8/13/2024

TNPSC Combined Technical Services Examination (Diploma / ITI Level) Notification 2024. Total Vacancies: 861 Posts

8/13/2024 0
TNPSC Combined Technical Services Examination (Diploma / ITI Level)  Notification 2024. Total Vacancies:  861 Posts
Tamil Nadu Public Service Commission
Government of Tamil Nadu
Chennai, Tamilnadu.

Advertisement No.692 
Notification No.11/2024   Date: 13.08.2024 

Total Vacancies:  861 Posts

Combined Technical Services Examination (Diploma / ITI Level) 

Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Diploma / ITI Level).
 
 Educational, Technical Qualification and Experience: Refer Notification

Vacancy Details

Name of the Posts: 
1. Assistant Tester  - 02 Posts
2. Assistant Training Officer (Stenography - English)(Category-1) - 03 Posts
3. Planning Assistant Grade-B  - 03 Posts
4. Motor Vehicle Inspector Grade II  - 45 Posts
5. Draughtsman, Grade-III  - 05 Posts
6. Hostel Superintendent cum Physical Training Officer - 02 Posts
7. Junior Draughting Officer - 55 Posts
8. Junior Draughting Officer -  Posts
9. Junior Draughting Officer - 39 Posts
10. Junior Technical Assistant - 02 Posts
11. Special Overseer - 22 Posts
12. Surveyor - 15 Posts
13. Technical Assistant - 10 Posts
14. Assistant Agricultural Officer - 25 Posts
15. Supervisor (Weaving) - 04 Posts
16. Technical Assistant - 15 Posts
17. Executive (Lab) 3 - 09 Posts 
18. Technician (Auto Mechanic) - 02 Posts
19. Technician (Boiler) - 08 Posts
20. Technician (Electrical) - 11 Posts
21. Technician (Lab) - 17 Posts
22. Technician (Operation) - 35 Posts
23. Technician (Refrigeration) - 04 Posts
24. Technician (Tyre) - 01 Post
25. Technician (Welding) - 01 Post
26. Draftsman - 142 Posts
27. Field Surveyor - 299 Posts
28. Surveyor-cumAssistant Draughtsman - 42 Posts
29. Technical Assistant - 10 Posts

Total Vacancies:  861 Posts

How to apply: Interested and Eligible candidates should apply through Online Only Click Here Online Application 

Important Dates:
  • Date of Notification - 13.08.2024
  • Last Date to Apply Online: 11.09.2024 11.59 pm
  • Date and time of preliminary examination: 15.09.2024 12.01 am to 17.09.2024 11.59 pm
Date and Time of Examination 
  • Paper - I: Tamil Eligibility Test, General Studies and Aptitude and Mental Ability Test: 09.11.2024 09.30 am to 12.30 pm
  • Paper - II: Subject Paper - 11.11.2024 to 14.11.2024
Click Here Notification and Syllabus Download as PDF: Click Here

Click Here Online Application
=============================================
TNPSC Previous Questions: Click Here
How to Pass TNPSC Exams: Click Here - 11 Steps to Clear TNPSC Exams
Dinamani TNPSC Model Questions
=============================================

8/07/2024

TNPSC, UPSC Current Affairs Tamil and English - 2024

8/07/2024 0
TNPSC, UPSC Current Affairs Tamil and English - 2024
வங்க தேச இடைக்கால அரசின் ஆலோசகர் பொறுப்பேற்பு
  • வங்க தேசத்தின் இடைக்கால அரசின் ஆலோசகர் ஆகஸ்ட் 8, 2024 அன்று பொறுப்பேற்கிறார். இந்த நிகழ்வு அரசியல் மற்றும் நிர்வாகத்தில் முக்கியமான மாற்றங்களை சுட்டிக்காட்டும்.
சந்திரயான்-3 திட்ட விஞ்ஞானிகளுக்கு விருது அறிவிப்பு
  1. தமிழகத்தின் பி.வீரமுத்துவேல் தலைமையிலான சந்திரயான்-3 திட்டக்குழுவில் இடம்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் 33 பேருக்கு ராஷ்ட்ரீய விக்யான் புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரயான்-3 லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதால் இந்தியா பெருமை பெற்றது.
Advisor to Bangladesh's Interim Government:
  • An advisor to Bangladesh's interim government will take office on August 8, 2024.
  • This event signifies potential significant changes in politics and administration.
Awards for Tamil Nadu Scientists of Chandrayaan-3:
  • Central government announced the Rashtriya Vigyan Puraskar awards for 33 scientists and engineers of the Chandrayaan-3 mission.
  • P. Veeramuthuvel led the Chandrayaan-3 team, which successfully landed a rover on the moon's south pole last year.This achievement made India the first country to reach the moon's south pole.

6/21/2024

Junior Professional Assistant (Library) University of Hyderabad.

6/21/2024 0
Junior Professional Assistant (Library) University of Hyderabad.
UNIVERSITY OF HYDERABAD
(A Central University established in 1974 by an Act of Parliament)
P.O. Central University, Prof. C.R. Rao Road, Gachibowli Hyderabad – 500 046, Telangana State, India.


