5/12/2020

Current Affairs in Tamil 12th May 2020 | TNPSC Download PDF

5/12/2020 0
1. இந்த ஆண்டுக்கான உலக (பறவைகள்) வலசை போதல் தினம் எப்பொழுது கடைப்பிடிக்கப்பட்டது?
A. மே 09
B. மே 10
C. மே 11
D. மே 12

கூடுதல் தகவல்:
  • World Migratory Bird Day 2020, 9th May
  • Next year:       Sat, 8 May 2021
  • Last year:        Sat, 11 May 2019

2. பெரியம்மை ஒழிக்கப்பட்ட எத்தனையாவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு  உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) அஞ்சல் நிறுவனம் நினைவு தபால்தலை வெளியிட்டன?
A. 39 வது
B. 40 வது
C. 42 வது
D. 45 வது


3. கீழ்கண்ட எந்த இந்திய தொழில்நுட்ப நிறுவனம் 50 முறை பயன்படுத்தக்கூடிய முகமூடி "என்சாஃப்" ஐ (NSafe) உருவாக்கியுள்ளது?
A. IIT, சென்னை
B. IIT, மும்பை
C. IIT, நியூ டெல்லி
D. IIT, ஹைதராபாத்

கூடுதல் தகவல்:
·    An IIT Delhi startup "Nanosafe Solutions" has launched an antimicrobial and washable face mask "NSafe", which is reusable up to 50 launderings, thus greatly cutting down the cost of use.


4. COVID-19 க்கு சிகிச்சையளிக்க பைட்டோபார்மாசூட்டிகல் & ஃபேவிபிராவிர்’ (‘phytopharmaceutical & favipiravir’ ) என்ற இரண்டு மருந்துகளின் மருத்துவ சோதனைக்கு கீழ்கண்ட எந்த நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது?
A. IIT, Madras
B. DRDO
C. CSIR
D. மேற்கண்ட அனைத்தும்


5. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A. 102-ஆவது
B. 122-ஆவது
C. 104-ஆவது
D. 144-ஆவது


6. பிரமோத் சாவந்த் கீழ்கண்ட எந்த மாநிலத்தின் முதல்வராவார்?
A. திரிபுரா
B. நாகலாந்து
C. கோவா
D. அருணாச்சலப்பிரதேசம்

கூடுதல் தகவல்
·        1947 இல் இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, போர்த்துக்கல் இந்தியாவில் உள்ள தங்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் ஆட்சியுரிமையை திரும்பபெறுவதற்கான இந்தியாவுடனான உடன்படிக்கையை மறுத்தது. இந்திய இராணுவம் 1961 டிசம்பர் 12 இல் மேற்கொண்ட ஆப்ரேஷன் விஜய் என்னும் போர் நடவடிக்கை மூலம் கோவா, டாமன் மற்றும் டையூ ஆகிய இடங்களை கைப்பற்றி இந்தியாவுடன் ஒருங்கிணைத்தது.
·        கோவா உள்ளிட்ட டாமன் மற்றும் டையூ ஆகியவை மத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட இந்திய யூனியன் பிரதேசங்களாகும். 1987 ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டு கோவா இந்தியாவின் 25 வது மாநிலமாக மாற்றப்பட்டது. டாமன் மற்றும் டையூ ஆகியவை யூனியன் பிரதேசங்களாகவே தொடர்கின்றன.


7. தமிழகத்தில் முதன்முறையாக பிளாஸ்மா தானம் எங்கு பெறப்பட்டது?
A. மதுரை
B. சேலம்
C. தூத்துக்குடி
D. சென்னை

கூடுதல் தகவல்:
·  கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களிடம் இருந்து ரத்தத்தை தானமாக பெற்று, அதிலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து புதிதாக பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தும் பட்சத்தில், கொரோனாவை எதிர்க்கும் எதிர்ப்பு ஆற்றல் ரத்தத்தில் உருவாகி எளிதில் குணமடைய வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


8. இந்தியா மற்றும் மத்திய ஆசியாவின் சிறந்த விமான நிலையமாக வாடிக்கையாளர் களால் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள விமான நிலையம் எது?
A. பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையம்
B. மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமானநிலையம்
C. சென்னை சர்வதேச விமானநிலையம்
D. புது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையம்


9. டெட்ரோஸ் அதானோம் கேப்ரியாசெஸி என்பவர் கீழ்கண்ட எந்த நிறுவனத்தின் தலைவராவார்?
A. உலக சுகாதார நிறுவனம்
B. உலக வங்கி
C. ஆசியன் வங்கி
D. ஐக்கிய நாடுகள் சபை


10. உலக செவிலியர் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
A. மே 10
B. மே 11
C. மே 12
D. மே 13

கூடுதல் தகவல்: 
உலகம் முழுவதும் மே 12-ஆம் தேதி உலக செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நவீன செவிலியத்தை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாள் அன்று உலக செவிலியர் தினத்தை உலக செவிலியர் பேரவை கொண்டாடுகிறது.  மக்களின் ஆரோக்கியத்திற்கு செவிலியர் ஆற்றும் பங்கை இந்நாள் குறிக்கிறது.


