Ads 720 x 90

Current Affairs Today in Tamil - Date: 26.02.2018

TNSPC போட்டித் தேர்வினை அடிப்படையாகக்கொண்டு நடப்பு நிகழ்வுகள் தினமும் TNPSC MASTER இணையளத்தில் வெளியிடப்படுகிறது. TNSPC போட்டித்தேர்வுக்கு தயாராகிக்கொண்டு இருக்கும் அணைத்து போட்டியாளர்களும் இதில் வெளிவரும் நடப்பு நிகழ்வுகளை படித்து தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இன்றைய நாளின் நடப்பு நிகழ்வுகள்: 26.02.2018
  • ஆசிய - பசிபிக் மாதிரி நீதிமன்றப் போட்டி: சாஸ்த்ரா மாணவர்கள் சாதனை
  • காவல்துறைகளில் 7.28 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள்:  உள்துறை அமைச்சக அறிவிப்பு
  • சர்வதேச நிதி நடவடிக்கை குழு (எஃப்ஏடிஎஃப்) துணைத் தலைவராக சீனா தேர்வு
  • ஜைதாபூர் அணுமின் நிலையம்: மார்ச் 2018 ல் பிரான்ஸுடன் ஒப்பந்தம்
  • ‘தூய்மைத் தூதுவர்’ 106 வயதான மூதாட்டி குன்வர் பாய் காலமானார்
  • இரண்டு முறையே அதிபர் பதவி நிபந்தனையை நீக்க சீனா முடிவு செய்துள்ளது 
  • 4ஜி வேகத்தில் பின்தங்கிய இந்தியா. முதலிடத்தில் தென் கொரியா 
  • பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன்கள்  விவரம்
  • ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச சேலஞ்ச் பாட்மிண்டன்: காஷ்யப் சாம்பியன்
  • இந்தியாவுக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது
  • 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஒரு பார்வை. 
ஆசிய - பசிபிக் மாதிரி நீதிமன்றப் போட்டி: சாஸ்த்ரா மாணவர்கள் சாதனை
  • சர்வதேச வணிக முத்திரை சங்கத்தின் சார்பில் முதலாவது ஆசிய - பசிபிக் மாதிரி நீதிமன்றப் போட்டி சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சாஸ்த்ரா சட்டப் பள்ளியைச் சேர்ந்த சூர்யா தேஜா, பி.எம். விகாஷ், வி. ஹரிணி ஆகியோர் அடங்கிய குழுவினர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர்களை வெற்றி கண்டனர்.
காவல்துறைகளில் 7.28 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள்:  உள்துறை அமைச்சக அறிவிப்பு
  • நாடு முழுவதும் காவல்துறைகளில் பணிபுரிவோரில் 7.28 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்று மத்திய உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Sl. No
Name of the States
Number of Women Police
1. ஜம்மு & காஷ்மீர் 3.05 சதவீதம்
2.  தெலங்கானா 2.47 சதவீதம்
3.  உத்தரப் பிரதேசம் 3.81 சதவீதம்
4.  தில்லி 8.64 சதவீதம்

