Ads 720 x 90

New Books 6th Standard: Important Notes of Tamil Books (Part - 7)



ஆறாம் வகுப்பு தமிழ் : உரைநடை உலகம்  

பாடம் -  சிறகின் ஓசை 

வலசை போதல்:- பறவைகள் கண்டம்விட்டு கண்டம் சென்று குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்தல்.

பறவைகள் வலசை போதல் பற்றி தமிழ் இலக்கியங்கள் கூறியவை:
1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சத்திமுத்தப்புலவர் " நாராய், நாராய், செங்கால் நாராய்" என்னும் பாடலை எழுதியுள்ளார். இப்பாடலில் உள்ள "தென்திசைக் குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்"  என்னும் அடிகள் பறவைகள் வலசை போதலைப் பற்றிய செய்தியை குறிப்பிடுகின்றன.

ஐரோப்பாவில் இருந்தது தமிழகத்திற்கு வரும் வலசை பறவை - செங்கால் நாரைகள்.

சிட்டுக்குருவி 
  • தற்போது வெகுவாக அழிந்து வரும் பறவை இனம் - சிட்டுக்குருவி 
  • இந்தியா முழுவதும் சிட்டுக்குருவி  காணப்படும் 
  • இமையமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட சிட்டுக்குருவிகள் வாழ்கின்றன.
  • சிட்டுக்குருவியின் ஆயுட்காலம் - 10 முதல் 13 ஆண்டுகள்
  • உலகச் சிட்டுக்குருவிகள் நாள் - மார்ச் 20

இந்தியாவின் பறவை மனிதர் - டாக்டர் சலீம் அலி 
  • பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி டாக்டர் சலீம் அலி.
  • தன் வாழ்நாள் முழுவதும் பறவை பற்றிய ஆராய்ச்சியிலேயே ஈடுபட்டார்.
  • இதனால் டாக்டர் சலீம் அலி  இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்பட்டார்.
  • தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு  - " சிட்டுக்குருவியின் வீழ்ச்சி" (The Fall of Sparrow) என்று பெயரிட்டுள்ளார்.

கப்பல் பறவை 
  • சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை கப்பல் பறவை 
  • தரையிறங்காமல் 400 கிலோ மீட்டர் வரை பறக்கும் தன்மை கொண்டது.
  • சிறப்பு பெயர்: கப்பல் கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது.

ஆர்டிக் ஆலா : உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவை (22000 கிலோ மீட்டர் பயணம் செய்யும்)

ஆர்னித்தாலஜி (Ornithology) - பறவை பற்றிய படிப்பு 

Post a Comment

0 Comments