சுவிஸ் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
சுவிட்சர்லாந்தின் பசல் நகரில், சுவிஸ் ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிந்து, தாய்லாந்தின் புசானன் மோதினர். மொத்தம் 49 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சிந்து 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார்.
துல்லியமாக இலக்கை தாக்கியது: இந்திய ஏவுகணை சோதனை வெற்றி
நடுத்தர தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் வான் எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஒடிசாவின் பாலசோர் கடற்கரையில் இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. தரையில் இருந்து வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.
இந்த ஏவுகணை, இந்திய ராணுவத்தில் ஒரு அங்கமாக உள்ளது. சோதனையின் போது, தொலைவில் இருந்த இலக்கை நேரடியாக தாக்கியதாக தெரிவித்துள்ளது.
உத்தரகண்ட் சட்டசபைக்கு முதல் பெண் சபாநாயகர்
உத்தரகண்ட் சட்டசபைக்கு, முதல் பெண் சபாநாயகராக ரிது கந்துாரி, 57, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரகண்ட் சட்டசபையின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையை பெற்றுள்ள ரிது, கோட்வார் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றார். ரிதுவின் தந்தை மேஜர் ஜெனரல் புவன் சந்திர கந்துாரி, 88, ராணுவத்தில் பணியாற்றியவர்.ஓய்வு பெற்ற பின், பா.ஜ.,வில் இணைந்த கந்துாரி, இரு முறை உத்தரகண்ட் முதல்வராகவும், கார்வால் தொகுதி லோக்சபா எம்.பி.,யாகவும் பதவி வகித்தவர்.
Post a Comment