Type Here to Get Search Results !

TNPSC Group 4 Notification 2022. Apply Online 30.03.2022 Onwards : Total Vacancies: 7,382 Posts. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு

மொத்தம் 7,382 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடைபெறும் எனவும், இதற்காக மார்ச் 30 முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-4 தேர்வுக்கான தேதி மற்றும் காலி பணியிடங்களின் எண்ணிக்கையை உள்ளிட்ட அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் வெளியிட்டார். அவர் கூறியதாவது: 

மொத்தம் 7,382 காலி பணியிடங்கள் கொண்ட குரூப்-4 தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தின் மூலமாக நாளை முதல் ஏப்ரல் 28 வரை விண்ணப்பிக்கலாம். இதில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டாவின் மூலம் நிரப்பப்படும்.

  • மொத்த காலியிடங்களில் வி.ஏ.ஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான காலியிடங்கள் 274. 
  • தேர்வுகள் காலை 9:30 மணி முதல் 12:30 வரை நடைபெறும். 
  • மொத்தம் கேட்கப்படும் 200 கேள்விகளில் 100 கேள்விகள் முழுக்க முழுக்க தமிழில் கேட்கப்படும். 90 மதிப்பெண்களுக்கு மேலே பெற்றவர்களுக்கு மட்டும் தரவரிசை வெளியிடப்படும். 
  • அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகளை வெளியிட திட்டம். 

Post a Comment

0 Comments

Labels