Employment Notification No. UH/Rectt./NT/2024–03 dated 20/06/2024

Vacancy Details

Name of the Post: Junior Professional Assistant

No. of Posts: 01 (OBC)

Age Limit: Not exceeding 32 yrs.

Pay Matrix:  Pay Level–5 (Rs.29,200–92,300)

Qualification: 

Essential: 
  • Master’s Degree in Library Science and Information Science from any recognized University/Institution. OR 
  • Bachelor’s Degree in Library/ Library and Information Science from a recognized Institute/ University with two (2) years relevant experience in a University/ Research Establishment / Central / State Govt./ PSU Autonomous Institutions.
Notification Link: Click Here

Online Application Form Application Link:  Click Here

Important Dates:
  • Activation of online link for submission of application 21/06/2024 3. 
  • Last date for submission of online applications and payment of fee through the above portal. 19/07/2024 till 05:30 PM.

6/09/2024

TNPSC Group 4 Answer Keys 2024 || Download PDF

6/09/2024 0
TNPSC Group 4 Answer Keys 2024 || Download PDF

5/28/2024

TNPSC Group 4 Hall Ticket Download - 2024

5/28/2024 0

TNPSC Group 4 Exam Hall Ticket Download - 2024: TNPSC Group 4 தேர்வுக்கான Hall Ticket (நுழைவு சீட்டு) வெளியிடப்பட்டுள்ளது. TNPSC Group 4 தேர்வு June 09, 2024 அன்று நடைபெற உள்ளது. TNPSC Group 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்து Hall Ticket - ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


அனைவரும் தேர்வில் வெற்றி பெற TNPSC MASTER வாழ்த்துகிறது.




4/17/2024

இஸ்ரோ ராக்கெட் எஞ்சினில் புதிய இலகுரக கட்டமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது!

4/17/2024 0
 இஸ்ரோ ராக்கெட் எஞ்சினில் புதிய இலகுரக கட்டமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது!
இஸ்ரோ ராக்கெட் எஞ்சினில் புதிய இலகுரக கட்டமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது!
    இஸ்ரோ ராக்கெட் எஞ்சினில் உந்துவிசைக்கு பயன்படுத்தப்படும் நாசில் (Nozzle) எனப்படும் கட்டமைப்பை மிகவும் இலகுவான எடையில் உருவாக்கி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ராக்கெட்டின் நான்காம் நிலையில் (PS4) அதிக எடையுள்ள ஆய்வுக் கருவிகளை எடுத்துச் செல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய நாசில் கட்டமைப்பு கார்பன்-கார்பன் அமைப்பைக் கொண்டுள்ளது, இது பாரம்பரிய கொலம்பியம் அலாய் நாசில்களை விட 67% வரை குறைவான எடையைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக:

  • ராக்கெட்டின் உந்துவிசை திறன் அதிகரிக்கும்
  • எரிபொருள் திறன் மேம்படும்
  • PS4 நிலையில் 15 கிலோ வரை கூடுதல் எடையுள்ள ஆய்வுக் கருவிகளை ஏற்றிச் செல்ல முடியும்
    புதிய நாசில் கட்டமைப்பு திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் (VSSC) வடிவமைக்கப்பட்டு, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

    இந்த புதிய தொழில்நுட்பம் இந்தியாவின் விண்வெளி ஆய்வு திறனை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய படியாகும், மேலும் எதிர்கால விண்வெளி ஆய்வுக் காரியங்களுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Group 4 General Tamil Important Questions and Answers published by Dinamani Part- 5

4/17/2024 0
Dinamani Newspaper Published important question of TNPSC (Tamil Nadu Public  Service Commission) Exam.  

TNPSC குரூப் 4, குரூப் 2 தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடக் குறிப்புகள். இதைத் படித்து நடைபெற இருக்கும் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்.