பெண் போலீஸார் அதிகம் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 
  • தமிழ்நாட்டில்தான் நாட்டிலேயே அதிக அளவில் பெண் போலீஸார் பணிபுரிகின்றனர்.
  • யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரை சண்டீகரில் அதிக எண்ணிக்கையில் பெண் போலீஸார் பணிபுரிகின்றனர்.
  • பெண் போலீஸாரின் எண்ணிக்கையை 33 சதவீதமாக அதிகரிக்குமாறு மத்திய அரசு கடந்த 2009, 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் அறிவுரைகளை அனுப்பியது.
சர்வதேச நிதி நடவடிக்கை குழு (எஃப்ஏடிஎஃப்) துணைத் தலைவராக சீனா தேர்வு: 
  • சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்) துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சீனாவுக்கு இந்தியா வாழ்த்துத் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதி செல்வதைத் தடுக்கவும், அவர்களது நிதிக் கட்டமைப்புகளை முடக்கவும் சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக் குழு (எஃப்ஏடிஎஃப்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச அமைப்பின் கூட்டம் பாரீஸில் 23.02.2018 அன்று (வெள்ளி )  நடைபெற்றது. இதில் அமைப்பின் துணைத் தலைவராக சீனா தேர்வு செய்யப்பட்டது.
ஜைதாபூர் அணுமின் நிலையம்: மார்ச் 2018 ல் பிரான்ஸுடன் ஒப்பந்தம்
  • மகாராஷ்டிர மாநிலம் ஜைதாபூரில் அணுமின் நிலையம் அமைப்பது குறித்து  பிரான்ஸுடன் அடுத்த மாதம் ( மார்ச் 2018) ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.  பிரான்ஸ் அதிவர் இமானுவேல் மெக்ரான் மார்ச் 2018  இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அப்போது இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் ஜைதாபூர் அணுமின் நிலையம் திட்டத்தின் சாரம்சம் 
  • ஜைய்தாபூரில் 1,650 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 6 அணு உலைகளை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய அணு மின் திட்டமாகும்
  • பொதுத் துறை நிறுவனமான இந்திய அணுமின் சக்தி நிறுவனமும், பிரான்ஸின் இடிஎஃப் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளன. 
  • அணு உலை விபத்து இழப்பீட்டுச் சட்டம் - 2010
‘தூய்மைத் தூதுவர்’ 106 வயதான மூதாட்டி குன்வர் பாய் காலமானார்
  • தூய்மையான இந்தியா திட்டத்தின் தூதுவராக களப்பணி ஆற்றிய 106 வயதான மூதாட்டி குன்வர் பாய் காலமானார். சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரியைச் சேர்ந்த குன்வர் பாய் என்ற மூதாட்டி கடந்த 2016-ஆம் ஆண்டு தனது வீட்டிற்கு ஒரு கழிப்பறை கட்டுவதற்காக தான் வளர்த்து வந்த தனது ஆடுகளை விற்று கழிப்பறை கட்டியதற்காக நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டு பாராட்டைப் பெற்றார்.
தூய்மையான இந்தியா திட்டத்தின் தூதுவர்
  • இதனையடுத்து குர்பாத் கிராமத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் அவர் பாராட்டப்பட்டார், பின்னர் பிரதமர் மோடி அவரை தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக நியமித்தார்.
இரண்டு முறையே அதிபர் பதவி நிபந்தனையை நீக்க சீனா முடிவு செய்துள்ளது 
  • சீனாவில் அதிபர் பதவியை ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் என்ற நிபந்தனையை நீக்க ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது. அதற்கான சட்டப்பிரிவை நீக்கவும் அந்தக் கட்சி பரிந்துரை செய்துள்ளது. 
  • சீனாவில் அதிபர் அல்லது துணை அதிபர் ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை முறைக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியாது என்று அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
4ஜி வேகத்தில் பின்தங்கிய இந்தியா. முதலிடத்தில் தென் கொரியா 
  • இந்தியாவில் 4ஜியின் வேகம் மிக அதிகமாக உள்ளது என்பது போன்ற மாயை  அது நிஜமல்ல.  4ஜியின் சேவையில் பாகிஸ்தான், கஜகஸ்தான், துனீசியா, அல்ஜீரியா நாடுகளை காட்டிலும் நாம் அதில் பின்தங்கியுள்ளோம்
4ஜி சேவைகளை ஆய்வு வெளியீடு 
  • ஓபன்சிக்னல் நிறுவனம், ஆறு கண்டங்களில் உள்ள 88 நாடுகளின் 4ஜி யின் வேகம் சேவைகளை ஆய்வுக்குட்படுத்தியதில் பின்வரும் விவரம் வெளியிடப்பட்டுள்ளது
வ.எண்
நாடுகள் 
4ஜி வேகம் 
1. சிங்கப்பூர் 44.31எம்பிபிஎஸ்
2.  நெதர்லாந்து 42.12எம்பிபிஎஸ்
3.   தென் கொரியா 40.44எம்பிபிஎஸ்
4.  நார்வே 41.20எம்பிபிஎஸ்
4.  அமெரிக்கா 16.31 எம்பிபிஎஸ்

4ஜி இணைப்புகளை அதிகம் வழங்கிய 88 நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடுகள் 

வ.எண்
நாடுகள் 
4ஜி வேகம் 
முதலிடம் தென்கொரியா 97.4986.26
இரண்டாவது ஜப்பான்  94.70%
மூன்றாமிடம்  நார்வே  92.16%
நான்காமிடம்  ஹாங்காங்க் 90.34%
14 வது இடம்  இந்தியா 86.26%

பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன்கள்  விவரம்
  • பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றனர் அதன் விவரம்
வீரர் / வீராங்கனை 
எடைப் பிரிவு  
பதக்கம்  
அமித் பாங்கல் 49 கிலோ பிரிவு தங்கம்
விகாஸ் கிருஷன் 75 கிலோ பிரிவு தங்கம்
கெளரவ் சோலங்கி  52 கிலோ பிரிவு வெள்ளி
மேரி கோம்  48 கிலோ பிரிவு வெள்ளி
சீமா பூனியா   81 கிலோ பிரிவு வெள்ளி

ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச சேலஞ்ச் பாட்மிண்டன்: காஷ்யப் சாம்பியன்
  • ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச சேலஞ்ச் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் காஷ்யப் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் ஆனார். இது, கடந்த 3 ஆண்டுகளில் அவர் வெல்லும் முதல் சர்வதேச பட்டமாகும்.
இந்தியாவுக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது
  • ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்ட இந்திய அணிக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது வழங்கப்பட்டது. அதை, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுக்கொண்டார்.
23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஒரு பார்வை. 
  • 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி 09.02.2018 ல் தொடங்கி 25.02.2018 முடிய தென்கொரியாவின்  பியோங்சாங் நகரில் 17 நாட்கள் இனிதே நடைபெற்று முடிந்தது.  
23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் சிறப்பம்சங்கள்
  • பங்கேற்பு நாடுகளின் அணிவகுப்பின்போது தென் கொரிய மற்றும் வட கொரிய போட்டியாளர்கள் தங்களது நாட்டு கொடியுடனேயே பங்கேற்றனர். முன்னதாக, தொடக்க விழா நிகழ்ச்சியில் இரு நாட்டு அணிகளும் ஒருங்கிணைந்த கொடியின் கீழ் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • ரஷிய ஒலிம்பிக் சங்கம் தடை செய்யப்பட்டிருந்ததால், அந்நாட்டு போட்டியாளர்கள் ரஷிய கொடியை பயன்படுத்தவில்லை.
  • பியோங்சாங் ஒலிம்பிக்கின் கடைசி தங்கப் பதக்கத்தை நார்வே தடகள வீராங்கனையான மரிட் ஜோர்கென், மகளிருக்கான கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங்கில் வென்றார். இத்துடன் தனது ஒலிம்பிக் பயணத்தை நிறைவு செய்துள்ள ஜோர்கென், அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலுமாக 15 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • நிறைவு நிகழ்வாக, ஒலிம்பிக் போட்டிக்கான கொடியை பியோங்சாங் நகர மேயர் சிம் ஜே குக்கிடம் இருந்து பெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், அடுத்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள சீனாவின் பெய்ஜிங் நகர மேயர் சென் ஜின்னிங்கிடம் அதை ஒப்படைத்தார்.
நிறைவு விழா நிகழ்ச்சியில் தலைவர்கள் பங்கேற்பு 
  • நிறைவு விழா நிகழ்ச்சியில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவான்கா டிரம்ப், வட கொரிய ஆளும் கட்சி துணைத் தலைவரான கிம் யோங் சோல் ஆகியோர் கலந்து கொண்டனர் .
  • குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நாடுகளில் நிலவிய வெப்ப நிலையிலேயே, பியோங்சாங் ஒலிம்பிக்கில் தான் மிகக் குறைந்தபட்ச வெப்பம் நிலவியதாக அறிவிக்கப்பட்டது .
குளிர்கால ஒலிம்பிக்: பதக்கப் பட்டியல் விவரம். 
  • பதக்கப் பட்டியலில் நார்வே 39 பதக்கங்களுடன் முதலிடத்தை பெற்றது. போட்டியை நடத்திய தென் கொரியா 5 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் 7-ஆவது இடம் பிடித்தது.
குளிர்கால ஒலிம்பிக்: பதக்கப் பட்டியல் விவரம். 
  • பதக்கப் பட்டியலில் நார்வே 39 பதக்கங்களுடன் முதலிடத்தை பெற்றது. போட்டியை நடத்திய தென் கொரியா 5 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் 7-ஆவது இடம் பிடித்தது.
23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் பதக்க பட்டியல் விவரம் 

Rank Country Gold Silver Bronze Total
முதலாவது  நார்வே  14 14 11 39      
இரண்டாவது  ஜெர்மனி  14 10 07 31
மூன்றாவது  கனடா  11 08 10 29
54 வது  இந்தியா  0 0 0 0

அடுத்த குளிர்கால மற்றும் கோடைக்கால ஒலிம்பிக் போட்டி
  • 24 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவின் பெய்ஜிங்க் நகரில் 2022 - ல் நடைபெற உள்ளது. அதைப்போன்று அடுத்த கோடைகால ஒலிம்பிக் போட்டி ஜப்பானின் டோக்கியா  நகரில் 2020 ல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments