ஜோர்டான் மன்னர் இன்று இந்தியா வருகை
- ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, 3 நாள் பயணமாக இன்று (27.02.2018) செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு தந்தார். இரு நாடுகளிடையே பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா அவர்களும் பேச்சு நடத்த உள்ளனர்.
ஜோர்டான் மன்னர் பயணத்தின் முக்கிய நோக்கம்
- தில்லி விஞ்ஞான் பவனில் 'இஸ்லாமிய பாரம்பரியம்- அதனை மேம்படுத்துவது, புரிந்து கொள்வது மற்றும் நவீனப்படுத்துதல்' என்ற தலைப்பில் மன்னர் அப்துல்லா உரையாற்ற இருக்கிறார்.
- இந்திய இஸ்லாமிய கலாசார மையம் சார்பில் குரான் தொடர்பான புத்தகத்தையும் மன்னர் அப்துல்லா வெளியிட இருக்கிறார்.
- இரு நாடுகளிடையே வர்த்தகம், சுகாதாரம், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருக்கின்றன.
Jordan’s King Abdullah arrives in India Today (27.02.2018): Visit is significant
- King of Jordan Abdullah II bin Al-Hussein arrives in India for a three-day visit starting today. He will hold official talks with PM Narendra Modi on Thursday (27.02.2018) Defence, security and investments are going to be the key areas of discussion on the bilateral agenda.