நன்றி: தினமணி நாளிதழ் 

நான்மணிக்கடிகை

நூல்குறிப்பு:
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நான்மணிக்கடிகை.
  • கடிகை என்றால் அணுகலன்(நகை)
  • நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.
  • ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன.
ஆசிரியர் குறிப்பு:
  • பெயர்: விளம்பிநாகனார்.
  • விளம்பி என்பது ஊர்பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
உரைநடை: ஆராரோ ஆராரோ
  • தாளில் எழுதாமல் பிறர் பாடுவதை கேட்டு பாடுவது நாட்டுப்புற பாடல்
  • எழுதப்படாத வாய்வழியாக பரவுகிற கதைகள் வாய்மொழி இலக்கியம் என்பர்.
  • கானாப் பாடல், கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் பாடும் பாடலும் நாட்டுப்புற பாடலே.
  • நாட்டுப்புற பாடலை பல வகைகளாக பிரிப்பர்.
  • தாலாட்டு பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், சடங்குப் பாடல்கள், கொண்டாடப் பாடல்கள், வழிப்பாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள்.
சொற்பொருள்
  • மடவாள் - பெண்
  • தகைசால் - பண்பில் சிறந்த
  • உணர்வு - நல்லெண்ணம்
  • புகழ்சால் - புகழைத் தரும்
  • காதல் புதல்வர் - அன்பு மக்கள்
  • மனக்கினிய - மனத்துக்கு இனிய
  • ஓதின் - எதுவென்று சொல்லும்போது
துணைப்பாடம்: வீரச்சிறுவன்
  • ஜானகிமணாளன் எழுதிய அறிவை வளர்க்கும் அற்புத கதைகள் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட சிறுகதை இது.
  • பதினான்கு வயதுள்ள சிறுவன் குதிரையை அடக்கினான். அந்த சிறுவன் விவேகானந்தர்.
  • விவேகானந்தரின் இயற்பெயர் - நரேந்திரதத்.
  • புரட்சி துறவி - வள்ளலார்.
  • வீரத் துறவி - விவேகானந்தர்
இலக்கணமும் மொழித்திறனும்
  • தமிழ்ச்சொற்கள் நான்கு வகைப்படும். அவை: பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல். இவற்றில் முதன்மையானவை பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும்.
Courtesy: Dinamani
நன்றி: தினமணி நாளிதழ்

குறிப்பு:
1. வாசகர்கள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை deenapmn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.

4/06/2024

Library and Information Assistant Post in AIIMS (Andhra Pradesh)

4/06/2024 0
Library and Information Assistant Post in AIIMS (Andhra Pradesh)
All India Institute of Medical Sciences Madurai
Mangalagiri (Andhra Pradesh)
Mangalagiri - 522503.

AIIMS/MG/Admin/Recruitment /03/Non Faculty/2024/01 Date: 15.03.2024

Online applications are invited from eligible Indian citizens for the posts of various non faculty Group-A, Group-B and Group-C posts on DIRECT RECRUITMENT BASIS in All India Institute of Medical Sciences, Mangalagiri, AP. 

Name of the Post: Library and Information Assistant - 01 Post  Salary: Pay of Rs.35,400/- in Level 6 

Qualification: 
Essential: 1. Bachelor's degree in Library Science or Library and Information Service from a recognised University/Institute OR B.Sc. Degree or equivalent from a recognized University and Bachelor Degree of Post Graduate Diploma or equivalent in Library Science from a recognized University or Institute With 

2. 2 years Professional experience in a Library of under Central/State/ Autonomous/Statutory Organization/PSU/ University or recognized research and education institution. 

3. Ability to use computers-Hand on experience in office application, spread sheets and presentations 

Desirable : Diploma in Computer Application from a recognized University or Institute

For more details refer Notification PDF Link: Click Here





4/04/2024

TNPSC Group 4 General Tamil Important Questions and Answers published by Dinamani Part- 4

4/04/2024 0

Dinamani Newspaper Published important question of TNPSC (Tamil Nadu Public  Service Commission) Exam.  


TNPSC குரூப் 4, குரூப் 2 தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடக் குறிப்புகள். இதைத் படித்து நடைபெற இருக்கும் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்.

