Showing posts with label 6th Tamil. Show all posts
Showing posts with label 6th Tamil. Show all posts

6/17/2025

TN New 6th Standard Tamil Books Important Notes

6/17/2025 10

6th Standard Tamil New Books Notes
New Books 6th Standard: Important Notes Tamil Books (Part - 1): Click Here
New Books 6th Standard: Important Notes Tamil Books (Part - 2): Click Here
New Books 6th Standard: Important Notes Tamil Books (Part - 3): Click Here
New Books 6th Standard: Important Notes Tamil Books (Part - 4): Click Here
New Books 6th Standard: Important Notes Tamil Books (Part - 5): Click Here
New Books 6th Standard: Important Notes Tamil Books (Part - 6): Click Here
New Books 6th Standard: Important Notes Tamil Books (Part - 7): Click Here
New Books 6th Standard: Important Notes Tamil Books (Part - 8): Click Here
New Books 6th Standard: Important Notes Tamil Books (Part - 9): Click Here
New Books 6th Standard: Important Notes Tamil Books (Part - 10): Click Here
New Books 6th Standard: Important Notes Tamil Books (Part - 11): Click Here
New Books 6th Standard: Important Notes Tamil Books (Part - 12): Click Here
New Books 6th Standard: Important Notes Tamil Books (Part - 13): Click Here
New Books 6th Standard: Important Notes Tamil Books (Part - 14): Click Here
New Books 6th Standard: Important Notes Tamil Books (Part - 15): Click Here
New Books 6th Standard: Important Notes Tamil Books (Part - 16): Click Here


6th Standard Tamil Old Books Notes
TNPSC Exam: General Tamil in 6th and 7th Standard Questions with Answers: Click Here
TNPSC Exam: General Tamil in 6th and 7th Standard Questions with Answers: Click Here
TNPSC Exam: General Tamil in 6th and 7th Standard Questions with Answers: Click Here
TNPSC Exam: General Tamil in 6th and 7th Standard Questions with Answers: Click Here
TNPSC Exam: General Tamil in 6th and 7th Standard Questions with Answers: Click Here
TNPSC Exam: General Tamil in 6th and 7th Standard Questions with Answers: Click Here
TNPSC Exam: General Tamil in 6th and 7th Standard Questions with Answers: Click Here

4/16/2022

6th Standard Tamil Important Questions and Answers by Suresh IAS Academy

4/16/2022 0
6th Standard Tamil Important Questions and Answers by Suresh IAS Academy

 6th Standard Tamil Important Questions and Answers by Suresh IAS Academy

New Book 6th Standard Tamil Important Questions and Answers by Akash IAS Academy

4/16/2022 0
New Book 6th Standard Tamil Important Questions and Answers by Akash IAS Academy

 New Book 6th Standard Tamil Important Questions and Answers by Akash IAS Academy


8/12/2020

New 6th Standard Tamil Books (2nd Term) - Important Notes

8/12/2020 0
                                                                   
  

                                                                     இயல் ஒன்று 
பாடம் 4. விரிவானம் - நூலகம் நோக்கி

முக்கிய தகவல்கள் 
1. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் - அண்ணா நூற்றாண்டு நூலகம் 
2. ஆசியக்கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் - சீனாவில் உள்ளது 
3. இந்திய நூலகவியலின் தந்தை - இரா.அரங்கநாதன் (இவர்தான் 5 நூலக விதிகளை உருவாக்கினார்)
4. தமிழ்நாடு அரசு நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
5. சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.

