- மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்னையை அடுத்த மணலியில் உள்ள சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 27.02.2018 அன்று நடந்த விழாவில் ரூ.3,110 கோடியில் மிகு எண்ணெய் மேம்படுத்தும் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசியாதவது.
மிகு எண்ணெய் மேம்படுத்தும் திட்டத்தின் பயன்:
- சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தில், பெட்ரோலிய கழிவுகளை மேம்படுத்துவதன் மூலம் சமையல் எரிவாயு, டீசல் ஆண்டுக்கு 7 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு அதிகரிக்கும்.
நரிமணத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம்
- நாகை மாவட்டம், நரிமணத்தில் ரூ.27 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் 10 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோலியப் பொருள்களைக் கையாண்டு சுத்திகரிக்க முடியும்.
நாப்தா கிராக்கர் - திட்டம்
- தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்யும் அதே வேளையில், அதிலிருந்து 1,500 மெட்ரிக் டன் நாப்தாவை எடுத்து பிற பெட்ரோலிய கெமிக்கல் பொருள்களைத் தயாரிக்கும் திட்டத்தை தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாப்தா கிராக்கர் எனப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் நாப்தாவை பகுப்பாய்வு செய்து அதன் மூலம் கிடைக்கும் பிளாஸ்டிக், தார், சிந்தடிக் ரப்பர் போன்ற பல்வேறு மூலப்பொருள்களை நாம் பயன்படுத்த முடியும்.
- கடலூர் - நாகப்பட்டினம் மாவட்டங்களை இணைத்து செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம் ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் கோடி மதிப்புள்ள கச்சாப் பொருளான நாப்தா நமக்கு கிடைக்கும் என்றார் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய நபர்கள்
- மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
- தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன்
Post a Comment