இயல் ஒன்று
பாடம் 4. விரிவானம் - நூலகம் நோக்கி
முக்கிய தகவல்கள்
1. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் - அண்ணா நூற்றாண்டு நூலகம்
2. ஆசியக்கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் - சீனாவில் உள்ளது
3. இந்திய நூலகவியலின் தந்தை - இரா.அரங்கநாதன் (இவர்தான் 5 நூலக விதிகளை உருவாக்கினார்)
4. தமிழ்நாடு அரசு நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
5. சிறந்த நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது வழங்கப்படுகிறது.
பாடம் 5. கற்கண்டு - இன எழுத்துகள்
முக்கிய தகவல்கள்
- சில எழுத்துக்களுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துக்கள் இன எழுத்துக்கள் எனப்படும்.
- ஆறு வல்லின மெய் எழுத்துக்களுக்கும் ஆறு மெல்லின எழுத்துக்களும் இன எழுத்துக்கள் ஆகும்.சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்து பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும். (எ.கா.) திங்கள்,மஞ்சள்,மண்டபம்,சந்தனம்,அம்பு,தென்றல்.
- இடையின எழுத்துகள் ஆறும் (ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) ஒரே இனமாகும்.
- மெய்யெழுத்துக்களைப் போலவே உயிர் எழுத்துக்களிலும் இன எழுத்துக்கள் உண்டு. உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும் , நெடிலுக்கு குறிலும் இன எழுத்துகள் ஆகும். குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்தாகும். ஔ என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும்.
- சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை.
- அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும். (எ.கா.) ஓஒதல்,தூஉம்,தழீஇ.
- தமிழ் எழுத்துக்களில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தலைவர்களின் பிறந்த நாள் எந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது?
(குழந்தைகள் தினம், மாணவர் தினம், ஆசிரியர் தினம், தேசிய இளைஞர் தினம், கல்வி வளர்ச்சி நாள்)
1. காமராசர் பிறந்த நாள் - கல்வி வளர்ச்சி நாள்.
2. டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் - ஆசிரியர் தினம்.
3. அப்துல்கலாம் பிறந்த நாள் - மாணவர் தினம்.
4. விவேகானந்தர் பிறந்த நாள் - தேசிய இளைஞர் தினம்.
5. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் - குழந்தைகள் தினம்.
கலைச்சொல் அறிவோம்:
1.கல்வி - Education
2. தொடக்கப்பள்ளி - Primary School
3. மேல்நிலைப்பள்ளி - Higher Secondary School
4. நூலகம் - Library
5. மின்படிகட்டு - Escalator
6. மின்தூக்கி - Lift
7. மின்னஞ்சல் - E- mail
8. குறுந்தகடு - Compact Disk (CD)
9. மின்நூலகம் - E-Library
10. மின்னூல் - E-Book
11. மின் இதழ்கள் - E- Magazine