TNPSC குரூப் 4, குரூப் 2 தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடக் குறிப்புகள். இதைத் படித்து நடைபெற இருக்கும் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்.
நன்றி: தினமணி நாளிதழ்
உரைநடை: தமிழ்த்தாத்தா உ.வே.சா.
- உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் - ஈரோடு மாவட்டம் கொடுமுடி.
- ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம்
- இயற்பெயர் - வேங்கடரத்தினம்
- ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
- அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன்
- உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா
- இவரின் தந்தை - வேங்கடசுப்பையா
- காலம் - 19.02.1855 முதல் 28.04.1942
- 1942 இல் உ..வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.
- உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.
- உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.
- இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
- பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.
- ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.
- ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.
- குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்.
- தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.
- ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா
- உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார்.
- உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.
- ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கு விடியற்காலையில் ஆற்றில் விட்டனர்.
- குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை - தொண்ணூற்று ஒன்பது
- எண்பத்தேழு வயதுவரை உ.வே.சா. தமிழுக்காக உழைத்தார். முயற்சிக்கு வயது வரம்பு கிடையாது.
உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:
- எட்டுத்தொகை - 8
- பத்துப்பாட்டு - 10
- சீவகசிந்தாமணி - 1
- சிலப்பதிகாரம் - 1
- மணிமேகலை - 1
- புராணங்கள் - 12
- உலா - 9
- கோவை - 6
- தூது - 6
- வெண்பா நூல்கள் - 13
- அந்தாதி - 3
- பரணி - 2
- மும்மணிக்கோவை - 2
- இரட்டைமணிமாலை - 2
- பிற பிரபந்தங்கள் - 4
துணைப்பாடம்: கடைசிவரை நம்பிக்கை
- கடைசிவரை நம்பிக்கை இச்சிறுகதை அரவிந்த் குப்தா எழுதிய டென் லிட்டில் பிங்கர்ஸ் என்ற தொகுப்பில் உள்ளது.
- சடகோ சகாகி, 11 வயது ஜப்பான் நாட்டுச் சிறுமி.
- ஜப்பானில் ஹிரோமிமாவிக்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்தாள்.
- அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட கதிர்வீசின் காரணமாக சடகோவிற்கு புற்றுநோய் பாதிப்பு * ஏற்பட்டது.
- சடகோவின் தோழி சிசுகோ, சடகோவிடம் காகிதத்தால் செய்யப்பட்ட கொக்குகள் ஆயிரம் செய்தால் நோய் குணமாகும் என்றாள். இது நம் நாட்டு நம்பிக்கை என்று கூறினாள்.
- ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு.
- காகிதத்தால் உருவங்கள் செய்யும் ஜப்பானியர் ஒரிகாமி என்று கூறுவர்.
- 1955 அக்டோபர் 25-இல் நல்ல சடகோ இறந்தாள்.
- மொத்தம் 644 காகித கொக்குகள் உருவாக்கி இருந்தாள்.
- சடகோவின் தோழிகள் கூடி மீதமுள்ள 356 காகித கொக்குகள் செய்து எண்ணிக்கையை ஆயிரம் ஆக்கினர். சடகோவின் விருப்பத்தை நிறைவு செய்தனர்.
- சடகோவிற்காக அவள் தோழிகள் பொதுமக்களிடம் நிதி திரட்டி நினைவாலயம் கட்டினர். அதனுள் சடகோவிற்கு சிலை எழுப்பினர்.
- அதன் பெயர் குழந்தைகள் அமைதி நினைவாலயம்.
- நினைவாலயத்தில் எழுதப்பட்ட வாசகம் - உலகத்தில் அமைதி வேண்டும்! இது எங்கள் கதறல்! இது எங்கள் வேண்டுதல்!
நன்றி: தினமணி நாளிதழ்
குறிப்பு:
1. வாசகர்கள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை deenapmn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.
Post a Comment