1. தற்போதைய மக்களவைத் தலைவராக இருப்பவர் யார்?
A. ஓம் பிர்லா
B. சுமித்ரா மகாஜன்
C. தம்பித்துரை
D. மீரா குமார்
2. கரோனாவால் எங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக ஐ.என்.எஸ்., ஜலஷ்வா என்ற இந்திய கடற்படை கப்பல் சென்று மீட்டுள்ளது?
A. சிங்கப்பூர்
B. மியான்மர்
C. மாலத்தீவு
D. லட்சத்தீவு
- தெற்காசிய நாடான மாலத்தீவில் மட்டும், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வசிக்கின்றனர். இவர்களை மீட்பதற்காக, , இந்திய கடற்படை கப்பல்களை மாலத்தீவுக்கு அனுப்பி, இந்தியர்களை மீட்க முடிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு, 'ஆப்பரேஷன் சமுத்ர சேவா' என பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி மாலத்தீவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக, ஐ.என்.எஸ்., ஜலஷ்வா என்ற இந்திய கடற்படை கப்பல், அந்த நாட்டுதுறைமுகம் சென்றடைந்தது. இதில், முதல் கட்டமாக, சுகாதார அதிகாரிகளுடன், 698 பேர் மீட்கப்பட்டு நேற்று கொச்சி துறைமுகம் வந்தடைந்தது.
- தலைநகர் : மாலே
- நாணயம்: மாலத்தீவு ரூஃபியா
- அதிபர்: இப்ராஹிம் முகமது சோலிஹ்
3. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருப்பவர் யார்?
A. பிரஜேஷ் மிஸ்ரா
B. சிவசங்கர் மேனன்
C. எம்.கே.நாராயணன்
D. அஜித் தோவல்
4. சர்வதேச நீதிமன்றம் எங்கமைந்துள்ளது?
A. திஹேக்
B. ஜெனிவா
C. பாரிஸ்
D. வியன்னா
கூடுதல் தகவல்:
- நிறுவப்பட்டது: 26 June 1945
- மொத்த்த நீதிபதிகள் - 15
- நெதர்லாந்து நாட்டின் தலைநகரம் - ஆம்ஸ்டர்டாம்
- பிரதமர்: மார்க் ருட்டே
5. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கரோனா நோயை கண்டறியும் கருவியை கண்டுபிடித்த தேசிய வைராலஜி நிறுவனம் எங்குள்ளது?
A. சென்னை
B. கொல்கத்தா
C. புணே
D. திருவனந்தபுரம்
6. செல்லிடப்பேசி, ரூபாய் நோட்டுகளில் தீநுண்மியை அழிக்க தானியங்கி கருவியை கண்டுபிடித்த இந்திய நிறுவனம் எது?
A. DRDO
B. ICMR
C. NISCAIR
D. INDR
7. பியூஸ் கோயல் கீழ்கண்ட எந்தத் துறையின் மத்திய அமைச்சராவார்?
A. விவசாயம்
B. ரயில்வே
C. பாதுகாப்பு
D. சுற்றுலா
8. கரோனா தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்காக 88 இந்திய செவிலியர்களை கீழ்கண்ட எந்த நாட்டிற்காக இந்தியா அனுப்பியுள்ளது?
A. அமெரிக்கா
B. இங்கிலாந்து
C. ஐக்கிய அரபு அமீரகம்
D. மேற்கண்ட அனைத்தும்
9. தேசிய தொழில்நுட்ப தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
A. மே 08
B. மே 09
C. மே 10
D. மே 11
- தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்ப உலகில் எந்த நாடு அணுசக்தியில் சாதித்துள்ளதோ அதுவே உலகின் பலமிக்க நாடாக கருதப்படும் நிலையுள்ளது. எனவே, மறைந்த முன்னாள் அணு விஞ்ஞானி அப்துல் கலாம் மற்றும் விஞ்ஞானி சிதம்பரம் மற்றும் குழுவினரின் கடும் முயற்சியில் இந்தியாவின் அணுகுண்டு வெடிப்பு சோதனையானது 1998ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதிதான் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
- அதன் காரணமாக உலகின் அணுஆயுத நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது நாடாக இணைந்தது. மேலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட திரிசூல் ஏவுகணை மற்றும் ஹன்சா-3 என்னும் அதிநவீன விமானம் ஆகியவையும் இதே மே 11ம் தேதிதான் முதல் முறையாக வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- எனவே, மேற்கண்ட காரணங்களுக்காக 1999ம் ஆண்டு முதல் மே 11ம் தேதியானது தேசிய தொழில்நுட்ப தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் நாட்டின் தலைநகரான புதுதில்லியில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வழங்குவதும் வழக்கமானது.
10. தற்போது கீழ்கண்ட எந்த நாடு புதிய கொரோனா வைரஸ் ஆன்டிஜென் சோதனைக்கு ஒப்புதல் அளித்தது?
A. இஸ்ரேல்
B. அமெரிக்கா
C. இத்தாலி
D. ஸ்பெயின்
Current Affairs in Tamil 11th May 2020 | Video
Post a Comment