பாடம் - சிலப்பதிகாரம்
இளங்கோவடிகள்
சிலப்பதிகாரத்தின் சிறப்பு
சொல்லும் பொருளும்
- சிலப்பதிகாரம் எனும் காப்பியத்தை எழுதியவர் இளங்கோவடிகள்
- இவரது காலம் - கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
- மரபு - சேர மன்னர் மரபைச் சார்ந்தவர் என்று சிலப்பதிகார பதிகம் கூறுகிறது
சிலப்பதிகாரத்தின் சிறப்பு
- சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று
- தமிழின் முதல் காப்பியம்
- இது முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்று போற்றப்படுகிறது.
- சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று அழைக்கப்படுகிறது.
- திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது.
சொல்லும் பொருளும்
- திங்கள் - நிலவு
- கொங்கு - மகரந்தம்
- அலர் - மலர்தல்
- திகிரி - ஆணைச்சக்கரம்
- பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில்
- மேரு - இமயமலை
- நாமநீர் - அச்சம் தரும் கடல்
- அளி - கருணை
0 Comments