- 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி 09.02.2018 ல் தொடங்கி 25.02.2018 முடிய தென்கொரியாவின் பியோங்சாங் நகரில் 17 நாட்கள் இனிதே நடைபெற்று முடிந்தது.
23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சிறப்பு
- பங்கேற்பு நாடுகளின் அணிவகுப்பின்போது தென் கொரிய மற்றும் வட கொரிய போட்டியாளர்கள் தங்களது நாட்டு கொடியுடனேயே பங்கேற்றனர். முன்னதாக, தொடக்க விழா நிகழ்ச்சியில் இரு நாட்டு அணிகளும் ஒருங்கிணைந்த கொடியின் கீழ் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ரஷிய ஒலிம்பிக் சங்கம் தடை செய்யப்பட்டிருந்ததால், அந்நாட்டு போட்டியாளர்கள் ரஷிய கொடியை பயன்படுத்தவில்லை.
- பியோங்சாங் ஒலிம்பிக்கின் கடைசி தங்கப் பதக்கத்தை நார்வே தடகள வீராங்கனையான மரிட் ஜோர்கென், மகளிருக்கான கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங்கில் வென்றார். இத்துடன் தனது ஒலிம்பிக் பயணத்தை நிறைவு செய்துள்ள ஜோர்கென், அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலுமாக 15 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நிறைவு நிகழ்வாக, ஒலிம்பிக் போட்டிக்கான கொடியை பியோங்சாங் நகர மேயர் சிம் ஜே குக்கிடம் இருந்து பெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், அடுத்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள சீனாவின் பெய்ஜிங் நகர மேயர் சென் ஜின்னிங்கிடம் அதை ஒப்படைத்தார்.
- நிறைவு விழா நிகழ்ச்சியில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவான்கா டிரம்ப், வட கொரிய ஆளும் கட்சி துணைத் தலைவரான கிம் யோங் சோல் ஆகியோர் கலந்து கொண்டனர் .
- குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நாடுகளில் நிலவிய வெப்ப நிலையிலேயே, பியோங்சாங் ஒலிம்பிக்கில் தான் மிகக் குறைந்தபட்ச வெப்பம் நிலவியதாக அறிவிக்கப்பட்டது .
குளிர்கால ஒலிம்பிக்: பதக்கப் பட்டியல் விவரம்.
- பதக்கப் பட்டியலில் நார்வே 39 பதக்கங்களுடன் முதலிடத்தை பெற்றது. போட்டியை நடத்திய தென் கொரியா 5 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் 7-ஆவது இடம் பிடித்தது.
23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் பதக்க பட்டியல் விவரம்
Rank | Country | Gold | Silver | Bronze | Total |
---|---|---|---|---|---|
முதலாவது | நார்வே | 14 | 14 | 11 | 39 |
இரண்டாவது | ஜெர்மனி | 14 | 10 | 07 | 31 |
மூன்றாவது | கனடா | 11 | 08 | 10 | 29 |
54 வது | இந்தியா | 0 | 0 | 0 | 0 |
- 24 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவின் பெய்ஜிங்க் நகரில் 2022 - ல் நடைபெற உள்ளது. அதைப்போன்று அடுத்த கோடைகால ஒலிம்பிக் போட்டி ஜப்பானின் டோக்கியா நகரில் 2020 ல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 Comments