Ads 720 x 90

Current Affairs in Tamil 3rd July 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams

1. கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கீழ்கண்ட எந்த நாளில் பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது?
A. ஜூலை 30
B. ஆகஸ்ட் 15
C. செப்டம்பர் 10
D. டிசம்பர் 08

2. சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தால் பாதிக்கப்படும், ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் தந்து குடியுரிமை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக எந்த நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
A. கனடா 
B. இந்தோனேசியா 
C. ஆஸ்திரேலியா 
D. அமெரிக்கா 

3. உலக அளவில் கொரோனா வேகமாக பரவும் நகரங்களில் லாஸ்ஏஞ்சல்ஸ்க்கு அடுத்தபடியாக எந்த நகரம் உள்ளது?
A. மும்பை 
B. வாஷிங்டன் 
C. பாரிஸ் 
D. சென்னை 

4. கீழ்கண்ட எந்த நாட்டிடம் இருந்து 33 போர் விமானங்கள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது?
A. பிரான்ஸ் 
B. அமெரிக்கா 
C. ரஷ்யா
D. மேற்கண்ட அனைத்தும் 

5. இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக, அனைத்து ரயில்களும் கீழ்கண்ட எந்த நாளில் 100% சரியான நேரத்திற்கு இயக்கப்பட்டு சாதனை படைத்திருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது?
A. ஜூலை 1, 2020
B. மே 30, 2020
C. ஜூலை 2, 2020
D. ஏப்ரல் 15, 2020

6. கீழ்கண்ட எந்த நாட்டின் அதிபர் 2036 வரை அதிபர் பதவியில் நீடிக்கும் வகையில் கொண்டு வந்துள்ள அரசியல் சாசன திருத்தத்துக்கு 77.93% மக்கள் ஓட்டளித்துள்ளனர்?
A. ஜப்பான் 
B. மியான்பர் 
C. ரஷ்யா
D. காங்கோ 

7. பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவுக்கு எதிராக சீனா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு கீழ்கண்ட எந்த நாடுகள் தடை விதித்துள்ளன? 
A. ஜெர்மனி
B. அமெரிக்கா 
C. ரஷ்யா
D. மேற்கண்ட A & B

8. கீழ்கண்ட எந்த திட்டத்தை நவம்பர் வரை நீட்டிக்க பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் முடிவு செய்துள்ளார்?
A. பிரதமர் வீட்டுவசதி திட்டம்
B. பிரதான் மந்திரி ஜன தன் யோஜனா
C. பிரதமர் கரிப் கல்யாண் அண்ணா யோஜனா
D. பிரதான் மந்திரி முத்ரா திட்டம்

9. பின்வரும் எந்த நாளில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது?
A. 30 ஜூன்
B. 15 மார்ச்
C. 10 ஜனவரி
D. 01 ஜூலை

10. சமீபத்தில் 'பிளாட்டினா' திட்டத்தின் கீழ் உலகின் மிகப்பெரிய பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனையை கீழ்கண்ட எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?
A. பீகார்
B. ஜார்க்கண்ட்
C. குஜராத்
D. மகாராஷ்டிரா

Post a Comment

0 Comments