'பாலர்' ஆதார் அட்டை: 1 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் - யுஐடிஏஐ
- 'பாலர் ஆதார்' என்ற பெயரில் நீல நிறத்திலான பிரத்யேக ஆதார் அட்டை ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிவித்துள்ளது.
'பாலர் ஆதார்' யின் சிறப்பு: 'ஆதார் ஃபார் மை சைல்டு' என்ற தலைப்பில் யுஐடிஏஐ கூறியுள்ளதாவது:
- கை விரல் ரேகைகள், கருவிழிப் படலம் ஆகியவை பதிவு செய்யப்படாமல் இந்த அட்டைகள் வழங்கப்படும்.
- குழந்தைகள் 5 வயதை எட்டியதும், கைவிரல் ரேகை, கருவிழிப் படலம் ஆகியவை பதிவு செய்யப்பட வேண்டும். அவர்கள் 15 வயதை எட்டும் போது மீண்டும் ஒரு முறை கைவிரல் ரேகைகள், கருவிழிப் படலம் ஆகியவற்றை பதிவு செய்துகொள்ள வேண்டியது கட்டாயம்.
- அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் சேவைகளுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தைகளுக்கான பிரத்யேக ஆதார் அட்டை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- குழந்தையின் ஆதார் பதிவுக்கு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தாய்-தந்தையரில் ஒருவரின் ஆதார் அட்டை தேவைப்படும்.
- பள்ளி செல்லும் குழந்தையாக இருந்தால், பள்ளியில் வழங்கப்படும் அடையாள அட்டையை ஆதார் பதிவுக்கு பயன்படுத்தலாம். அந்தப் பள்ளி, அரசு அங்கீகாரம் பெற்றதாக இருத்தல் வேண்டும்.
- 5 வயதை எட்டியதும் மீண்டும் ஆதார் மையத்தை அணுகி, கைவிரல் ரேகைகள், கருவிழிப் படலத்தை பதிவு செய்துகொள்ள வேண்டும். 15 வயதில் இதே நடைமுறையை மீண்டும் ஒரு முறை மேற்கொள்ள வேண்டியதும் கட்டாயம்.
- குழந்தைகளுக்கான ஆதார் அட்டையில் பெற்றோரின் ஆதார் தகவல்களும் இணைக்கப்படும். 60 நாள்களுக்குள் 'பாலர் ஆதார்' அட்டை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்.
Post a Comment