  • 13 வது இந்தியா-நேபாள ராணுவ கூட்டு ஒத்திகை உத்தரகண்ட் மாநிலம், பிதோராகரில் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், நேபாள பாதுகாப்புத் துறை அமைச்சராக புதியதாக பதவியேற்ற ஈஸ்வர் போகரேல் கையெழுத்திட்டார்.
  • இந்த ஒத்திகையின்போது, இரு நாட்டு ராணுவத்தினரும், வனப்பகுதியில் சண்டையிடுவது, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, பேரிடர் மீட்பு நடவடிக்கை போன்றவை தொடர்பான பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.
  • நேபாள ராணுவ தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் அண்மையில் கலந்து கொண்டார். 
13th edition of annual India-Nepal Surya Kiran joint military exercise (Surya Kiran) - Uttarakhand
  • The 13th edition of the Nepal-India joint military exercise will be held in Pithoragarh in a couple of months. This is a regular military exercise being organised annually between the two armies, said the defence ministry sources and will include training on jungle warfare, anti-terrorism National Disaster Management combat as well as disaster response activities. 
  • In 2017, the 12th edition of Surya Kiran Military exercise was held in Kathmandu.
  • Nepal's newly-appointed Defence Minister Ishwor Pokharel after assuming office on Monday signed an agreement to launch Surya Kiran Nepal – India Military Joint Exercise.
List of Indian Army Joint Exercises
  • Surya Kiran - India and Nepal
  • LAMITYE- India and Seychelles
  • Ajeya Warrior - India and UK
  • SAMPRITI - India-Bangladesh 
  • Exercise Shakti - India and France 
  • Prabal Dostyk - India and Kazhakhstan
  • Al-Nagah - Indian and Oman
  • Exercise Nomadic Elephant - Indian and Mongolian .
  • Exercise Yuddh Abhyas -Indian and United States 
  • AUSTRA HIND - Australia and India
  • Khanjar -   India and Kyrgyzstan
  • Mithra Shakti exercise - India and Sri Lanka.
  • Hand-in-Hand. -India-China

Dedication to the country: Enhanced Oil Recovery projects at Chennai

2/28/2018 0
ரூ.3,110 கோடியில் மிகு எண்ணெய் மேம்படுத்தும் திட்டம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
  • மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்னையை அடுத்த மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்  27.02.2018 அன்று நடந்த விழாவில் ரூ.3,110 கோடியில் மிகு எண்ணெய் மேம்படுத்தும் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசியாதவது. 

மிகு எண்ணெய் மேம்படுத்தும் திட்டத்தின் பயன்:
  • சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில், பெட்ரோலிய கழிவுகளை மேம்படுத்துவதன் மூலம் சமையல் எரிவாயு, டீசல் ஆண்டுக்கு 7 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு அதிகரிக்கும்.

நரிமணத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம்
  • நாகை மாவட்டம், நரிமணத்தில் ரூ.27 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் 10 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலியப் பொருள்களைக் கையாண்டு சுத்திகரிக்க முடியும். 
நாப்தா கிராக்கர் - திட்டம் 
  • தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்யும் அதே வேளையில், அதிலிருந்து 1,500 மெட்ரிக் டன் நாப்தாவை எடுத்து பிற பெட்ரோலிய கெமிக்கல் பொருள்களைத் தயாரிக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாப்தா கிராக்கர் எனப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் நாப்தாவை பகுப்பாய்வு செய்து அதன் மூலம் கிடைக்கும் பிளாஸ்டிக், தார், சிந்தடிக் ரப்பர் போன்ற பல்வேறு மூலப்பொருள்களை நாம் பயன்படுத்த முடியும்.
  • கடலூர் - நாகப்பட்டினம் மாவட்டங்களை இணைத்து செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் கோடி மதிப்புள்ள கச்சாப் பொருளான நாப்தா நமக்கு கிடைக்கும் என்றார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய நபர்கள் 
  • மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்

Sri Jayendra Saraswathi Passed Away: (18 July 1935 - 28 February 2018)

2/28/2018 0
காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 69வது மடாதிபதியாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காலமானார். 
  • காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 69வது மடாதிபதியாக இருந்த 82 வயதான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று (28.02.2018) மாரடைப்பால் மரணம் அடைந்தார். 
வாழ்க்கை வரலாறு: ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்
  • திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி என்ற கிராமத்தில் 1935ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி ஜெயேந்திரர் பிறந்தார். அவரது இயற்பெயர் சுப்ரமணிய மகாதேவ ஐயர். 
  • ஜெயேந்திரர் தனது 19வது வயதில் காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். 
  • சங்கர மடத்தின் சங்கராச்சாரியராக இருந்த ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளால், 1954ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி ஜெயேந்திரர் இளைய மடாதிபதியாக பக்தர்களுக்கு அறிவிக்கப்பட்டார்.
  • ஸ்ரீசந்திரசேகரருக்குப் பிறகு 1994ம் ஆண்டு காஞ்சி மடத்தின் 69வது மடாதிபதியாக ஜெயேந்திர சுவாமிகள் பொறுப்பேற்றுக் கொண்டார். 
Jagadguru Sri Jayendra Saraswathi shankaracharya (18 July 1935 - 28 February 2018)
  • Jagadguru Sri Jayendra Saraswathi shankaracharya was the 69th Shankaracharya Guru and head or pontiff of the Kanchi Kamakoti Peetham Subramanyam Mahadeva Iyer was nominated by his predecessor, Chandrashekarendra Saraswati Swamigal, as his successor and was given the pontifical title Sri Jayendra Saraswathi on 22 March 1954.
  • The 82-year old seer was admitted to a hospital near Kamakshi Amman temple in Kanchipuram on 28th February 2018 during early morning hours due to breathing problems. The hospital and Mutt sources confirmed his demise. He passed away at the age of 82

