Ads 720 x 90

Current Affairs Today in Tamil - Date: 27.02.2018

TNSPC போட்டித் தேர்வினை அடிப்படையாகக்கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையளத்தில் வெளியிடப்படுகிறது. TNSPC போட்டித்தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருக்கும் அணைத்து போட்டியாளர்களும் இதில் வெளிவரும் நடப்பு நிகழ்வுகளை படித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இன்றைய நாளின் நடப்பு நிகழ்வுகள்: 27.02.2018
  • ஒக்கி புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு 133 கோடி ஒதுக்கீடு.
  • 'பாலர்' ஆதார் அட்டை: 1 முதல்  5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் - யுஐடிஏஐ
  • நவீன தொழில்நுட்ப மையம் - சென்னை இந்திய தொழில் நுட்ப மையம் (Madras IIT)
  • 200 ரயில் நிலையங்களில் நாப்கின் வழங்கும் இயந்திரங்களை அமைக்க முடிவு
  • மின் ஆளுகை (e-coverns) தொடர்பான 21-வது தேசிய கருத்தரங்கு. 
  • 2020க்குள் 13 செயற்கைகோள் ஏவப்படும்: இஸ்ரோ மைய இயக்குனர் பாண்டியன்
  • டில்லி வந்தார் ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா
  • விண்வெளி வீரர்களுக்கான புதிய உடையில் கழிவறை வசதியை அறிமுகப்படுத்தும் நாசா
  • இந்தியா உடனான கூட்டு கடற்பயிற்சிக்கு மாலத்தீவு மறுப்பு 
  • ஆஸ்திரேலியாவிற்கு புதிய துணைப் பிரதமர் மைக்கேல் மெக்கார்மாக் பதவியேற்பு
  • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மோர்ன் மோர்கெல்
  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் சுயசரிதை புத்தகம் 
  • சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 'சிறந்த குத்துச்சண்டை வீரர்' விகாஸ் கிருஷன்

ஒக்கி புயல் பாதிப்பு - தமிழகத்துக்கு 133 கோடி ஒதுக்கீடு.
  • 2017-ல் ஒக்கி புயல் மற்றும் பருவமழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ரூபாய் 133.05 கோடியே மத்திய அரசு மேலும் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு 169.63 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

'பாலர்' ஆதார் அட்டை: 1 முதல்  5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் - யுஐடிஏஐ
  •  'பாலர் ஆதார்' என்ற பெயரில் நீல நிறத்திலான பிரத்யேக ஆதார் அட்டை ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிவித்துள்ளது.

நவீன தொழில்நுட்ப மையம் - சென்னை இந்திய தொழில் நுட்ப மையம் (Madras IIT)
  • துறைமுக மேம்பாடு - தேசிய வழித் திட்டத்திற்கு உதவும் வகையில் நவீன தொழில்நுட்ப மையம் சென்னை ஐ.ஐ.டி - யில் அமைக்கப்படுகிறது. துறைமுகங்களின் மேம்பாட்டுக்காக ரூபாய்.15 லட்சம் கோடி மதிப்பீட்டில் சாகர்மாலா திட்டம் நாடுமுழுவதும் செயல்பாட்டில் உள்ளது. இந்தியா 7,500 கிலோமீட்டர் நீளம் கடற்கரையைக்  கொண்டதாகும்.

200 ரயில் நிலையங்களில் நாப்கின் வழங்கும் இயந்திரங்களை அமைக்க முடிவு
  • நாடு முழவதிலும் உள்ள 200 முக்கிய ரயில் நிலையங்களில் பெண்களுக்கான நாப்கின்களை வழங்கும் இயந்திரங்களை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. சர்வதேச பெண்கள் தினமான மார்ச் 8ஆம் தேதிக்குள் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் குறைந்த விலை கொண்ட நாப்கின்களைத் தயாரிப்பதற்கு ரயில்வே பெண்கள் நல மத்திய அமைப்பு 'தஸ்தக்' என்ற உற்பத்தி மையத்தை உருவாக்கியுள்ளது. இது இந்த ஆண்டு புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதி திறக்கப்பட்டது. இங்கு நாப்கின் தயாரிக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.

மின் ஆளுகை (e-coverns) தொடர்பான 21-வது தேசிய கருத்தரங்கு
  • மின் ஆளுகை (e-coverns) தொடர்பான 21-வது தேசிய கருத்தரங்கு. தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத்தில் 26.02.2018 அன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் சி.ஆர்.சௌத்ரி அவர்கள் பேசியாதவது.
  • நாடுமுழுவதும் 23 கோடி ரேசன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளது. இவற்றில் 19 கோடி அட்டைகளுடன் ஆதார் என் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2.95 கோடி போலி அட்டைகள் ஒலிக்கப்பட்டுள்ளன.

