பாடம் - தமிழ் எழுத்துக்களின் வகை தொகை
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து
1. எழுத்து இலக்கணம்
2. சொல் இலக்கணம்
3. பொருள் இலக்கணம்
4. யாப்பு இலக்கணம்
5. அணி இலக்கணம்
எழுத்து என்பது என்ன?
ஒலி வடிவாக எழுதப்படுவதும் வரி வடிவாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.
உயிர் எழுத்துக்கள் - 12
- குறில் எழுத்துக்கள் - ஐந்து (அ, இ, உ, எ, ஒ)
- நெடில் எழுத்துக்கள் - ஏழு (ஆ, ஈ, ஊ , ஏ, ஐ, ஓ, ஓள)
மாத்திரை என்பது என்ன?
மாத்திரை என்பது கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.
- குறில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 1 மாத்திரை
- நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு - 2 மாத்திரை
மெய் எழுத்துக்கள் - 18
- வல்லினம்
- மெல்லினம்
- இடையினம்
உயிர்மெய் எழுத்துக்கள் - 216
உயிர்மெய் எழுத்துக்களை உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.
ஆய்த எழுத்து - 1
ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் கால அளவு - அரை மாத்திரை
கலைச்சொற்களை அறிதல்
- வலஞ்சுழி - Clock Wise
- இணையம் - Internet
- தேடுபொறி - Search Engine
- இடஞ்சுழி - Anti Clock Wise
- குரல் தேடல் - Voice Search
- தொடுதிரை - Touch Screen.
0 Comments