-------------------------------------
நன்றி: தினமணி நாளிதழ்
Courtesy: Dinamani / Wikipedia

Current Affairs Today in Tamil - Date: 27.02.2018

2/28/2018 0
TNSPC போட்டித் தேர்வினை அடிப்படையாகக்கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையளத்தில் வெளியிடப்படுகிறது. TNSPC போட்டித்தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருக்கும் அணைத்து போட்டியாளர்களும் இதில் வெளிவரும் நடப்பு நிகழ்வுகளை படித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இன்றைய நாளின் நடப்பு நிகழ்வுகள்: 27.02.2018
  • ஒக்கி புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு 133 கோடி ஒதுக்கீடு.
  • 'பாலர்' ஆதார் அட்டை: 1 முதல்  5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் - யுஐடிஏஐ
  • நவீன தொழில்நுட்ப மையம் - சென்னை இந்திய தொழில் நுட்ப மையம் (Madras IIT)
  • 200 ரயில் நிலையங்களில் நாப்கின் வழங்கும் இயந்திரங்களை அமைக்க முடிவு
  • மின் ஆளுகை (e-coverns) தொடர்பான 21-வது தேசிய கருத்தரங்கு. 
  • 2020க்குள் 13 செயற்கைகோள் ஏவப்படும்: இஸ்ரோ மைய இயக்குனர் பாண்டியன்
  • டில்லி வந்தார் ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா
  • விண்வெளி வீரர்களுக்கான புதிய உடையில் கழிவறை வசதியை அறிமுகப்படுத்தும் நாசா
  • இந்தியா உடனான கூட்டு கடற்பயிற்சிக்கு மாலத்தீவு மறுப்பு 
  • ஆஸ்திரேலியாவிற்கு புதிய துணைப் பிரதமர் மைக்கேல் மெக்கார்மாக் பதவியேற்பு
  • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மோர்ன் மோர்கெல்
  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் சுயசரிதை புத்தகம் 
  • சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 'சிறந்த குத்துச்சண்டை வீரர்' விகாஸ் கிருஷன்

ஒக்கி புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு 133 கோடி ஒதுக்கீடு.
  • 2017-ல் ஒக்கி புயல் மற்றும் பருவமழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூபாய் 133.05 கோடியே மத்திய அரசு மேலும் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு 169.63 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'பாலர்' ஆதார் அட்டை: 1 முதல்  5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் - யுஐடிஏஐ
  •  'பாலர் ஆதார்' என்ற பெயரில் நீல நிறத்திலான பிரத்யேக ஆதார் அட்டை ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிவித்துள்ளது.

நவீன தொழில்நுட்ப மையம் - சென்னை இந்திய தொழில் நுட்ப மையம் (Madras IIT)
  • துறைமுக மேம்பாடு - தேசிய வழித் திட்டத்திற்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப மையம் சென்னை ஐ.ஐ.டி - யில் அமைக்கப்படுகிறது. துறைமுகங்களின் மேம்பாட்டுக்காக ரூபாய்.15 லட்சம் கோடி மதிப்பீட்டில் சாகர்மாலா திட்டம் நாடுமுழுவதும் செயல்பாட்டில் உள்ளது. இந்தியா 7,500 கிலோமீட்டர் நீளம் கடற்கரையைக்  கொண்டதாகும்.

200 ரயில் நிலையங்களில் நாப்கின் வழங்கும் இயந்திரங்களை அமைக்க முடிவு
  • நாடு முழவதிலும் உள்ள 200 முக்கிய ரயில் நிலையங்களில் பெண்களுக்கான நாப்கின்களை வழங்கும் இயந்திரங்களை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ஆம் தேதிக்குள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் குறைந்த விலை கொண்ட நாப்கின்களைத் தயாரிப்பதற்கு ரயில்வே பெண்கள் நல மத்திய அமைப்பு 'தஸ்தக்' என்ற உற்பத்தி மையத்தை உருவாக்கியுள்ளது. இது இந்த ஆண்டு புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதி திறக்கப்பட்டது. இங்கு நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

மின் ஆளுகை (e-coverns) தொடர்பான 21-வது தேசிய கருத்தரங்கு
  • மின் ஆளுகை (e-coverns) தொடர்பான 21-வது தேசிய கருத்தரங்கு. தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் 26.02.2018 அன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் சி.ஆர்.சௌத்ரி அவர்கள் பேசியாதவது.
  • நாடுமுழுவதும் 23 கோடி ரேசன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளது. இவற்றில் 19 கோடி அட்டைகளுடன் ஆதார் என் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2.95 கோடி போலி அட்டைகள் ஒலிக்கப்பட்டுள்ளன.

