-->

TNPSC Current Affairs Important Notes: 05.10.2020 & 06.10.2020

இந்திய-வங்கதேசம் இடையே கப்பற்படைகளின் கூட்டுப்யிற்சி துவக்கம்
  • இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே கப்பற்படைகளின் கூட்டுப்பயிற்சி வங்காள விரிகுடாவில் துவங்கியது. இப்பயிற்சியில் இந்திய போர்க்கப்பல்கள் கில்தான், குக்ரி ஆகியவற்றுடன் வங்கதேச கப்பல்களான அபுபக்கர், புரோட்டி, ஹேலோ உள்ளிட்டவை கலந்து கொள்கின்றன. வங்கதேச தலைவர் முஜிபர் ரகுமானின் பிறந்தநாளையொட்டி அந்நாடு இந்தியாவுடன் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய கடற்படை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சீன எல்லையில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில் இந்திய வங்கதேச கப்பற்படைகளின் கூட்டுப்பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தூய்மை இந்தியா திட்டத்தால் 99 சதவீத நகரங்களில் திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லை
  • மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் காரணமாக 99 சதவீத இந்திய நகரங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டில் மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை துவங்கியது. திறந்த வெளியில் இருக்கும் கழிப்பிடங்களை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தடுக்கும் நோக்கமாகவும், சுகாதாரத்தை முறையாக பராமரிக்கவும் இத்திட்டம் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பெரும்பாலும் கிராமங்களில் சுத்தமான கழிப்பறைகளை கட்டும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கிராமங்கள் உட்பட பெரும்பாலான நகரங்களில் 99 சதவீதம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவிற்கான ஆப்கனின் முதல் பெண் தூதர் 
  • இந்தியாவிற்கான ஆப்கனின் முதல் பெண் தூதரான சகியா வர்தக் திங்களன்று மும்பையில் உள்ள ஆப்கன் தூதரகத்தில் பொறுபேற்றுக் கொண்டார். அதையடுத்து மரியாதை நிமித்தமாக அவர் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை சந்தித்துப் பேசினார். அப்போது ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய பாராளுமன்ற கட்டடம் கட்ட இந்தியா உதவியதையும், கணிசமான ஆப்கன் மாணவர்களுக்கு இந்தியா மூலம் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதையும் அவர் வெகுவாகப் புகழ்ந்துரைத்தார்.
மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு
  • நோபல் கமிட்டியின் தலைவர் தாமஸ் பெர்ல்மன் நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்களை அறிவித்தார். 2020 ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹார்வே ஜே. ஆல்டர், மைக்கேல் ஹாஃப்டன் மற்றும் சார்லஸ் எம். ரைஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. 'ஹெப்படைட்டிஸ் சி வைரஸ்' என்ற வைரஸை கண்டறிந்ததற்காக மூவரும் இணைந்து மருத்துவத்துறைக்கான இந்த நோபல் பரிசை பெறுகின்றனர். இதில், ஹார்வே ஜே. ஆல்டர், வைரஸ் பரவும் விதம் குறித்தும், மைக்கேல் ஹாஃப்டன் ஹெப்படைட்டிஸ் சி வைரஸின் ஜீனோமை தனிமைப்படுத்தியும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், 'ஹெப்படைட்டிஸ் சி வைரஸ்' மட்டுமே ஹெப்படைடிஸை ஏற்படுத்தும் என்பதற்கான இறுதி முடிவை சார்லஸ் எம். ரைஸ் உறுதி செய்துள்ளார் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • நோபல் பரிசு: உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதில், அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படும். 
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.20,000 கோடி!
  • நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி மீது விதிக்கப்பட்டு வரும் செஸ் வரியின் வாயிலாக வசூலான ரூ.20,000 கோடி, மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
  • இஸ்ரோவுக்கு விலக்கு: வருவாய் துறை செயலா் அஜய் பூஷண் பாண்டே கூறுகையில், ‘‘வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான சேவைகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வழங்கி வருகிறது. அச்சேவையை வழங்குவதற்காகவே ‘ஆன்டிரிக்ஸ்’ என்ற நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்விரு நிறுவனங்கள் வழங்கும் சேவைகளுக்கு சரக்கு-சேவை வரியிலிருந்து விலக்களிப்பதற்கு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
  • ஜிஎஸ்டி இழப்பீடு: நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பைச் சரிகட்டும் நோக்கில் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குவதற்காக, ஆடம்பரப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் மீது 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டியுடன் சோ்த்து செஸ் வரியும் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
மேற்கு வங்கத்தில் பூல்பாகன் மெட்ரோ ரயில் நிலையம் திறப்பு
  • மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் பூல்காகன் மெட்ரோ ரயில் நிலையத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் திறந்து வைத்தார்.
டில்லியில் காற்று மாசுபாடு: விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கினார் கெஜ்ரிவால்
  • டில்லியில் காற்று மாசுபாடு எதிர்ப்பு தொடர்பாக "யுத் பிரதுஷன் கே விருத்" என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை முதல்வர் கெஜ்ரிவால் இன்று தொடங்கினார். இந்தியாவின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வேறு எந்த நாட்டிலும் காணப் படாத மாசுபாட்டு நிலைகளுக்கு ஆளாகின்றனர். காற்று மாசுபாடு ஒரு சராசரி இந்தியரின் வாழ்வை 5 ஆண்டுக்கும் மேலாக குறைக்கிறது. தேசிய தலைநகரம் டில்லியில் காற்று மிதமானது முதல் மோசமாக மாறக்கூடும் என்று கூறப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு மத்தியில், மாசுபட்ட காற்று உயிருக்கு ஆபத்தானது என்று டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று (அக்.,5) "யுத் பிரதுஷன் கே விருத்" என்ற மெகா காற்று மாசு எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடங்கினார்.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting