Dinamani Newspaper Published important question of TNPSC (Tamil Nadu Public Service Commission) Exam.
TNPSC குரூப் 4, குரூப் 2 தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடக் குறிப்புகள். இதைத் படித்து நடைபெற இருக்கும் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்.
நன்றி: தினமணி நாளிதழ்
பறவைகள் பலவிதம்
- திருவெல்வேலி மாவட்டம் கூத்தனகுளத்தில் மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை, ஏனென்றால் அங்கு கூடும் பறவைகள் பயந்து விடாமல் இருக்கவே.
- உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்திற்குப் பெயர் - பறவைகள் சரணாலயம்.
- அதிக பணி அல்லது அதிக வெயிலின் காரணமாக புறவைகள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு பறந்து செல்வது - வலசை போதல்
- பறவைகள் நமக்கு பருவகால மாற்றத்தை உணர்த்துகின்றன.
- ஒரு நாட்டில் பழம் தின்றுவிட்டு, மற்றொரு நாட்டில் எச்சமிடுவதன் காரணமாக அங்கு மரம், செடி, கொடி போன்றவை உருவாக பறவைகள் காரணமாகின்றன.
- வயல்வெளிகளில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், வண்டுகளை தின்று விவசாயிகளுக்கு உதவுகின்றன.
பறவைகள் ஐந்து வகையாக பிரிப்பர்.
1. தென்னை குடித்து வாழும் பறவைகள்
2. பழத்தை உண்டு வாழும் பறவைகள்
3. பூச்சியை தின்று வாழும் பறவைகள்
4. வேட்டையாடி உண்ணும் பறவைகள்
5. இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்.
- பூநாரையானது நிலத்திலும் அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும் வாழக்கூடியது. கடும் வெப்பத்தையும் எதிர்கொள்ளும் தன்மை கொண்டது.
- சமவெளி மரங்களில் வாழும் சில பறவைகள்: மஞ்சள் சிட்டு, செங்காகம், கடலைக்குயில், பனங்காடை, தூக்கணாங்குருவி.
- நீர்நிலையில் வாழும் சில பறவைகள்: கொக்கு, தாழைக்கோழி, பவளக் காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து.
- மலைகளில் வாழும் சில பறவைகள்: இருவாச்சி, செந்தாலைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைகாலி, பொன்முதுகு, மரங்கொத்தி, சின்னக்குறுவான், கொண்டாய் உலவரான், இராசாளிப் பருந்து, பூமன் ஆந்தை.
- தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயம் = 13
- பருவ காலத்தை மனிதர்களுக்கு உணர்த்துபவை - பறவைகள்
- உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளை பரப்புவது - பறவைகள்.
- நம் நாட்டில் சுமார் 2400 வகைப்பறவைகள் உள்ளன.
- பறவைகள் பருவ நிலை மாற்றத்தால் இடம் பெயருவதை - வலசை போதல் என அழைப்பர்.
- வெயிலும், மழையும், பனியும் மாறி மாறி வருவதை - பருவநிலை மாற்றம் என அழைப்பர்.
- அதிக பனிப்பொழியும் மாதம் - மார்கழி மாதம்.
- அதிகம் வெயில் அடிக்கும் காலத்தை - கோடைக்காலம் என அழைப்பர்.
- நிலத்திலும், அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்; கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை - பூ தாமரை.
தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்:
- வேடந்தாங்கல்
- கரிக்கிளி(காஞ்சிபுரம் மாவட்டம்)
- கஞ்சிரால்குளம்
- சித்திரஸ்குடி
- மேலக் செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்)
- பழவேற்காடு (திருவள்ளுவர் மாவட்டம்)
- உதயமார்த்தாண்டபுரம்(திருவாரூர் மாவட்டம்)
- வடுவூர் (தஞ்சை மாவட்டம்)
- கரைவெட்டி(பெரம்பலூர் மாவட்டம்)
- வேட்டங்குடி(சிவகங்கை மாவட்டம்)
- வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்)
- கூந்தன்குளம் (திருவெல்வேலி மாவட்டம்)
- கோடியக்கரை(நாகப்பட்டினம் மாவட்டம்)
தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன் குளம்.
பாம்புகள் ஊர்வன வகையை சார்ந்தவை.
- சில பாம்புகள் குட்டிபோடும், பெரும்பாலானவை குஞ்சி பொரிப்பன.
- பாம்பின் உலகில் மனித இனம் தோன்றுவதற்கு பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.