2020க்குள் 13 செயற்கைகோள் ஏவப்படும்: இஸ்ரோ மைய இயக்குனர் பாண்டியன்
  • 2019ல் 12 செயற்கைகோள் ஏவப்படும் என மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் பாண்டியன் மதுரையில் தெரிவித்தார். வரும் 2020க்குள் 13 செயற்கைகோள் ஏவ திட்டமிட்டுள்ளோம். சந்திராயன் விண்கலம் 6 மாதங்களில் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து செல்போன்களிலும் நேவிக் சேட்லைட் ரிசீவரை பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவ்வாறு வந்தால் செல்போன் வைத்துள்ளவர் எங்கு உள்ளார் என்பது தெரியவரும். 

டில்லி வந்தார் ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா
  • 2 நாள் அரசு முறை பயணமாக டில்லி வந்துள்ள ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லாவை டில்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி வரைவேற்றார்.

விண்வெளி வீரர்களுக்கான புதிய உடையில் கழிவறை வசதியை அறிமுகப்படுத்தும் நாசா
  • நாசா அறிமுகப்படுத்தவிருக்கும் விண்வெளி வீரர்களுக்கான புதிய உடையில் கழிவறை வசதியும், உயிர்காக்கும் கருவிகளும் இடம்பெற்றிருக்கும். மனிதர்களை சுமந்து செல்லும் அடுத்தத் தலைமுறை ஸ்பேஸ்கிராஃப்டான ஓரியானில் இந்த புதிய வசதியுடன் கூடிய ஆடையை அணிந்த விண்வெளி வீரர்கள் பயணிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
  • நீண்ட நாட்களுக்கு கழிவுகளை அழிக்கும் வசதியைக் கொண்ட விண்வெளி வீரர்களுக்கான ஆடையை தயாரிக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆடையில் இருக்கும் கழிவறை வசதியை, மிகவும் அவசர காலங்களில் 6 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உடனான கூட்டு கடற்பயிற்சிக்கு மாலத்தீவு மறுப்பு 
  • இந்திய கடற்படை சார்பில் வரும் 6-ம் தேதி முதல் 8 நாட்கள்  இந்திய பெருங்கடலில் நடைபெற உள்ள கூட்டு கடற்பயிற்சியில் பங்குபெற மாலத்தீவு மறுத்து விட்டது.
  • இந்த மெகா கடற்பயிற்சியில் அப்பிராந்தியத்தில் உள்ள 16-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன. இதில் பங்குபெற மாலத்தீவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த அழைப்பை மாலத்தீவு நிராகரித்துவிட்டதாகவும், என்று இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா  தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு புதிய துணைப் பிரதமர் மைக்கேல் மெக்கார்மாக் பதவியேற்பு
  • ஆஸ்திரேலியாவின் புதிய துணைப் பிரதமராக மைக்கேல் மெக்கார்மாக் திங்கள்கிழமை (26.02.2018) பதவியேற்றார். இதுவரை துணைப் பிரதமராக இருந்த பர்னபி ஜாய்ஸ் பாலியல் புகார் காரணமாக தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தைத் தொடர்ந்து காலியான இடத்துக்கு அவர் தேர்தெடுக்கப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மோர்ன் மோர்கெல்
  • தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளரான மோர்ன் மோர்கெல் (33), ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
மோர்ன் மோர்கெல் - கிரிக்கெட் பயணம் 
  • சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2006-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் களம் கண்ட மோர்ன் மோர்கெல், இதுவரை ஆடிய 83 போட்டிகளில் மொத்தமாக 294 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 5-ஆவது வீரர் மோர்கெல் ஆவார்.
  • அதேபோல், மொத்தம் ஆடிய 117 ஒருநாள் ஆட்டங்களில் 188 விக்கெட்டுகளையும், 44 டி20 ஆட்டங்களில் 47 விக்கெட்டுகளையும் மோர்கெல் வீழ்த்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் சுயசரிதை புத்தகம் 
  • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி  தனது சுயசரிதை நூலான  'ஏ செஞ்சுரி இஸ் நாட் இனஃப்' என்ற சுயசரிதை புத்தகம் எழுதினார் 

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 'சிறந்த குத்துச்சண்டை வீரர்' விகாஸ் கிருஷன்
  • பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷன், சிறந்த குத்துச்சண்டை வீரராக தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் அவர் 75 கிலோ பிரிவில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2/27/2018

'பாலர்' ஆதார் அட்டை: 1 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் - யுஐடிஏஐ

