இந்தியா-கொரியா வர்த்தக உச்சி மாநாடு மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏஐஐபி) மூன்றாவது வருடாந்திரக் கருத்தரங்கு
- 27.02.2018 அன்று நடைபெற்ற இந்தியா-கொரியா வர்த்தக உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியாதவது.
- நாடு முழுவதும் சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) ஒரே விகிதத்தில் அமல்படுத்துவது சாத்தியமில்லை.
- அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்திகளில் ஒன்றாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும்.
- இந்தியாவில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் நமது பொருளாதாரம் 7 முதல் 8 சதவீத வளர்ச்சியை எட்டுவது இயல்பான விஷயம் என்றே கருதுகின்றனர். ஆனால் அந்த விகிதத்தையும் தாண்டும் வகையில் இந்தியாவின் உண்மையான திறன் உள்ளது.
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏஐஐபி) மூன்றாவது வருடாந்திரக் கருத்தரங்கு
- பெய்ஜிங்கைத் தலைமையிடமாகக் கொண்ட ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (ஏஐஐபி) மூன்றாவது வருடாந்திரக் கருத்தரங்கு தில்லியில் 27.02.2018 அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று ஜேட்லி பேசுகையில் 'இந்தியாவுக்கு ஏஐஐபி அதிக நிதியை கடனாக அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
0 Comments