நன்றி: தினமணி நாளிதழ் 

பறவைகள் பலவிதம்
  • திருவெல்வேலி மாவட்டம் கூத்தனகுளத்தில் மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை, ஏனென்றால் அங்கு கூடும் பறவைகள் பயந்து விடாமல் இருக்கவே.
  • உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்திற்குப் பெயர் - பறவைகள் சரணாலயம்.
  • அதிக பணி அல்லது அதிக வெயிலின் காரணமாக புறவைகள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு பறந்து செல்வது - வலசை போதல்
  • பறவைகள் நமக்கு பருவகால மாற்றத்தை உணர்த்துகின்றன.
  • ஒரு நாட்டில் பழம் தின்றுவிட்டு, மற்றொரு நாட்டில் எச்சமிடுவதன் காரணமாக அங்கு மரம், செடி, கொடி போன்றவை உருவாக பறவைகள் காரணமாகின்றன.
  • வயல்வெளிகளில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், வண்டுகளை தின்று விவசாயிகளுக்கு உதவுகின்றன.
பறவைகள் ஐந்து வகையாக பிரிப்பர்.
1. தென்னை குடித்து வாழும் பறவைகள்
2. பழத்தை உண்டு வாழும் பறவைகள்
3. பூச்சியை தின்று வாழும் பறவைகள்
4. வேட்டையாடி உண்ணும் பறவைகள்
5. இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்.
  • பூநாரையானது நிலத்திலும் அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும் வாழக்கூடியது. கடும் வெப்பத்தையும் எதிர்கொள்ளும் தன்மை கொண்டது.
  • சமவெளி மரங்களில் வாழும் சில பறவைகள்: மஞ்சள் சிட்டு, செங்காகம், கடலைக்குயில், பனங்காடை, தூக்கணாங்குருவி.
  • நீர்நிலையில் வாழும் சில பறவைகள்: கொக்கு, தாழைக்கோழி, பவளக் காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து.
  • மலைகளில் வாழும் சில பறவைகள்: இருவாச்சி, செந்தாலைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைகாலி, பொன்முதுகு, மரங்கொத்தி, சின்னக்குறுவான், கொண்டாய் உலவரான், இராசாளிப் பருந்து, பூமன் ஆந்தை.
  • தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயம் = 13
  • பருவ காலத்தை மனிதர்களுக்கு உணர்த்துபவை - பறவைகள்
  • உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளை பரப்புவது - பறவைகள்.
  • நம் நாட்டில் சுமார் 2400 வகைப்பறவைகள் உள்ளன.
  • பறவைகள் பருவ நிலை மாற்றத்தால் இடம் பெயருவதை - வலசை போதல் என அழைப்பர்.
  • வெயிலும், மழையும், பனியும் மாறி மாறி வருவதை - பருவநிலை மாற்றம் என அழைப்பர்.
  • அதிக பனிப்பொழியும் மாதம் - மார்கழி மாதம்.
  • அதிகம் வெயில் அடிக்கும் காலத்தை - கோடைக்காலம் என அழைப்பர்.
  • நிலத்திலும், அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்; கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை - பூ தாமரை.
தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்:
  1. வேடந்தாங்கல்
  2. கரிக்கிளி(காஞ்சிபுரம் மாவட்டம்)
  3. கஞ்சிரால்குளம்
  4. சித்திரஸ்குடி
  5. மேலக் செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்)
  6. பழவேற்காடு (திருவள்ளுவர் மாவட்டம்)
  7. உதயமார்த்தாண்டபுரம்(திருவாரூர் மாவட்டம்)
  8. வடுவூர் (தஞ்சை மாவட்டம்)
  9. கரைவெட்டி(பெரம்பலூர் மாவட்டம்)
  10. வேட்டங்குடி(சிவகங்கை மாவட்டம்)
  11. வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்)
  12. கூந்தன்குளம் (திருவெல்வேலி மாவட்டம்)
  13. கோடியக்கரை(நாகப்பட்டினம் மாவட்டம்)
தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன் குளம்.

பாம்புகள் ஊர்வன வகையை சார்ந்தவை.
  • சில பாம்புகள் குட்டிபோடும், பெரும்பாலானவை குஞ்சி பொரிப்பன.
  • பாம்பின் உலகில் மனித இனம் தோன்றுவதற்கு பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.
  • உலகம் முழுவதும் 2750 வகை பாம்புகள் உள்ளன. இந்தியாவில் 244 வகை பாம்புகள் உள்ளன.
  • 52 வகை பாம்புகளில் மட்டுமே நச்சுத்தன்மை வாய்ந்தவை.
  • பாம்பு பால் குடிக்காது. அவை விழுங்குகிற எலி, தவளைகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தே அதற்கு போதும்.
  • பாம்பானது, தான் பிடிக்கும் இரையை கொள்ளவும், செரிமானத்திற்காகவும் தான் தன்னுடைய பற்களில் நஞ்சு வைத்துள்ளது.
  • பாம்புகளுக்கு காது கேட்காது. அவை தரையில் ஏற்படும் அடிருகளை உணர்ந்து செயல்படும்.
  • வயலிலுள்ள எலிகளை பாம்பு அழிப்பதால், பாம்புகளை விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படும்.
  • பாம்புக்கு காற்றில் வரும் ஓசைகளை கேட்க இயலாது. தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து, அதன்மூலம் பாம்பு முன்னெச்சரிக்கையாக இருக்கிறது.
  • பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தை அசையாமல் வைத்து, கட்டுபோட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
  • இந்தியாவில் உள்ள ராஜநாகம் தான் உலகிலேயே மிக நீளமான பாம்பு. 15 அடி நீளமுடையது. கூடுகட்டி வாழும் ஒரே வகை பாம்பு இது. ராஜநாகம் மற்ற பாம்புகளையும் உணவாக்கி கொள்ளும்.
  • ஒரு பாம்பை கொன்றால், அதன் இணைபாம்பு பழி வாங்கும் என்று சொல்வதுண்டு. இது உண்மையன்று, கொள்ளப்பட்ட ஒருவகை வாசனைத் திரவியம் மற்றப் பாம்புகளையும் அந்த இடம் நோக்கி வரவழைக்கிறது. பழிவாங்க, பாம்புகள் வருவதில்லை.
  • பாம்பு தன் நாக்கை அடிகடி வெளியே நீட்டும். அவ்வாறு செய்வதால் சுற்றுபுரத்தின் வாசனையை அறிந்து கொள்ளத் தான் அவ்வாறு செய்கிறது.
  • நல்ல பாம்பின் நஞ்சு கோப்ராக்சின் (Cobrozincobrozin) எனும் வலி நீக்கும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
  • இந்திய அரசு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி, தோலுக்காகப் பாம்புகள் கொள்ளபடுவதைத் தடுக்க சட்டம் நிறைவேற்றி உள்ளது.
  • பாம்புகளின் பற்கள் உள்நோக்கி வளைந்திருக்கும். இரையைப் பிடித்தால் தப்பவிடாது. பாம்புகள் இரையை மென்று தின்பதில்லை, அப்படியே விழுங்குகின்றன.
இலக்கணமும் மொழித்திறனும்
  • தமிழில் உள்ள முதல் எழுத்துகள் மொத்தம் - முப்பது.அவை:
  • உயிர் எழுத்துக்கள் - பன்னிரண்டு
  • மெய் எழுத்துக்கள் - பதினெட்டு
  • உயிரும் மெய்யும் சேர்ந்து 216 உயிர்மெய் எழுத்துகள்ளை உருவாக்குகின்றன.
  • அன்றாடப் பேச்சில் பயன்படும் உயிர்மெய் எழுத்துகள் - கி, சி, பி, டி, தி, மி
  • அ, இ, உ, எ, ஒ - ஆகிய ஐந்தும் குறில் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களோடு சேரும்போது உயிர்மெய்க்குறில் எழுத்துக்கள் உண்டாகின்றன.
  • ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஓள - ஆகிய நெடில் எழுத்துக்கள் மெய் எழுத்துக்களோடு சேரும்போது உயிர்மெய்நெடில் எழுத்துக்கள் உண்டாகின்றன.
  • வண்மை - கொடைத் தன்மை
  • வன்மை - கொடுமை
  • மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தந்தம்
  • ஆறுகள் மாசு அடையக் காரணம் - தொழிற்சாலைக் கழுவு
  • மழை குறையக் காரணம் - காடுகள் அழிப்பு
  • உலகம் வெப்பமடையக் காரணம் - வண்டிகளின் புகை
Courtesy: Dinamani
நன்றி: தினமணி நாளிதழ்