2/27/2018 0
'பாலர்' ஆதார் அட்டை: 1 முதல்  5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் - யுஐடிஏஐ
  •  'பாலர் ஆதார்' என்ற பெயரில் நீல நிறத்திலான பிரத்யேக ஆதார் அட்டை ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிவித்துள்ளது.
'பாலர் ஆதார்' யின் சிறப்பு:  'ஆதார் ஃபார் மை சைல்டு' என்ற தலைப்பில் யுஐடிஏஐ கூறியுள்ளதாவது:
  • கை விரல் ரேகைகள், கருவிழிப் படலம் ஆகியவை பதிவு செய்யப்படாமல் இந்த அட்டைகள் வழங்கப்படும்.
  • குழந்தைகள் 5 வயதை எட்டியதும், கைவிரல் ரேகை, கருவிழிப் படலம் ஆகியவை பதிவு செய்யப்பட வேண்டும். அவர்கள் 15 வயதை எட்டும் போது மீண்டும் ஒரு முறை கைவிரல் ரேகைகள், கருவிழிப் படலம் ஆகியவற்றை பதிவு செய்துகொள்ள வேண்டியது கட்டாயம்.
  • அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தைகளுக்கான பிரத்யேக ஆதார் அட்டை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
  • குழந்தையின் ஆதார் பதிவுக்கு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தாய்-தந்தையரில் ஒருவரின் ஆதார் அட்டை தேவைப்படும். 
  • பள்ளி செல்லும் குழந்தையாக இருந்தால், பள்ளியில் வழங்கப்படும் அடையாள அட்டையை ஆதார் பதிவுக்கு பயன்படுத்தலாம். அந்தப் பள்ளி, அரசு அங்கீகாரம் பெற்றதாக இருத்தல் வேண்டும்.
  • 5 வயதை எட்டியதும் மீண்டும் ஆதார் மையத்தை அணுகி, கைவிரல் ரேகைகள், கருவிழிப் படலத்தை பதிவு செய்துகொள்ள வேண்டும். 15 வயதில் இதே நடைமுறையை மீண்டும் ஒரு முறை மேற்கொள்ள வேண்டியதும் கட்டாயம்.
  • குழந்தைகளுக்கான ஆதார் அட்டையில் பெற்றோரின் ஆதார் தகவல்களும் இணைக்கப்படும்.  60 நாள்களுக்குள் 'பாலர் ஆதார்' அட்டை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Jordan’s King Abdullah arrives in India Today (27.02.2018)

2/27/2018 0
ஜோர்டான் மன்னர் இன்று இந்தியா வருகை
  • ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, 3 நாள் பயணமாக இன்று (27.02.2018) செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு தந்தார். இரு நாடுகளிடையே பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா அவர்களும் பேச்சு நடத்த உள்ளனர்.

ஜோர்டான் மன்னர் பயணத்தின் முக்கிய நோக்கம்
  • தில்லி விஞ்ஞான் பவனில் 'இஸ்லாமிய பாரம்பரியம்- அதனை மேம்படுத்துவது, புரிந்து கொள்வது மற்றும் நவீனப்படுத்துதல்' என்ற தலைப்பில் மன்னர் அப்துல்லா உரையாற்ற இருக்கிறார். 
  • இந்திய இஸ்லாமிய கலாசார மையம் சார்பில் குரான் தொடர்பான புத்தகத்தையும் மன்னர் அப்துல்லா வெளியிட இருக்கிறார்.
  • இரு நாடுகளிடையே வர்த்தகம், சுகாதாரம், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருக்கின்றன.

Jordan’s King Abdullah arrives in India Today  (27.02.2018): Visit is significant
  • King of Jordan Abdullah II bin Al-Hussein arrives in India for a three-day visit starting today. He will hold official talks with PM Narendra Modi on Thursday (27.02.2018) Defence, security and investments are going to be the key areas of discussion on the bilateral agenda.

India-Korea Business Summit: Prime Minister Narendra Modi

2/27/2018 0
இந்தியா-கொரியா வணிக உச்சி மாநாடு: பிரதமர் நரேந்திர மோடி
  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தில்லியில் இன்று (27.02.2018  (செவ்வாய் ) நடைபெற்ற இந்தியா-கொரியா வணிக உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். 

இந்தியா-கொரியா வணிக உச்சி மாநாடு - சிறப்பம்சம் 
  • இந்தியா – கொரியாவின் வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் மூலம் சிறப்புச் செயலுத்தி உறவை மேம்படுத்துதல்” என்பது  இந்த வணிக உச்சி மாநாட்டின் கருப்பொருள் ஆகும்
  • கொரியா மற்றும் இந்திய நிறுவனங்கள், உள்கட்டமைப்பு, ஐ.சி.டி., மின்சாரம், ஸ்மார்ட் சிட்டிஸ், உற்பத்தி மற்றும் பிற ஒருங்கிணைப்புகளில் புதிய மற்றும் உடனடி வாய்ப்புகள் ஏற்படுத்த இந்ந மாநாட்டின் முதல் நோக்கமாகும் 
  • இந்தியா மற்றும் கொரியா ஆசியாவில் மூன்றாவது மற்றும் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாகும்.

இந்தியா-கொரியா வணிக உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் 
  • மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, 
  • மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு, 
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

India-Korea Business Summit: PM seeks foreign investments & Open Economies
  • Prime Minister Narendra Modi on Tuesday said India is one of the most open economies and is ready to do business with the world. PM Modi pitched for foreign investments at India-Korea Business Summit.
  • "We are already the third-largest economy by purchasing power. Very soon, we will become the world's fifth-largest economy by nominal GDP. We are also the fastest growing major economy of the world today. We are also a country with the one of the largest Start up eco-systems," PM Modi said.

Explain and Implementation of Hyperloop Transportation Technologies (HTT) in India