2020க்குள் 13 செயற்கைகோள் ஏவப்படும்: இஸ்ரோ மைய இயக்குனர் பாண்டியன்
  • 2019ல் 12 செயற்கைகோள் ஏவப்படும் என மகேந்திரகிரி இஸ்ரோ மைய இயக்குனர் பாண்டியன் மதுரையில் தெரிவித்தார். வரும் 2020க்குள் 13 செயற்கைகோள் ஏவ திட்டமிட்டுள்ளோம். சந்திராயன் விண்கலம் 6 மாதங்களில் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து செல்போன்களிலும் நேவிக் சேட்லைட் ரிசீவரை பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவ்வாறு வந்தால் செல்போன் வைத்துள்ளவர் எங்கு உள்ளார் என்பது தெரியவரும். 

டில்லி வந்தார் ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா
  • 2 நாள் அரசு முறை பயணமாக டில்லி வந்துள்ள ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லாவை டில்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி வரைவேற்றார்.

விண்வெளி வீரர்களுக்கான புதிய உடையில் கழிவறை வசதியை அறிமுகப்படுத்தும் நாசா
  • நாசா அறிமுகப்படுத்தவிருக்கும் விண்வெளி வீரர்களுக்கான புதிய உடையில் கழிவறை வசதியும், உயிர்காக்கும் கருவிகளும் இடம்பெற்றிருக்கும். மனிதர்களை சுமந்து செல்லும் அடுத்தத் தலைமுறை ஸ்பேஸ்கிராஃப்டான ஓரியானில் இந்த புதிய வசதியுடன் கூடிய ஆடையை அணிந்த விண்வெளி வீரர்கள் பயணிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
  • நீண்ட நாட்களுக்கு கழிவுகளை அழிக்கும் வசதியைக் கொண்ட விண்வெளி வீரர்களுக்கான ஆடையை தயாரிக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆடையில் இருக்கும் கழிவறை வசதியை, மிகவும் அவசர காலங்களில் 6 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உடனான கூட்டு கடற்பயிற்சிக்கு மாலத்தீவு மறுப்பு 
  • இந்திய கடற்படை சார்பில் வரும் 6-ம் தேதி முதல் 8 நாட்கள்  இந்திய பெருங்கடலில் நடைபெற உள்ள கூட்டு கடற்பயிற்சியில் பங்குபெற மாலத்தீவு மறுத்து விட்டது.
  • இந்த மெகா கடற்பயிற்சியில் அப்பிராந்தியத்தில் உள்ள 16-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன. இதில் பங்குபெற மாலத்தீவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்த அழைப்பை மாலத்தீவு நிராகரித்துவிட்டதாகவும், என்று இந்திய கடற்படை தளபதி சுனில் லன்பா  தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு புதிய துணைப் பிரதமர் மைக்கேல் மெக்கார்மாக் பதவியேற்பு
  • ஆஸ்திரேலியாவின் புதிய துணைப் பிரதமராக மைக்கேல் மெக்கார்மாக் திங்கள்கிழமை (26.02.2018) பதவியேற்றார். இதுவரை துணைப் பிரதமராக இருந்த பர்னபி ஜாய்ஸ் பாலியல் புகார் காரணமாக தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தைத் தொடர்ந்து காலியான இடத்துக்கு அவர் தேர்தெடுக்கப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மோர்ன் மோர்கெல்
  • தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளரான மோர்ன் மோர்கெல் (33), ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
மோர்ன் மோர்கெல் - கிரிக்கெட் பயணம் 
  • சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2006-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலம் களம் கண்ட மோர்ன் மோர்கெல், இதுவரை ஆடிய 83 போட்டிகளில் மொத்தமாக 294 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 5-ஆவது வீரர் மோர்கெல் ஆவார்.
  • அதேபோல், மொத்தம் ஆடிய 117 ஒருநாள் ஆட்டங்களில் 188 விக்கெட்டுகளையும், 44 டி20 ஆட்டங்களில் 47 விக்கெட்டுகளையும் மோர்கெல் வீழ்த்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் சுயசரிதை புத்தகம் 
  • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி  தனது சுயசரிதை நூலான  'ஏ செஞ்சுரி இஸ் நாட் இனஃப்' என்ற சுயசரிதை புத்தகம் எழுதினார் 

சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 'சிறந்த குத்துச்சண்டை வீரர்' விகாஸ் கிருஷன்
  • பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் விகாஸ் கிருஷன், சிறந்த குத்துச்சண்டை வீரராக தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் அவர் 75 கிலோ பிரிவில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments