-->

TNPSC Group 4 General Tamil Important Questions and Answers published by Dinamani Part- 1

Dinamani Newspaper Published important question of TNPSC (Tamil Nadu Public  Service Commission) Exam.  

TNPSC குரூப் 4, குரூப் 2 தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடக் குறிப்புகள். இதைத் படித்து நடைபெற இருக்கும் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்.

நன்றி: தினமணி நாளிதழ் 

ஆறாம் வகுப்பு: வாழ்த்து - திருவருட்பா

கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில்
கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து
  • திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்
  • சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்
  • பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.
  • பெற்றோர் - இராமையா - சின்னமையார்
  • வாழ்ந்த காலம்: 05.10.1823 - 30.01.1874
  • எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.
  • பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது - அறச்சாலை
  • அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை
  • சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.
  • இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.
  • வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க அடிகளார்
  • வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.
  • கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில் கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்.
  • நூல்கள்: ஜீவகாரூன்ய ஓழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.
  • வள்ளலாரின் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
  • சிறப்பு: சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.
  • மத நல்லிணக்கத்திற்கு சன்மார்க்க சங்கத்தையும், உணவளிக்க அறச்சாலை, அறவுநெறி விளங்க ஞான சபையையும் நிறுவினார்.
  • வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.
  • கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில், சிந்தனையில், எண்ணத்தில், பாட்டில், பாட்டின் இசையில், என் உயிரில் கலந்து இருக்கிறான்.
  • அறிவுரைப் பகுதி: திருக்குறள் - அன்புடைமை
சொற்பொருள்:
  • ஆர்வலர் - அன்புடையவர்
  • புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்
  • என்பு - எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது.
  • வழக்கு - வாழ்க்கை நெறி
  • நண்பு - நட்பு
  • மறம் - வீரம், கருணை (வீரம் இரண்டிற்குமே
  • அன்புதான் அடிப்படை என்பது பொருள்)
  • அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்
  • என்பிலது - எலும்பில்லாதது(புழு)
  • பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும்
  • ஆருயிர் - அருமையான உயிர்
  • ஈனும் - தரும்
  • ஆர்வம் - விருப்பம் (வெறுப்பை நீக்கி விருப்பத்தை
  • உண்டாக்கும் என்று பொருள்)
  • வையகம் - உலகம்
  • என்ப - என்பார்கள்
  • புறத்துறுப்பு - உடல் உறுப்புகள்
  • எவன் செய்யும் - என்ன பயன்?
  • அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு
பிரித்து எழுதுக:
  • அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா -அன்பு உள்ளத்தில் இல்லாத
  • வன்பாற்கண் = வன்பால் + கண் - பாலை நிலத்தில்
  • தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல
  • வற்றல்மரம் - வாடிய மரம்
திருவள்ளுவர்
  • இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவர்.
  • இதனை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கண்க்கிடப்படுகிறது.
  • சிறப்பு பெயர்: தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.
  • அதிகாரங்கள்: 133
  • அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • திருக்குறளின் வேறு பெயர்கள்: உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை. உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.
  • திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.
  • எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044. கி.பி.2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.
ஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து
  • பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்.
சொற்பொருள்:
  • பண் - இசை
  • வண்மை - கொடைத்தன்மை
  • போற்றி - வாழத்துகிறேன்
  • இருக்கை - ஆசனம்
  • திரு.வி.க என்பதன் விரிவாக்கம்
  • திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.
  • திரு.வி.க வின் பெற்றோர்
  • விருத்தாசலனார் - சின்னம்மையார்
  • திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.
  • துள்ளம் தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது? - தண்டலம் (இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது)
திரு.வி.க வின் சிறப்பு:
  • இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார். மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் "தமிழ்த் தென்றல்" என சிறப்பிக்கப்படுகிறார்.
திரு.வி.கலியாணசுந்தரனார் படைப்புகள் யாவை?
  • மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்
  • பெண்ணின் பெருமை
  • தமிழ்த்தென்றல்
  • உரிமை வேட்கை,
  • முருகன் அல்லது அழகு முதலியன.
  • திரு.வி.க அவர்கள் வாழ்ந்த காலம் என்ன? - 26.08.1883 - 17.09.1953
  • திரு.வி.க இயற்றிய வாழ்த்துப் பாடல் எந்நூலில் இடம் பெற்றுள்ளது? - பொதுமை வேட்டல்
  • பொதுமை வேட்டல் என்னும் நூல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது? - போற்றி
  • பொதுமை வேட்டல் எதனைக் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுகிறது? - நாடு, மதம், இனம், மொழி, நிறம்
  • தெய்வ நிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக எத்தனை தலைப்புகளில் உள்ளது? - நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.
நூல் பயன்:
  • இந்நூலைக் கற்பார்க்கு நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும், மனித நேயம் மலரும், உலகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்.
  • பொதுமை வேட்டல் எத்தனை பாக்களால் ஆனது? - நானூற்று முப்பது
  • சென்னையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராக திரு.வி.க அவர்கள் பணியாற்றினார்? - இராயப்பேட்டை வெஸ்லி பள்ளி
  • இறைவன் உயிரில் வைத்தது எதனை? - இறைவன் கொடைத்தன்மையை உயிரில் வைத்தார்.
  • இறைவனின் இருக்கை யாது? - இறைவனின் இருக்கை உண்மை.
திருக்குறள்

சொற்பொருள்:
  • புரை - குற்றம்
  • பயக்கும் - தரும்
  • சுடும் - வருத்தும்
  • அன்ன - அவை போல்வன
  • எய்யாமை - வருந்தாமல்
  • அகம் - உள்ளம்
  • அமையும் - உண்டாகும்.
ஆசிரியர் குறிப்பு:
  • திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.
சிறப்பு பெயர்கள்:
  • நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர்
நூல் குறிப்பு:
  • மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள்.
  • இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.
  • ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறட்பாக்கள் என ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.
  • இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இது 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

1. திருவள்ளுவரின் பெற்றோர் யார்?
விடை: தாயின் பெயர் - ஆதி

2. தந்தையின் பெயர்? 
விடை: பகவன்

3. திருவள்ளுவர் எந்த ஊரில் பிறந்தார்?
விடை:மயிலாப்பூர் (மதுரை என்றும் கூறுவர்)

4. திருவள்ளுவர் யாரால் வளர்க்கப்பட்டார்?
விடை: வள்ளுவன் ஒருவனால் வளர்க்கப்பட்டார்.

5. வள்ளுவன் என்றால் பொருள் யாது?
விடை: அரசருக்கு அந்தரங்க ஆலோசனை கூறும் ஓர் உயர்ந்த அலுவலர்

6. திருவள்ளுவரின் மனைவியின் பெயர் என்ன?
விடை: வாசுகி

7. வாசுகி யாருடைய மகள்?
விடை: மார்க்கசகாயர் என்னும் வேளாளரின் மகள்

8. திருவள்ளுவர் செய்த தொழில் என்ன?
விடை: நெசவுத் தொழில்

9. திருவள்ளுவரின் வேறு பெயர்கள் என்ன?
விடை: நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகன், மாதானுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர், பொய்யில் புலவர் என்பன.

10. திருவள்ளுவர் காலம் எது?
விடை: கி.மு. 31

11. திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருக்குறள் என வழங்கப் பெறுகிறது.

12. திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது? அவை யாவை?
விடை:  மூன்று பிரிவுகளைக் கொண்டது.
1. அறத்துப்பால்
2. பொருட்பால்
3. இன்பத்துப்பால்

13. இந்நூல் திருக்குறள் என்று எதனால் பெயர் பெற்றது?
விடை: திரு+குறள். மேன்மையான குறள் வெண்பாக்களால் இயற்றப்பட்டதால் இப்பெயர் பெற்றது.

14. திருக்குறள் 133 அதிகாரங்களை உடையது.

15. திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை பாடல்களை கொண்டது?
விடை: பத்து

16. திருக்குறள் நூலின் பயன் யாது?
விடை: திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும். பண்புகள் வளரும், உலகெல்லாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும், மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும், எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும்.

17. உடலை நீர் தூய்மை செய்யும்: வாய்மை உள்ளத் தூய்மையை வெளிப்படுத்தும்.

18. வாய்மை என்றால் என்ன?
விடை: மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்.

20. திருக்குறள் எத்தனை குறட்பாக்களால் ஆனது?
விடை: ஆயிரத்து முந்நூற்று முப்பது

21. திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை என்று வழங்கப் பெறுகிறது?
விடை: உலகம் ஏற்கும் கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இவ்வாறு வழங்கப் பெறுகிறது.

பிரித்து எழுதுக:
  • யாதெனின் - யாது + எனின்
  • பொய்யாதொழுகின் - பொய்யாது + ஒழுகின்
  • சொற்றொடரில் சொற்களை அமைத்தல்:
  • இயற்கை - குற்றாலத்தில் உள்ள இயற்கைக் காட்சிகள் உள்ளத்தைக் கவர்கின்றன.
  • பெண்மை - பாரதியார் பெண்மையைப் போற்றிப் பாடியுள்ளார்.
  • வாய்மை - வாய்மையே வெல்லும் என்ற தொடர் தமிழக அரசின் சின்னத்தில் உள்ளது.
  • உள்ளம் - குழந்தையின் உள்ளண் கள்ளம் புகா இடமாகும்
Courtesy: Dinamani
நன்றி: தினமணி நாளிதழ்

குறிப்பு:
1. வாசகர்கள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை deenapmn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.

Related Posts

Post a Comment

Labels

General Knowledge 902 General Studies 724 Central Govt. Job 309 General Tamil 177 Mock Test 133 PAPER - I 120 Civics 101 Indian Constitutions 91 Library Science Quiz 80 Anna University Jobs 72 Library and Information Science Paper II 72 Librarian Jobs 70 Computer Science Quiz 64 History Quiz 59 General English 56 NEET 2017 Model Questions 53 Geography 45 Library and Information Science 35 Computer Science 34 Computer Science PAPER - III 32 History Paper II 32 6th Tamil 30 6th Standard Science 22 Computer Science PAPER - II 22 Library and Information Science Paper III 19 PAPER - II 18 10th Science 17 General Science Mock Test 17 Life Science Quiz 17 9th Science 14 Nobel Awards 14 CBSC NET 13 History Mock Test 13 PAPER - III 13 Medical Physicist 12 Economics Paper II 10 8th Science 9 7th Tamil 8 Commerce Paper-2 8 Economics Paper III 8 History Paper III 8 NCERT Text Book 8 General Tamil Quiz 7 Home Science Paper II 7 Labour Welfare Paper III 7 8th Tamil 6 Anthropology Paper II 6 Anthropology Paper III 6 Arab Culture and Islamic Studies Paper II 6 Arab Culture and Islamic Studies Paper III 6 Archaeology Paper II 6 Archaeology Paper III 6 Comparative Literature Paper II 6 Comparative Literature Paper III 6 Comparative Study of Religions Paper II 6 Comparative Study of Religions Paper III 6 Criminology Paper II 6 Criminology Paper III 6 Education Paper - II 6 Education Paper - III 6 English Paper - II 6 English Paper - III 6 Environmental Sciences Paper - II 6 Environmental Sciences Paper - III 6 Forensic Science Paper II 6 Forensic Science Paper III 6 Geography Paper II 6 Geography Paper III 6 Home Science Paper III 6 Human Rights and Duties Paper II 6 Human Rights and Duties Paper III 6 Indian Culture Paper - II 6 Indian Culture Paper - III 6 International and Area Studies Paper II 6 International and Area Studies Paper III 6 Labour Welfare Paper II 6 Law Paper - II 6 Law Paper - III 6 Management Paper - II 6 Management Paper - III 6 Mass Communication Paper II 6 Mass Communication Paper III 6 Museology and Conservation Paper II 6 Museology and Conservation Paper III 6 Music Paper II 6 Music Paper III 6 Performing Arts Paper II 6 Performing Arts Paper III 6 Philosophy Paper II 6 Philosophy Paper III 6 Physical Education Paper - II 6 Physical Education Paper - III 6 10th Tamil 5 Commerce Paper-3 5 Folk Literature Paper II 5 Folk Literature Paper III 5 Geography Mock Test 5 Linguistics Paper II 5 Linguistics Paper III 5 7th Science 4 9th Tamil 4 Chemistry 4 Geography Quiz 4 11th Tamil 3 6th Standard History 3 7th Tamil Mock Test 3 9th standard Tamil Quiz 3 CSIR-NET - Chemistry 3 Computer Science Video 2 Mathematics Paper II 2 CSIR-NET - Physics 1 Civil Engineer Mock Test 1 Computer Science Paper II 1 General Knowledge Mock Test 1 Geology 1 Interview Questions 1 January Current Affairs - 2016 1 LIS Questions 1 Library Science Paper II 1 Life Science 1 Life Science Paper II 1 Mathematics Quiz 1
Subscribe Our Posting