2/27/2018 0
Explain and Implementation of Hyperloop Transportation Technologies (HTT) in India
இந்தியாவில் ஹைப்பர்லுாப் போக்குவரத்தின் முதல் படி 
  • ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியே விஜயவாடாவுடன் 'ஹைப்பர்லுாப்' போக்குவரத்து தொழில்நுட்பத்தில் இணைக்கும் திட்டத்தை, அம்மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இந்த திட்டம் நிறைவேறினால், விஜயவாடா - அமராவதி இடையிலான, 40 கி.மீ., துாரத்தை, சில நிமிடங்களில் கடந்து விடலாம்.
  • இந்தியாவில் இரண்டாவதாக ஹைப்பர்லுாப் தொழில் நுட்பத்தை பயன்படுத்த உள்ள மாநிலம் மகாராஷ்டிரா. மும்பை முதல் புனே வரை இணைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஹைப்பர்லுாப் தொழில் நுட்பத்தின் சாரம்சம்
  • ஹைப்பர்லுாப் தொழில் நுட்ப முறைப்படி, பிரத்யேகமாக தயாரிக்கப்படும் நவீன வாகனம், காற்று புகாத டியூப்பில், மணிக்கு, 1,100 கி.மீ., வேகத்தில் செல்லும்.'பாட்' எனப்படும் இவ்வகை வாகனம், காந்த விசையை பயன்படுத்தி, காற்று புகாத டியூப்புக்குள் அசுர வேகத்தில் கடந்து செல்லும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகளை, அமெரிக்காவின், 'ஹைப்பர்லுாப் ஒன்' என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
Hyperloop Transportation Technologies: Introduction
  • Hyperloop Transportation Technologies, also known as HTT, is an American research company formed using a crowd collaboration approach to develop a transportation system based on the Hyperloop concept, which was envisioned by Elon Musk in 2013.
  • The concept of the Hyperloop was popularized by Elon Musk, not affiliated with HTT. The project was to develop a high speed, intercity transporter using a low pressure tube train which would reach a top speed of 800 miles per hour (1,300 km/h) with a yearly capacity of 15 million passengers.
Courtesy: Dinamalar / Wikipedia

TN Police Exam Mathematics Model Questions:- Dinamalar (Dated: 27.02.2018)

2/27/2018 0

Tamil Nadu Police Exam ( TNUSRB) Hall Ticket Download - 2018. Hall Ticket Issued on 27th February 2018.

2/27/2018 0
Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB)
Old COP Office Campus, Pantheon Road, 
Egmore, Chennai-600 008.

Common Recruitment - 2017-18 
Grade II Police Constables [Armed Reserve]
Grade II Jail Warders & Firemen

Written examination for Common Recruitment 2017-18 is scheduled to be held on 11.03.2018.

TNUSRB will be conduct written exam on 11th March, 2018.Constables and Jail Warders & Firemen Posts.  Admit card will be issued on 27.02.2018 through TNUSRB official website.

TNUSRB  Hall Letter / Hall Ticket





All the Best...

Tamil Nadu Police Exam will conduct on 11th March, 2018

2/27/2018 0

Tamil Nadu Police Exam will conduct on 11th March, 2018: 3.20 Laksh candidates should copetitiveness for 5,538 Posts in Tamilnadu Police Exam.

How many Questions will be asked in TNUSRB Exam? : 80 MCQ question asked for these written exam - 2018.
  • General Studies - 50 Questions - 50 Marks
  • Psychology - 30 Questions - 30 Marks
Eligibility and Selected candidates should called for Physical Test.
  • 15 marks will be given Physical fitness Test
  • NCC / NSS - 5 Marks
தமிழ்நாடு காவலர் பணித்தேர்வு - 11th March, 2018
தமிழ்நாடு காவலர் பணித்தேர்வு வருகிற மார்ச் 11, 2018 அன்று நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 5,538 காலிப்பணியிடங்களுக்கு  3.20 லட்சம் பேர் விண்ணபித்துள்ளனர். எழுத்து தேர்வில் 80 வினாக்களுக்கு  80 மதிப்பெண்களும், உடல் தகுதித் தேர்வில் 15 மதிப்பெண்களும் வழங்கப்படும். மேலும் NSS / NCC மற்றும் விளையாட்டுச் சான்றிதழ் வைத்தவர்களுக்கு 5 மதிப்பெண் வழங்கப்படும்.

Courtesy: Dinamani

2/26/2018

Current Affairs Today in Tamil - Date: 26.02.2018

2/26/2018 0
TNSPC போட்டித் தேர்வினை அடிப்படையாகக்கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையளத்தில் வெளியிடப்படுகிறது. TNSPC போட்டித்தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருக்கும் அணைத்து போட்டியாளர்களும் இதில் வெளிவரும் நடப்பு நிகழ்வுகளை படித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இன்றைய நாளின் நடப்பு நிகழ்வுகள்: 26.02.2018
  • ஆசிய - பசிபிக் மாதிரி நீதிமன்றப் போட்டி: சாஸ்த்ரா மாணவர்கள் சாதனை
  • காவல்துறைகளில் 7.28 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள்:  உள்துறை அமைச்சக அறிவிப்பு
  • சர்வதேச நிதி நடவடிக்கை குழு (எஃப்ஏடிஎஃப்) துணைத் தலைவராக சீனா தேர்வு
  • ஜைதாபூர் அணுமின் நிலையம்: மார்ச் 2018 ல் பிரான்ஸுடன் ஒப்பந்தம்
  • ‘தூய்மைத் தூதுவர்’ 106 வயதான மூதாட்டி குன்வர் பாய் காலமானார்
  • இரண்டு முறையே அதிபர் பதவி நிபந்தனையை நீக்க சீனா முடிவு செய்துள்ளது 
  • 4ஜி வேகத்தில் பின்தங்கிய இந்தியா. முதலிடத்தில் தென் கொரியா 
  • பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன்கள்  விவரம்
  • ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச சேலஞ்ச் பாட்மிண்டன்: காஷ்யப் சாம்பியன்
  • இந்தியாவுக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது
  • 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஒரு பார்வை. 
ஆசிய - பசிபிக் மாதிரி நீதிமன்றப் போட்டி: சாஸ்த்ரா மாணவர்கள் சாதனை
  • சர்வதேச வணிக முத்திரை சங்கத்தின் சார்பில் முதலாவது ஆசிய - பசிபிக் மாதிரி நீதிமன்றப் போட்டி சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சாஸ்த்ரா சட்டப் பள்ளியைச் சேர்ந்த சூர்யா தேஜா, பி.எம். விகாஷ், வி. ஹரிணி ஆகியோர் அடங்கிய குழுவினர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்களை வெற்றி கண்டனர்.
காவல்துறைகளில் 7.28 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள்:  உள்துறை அமைச்சக அறிவிப்பு
  • நாடு முழுவதும் காவல்துறைகளில் பணிபுரிவோரில் 7.28 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்று மத்திய உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Sl. No
Name of the States
Number of Women Police
1. ஜம்மு & காஷ்மீர் 3.05 சதவீதம்
2.  தெலங்கானா 2.47 சதவீதம்
3.  உத்தரப் பிரதேசம் 3.81 சதவீதம்
4.  தில்லி 8.64 சதவீதம்