குறிப்பு:
1. வாசகர்கள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை deenapmn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.

4/01/2024

TNPSC Group 4 General Tamil Important Questions and Answers published by Dinamani Part- 3

4/01/2024 0

Dinamani Newspaper Published important question of TNPSC (Tamil Nadu Public  Service Commission) Exam.  


TNPSC குரூப் 4, குரூப் 2 தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடக் குறிப்புகள். இதைத் படித்து நடைபெற இருக்கும் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்.

நன்றி: தினமணி நாளிதழ் 

இலக்கணமும் மொழித்திறனும்
  • நாம் பேசும் மொழி மற்றும் எழுதும் மொழியை முறையாகப் புரிந்து கொள்வதற்கு தேவைப்படுவது - இலக்கணம்.
  • அ - எழுத்து குறிப்பது மனிதனை.
  • |- என்ற முதுகுக்கோடு குறிப்பது - பழங்காலத்தில் வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக்கூட்டைக் குறிக்கிறது.
  • மனிதர்களை போன்று இனமும் நட்பும் கொண்டது - எழுத்துக்கள்.
  • ங் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து க. எ.கா: சிங்கம், தங்கை.
  • ஞ் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து ச. எ.கா: மஞ்சள், அஞ்சாதே
  • ண்ட, ந்த, ம்ப, ன்ற என்னும் எழுத்துகள் பெரும்பாலும் சேர்ந்தே வரும். எசகா: பண்டம், பந்தல், கம்பன், தென்றல்.
  • நட்பு எழுத்துக்களை இன எழுத்துகள் என இலக்கணம் கூறுகிறது.
  • க், ச்,த், ப் ஆகிய மெய்யெழுத்துக்கள் தன் எழுத்துகளுடன் மட்டும் சேரும். எ.கா: பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.
  • தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துகளுடன் சேரும் மெய்யெழுத்து - ர், ழ். எ.கா: சார்பு, வாழ்க்கை
  • முயற்சி திருவினை ஆக்கும் எனக் கூறியவர் - திருவள்ளுவர்.
  • கவலையை மறக்க உரிய வழி - ஏதாவதொரு வேலையில் ஈடுபடுவது.
  • எண்பத்தேழு வயதுவரை உ.வே.சா. தமிழுக்காக உழைத்தார். முயற்சிக்கு வயது வரம்பு கிடையாது.
  • முயற்சிக்கு நோய் தடை இல்லை.
நாலடியார்
  • சொற்பொருள்:
  • அணியார் = நெருங்கி இருப்பவர்
  • என்னாம் = என்ன பயன்?
  • சேய் = தூரம்
  • செய் = வயல்
  • அனையர் = போன்றோர்
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நாலடியார்.
  • நானூறு பாடல்களைக் கொண்டது - நாலடியார்.
  • அறக்கருத்துக்களைக் கூறுவது - நாலடியார்.
  • நாலடி நானூறு என்ற சிறப்பு பெயர் உடையது - நாலடியார்.
  • சமண முனிவர்கள் பலர் பாடிய தொகுப்பு நூல் - நாலடியார்.
பதினெண்கீழ்க்கணக்கு:
  • சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக மொத்தம் பதினொட்டு நூல்கள். - இவற்றை மேல்கணக்கு நூல்கள் எனக் கூறுவர்.
  • சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு - பதினெண்கீழ்க்கணக்கு
  • பதினெண் என்பது - பதினெட்டு என்று பொருள்.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை - அறநூல்களே.
  • கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறப்படும் நூல் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.
  • நன்மை செய்வோர் வாய்க்காலைப் போன்றவர்.
சொற்பொருள்:
  • வண்மை = கொடை (வன்மை = கொடுமை)
  • உழுபடை = விவசாய கருவிகள்
  • தமிழ்மகள் = ஒளவையார்.
  • கோணி - சாக்கு
  • தலை சாயுதல் - ஓய்ந்து படுத்தல்
  • ஞாலம் - உலகம்
  • உவந்து செய்வோம் - விரும்பிச் செய்வோம்
  • நெறியினின்று - அறநெறியில் நின்று
  • சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் - ஒளவையார்.
  • தமிழ்மகள் எனபடுபவர் - ஒளவையார்.
  • தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர் - பாட்டுக்கொரு புலவன் பாரதியார்.
  • காலம்: 11.12.1882 - 11.09.1921
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி என்றவர் கவிமணி.
Courtesy: Dinamani
நன்றி: தினமணி நாளிதழ்