பாடம் 5. கற்கண்டு - இன எழுத்துகள்

முக்கிய தகவல்கள் 
  • சில எழுத்துக்களுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துக்கள் இன எழுத்துக்கள் எனப்படும். 
  • ஆறு வல்லின மெய் எழுத்துக்களுக்கும் ஆறு மெல்லின எழுத்துக்களும் இன எழுத்துக்கள் ஆகும்.சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்து பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும். (எ.கா.) திங்கள்,மஞ்சள்,மண்டபம்,சந்தனம்,அம்பு,தென்றல்.
  • இடையின எழுத்துகள் ஆறும் (ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) ஒரே இனமாகும்.
  • மெய்யெழுத்துக்களைப் போலவே உயிர் எழுத்துக்களிலும் இன எழுத்துக்கள் உண்டு. உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும் , நெடிலுக்கு குறிலும் இன எழுத்துகள் ஆகும். குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்தாகும். ஔ என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும்.
  • சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை.
  • அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும். (எ.கா.) ஓஒதல்,தூஉம்,தழீஇ.
  • தமிழ் எழுத்துக்களில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது?
(குழந்தைகள் தினம், மாணவர் தினம், ஆசிரியர் தினம், தேசிய இளைஞர் தினம், கல்வி வளர்ச்சி நாள்)
1. காமராசர் பிறந்த நாள் - கல்வி வளர்ச்சி நாள்.
2. டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் - ஆசிரியர் தினம்.
3. அப்துல்கலாம் பிறந்த நாள் - மாணவர் தினம்.
4. விவேகானந்தர் பிறந்த நாள் - தேசிய இளைஞர் தினம்.
5. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் - குழந்தைகள் தினம்.

கலைச்சொல் அறிவோம்:
1.கல்வி - Education
2. தொடக்கப்பள்ளி - Primary School
3. மேல்நிலைப்பள்ளி - Higher Secondary School
4. நூலகம் - Library
5. மின்படிகட்டு - Escalator
6. மின்தூக்கி - Lift
7. மின்னஞ்சல் - E- mail
8. குறுந்தகடு - Compact Disk (CD)
9. மின்நூலகம் - E-Library
10. மின்னூல் - E-Book
11. மின் இதழ்கள் - E- Magazine

New 6th Standard Tamil Books (2nd Term) Important Notes

8/12/2020 0

இயல் ஒன்று :
பாடம் 2. கவிதைப்பேழை - துன்பம் வெல்லும் கல்வி

சொல்லும் பொருளும்
1. தூற்றும் படி - இகழும் படி
2. மூத்தோர் - பெரியோர்
3. மேதைகள் - அறிஞர்கள்
4. மாற்றார் - மற்றவர்
5. நெறி - வழி
6. வற்றாமல் - குறையாமல் 

நூல் வெளி : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1) மாணவர் பிறர் ______நடக்கக் கூடாது
விடை: தூற்றும்படி

2. நாம் _______ சொற்படி நடக்க வவண்டும்.
விடை: மூத்தோர்

3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
விடை: கை + பொருள்

4. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
விடை: மானமில்லா

                          பாடம் 3. உரைநடை உலகம் - கல்விக்கண் திறந்தவர்

1. கல்விக்கண் திறந்தவர் என்று காமராசரை பாராட்டியவர் யார்?
பெரியார் 

காமராசரின் சிறப்பு பெயர்கள்:
  • பெருந்தலைவர்
  • கறுப்புக் காந்தி
  • படிக்காத மேதை
  • ஏழைப்பங்காளர்
  • கர்ம வீரர்
  • தலைவர்களை உருவாக்குபவர்
காமராசரின் கல்வி பணிகள் :
  • மாநிலம் முழுவதும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றினார்.
  • மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
  • குழந்தைகளைப் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்கச்சீருடை திட்டதை அறிமுகம் செய்தார்.
  • பள்ளிகளின் வசதிகளைப் பெருக்க பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார்.

காமராசருக்குச் செய்யப்பட்ட சிறப்புகள் 
  • மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்பட்டது.
  • நடுவண் அரசு 1976 - ல் பாரதரத்னா விருது வழங்கியது.
  • காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் , நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
  • சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
  • சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது
  • ஆண்டுதோறும் காமராசர் பிறந்த நாளான ஜீலை 15-ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

முக்கிய வினாக்கள்: 
1. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________
விடை: பசி + இன்றி
2. காடு+ஆறு என்பதளைச் சேர்த்து எழுதக் கிடைப்பது_______
காட்டாறு
3. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
படிப்பு + அறிவு
 4. _________ தூரத்தில் ஆரம்பப் பள்ளி, _______ தூரத்தில் நடுநிலைப் பள்ளி, _________ தூரத்தில் உயர்நிலைப்பள்ளி இருக்க வேண்டும் என்று காமராசர் திட்டம் வகுத்தார்.
ஒரு மைல், மூன்று மைல், ஐந்து மைல்