பெண் போலீஸார் அதிகம் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 
  • தமிழ்நாட்டில்தான் நாட்டிலேயே அதிக அளவில் பெண் போலீஸார் பணிபுரிகின்றனர்.
  • யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை சண்டீகரில் அதிக எண்ணிக்கையில் பெண் போலீஸார் பணிபுரிகின்றனர்.
  • பெண் போலீஸாரின் எண்ணிக்கையை 33 சதவீதமாக அதிகரிக்குமாறு மத்திய அரசு கடந்த 2009, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் அறிவுரைகளை அனுப்பியது.
சர்வதேச நிதி நடவடிக்கை குழு (எஃப்ஏடிஎஃப்) துணைத் தலைவராக சீனா தேர்வு: 
  • சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்) துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சீனாவுக்கு இந்தியா வாழ்த்துத் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வதைத் தடுக்கவும், அவர்களது நிதிக் கட்டமைப்புகளை முடக்கவும் சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச அமைப்பின் கூட்டம் பாரீஸில் 23.02.2018 அன்று (வெள்ளி )  நடைபெற்றது. இதில் அமைப்பின் துணைத் தலைவராக சீனா தேர்வு செய்யப்பட்டது.
ஜைதாபூர் அணுமின் நிலையம்: மார்ச் 2018 ல் பிரான்ஸுடன் ஒப்பந்தம்
  • மகாராஷ்டிர மாநிலம் ஜைதாபூரில் அணுமின் நிலையம் அமைப்பது குறித்து  பிரான்ஸுடன் அடுத்த மாதம் ( மார்ச் 2018) ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.  பிரான்ஸ் அதிவர் இமானுவேல் மெக்ரான் மார்ச் 2018  இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அப்போது இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் ஜைதாபூர் அணுமின் நிலையம் திட்டத்தின் சாரம்சம் 
  • ஜைய்தாபூரில் 1,650 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 6 அணு உலைகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய அணு மின் திட்டமாகும்
  • பொதுத் துறை நிறுவனமான இந்திய அணுமின் சக்தி நிறுவனமும், பிரான்ஸின் இடிஎஃப் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளன. 
  • அணு உலை விபத்து இழப்பீட்டுச் சட்டம் - 2010
‘தூய்மைத் தூதுவர்’ 106 வயதான மூதாட்டி குன்வர் பாய் காலமானார்
  • தூய்மையான இந்தியா திட்டத்தின் தூதுவராக களப்பணி ஆற்றிய 106 வயதான மூதாட்டி குன்வர் பாய் காலமானார். சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரியைச் சேர்ந்த குன்வர் பாய் என்ற மூதாட்டி கடந்த 2016-ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு ஒரு கழிப்பறை கட்டுவதற்காக தான் வளர்த்து வந்த தனது ஆடுகளை விற்று கழிப்பறை கட்டியதற்காக நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டு பாராட்டைப் பெற்றார்.
தூய்மையான இந்தியா திட்டத்தின் தூதுவர்
  • இதனையடுத்து குர்பாத் கிராமத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் அவர் பாராட்டப்பட்டார், பின்னர் பிரதமர் மோடி அவரை தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக நியமித்தார்.
இரண்டு முறையே அதிபர் பதவி நிபந்தனையை நீக்க சீனா முடிவு செய்துள்ளது 
  • சீனாவில் அதிபர் பதவியை ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் என்ற நிபந்தனையை நீக்க ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது. அதற்கான சட்டப்பிரிவை நீக்கவும் அந்தக் கட்சி பரிந்துரை செய்துள்ளது. 
  • சீனாவில் அதிபர் அல்லது துணை அதிபர் ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை முறைக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியாது என்று அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
4ஜி வேகத்தில் பின்தங்கிய இந்தியா. முதலிடத்தில் தென் கொரியா 
  • இந்தியாவில் 4ஜியின் வேகம் மிக அதிகமாக உள்ளது என்பது போன்ற மாயை  அது நிஜமல்ல.  4ஜியின் சேவையில் பாகிஸ்தான், கஜகஸ்தான், துனீசியா, அல்ஜீரியா நாடுகளை காட்டிலும் நாம் அதில் பின்தங்கியுள்ளோம்
4ஜி சேவைகளை ஆய்வு வெளியீடு 
  • ஓபன்சிக்னல் நிறுவனம், ஆறு கண்டங்களில் உள்ள 88 நாடுகளின் 4ஜி யின் வேகம் சேவைகளை ஆய்வுக்குட்படுத்தியதில் பின்வரும் விவரம் வெளியிடப்பட்டுள்ளது
வ.எண்
நாடுகள் 
4ஜி வேகம் 
1. சிங்கப்பூர் 44.31எம்பிபிஎஸ்
2.  நெதர்லாந்து 42.12எம்பிபிஎஸ்
3.   தென் கொரியா 40.44எம்பிபிஎஸ்
4.  நார்வே 41.20எம்பிபிஎஸ்
4.  அமெரிக்கா 16.31 எம்பிபிஎஸ்