குறிப்பு:
1. வாசகர்கள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை deenapmn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.

3/31/2024

TNPSC Group 4 General Tamil Important Questions and Answers published by Dinamani Part- 2

3/31/2024 0
Dinamani Newspaper Published important question of TNPSC (Tamil Nadu Public  Service Commission) Exam.  

TNPSC குரூப் 4, குரூப் 2 தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடக் குறிப்புகள். இதைத் படித்து நடைபெற இருக்கும் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்.

நன்றி: தினமணி நாளிதழ் 

உரைநடை: தமிழ்த்தாத்தா உ.வே.சா.
  • உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் - ஈரோடு மாவட்டம் கொடுமுடி.
  • ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம்
  • இயற்பெயர் - வேங்கடரத்தினம்
  • ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
  • அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன்
  • உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா
  • இவரின் தந்தை - வேங்கடசுப்பையா
  • காலம் - 19.02.1855 முதல் 28.04.1942
  • 1942 இல் உ..வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.
  • உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
  • உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
  • இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
  • பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.
  • ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.
  • ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.
  • குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்.
  • தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.
  • ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா
  • உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார்.
  • உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.
  • ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கு விடியற்காலையில் ஆற்றில் விட்டனர்.
  • குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை - தொண்ணூற்று ஒன்பது
  • எண்பத்தேழு வயதுவரை உ.வே.சா. தமிழுக்காக உழைத்தார். முயற்சிக்கு வயது வரம்பு கிடையாது.
உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
  • எட்டுத்தொகை - 8
  • பத்துப்பாட்டு - 10
  • சீவகசிந்தாமணி - 1
  • சிலப்பதிகாரம் - 1
  • மணிமேகலை - 1
  • புராணங்கள் - 12
  • உலா - 9
  • கோவை - 6
  • தூது - 6
  • வெண்பா நூல்கள் - 13
  • அந்தாதி - 3
  • பரணி - 2
  • மும்மணிக்கோவை - 2
  • இரட்டைமணிமாலை - 2
  • பிற பிரபந்தங்கள் - 4
துணைப்பாடம்: கடைசிவரை நம்பிக்கை
  • கடைசிவரை நம்பிக்கை இச்சிறுகதை அரவிந்த் குப்தா எழுதிய டென் லிட்டில் பிங்கர்ஸ் என்ற தொகுப்பில் உள்ளது.
  • சடகோ சகாகி, 11 வயது ஜப்பான் நாட்டுச் சிறுமி.
  • ஜப்பானில் ஹிரோமிமாவிக்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்தாள்.
  • அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட கதிர்வீசின் காரணமாக சடகோவிற்கு புற்றுநோய் பாதிப்பு * ஏற்பட்டது.
  • சடகோவின் தோழி சிசுகோ, சடகோவிடம் காகிதத்தால் செய்யப்பட்ட கொக்குகள் ஆயிரம் செய்தால் நோய் குணமாகும் என்றாள். இது நம் நாட்டு நம்பிக்கை என்று கூறினாள்.
  • ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு.
  • காகிதத்தால் உருவங்கள் செய்யும் ஜப்பானியர் ஒரிகாமி என்று கூறுவர்.
  • 1955 அக்டோபர் 25-இல் நல்ல சடகோ இறந்தாள்.
  • மொத்தம் 644 காகித கொக்குகள் உருவாக்கி இருந்தாள்.
  • சடகோவின் தோழிகள் கூடி மீதமுள்ள 356 காகித கொக்குகள் செய்து எண்ணிக்கையை ஆயிரம் ஆக்கினர். சடகோவின் விருப்பத்தை நிறைவு செய்தனர்.
  • சடகோவிற்காக அவள் தோழிகள் பொதுமக்களிடம் நிதி திரட்டி நினைவாலயம் கட்டினர். அதனுள் சடகோவிற்கு சிலை எழுப்பினர்.
  • அதன் பெயர் குழந்தைகள் அமைதி நினைவாலயம்.
  • நினைவாலயத்தில் எழுதப்பட்ட வாசகம் - உலகத்தில் அமைதி வேண்டும்! இது எங்கள் கதறல்! இது எங்கள் வேண்டுதல்!
Courtesy: Dinamani
நன்றி: தினமணி நாளிதழ்

குறிப்பு:
1. வாசகர்கள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை deenapmn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.

