மேகாலயா -அசாம் இடையே 50 ஆண்டு எல்லை பிரச்னைக்கு தீர்வு
வடகிழக்கு மாநிலமான மேகாலயா, அசாமிற்கும் இடையே நிலவி வந்த 50 ஆண்டுகளாக எல்லை பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது. மேகலயாவில் , முதல்வர் கன்ராட் சங்மா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மேகாலயாவுக்கும், அண்டை மாநிலமான அசாம் என இரு மாநிலங்களுக்கு இடையே கடந்த 1972-ம் ஆண்டு முதல் எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இரு மாநில எல்லையோரம் அமைந்துள்ள 36 கிராமங்களை, மேகாலயா உரிமை கோரியது. எனினும், அதை ஏற்க அசாம் மறுத்தது.
மொத்தமுள்ள 36.79 சதுர கி.மீ. பரப்பளவு நிலத்தில், மேகலயாவுக்கு 18.51 சதுர கி.மீ. பரப்பளவு நிலமும், அசாமிற்கு 18.51 சதுர கி.மீ. பரப்பளவு நிலமும் பிரித்துக்கொள்வது என செட்டில்மெண்ட் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் இரு முதல்வர்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 50 ஆண்டு கால எல்லைபிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது.
ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0
'ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0 என்ற பெயரில், மேலும் ஒரு மாதம் அதிரடி நடவடிக்கையை தொடர வேண்டும்' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். க டந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனைக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த நடவடிக்கையை, இன்றில் இருந்து ஏப்., 27 வரை, 'ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0' என்ற பெயரில் தொடர வேண்டும். பள்ளி, கல்லுாரி அருகே, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை ஒழிக்க வேண்டும். கடத்தல், பதுக்கல், விற்பனை சங்கிலி தொடரை உடைக்க வேண்டும்.
Post a Comment