1. வங்கக்கடலில்
உருவாகியுள்ள புயலுக்கு 'அம்பான்' என்று பெயர் வைத்த நாடு எது?
A. இந்தியா
B. இந்தோனேசியா
C. தாய்லாந்து
D. நேபாளம்
2. வேளாண்
உள்கட்டமைப்புக்கு எத்தனை லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை மத்திய நிதியமைச்சர்
அறிவித்துள்ளார்?
A. ரூ.1 லட்சம் கோடி
B. ரூ.2 லட்சம் கோடி
C. ரூ.3 லட்சம் கோடி
D. ரூ.4 லட்சம் கோடி
3. ரஃபேல்
போர்விமானங்களை இந்தியா கீழ்கண்ட எந்த நாட்டிடம் இருந்து வாங்க உள்ளது?
A. இத்தாலி
B. இஸ்ரேல்
C. பிரான்ஸ்
D. ஸ்பெயி ன்
4. எங்கு நடைபெற்ற
நிகழ்ச்சியில் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'சச்சேத்'
என்ற ரோந்துக்கப்பலை பாதுகாப்புத்துறை அமைச்சர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்?
A. சென்னை
B. கோவா
C. நியூ டெல்லி
D. கொல்கத்தா
5. கரோனாவினால்
பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களின் மேம்பாட்டுக்காக இந்தியாவுக்கு உதவும் வகையில்
எத்தனை கோடி கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது?
A. ரூ.4500 கோடி
B. ரூ.5500 கோடி
C. ரூ.6500 கோடி
D. ரூ.7500 கோடி
6. ஸ்வான் என்று
அழைக்கப்படும் பச்சை நிற வால் நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை வானில்
தோன்றும்?
A.
11,600
B. 12,600
C. 10,600
D. 13,600
கூடுதல் தகவல்: இந்த பச்சை நிற வால்
நட்சத்திரம் தற்போது பூமிக்கு அருகில் கடந்து செல்கிறது. இதன் வால் மட்டும் ஒரு
கோடியே 77 லட்சம் கி.மீ., நீளம் கொண்டது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். பனி மற்றும்
தூசுக்களால் ஆன வால் நட்சத்திரம் தெற்கிலிருந்து வடக்காகச் செல்வதாகவும், தற்போது பூமியிலிருந்து 5.3 கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் இந்த
நட்சத்திரம் மே மாத இறுதி வாரத்தில் கண்களுக்கு தெரியும் என வானியல் நிபுணர்கள்
கணித்துள்ளனர்.
7. பிரதான் மந்திரி
உஜ்ஜவாலா யோஜனா எந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது?
A. 2015
B. 2016
C. 2017
D. 2018
8. சிக்கிம் மாநில அரசு
தனது எத்தனையாவது மாநில தினத்தை மே 16,
2020 அன்று கொண்டாடியது?
A. 42 வது
B. 43 வது
C. 44 வது
D. 45 வது
கூடுதல் தகவல்: Capital: Gangtok | Chief minister: Prem Singh Tamang
9. கீழ்கண்ட எந்த நாள்
ஒவ்வொரு வருடமும் சர்வதேச ஒளி தினமாக அனுசரிக்கப்படுகிறது?
A. மே 16
B. மே 17
C. மே 18
D. மே 19
கூடுதல் தகவல்: இயற்பியலாளரும்
எஞ்சினியருமான தியடோர் மைமான். லேசர் உண்மையில் ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கு
நல்ல முன்மாதிரி.
10. COVID-19 க்கு எதிரான
போராட்டத்தில் அரசுக்கு உதவுவதற்காக தனது சம்பளத்தில் ஓராண்டிற்கு எத்தனை சதவீதம்
நன்கொடையாக அளிப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்?
A. 10%
B. 20%
C. 30%
D. 40%
Current Affairs in Tamil 17th May 2020 | Video
Post a Comment