- உலகம் முழுவதும் 2750 வகை பாம்புகள் உள்ளன. இந்தியாவில் 244 வகை பாம்புகள் உள்ளன.
- 52 வகை பாம்புகளில் மட்டுமே நச்சுத்தன்மை வாய்ந்தவை.
- பாம்பு பால் குடிக்காது. அவை விழுங்குகிற எலி, தவளைகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தே அதற்கு போதும்.
- பாம்பானது, தான் பிடிக்கும் இரையை கொள்ளவும், செரிமானத்திற்காகவும் தான் தன்னுடைய பற்களில் நஞ்சு வைத்துள்ளது.
- பாம்புகளுக்கு காது கேட்காது. அவை தரையில் ஏற்படும் அடிருகளை உணர்ந்து செயல்படும்.
- வயலிலுள்ள எலிகளை பாம்பு அழிப்பதால், பாம்புகளை விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படும்.
- பாம்புக்கு காற்றில் வரும் ஓசைகளை கேட்க இயலாது. தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து, அதன்மூலம் பாம்பு முன்னெச்சரிக்கையாக இருக்கிறது.
- பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தை அசையாமல் வைத்து, கட்டுபோட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
- இந்தியாவில் உள்ள ராஜநாகம் தான் உலகிலேயே மிக நீளமான பாம்பு. 15 அடி நீளமுடையது. கூடுகட்டி வாழும் ஒரே வகை பாம்பு இது. ராஜநாகம் மற்ற பாம்புகளையும் உணவாக்கி கொள்ளும்.
- ஒரு பாம்பை கொன்றால், அதன் இணைபாம்பு பழி வாங்கும் என்று சொல்வதுண்டு. இது உண்மையன்று, கொள்ளப்பட்ட ஒருவகை வாசனைத் திரவியம் மற்றப் பாம்புகளையும் அந்த இடம் நோக்கி வரவழைக்கிறது. பழிவாங்க, பாம்புகள் வருவதில்லை.
- பாம்பு தன் நாக்கை அடிகடி வெளியே நீட்டும். அவ்வாறு செய்வதால் சுற்றுபுரத்தின் வாசனையை அறிந்து கொள்ளத் தான் அவ்வாறு செய்கிறது.
- நல்ல பாம்பின் நஞ்சு கோப்ராக்சின் (Cobrozincobrozin) எனும் வலி நீக்கும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
- இந்திய அரசு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி, தோலுக்காகப் பாம்புகள் கொள்ளபடுவதைத் தடுக்க சட்டம் நிறைவேற்றி உள்ளது.
- பாம்புகளின் பற்கள் உள்நோக்கி வளைந்திருக்கும். இரையைப் பிடித்தால் தப்பவிடாது. பாம்புகள் இரையை மென்று தின்பதில்லை, அப்படியே விழுங்குகின்றன.
இலக்கணமும் மொழித்திறனும்
- தமிழில் உள்ள முதல் எழுத்துகள் மொத்தம் - முப்பது.அவை:
- உயிர் எழுத்துக்கள் - பன்னிரண்டு
- மெய் எழுத்துக்கள் - பதினெட்டு
- உயிரும் மெய்யும் சேர்ந்து 216 உயிர்மெய் எழுத்துகள்ளை உருவாக்குகின்றன.
- அன்றாடப் பேச்சில் பயன்படும் உயிர்மெய் எழுத்துகள் - கி, சி, பி, டி, தி, மி
- அ, இ, உ, எ, ஒ - ஆகிய ஐந்தும் குறில் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களோடு சேரும்போது உயிர்மெய்க்குறில் எழுத்துக்கள் உண்டாகின்றன.
- ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஓள - ஆகிய நெடில் எழுத்துக்கள் மெய் எழுத்துக்களோடு சேரும்போது உயிர்மெய்நெடில் எழுத்துக்கள் உண்டாகின்றன.
- வண்மை - கொடைத் தன்மை
- வன்மை - கொடுமை
- மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தந்தம்
- ஆறுகள் மாசு அடையக் காரணம் - தொழிற்சாலைக் கழுவு
- மழை குறையக் காரணம் - காடுகள் அழிப்பு
- உலகம் வெப்பமடையக் காரணம் - வண்டிகளின் புகை
Courtesy: Dinamani
நன்றி: தினமணி நாளிதழ்
குறிப்பு:
1. வாசகர்கள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை deenapmn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.
Post a Comment