TNPSC Group 4 General Tamil Important Questions and Answers published by Dinamani Part- 1

3/31/2024 0
Dinamani Newspaper Published important question of TNPSC (Tamil Nadu Public  Service Commission) Exam.  

TNPSC குரூப் 4, குரூப் 2 தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடக் குறிப்புகள். இதைத் படித்து நடைபெற இருக்கும் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்.

நன்றி: தினமணி நாளிதழ் 

ஆறாம் வகுப்பு: வாழ்த்து - திருவருட்பா

கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில்
கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து
  • திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்
  • சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்
  • பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.
  • பெற்றோர் - இராமையா - சின்னமையார்
  • வாழ்ந்த காலம்: 05.10.1823 - 30.01.1874
  • எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.
  • பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது - அறச்சாலை
  • அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை
  • சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.
  • இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.
  • வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க அடிகளார்
  • வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.
  • கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில் கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்.
  • நூல்கள்: ஜீவகாரூன்ய ஓழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.
  • வள்ளலாரின் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
  • சிறப்பு: சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.
  • மத நல்லிணக்கத்திற்கு சன்மார்க்க சங்கத்தையும், உணவளிக்க அறச்சாலை, அறவுநெறி விளங்க ஞான சபையையும் நிறுவினார்.
  • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.
  • கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில், சிந்தனையில், எண்ணத்தில், பாட்டில், பாட்டின் இசையில், என் உயிரில் கலந்து இருக்கிறான்.
  • அறிவுரைப் பகுதி: திருக்குறள் - அன்புடைமை
சொற்பொருள்:
  • ஆர்வலர் - அன்புடையவர்
  • புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
  • என்பு - எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது.
  • வழக்கு - வாழ்க்கை நெறி
  • நண்பு - நட்பு
  • மறம் - வீரம், கருணை (வீரம் இரண்டிற்குமே
  • அன்புதான் அடிப்படை என்பது பொருள்)
  • அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்
  • என்பிலது - எலும்பில்லாதது(புழு)
  • பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும்
  • ஆருயிர் - அருமையான உயிர்
  • ஈனும் - தரும்
  • ஆர்வம் - விருப்பம் (வெறுப்பை நீக்கி விருப்பத்தை
  • உண்டாக்கும் என்று பொருள்)
  • வையகம் - உலகம்
  • என்ப - என்பார்கள்
  • புறத்துறுப்பு - உடல் உறுப்புகள்
  • எவன் செய்யும் - என்ன பயன்?
  • அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு
பிரித்து எழுதுக:
  • அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா -அன்பு உள்ளத்தில் இல்லாத
  • வன்பாற்கண் = வன்பால் + கண் - பாலை நிலத்தில்
  • தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல
  • வற்றல்மரம் - வாடிய மரம்
திருவள்ளுவர்
  • இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவர்.
  • இதனை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கண்க்கிடப்படுகிறது.
  • சிறப்பு பெயர்: தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
  • அதிகாரங்கள்: 133
  • அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • திருக்குறளின் வேறு பெயர்கள்: உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை. உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
  • திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
  • எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044. கி.பி.2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.
ஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து
  • பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்.
சொற்பொருள்:
  • பண் - இசை
  • வண்மை - கொடைத்தன்மை
  • போற்றி - வாழத்துகிறேன்
  • இருக்கை - ஆசனம்
  • திரு.வி.க என்பதன் விரிவாக்கம்
  • திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.
  • திரு.வி.க வின் பெற்றோர்
  • விருத்தாசலனார் - சின்னம்மையார்
  • திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.
  • துள்ளம் தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது? - தண்டலம் (இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது)
திரு.வி.க வின் சிறப்பு:
  • இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார். மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் "தமிழ்த் தென்றல்" என சிறப்பிக்கப்படுகிறார்.
திரு.வி.கலியாணசுந்தரனார் படைப்புகள் யாவை?
  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
  • பெண்ணின் பெருமை
  • தமிழ்த்தென்றல்
  • உரிமை வேட்கை,
  • முருகன் அல்லது அழகு முதலியன.
  • திரு.வி.க அவர்கள் வாழ்ந்த காலம் என்ன? - 26.08.1883 - 17.09.1953
  • திரு.வி.க இயற்றிய வாழ்த்துப் பாடல் எந்நூலில் இடம் பெற்றுள்ளது? - பொதுமை வேட்டல்
  • பொதுமை வேட்டல் என்னும் நூல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது? - போற்றி
  • பொதுமை வேட்டல் எதனைக் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுகிறது? - நாடு, மதம், இனம், மொழி, நிறம்
  • தெய்வ நிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக எத்தனை தலைப்புகளில் உள்ளது? - நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.
நூல் பயன்:
  • இந்நூலைக் கற்பார்க்கு நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும், மனித நேயம் மலரும், உலகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்.
  • பொதுமை வேட்டல் எத்தனை பாக்களால் ஆனது? - நானூற்று முப்பது
  • சென்னையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராக திரு.வி.க அவர்கள் பணியாற்றினார்? - இராயப்பேட்டை வெஸ்லி பள்ளி
  • இறைவன் உயிரில் வைத்தது எதனை? - இறைவன் கொடைத்தன்மையை உயிரில் வைத்தார்.
  • இறைவனின் இருக்கை யாது? - இறைவனின் இருக்கை உண்மை.
திருக்குறள்