Current Affairs in Tamil 11th May 2020 | Video 

5/11/2020

TNPSC தேர்வு : பொது முடக்கத்துக்குப்பின் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும்

5/11/2020 0
TNPSC தேர்வு : பொது முடக்கத்துக்குப்பின் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் 


நன்றி: தினமணி நாளிதழ் 

Current Affairs in Tamil 11th May 2020 | TNPSC Download PDF

5/11/2020 0

1. தற்போதைய மக்களவைத் தலைவராக இருப்பவர் யார்?
A. ஓம் பிர்லா
B. சுமித்ரா மகாஜன்
C. தம்பித்துரை
D. மீரா குமார்

2. கரோனாவால் எங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஐ.என்.எஸ்., ஜலஷ்வா என்ற இந்திய கடற்படை கப்பல் சென்று மீட்டுள்ளது?
A. சிங்கப்பூர்
B. மியான்மர்
C. மாலத்தீவு
D. லட்சத்தீவு
  • தெற்காசிய நாடான மாலத்தீவில் மட்டும், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களை மீட்பதற்காக, , இந்திய கடற்படை கப்பல்களை மாலத்தீவுக்கு அனுப்பி, இந்தியர்களை மீட்க முடிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு, 'ஆப்பரேஷன் சமுத்ர சேவா' என பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி மாலத்தீவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக, ஐ.என்.எஸ்., ஜலஷ்வா என்ற இந்திய கடற்படை கப்பல், அந்த நாட்டுதுறைமுகம் சென்றடைந்தது. இதில், முதல் கட்டமாக, சுகாதார அதிகாரிகளுடன், 698 பேர் மீட்கப்பட்டு நேற்று கொச்சி துறைமுகம் வந்தடைந்தது.
  • தலைநகர் : மாலே
  • நாணயம்: மாலத்தீவு ரூஃபியா
  • அதிபர்: இப்ராஹிம் முகமது சோலிஹ்
3. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் யார்?  
A. பிரஜேஷ் மிஸ்ரா
B. சிவசங்கர் மேனன்
C. எம்.கே.நாராயணன்
D. அஜித் தோவல்

4. சர்வதேச நீதிமன்றம் எங்கமைந்துள்ளது?
A. திஹேக்
B. ஜெனிவா
C. பாரிஸ்
D. வியன்னா

கூடுதல் தகவல்:
  • நிறுவப்பட்டது: 26 June 1945
  • மொத்த்த நீதிபதிகள் - 15
  • நெதர்லாந்து நாட்டின் தலைநகரம் - ஆம்ஸ்டர்டாம்
  • பிரதமர்: மார்க் ருட்டே
5. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கரோனா நோயை கண்டறியும் கருவியை கண்டுபிடித்த தேசிய வைராலஜி  நிறுவனம் எங்குள்ளது?
A. சென்னை
B. கொல்கத்தா
C. புணே
D. திருவனந்தபுரம்

6. செல்லிடப்பேசி, ரூபாய் நோட்டுகளில் தீநுண்மியை அழிக்க தானியங்கி கருவியை கண்டுபிடித்த இந்திய நிறுவனம் எது?
A. DRDO
B. ICMR
C. NISCAIR
D. INDR

7.  பியூஸ் கோயல் கீழ்கண்ட எந்தத் துறையின் மத்திய அமைச்சராவார்?
A. விவசாயம்
B. ரயில்வே
C. பாதுகாப்பு
D. சுற்றுலா

8. கரோனா தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்காக 88 இந்திய செவிலியர்களை கீழ்கண்ட எந்த நாட்டிற்காக இந்தியா அனுப்பியுள்ளது?
A. அமெரிக்கா
B. இங்கிலாந்து
C. ஐக்கிய அரபு அமீரகம்
D. மேற்கண்ட அனைத்தும்

