பாடம் 2. கவிதைப்பேழை - துன்பம் வெல்லும் கல்வி
சொல்லும் பொருளும்
1. தூற்றும் படி - இகழும் படி
2. மூத்தோர் - பெரியோர்
3. மேதைகள் - அறிஞர்கள்
4. மாற்றார் - மற்றவர்
5. நெறி - வழி
6. வற்றாமல் - குறையாமல்
நூல் வெளி : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1) மாணவர் பிறர் ______நடக்கக் கூடாது
விடை: தூற்றும்படி
2. நாம் _______ சொற்படி நடக்க வவண்டும்.
விடை: மூத்தோர்
3. கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______
விடை: கை + பொருள்
4. மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்________
விடை: மானமில்லா
பாடம் 3. உரைநடை உலகம் - கல்விக்கண் திறந்தவர்
1. கல்விக்கண் திறந்தவர் என்று காமராசரை பாராட்டியவர் யார்?
பெரியார்
காமராசரின் சிறப்பு பெயர்கள்:
- பெருந்தலைவர்
- கறுப்புக் காந்தி
- படிக்காத மேதை
- ஏழைப்பங்காளர்
- கர்ம வீரர்
- தலைவர்களை உருவாக்குபவர்
காமராசரின் கல்வி பணிகள் :
- மாநிலம் முழுவதும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றினார்.
- மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
- குழந்தைகளைப் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்கச்சீருடை திட்டதை அறிமுகம் செய்தார்.
- பள்ளிகளின் வசதிகளைப் பெருக்க பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தினார்.
காமராசருக்குச் செய்யப்பட்ட சிறப்புகள்
- மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என பெயர் சூட்டப்பட்டது.
- நடுவண் அரசு 1976 - ல் பாரதரத்னா விருது வழங்கியது.
- காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் , நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டன.
- சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது.
- சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது
- ஆண்டுதோறும் காமராசர் பிறந்த நாளான ஜீலை 15-ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
முக்கிய வினாக்கள்:
1. பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __________
விடை: பசி + இன்றி
2. காடு+ஆறு என்பதளைச் சேர்த்து எழுதக் கிடைப்பது_______
காட்டாறு
3. படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
படிப்பு + அறிவு
4. _________ தூரத்தில் ஆரம்பப் பள்ளி, _______ தூரத்தில் நடுநிலைப் பள்ளி, _________ தூரத்தில் உயர்நிலைப்பள்ளி இருக்க வேண்டும் என்று காமராசர் திட்டம் வகுத்தார்.
ஒரு மைல், மூன்று மைல், ஐந்து மைல்
Post a Comment