சொற்பொருள்:
  • புரை - குற்றம்
  • பயக்கும் - தரும்
  • சுடும் - வருத்தும்
  • அன்ன - அவை போல்வன
  • எய்யாமை - வருந்தாமல்
  • அகம் - உள்ளம்
  • அமையும் - உண்டாகும்.
ஆசிரியர் குறிப்பு:
  • திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.
சிறப்பு பெயர்கள்:
  • நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர்
நூல் குறிப்பு:
  • மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள்.
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
  • ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறட்பாக்கள் என ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இது 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1. திருவள்ளுவரின் பெற்றோர் யார்?
விடை: தாயின் பெயர் - ஆதி

2. தந்தையின் பெயர்? 
விடை: பகவன்

3. திருவள்ளுவர் எந்த ஊரில் பிறந்தார்?
விடை:மயிலாப்பூர் (மதுரை என்றும் கூறுவர்)

4. திருவள்ளுவர் யாரால் வளர்க்கப்பட்டார்?
விடை: வள்ளுவன் ஒருவனால் வளர்க்கப்பட்டார்.

5. வள்ளுவன் என்றால் பொருள் யாது?
விடை: அரசருக்கு அந்தரங்க ஆலோசனை கூறும் ஓர் உயர்ந்த அலுவலர்

6. திருவள்ளுவரின் மனைவியின் பெயர் என்ன?
விடை: வாசுகி

7. வாசுகி யாருடைய மகள்?
விடை: மார்க்கசகாயர் என்னும் வேளாளரின் மகள்

8. திருவள்ளுவர் செய்த தொழில் என்ன?
விடை: நெசவுத் தொழில்

9. திருவள்ளுவரின் வேறு பெயர்கள் என்ன?
விடை: நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகன், மாதானுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர், பொய்யில் புலவர் என்பன.

10. திருவள்ளுவர் காலம் எது?
விடை: கி.மு. 31

11. திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருக்குறள் என வழங்கப் பெறுகிறது.

12. திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது? அவை யாவை?
விடை:  மூன்று பிரிவுகளைக் கொண்டது.
1. அறத்துப்பால்
2. பொருட்பால்
3. இன்பத்துப்பால்

13. இந்நூல் திருக்குறள் என்று எதனால் பெயர் பெற்றது?
விடை: திரு+குறள். மேன்மையான குறள் வெண்பாக்களால் இயற்றப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

14. திருக்குறள் 133 அதிகாரங்களை உடையது.

15. திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை பாடல்களை கொண்டது?
விடை: பத்து

16. திருக்குறள் நூலின் பயன் யாது?
விடை: திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும். பண்புகள் வளரும், உலகெல்லாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும், மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும், எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும்.

17. உடலை நீர் தூய்மை செய்யும்: வாய்மை உள்ளத் தூய்மையை வெளிப்படுத்தும்.

18. வாய்மை என்றால் என்ன?
விடை: மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்.

20. திருக்குறள் எத்தனை குறட்பாக்களால் ஆனது?
விடை: ஆயிரத்து முந்நூற்று முப்பது

21. திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை என்று வழங்கப் பெறுகிறது?
விடை: உலகம் ஏற்கும் கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இவ்வாறு வழங்கப் பெறுகிறது.

பிரித்து எழுதுக:
  • யாதெனின் - யாது + எனின்
  • பொய்யாதொழுகின் - பொய்யாது + ஒழுகின்
  • சொற்றொடரில் சொற்களை அமைத்தல்:
  • இயற்கை - குற்றாலத்தில் உள்ள இயற்கைக் காட்சிகள் உள்ளத்தைக் கவர்கின்றன.
  • பெண்மை - பாரதியார் பெண்மையைப் போற்றிப் பாடியுள்ளார்.
  • வாய்மை - வாய்மையே வெல்லும் என்ற தொடர் தமிழக அரசின் சின்னத்தில் உள்ளது.
  • உள்ளம் - குழந்தையின் உள்ளண் கள்ளம் புகா இடமாகும்
Courtesy: Dinamani
நன்றி: தினமணி நாளிதழ்

குறிப்பு:
1. வாசகர்கள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை deenapmn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.