9. தேசிய தொழில்நுட்ப தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
A. மே 08
B. மே 09
C. மே 10
D. மே 11
  • தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்ப உலகில் எந்த நாடு அணுசக்தியில் சாதித்துள்ளதோ அதுவே உலகின் பலமிக்க நாடாக கருதப்படும் நிலையுள்ளது. எனவே, மறைந்த முன்னாள் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மற்றும் விஞ்ஞானி சிதம்பரம் மற்றும் குழுவினரின் கடும் முயற்சியில் இந்தியாவின் அணுகுண்டு வெடிப்பு சோதனையானது 1998ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதிதான் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
  • அதன் காரணமாக உலகின்  அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது நாடாக இணைந்தது. மேலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட திரிசூல் ஏவுகணை மற்றும் ஹன்சா-3 என்னும் அதிநவீன விமானம் ஆகியவையும் இதே மே 11ம் தேதிதான் முதல் முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
  • எனவே, மேற்கண்ட காரணங்களுக்காக 1999ம் ஆண்டு முதல் மே 11ம் தேதியானது தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் நாட்டின் தலைநகரான புதுதில்லியில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வழங்குவதும் வழக்கமானது.
10. தற்போது கீழ்கண்ட எந்த நாடு புதிய கொரோனா வைரஸ் ஆன்டிஜென் சோதனைக்கு ஒப்புதல் அளித்தது?
A. இஸ்ரேல்
B. அமெரிக்கா
C. இத்தாலி
D. ஸ்பெயின்

Current Affairs in Tamil 11th May 2020 | Video 

5/10/2020

Current Affairs in Tamil 10th May 2020 | TNPSC Download PDF

5/10/2020 0




1. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஆலோசனை வழங்க யாருடைய தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது?
A. சி.ரங்கராஜன்
B. கே.சி.பந்த்
C. சுப்ரமணியன்
D. மேற்கண்ட அனைவரும் 

2. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதா ரத்தை மீட்டெடுக்க ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
A. 22 பேர்
B. 24 பேர்
C. 26 பேர்
D. 28 பேர்

3. தற்போதைய மத்திய சுகாதார அமைச்சராக இருப்பவர் யார்?
A. அமித்ஷா
B. ராஜ்நாத் சிங்
C. நிர்மலா சீதாராமன்
D. ஹர்ஷ்வர்தன்

4. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, உள்நாட்டு போர் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்' என, ஐ.நா., வில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்புக்கு கீழ்கண்ட எந்த நாடு முட்டுக் கட்டை போட்டுள்ளது?
A. ரஷியா
B. சீனா
C. அமெரிக்கா
D. பிரான்ஸ்

5.  நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் 159-வது பிறந்த நாளையொட்டி அவரை கவுரவிக்கும் விதமாக கீழ்கண்ட எந்த நாட்டில் தெரு ஒன்றிற்கு அவரது பெயரை சூட்டியுள்ளது?
A. அமெரிக்கா
B. இஸ்ரேல்
C. சீனா
D. பங்களாதேஷ் 

6. மத்திய அரசு கூடுதலாக எத்தனை லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளது?
A. ரூ.4.2 லட்சம் கோடி
B. ரூ.5.2 லட்சம் கோடி
C. ரூ.4.8 லட்சம் கோடி
D. ரூ.7.2 லட்சம் கோடி

7. ஹீக்கோ மாஸ் என்பவர் எந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராவார்?
A. அமெரிக்கா
B. ஸ்பெய்ன்
C. இத்தாலி
D. ஜெர்மனி

8. நாட்டின் அந்தியச் செலவாணி கையிருப்பு மே 1-ஆம் தேதியுடன் எத்தனை கோடியாக அதிகரித்துள்ளது?
A. 48,108 கோடி
B. 50,108 கோடி
C. 52,108 கோடி
D. 58,108 கோடி

9. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக உத்தரபிரதேச அரசு அறிமுகப்படுத்திய செயலியின் பெயர் (Mobile App) என்ன?
A. தொழிலாளர் வெளியேற்றம்
B. பிரவாசி ராஹத் மித்ரா
C. குரு ஷத்
D. மேற்கண்ட அனைத்தும் தவறு

10. எஸ் (Yes) வங்கியின் தற்போதைய எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் யார்?
A. ஆரவ் குமார்
B. ரஞ்சித் குமார்
C. பிரசாந்த் குமார்
D. எஸ்.சுப்ரமணியம்

Current Affairs in Tamil 10th May 2020 | Video 

அரசுப் பணியாளர் போட்டித்தேர்வு நடைபெறுமா? (தினமணி செய்தி)

5/10/2020 0
அரசுப் பணியாளர் போட்டித்தேர்வு நடைபெறுமா? (தினமணி செய்தி)