4ஜி இணைப்புகளை அதிகம் வழங்கிய 88 நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடுகள் 

வ.எண்
நாடுகள் 
4ஜி வேகம் 
முதலிடம் தென்கொரியா 97.4986.26
இரண்டாவது ஜப்பான்  94.70%
மூன்றாமிடம்  நார்வே  92.16%
நான்காமிடம்  ஹாங்காங்க் 90.34%
14 வது இடம்  இந்தியா 86.26%

பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன்கள்  விவரம்
  • பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றனர் அதன் விவரம்
வீரர் / வீராங்கனை 
எடைப் பிரிவு  
பதக்கம்  
அமித் பாங்கல் 49 கிலோ பிரிவு தங்கம்
விகாஸ் கிருஷன் 75 கிலோ பிரிவு தங்கம்
கெளரவ் சோலங்கி  52 கிலோ பிரிவு வெள்ளி
மேரி கோம்  48 கிலோ பிரிவு வெள்ளி
சீமா பூனியா   81 கிலோ பிரிவு வெள்ளி

ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச சேலஞ்ச் பாட்மிண்டன்: காஷ்யப் சாம்பியன்
  • ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச சேலஞ்ச் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் ஆனார். இது, கடந்த 3 ஆண்டுகளில் அவர் வெல்லும் முதல் சர்வதேச பட்டமாகும்.
இந்தியாவுக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது
  • ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட இந்திய அணிக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது வழங்கப்பட்டது. அதை, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுக்கொண்டார்.
23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஒரு பார்வை. 
  • 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி 09.02.2018 ல் தொடங்கி 25.02.2018 முடிய தென்கொரியாவின்  பியோங்சாங் நகரில் 17 நாட்கள் இனிதே நடைபெற்று முடிந்தது.  
23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் சிறப்பம்சங்கள்
  • பங்கேற்பு நாடுகளின் அணிவகுப்பின்போது தென் கொரிய மற்றும் வட கொரிய போட்டியாளர்கள் தங்களது நாட்டு கொடியுடனேயே பங்கேற்றனர். முன்னதாக, தொடக்க விழா நிகழ்ச்சியில் இரு நாட்டு அணிகளும் ஒருங்கிணைந்த கொடியின் கீழ் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • ரஷிய ஒலிம்பிக் சங்கம் தடை செய்யப்பட்டிருந்ததால், அந்நாட்டு போட்டியாளர்கள் ரஷிய கொடியை பயன்படுத்தவில்லை.
  • பியோங்சாங் ஒலிம்பிக்கின் கடைசி தங்கப் பதக்கத்தை நார்வே தடகள வீராங்கனையான மரிட் ஜோர்கென், மகளிருக்கான கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங்கில் வென்றார். இத்துடன் தனது ஒலிம்பிக் பயணத்தை நிறைவு செய்துள்ள ஜோர்கென், அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலுமாக 15 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • நிறைவு நிகழ்வாக, ஒலிம்பிக் போட்டிக்கான கொடியை பியோங்சாங் நகர மேயர் சிம் ஜே குக்கிடம் இருந்து பெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், அடுத்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள சீனாவின் பெய்ஜிங் நகர மேயர் சென் ஜின்னிங்கிடம் அதை ஒப்படைத்தார்.
நிறைவு விழா நிகழ்ச்சியில் தலைவர்கள் பங்கேற்பு 
  • நிறைவு விழா நிகழ்ச்சியில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவான்கா டிரம்ப், வட கொரிய ஆளும் கட்சி துணைத் தலைவரான கிம் யோங் சோல் ஆகியோர் கலந்து கொண்டனர் .
  • குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நாடுகளில் நிலவிய வெப்ப நிலையிலேயே, பியோங்சாங் ஒலிம்பிக்கில் தான் மிகக் குறைந்தபட்ச வெப்பம் நிலவியதாக அறிவிக்கப்பட்டது .
குளிர்கால ஒலிம்பிக்: பதக்கப் பட்டியல் விவரம். 
  • பதக்கப் பட்டியலில் நார்வே 39 பதக்கங்களுடன் முதலிடத்தை பெற்றது. போட்டியை நடத்திய தென் கொரியா 5 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் 7-ஆவது இடம் பிடித்தது.
குளிர்கால ஒலிம்பிக்: பதக்கப் பட்டியல் விவரம். 
  • பதக்கப் பட்டியலில் நார்வே 39 பதக்கங்களுடன் முதலிடத்தை பெற்றது. போட்டியை நடத்திய தென் கொரியா 5 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் 7-ஆவது இடம் பிடித்தது.
23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் பதக்க பட்டியல் விவரம் 