Courtesy: தினமணி நாளிதழ் 

5/09/2020

Current Affairs in Tamil 9th May 2020 | TNPSC Download PDF

5/09/2020 0

1. திபெத்தில் உள்ள புனித தலமான கைலாஷ் -மானசரோவர் செல்வதற்கான லிபுலேக் கணவாய் பகுதியை இணைக்கும் இணைப்புச்சாலை எத்தனை கிலோமீட்டர் தொலைவை கொண்டது?
A. 80 கிலோ மீட்டர்
B. 85 கிலோ மீட்டர்
C. 90 கிலோ மீட்டர்
D. 95 கிலோ மீட்டர்


2. உலக செஞ்சிலுவை நாள் எப்பொழுது அனுசரிக்கப்படுகிறது?
A. மே 05
B. மே 06
C. மே 07
D. மே 08


3. “குளோபல் எனர்ஜி ரிவியூ 2020” என்ற தலைப்பில் சர்வதேச எரிசக்தி முகமை (IEA) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் கார் விற்பனையில் எத்தனை சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது?
A. 20 சதவீதம்
B. 30 சதவீதம்
C. 40 சதவீதம்
D. 50 சதவீதம்


4. வரும் 2 ஆண்டுகளுக்கான இந்தியாவின் சாலை கட்டுமான இலக்கின் மதிப்பு எவ்வளவு?
A. 10 லட்சம் கோடி
B. 15 லட்சம் கோடி
C. 20 லட்சம் கோடி
D. 25 லட்சம் கோடி


5. இராணுவ பொறியியல் சேவையில் (Military Engineering Service) எத்தனை பதவிகளை நீக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளார்?
A. 7,304
B. 8,304
C. 9,304
D. 5,304


6. COVID -19 காரணமாக பொருளாதாரத்தை உறுதிப்படுத்த அதிக முதலீட்டை ஈர்ப்பதற்காக கீழ்கண்ட எந்த இந்திய மாநிலம் தொழிலாளர் சட்டங்களை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க ஆணை பிறப்பித்துள்ளது?
A. தமிழ்நாடு
B. மத்திய பிரதேசம்
C. உத்திர பிரதேசம்
D. கேரளா


7. அசாம் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் யார்?
A. சர்பானந்தா சோனோவால்
B. கான்ராட் கொங்கல் சங்மா
C. ஸ்ரீ தருண் கோகோய்
D. ஸ்ரீ ஹிடேஸ்வர் சைக்கியா


8. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) இந்தியாவின் ‘COVID-19 அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்புகள் தயாரிப்பு திட்டத்திற்காக எத்தனை மில்லியன் டாலர் கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது?
A. 200 மில்லியன் டாலர்
B. 300 மில்லியன் டாலர்
C. 400 மில்லியன் டாலர்
D. 500 மில்லியன் டாலர்


9. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) தலைமையகம் எங்குள்ளது?
A. நியூ டெல்லி
B. பெய்ஜிங்
C. மணிலா
D. டோக்கியோ


10. உலக தலசீமியா தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
A. மே 5
B. மே 6
C. மே 7
D. மே 8


Current Affairs in Tamil 9th May 2020 | Video 

5/08/2020

Current Affairs in Tamil 8th May 2020 | TNPSC

5/08/2020 0

1. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட விஷவாயுவின் பெயர் என்ன?
a)  கார்பன் மோனாக்சைடு
b)  கார்பன் டை ஆக்ஸைடு
c)   ஸ்டைரீன் வாயு
d)  கந்தக வாயு  

2.  தமிழ் மொழிக்கு ஒப்பிலக்கணம் தந்த ராபர்ட் கால்டுவேலின் எத்தனையாவது பிறந்த நாள் அனுசரிக்கப்பட்டது?
a)  206 - ஆவது
b)  204 - ஆவது
c)   208 - ஆவது
d)  205 - ஆவது 

3. தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியரின் எத்தனையாவது பிறந்த நாள் தமிழ் வளர்ச்சி துறையால் சிறப்பாக கொண்டாடப்பட்டது?
a)  2,728 - ஆவது
b)  2,729 - ஆவது
c)  2,730 - ஆவது
d)  2,731 - ஆவது
  
4.  சார்லஸ் மிஷேல் கீழ்கண்ட எந்த சர்வதேச அமைப்பின் தலைவராவார்?
a)  ஐரோப்பிய கவுன்சில்
b)  உலக வங்கி
c)   பன்னாட்டு நிதியகம்
d)  ஐக்கிய நாடுகள் சபை 

5. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரின் கீழ்கண்ட எந்த பகுதிகள் இந்திய வானிலை மையத்தின் வரம்பில் கொண்டுவரப்பட்டுள்ளன?
a)  கில்ஜித் -பல்டிஸ்தான்
b)  முஷாபராபாத்
c)   பலுசிஸ்தான்
d)  a மற்றும் b 

6. மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 9 மாத காலத்தில் எத்தனை கோடி குழந்தைகள் இந்தியாவில் பிறக்க வாய்ப்பிருப்பதாக யுனிசெஃப் அறிவித்துள்ளது?
a)  1.35 கோடி
b)  64 லட்சம்
c)   2 கோடி
d)  50 லட்சம் 

7. உலக அன்னையர் தினம் கீழ்கண்ட எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?
a)  மே 09
b)  மே 10
c)   மே 11
d)  மே 12 

8. பாராளுமன்றத்தின் பொது கணக்குக் குழுவின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
a)  ராகுல்காந்தி
b)  ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
c)   ராம சுப்ரமணியன்
d)  எஸ். கந்தசாமி 

9. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டிஎஸ்டி) வழங்கிய நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 2020 ஆம் ஆண்டு இளம் தொழில் விருதைப் பெற்ற (Young Career Award 2020) ஐஐடி பேராசிரியர் யார்?
a)  அஜித் கே. சதுர்வேதி
b)  நிதின் ராமன்
c)   செளரப் லோதா
d)  சங்கீதா என். பாட்டியா 

10. ‘விஜயந்த் அட் கார்கில்: தி கார்கில் ஹீரோவின் வாழ்க்கை(‘Vijyant at Kargil: The Life of a Kargil Hero’) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
a)  வி.என்.தாபர்
b)  நேஹா திவேதி
c)   எல். விஜய் கேல்கர்
d)  a மற்றும் b

Current Affairs in Tamil 8th May 2020 | Video 


5/07/2020

Current Affairs in Tamil 7th May 2020 | TNPSC

5/07/2020 0
1. அத்திக்கடவு -அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் கீழ்கண்ட எந்த மாவட்டங்களுக்கு பயனளிக்கும்?
A. கோவை
B. ஈரோடு
C, திருப்பூர்
D. மேற்கண்ட அனைத்தும் 

கூடுதல் தகவல்: 60 ஆண்டு கனவான, அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம், 1,652 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.

2. பாகிஸ்தான் விமான படையில், முதன் முதலாக சேர்க்கப்பட்ட ஹிந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் யார்?
A. முகுல் ராகவன்
B. ராகுல் தகவ் 
C. இந்திரா ஜித்
D. ராகுல் சட்டர்ஜி 

3. தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ல் இருந்து _______ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
A. 59 வயது
B. 60 வயது
C. 62 வயது
D. 65 வயது

4. உலக தடகள தினம் கீழ்கண்ட எந்த நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது?
A. மே 05
B. மே 06
C. மே 07
D. மே 08

5. தற்போதைய இந்தியத் தலைமை பொருளாதார ஆலோசகராக இருப்பவர் யார்?
A. கே.வி.சுப்ரமணியன் 
B. எஸ்.ராதா கிருஷ்ணன் 
C. சி.ரங்கராஜன் 
D. வி.ஜெய்சங்கர் 

6. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதி ஆண்டில் எத்தனை சதவீத வளர்ச்சியுடன் முடிவடையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது?
A. 2 சதவீதம் 
B. 4 சதவீதம் 
C. 5 சதவீதம் 
D. 6 சதவீதம் 

7. போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள 2020-ம் ஆண்டிற்கான பணக்கார இந்தியர்  பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் யார்?
A. ராதாகிருஷ்ணன் தமனி
B. ஷிவ் நாடார்
C. உதய் கோட்டாக்
D. முகேஷ் அம்பானி 

8. கீழ்க்கண்ட எந்த ஐ.ஐ.டி. இந்தியாவின் முதல் கோவிட் -19 சோதனை பேருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
A. சென்னை 
B. மும்பை 
C. நியூ டெல்லி 
D. ஹைதராபாத் 

9. 2020 ஆம் ஆண்டு புலிட்சர் விருதை வென்ற இந்திய பத்திரிகையாளர் யார்?
A. முக்தர் கான்
B. யாசின் தர்
C. சன்னி ஆனந்த்
D. மேற்கண்ட அனைவரும் 

கூடுதல் தகவல்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஊரடங்கு இருந்த நிலையில் அங்கு நடந்த காட்சிகளை படமாக்கிய அசோசியேட் பத்திரிக்கையைச் சேர்ந்த முக்தர் கான், யாசின் தர், சன்னி ஆனந்த் ஆகிய மூவர் புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

10. பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்படும் நாள் எது?
A. மே 01
B. மே 03
C. மே 05
D. மே 07

Current Affairs in Tamil 7th May 2020 | Video