Rank Country Gold Silver Bronze Total
முதலாவது  நார்வே  14 14 11 39      
இரண்டாவது  ஜெர்மனி  14 10 07 31
மூன்றாவது  கனடா  11 08 10 29
54 வது  இந்தியா  0 0 0 0

அடுத்த குளிர்கால மற்றும் கோடைக்கால ஒலிம்பிக் போட்டி
  • 24 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவின் பெய்ஜிங்க் நகரில் 2022 - ல் நடைபெற உள்ளது. அதைப்போன்று அடுத்த கோடைகால ஒலிம்பிக் போட்டி ஜப்பானின் டோக்கியா  நகரில் 2020 ல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

23rd Winter Olympic Ended: (23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிநிறைவின் : ஒரு பார்வை )

2/26/2018 0
23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிநிறைவின் : ஒரு பார்வை. 
  • 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி 09.02.2018 ல் தொடங்கி 25.02.2018 முடிய தென்கொரியாவின்  பியோங்சாங் நகரில் 17 நாட்கள் இனிதே நடைபெற்று முடிந்தது.  
23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சிறப்பு 
  • பங்கேற்பு நாடுகளின் அணிவகுப்பின்போது தென் கொரிய மற்றும் வட கொரிய போட்டியாளர்கள் தங்களது நாட்டு கொடியுடனேயே பங்கேற்றனர். முன்னதாக, தொடக்க விழா நிகழ்ச்சியில் இரு நாட்டு அணிகளும் ஒருங்கிணைந்த கொடியின் கீழ் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • ரஷிய ஒலிம்பிக் சங்கம் தடை செய்யப்பட்டிருந்ததால், அந்நாட்டு போட்டியாளர்கள் ரஷிய கொடியை பயன்படுத்தவில்லை.
  • பியோங்சாங் ஒலிம்பிக்கின் கடைசி தங்கப் பதக்கத்தை நார்வே தடகள வீராங்கனையான மரிட் ஜோர்கென், மகளிருக்கான கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங்கில் வென்றார். இத்துடன் தனது ஒலிம்பிக் பயணத்தை நிறைவு செய்துள்ள ஜோர்கென், அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலுமாக 15 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • நிறைவு நிகழ்வாக, ஒலிம்பிக் போட்டிக்கான கொடியை பியோங்சாங் நகர மேயர் சிம் ஜே குக்கிடம் இருந்து பெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், அடுத்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள சீனாவின் பெய்ஜிங் நகர மேயர் சென் ஜின்னிங்கிடம் அதை ஒப்படைத்தார்.
நிறைவு விழா நிகழ்ச்சியில் தலைவர்கள் பங்கேற்பு 
  • நிறைவு விழா நிகழ்ச்சியில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவான்கா டிரம்ப், வட கொரிய ஆளும் கட்சி துணைத் தலைவரான கிம் யோங் சோல் ஆகியோர் கலந்து கொண்டனர் .
  • குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நாடுகளில் நிலவிய வெப்ப நிலையிலேயே, பியோங்சாங் ஒலிம்பிக்கில் தான் மிகக் குறைந்தபட்ச வெப்பம் நிலவியதாக அறிவிக்கப்பட்டது .
குளிர்கால ஒலிம்பிக்: பதக்கப் பட்டியல் விவரம். 
  • பதக்கப் பட்டியலில் நார்வே 39 பதக்கங்களுடன் முதலிடத்தை பெற்றது. போட்டியை நடத்திய தென் கொரியா 5 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் 7-ஆவது இடம் பிடித்தது.
23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் பதக்க பட்டியல் விவரம் 

Rank Country Gold Silver Bronze Total
முதலாவது  நார்வே  14 14 11 39      
இரண்டாவது  ஜெர்மனி  14 10 07 31
மூன்றாவது  கனடா  11 08 10 29
54 வது  இந்தியா  0 0 0 0

அடுத்த குளிர்கால மற்றும் கோடைக்கால ஒலிம்பிக் போட்டி
  • 24 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவின் பெய்ஜிங்க் நகரில் 2022 - ல் நடைபெற உள்ளது. அதைப்போன்று அடுத்த கோடைகால ஒலிம்பிக் போட்டி ஜப்பானின் டோக்கியா  நகரில் 2020 ல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Daily Current Affairs in Tamil February 2018 - Mock Test 11

2/26/2018 0
TNPSC Daily Current Affairs in Tamil February 2018  - Mock Test 11

Start Quiz
Total Score
Yippee this is correct
Oops you are wrong

TN Police Exam Mathematics Model Questions:- Dinamalar (Dated: 26.02.2018)

2/26/2018 0

Pyeong Chang Winter Olympic 2018 Medal List

2/26/2018 0

The Pyeong Chang Olympics have ended with a spectacular closing ceremony.
  • Next Olympic Summer Games at Tokyo 2020  
  • Next Olympic Winter Games at Beijing 2022
Rank wise Details given below Pyeong Chang Winter Olympic 2018

Rank Country Gold Silver Bronze Total
First Norwey 14 14 11 39      
Second Germany 14 10 07 31
Third Canada 11 08 10 29
54 India 0 0 0 0

2/25/2018

TNPSC Daily Current Affairs in Tamil February 2018 - Mock Test 10

2/25/2018 0
TNPSC Daily Current Affairs in Tamil February 2018  - Mock Test 10

Start Quiz
Total Score
Yippee this is correct
Oops you are wrong