6 மலைமுகடுகளை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த இந்திய ராணுவம்
- சீனாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், கடந்த 3 வாரங்களில் மட்டும் லடாக்கின் கிழக்கு பகுதியில் 6 பகுதிகளை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஆகஸ்டு 29 முதல் செப்டம்பர் 2-வது வாரம் வரை, லடாக்கின் கிழக்கில் உள்ள பிங்கர் 4 பகுதியில் அமைந்துள்ள மகர், குருங், ரிசெஹன் லா, ரெஜாங்லா, மொக்பாரி உள்ளிட்ட 6 மலைமுகடுகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது.
தூதரக அதிகாரியை ஏற்க பாகிஸ்தான் மறுப்பு: இந்தியா கண்டனம்
- இந்திய தூதரகத்தின் பொறுப்பு அதிகாரியாக ஜெயந்த் கோப்ரகடே நியமனம் செய்யப்பட்டதை ஏற்காமல், பாகிஸ்தான் விசா வழங்க மறுத்துள்ளது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
சவுதியில் 1,20,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால்தடங்கள் கண்டுபிடிப்பு
- வடக்கு சவுதி அரேபியாவில் 1,20,000 ஆண்டுகள் பழமையான மனித கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சயின்ஸ் அட்வான்ஸ் என்ற பத்திரிகையில் ஆய்வு தொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவில் உள்ள வறண்ட ஏரியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு ஏரி காணப்பட்டதால், அதிக அளவிலான மனிதர்கள் மற்றும் விலங்குகள் வந்திருக்க வாய்ப்புள்ளதாக ஆராயச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்
- விவசாயிகளின் விளைபொருட்கள் வர்த்தக மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள், பார்லிமென்ட் லோக்சபாவில் அண்மையில் நிறைவேற்றப்பட்டன.
- இந்த நிலையில் விவசாய விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய இரு மசோதாக்களை 20.09.2020 அன்று மாநிலங்களவையில் மத்திய வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், வேளாண் மசோதாக்களை தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, பலத்த அமளிக்கு இடையே இரு மசோதாக்களும் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டன. அதன்படி உறுப்பினர்களின் குரல் ஓட்டு மூலம் மசோதாக்கள் நிறைவேறியதாக துணைத்தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார்.
- மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு மசோதாவான அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. அந்த மசோதாவை மற்றொரு நாளில் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
நேபாளத்திற்கு இரு ரயில்கள் ஒப்படைத்த இந்தியா
- சென்னை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இரு நவீன 'மீட்டர் கேஜ்' ரயில்களை, கொங்கன் ரயில்வே, நேபாள ரயில்வேயிடம் ஒப்படைத்தது. சோதனை ஓட்டமாக, முதல் ரயில், பீஹாரின் ஜெயநகரில் இருந்து 35 கி.மீ., துாரத்தில் உள்ள, நேபாளத்தின் குர்தா ரயில் நிலையம் சென்றது.
டிக்டாக் அமெரிக்காவில் ஆரக்கிள், வால்மார்ட் நிறுவனங்களுடன் செயல்பட அனுமதி: டிரம்ப்
- சீனாவின் டிக்டாக் செயலி அமெரிக்காவில் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களுடன் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கும் ஒப்பந்தத்தை ஆதரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்து வாஷிங்டன்னில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டிரம்ப், ‛ டிக்டாக் தலைமை நிறுவனமான பட்டேன்ஸ், ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் இவை மூன்றும் இணைந்து ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்க வேண்டும். இதன் மூலம் டிக்டாக், ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படும்'.
- ‛ஒப்பந்தத்தின் மூலம் புதிய நிறுவனத்தின் 53 சதவீத பங்குகளை அமெரிக்கர்களும் 36 சதவீத பங்குகளை சீனர்களும் வைத்திருக்க வேண்டும். முக்கிய தொழில்நுட்பங்களுக்கும், அமெரிக்கர்களின் தகவல்கள் பாதுகாப்பிற்கும் ஆரக்கிள் நிறுவனம் பொறுப்பேற்கும்' இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார் .
மாலத்தீவில் பொருளாதார நெருக்கடி: இந்தியா ரூ.1850 கோடி நிதியுதவி
- தெற்காசிய நாடான மாலத்தீவில், கொரோனா பாதிப்பால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து மீள்வதற்கு நிதியுதவி வழங்கும்படி, பிரதமர், நரேந்திர மோடியிடம், அந்நாட்டு அதிபர், இப்ராஹிம் முகமது சோலிஹ் கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து, கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காக, 1,850 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக, இந்தியா அறிவித்தது. நிதி வழங்கும் விழா, மாலேவில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தில், நடைபெற்றது.
செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்தபோது உயிரிழந்தவர்கள் 631 பேர்: என்சிஎஸ்கே
- கடந்த 10 ஆண்டுகளில் சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் போது, இதுவரை 631 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய சபாய் கரம்சாரிஸ் ஆணையம் National Commission for Safai Karamcharis (NCSK) தெரிவித்து உள்ளது. 2010 முதல் 2020 மார்ச் வரை சாக்கடைகள் மற்றும் செப்டிக் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது பதிவான இறப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல் அறியும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இந்த எண்ணிக்கை NCSK ஆல் வழங்கப்பட்டது.
தமிழக அரசுக்கு மின் ஆளுமை விருது
- ஊராட்சி நிர்வாகத்தில் தகவல் மற்றும் தொழில்நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியமைக்காக தேசிய அளவில் தமிழ்நாடு இரண்டாவதாக தேர்வு செய்யப்பட்டு, மத்திய ஊராட்சி அமைச்சகத்தால் தமிழக அரசிற்கு வழங்கப்பட்ட 2018-19-ம் ஆண்டுக்கான மின் ஆளுமை விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தீன் தயாள் உபாத்யாய மற்றும் சிறந்த கிராம ஊராட்சி விருதுகள்
- 2018-19-ம் ஆண்டுக்கான ‘தீன் தயாள் உபாத்யாய’ ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகளின் கீழ், சிறந்த மாவட்ட ஊராட்சி விருது தர்மபுரி மாவட்டத்திற்கும், சிறந்த வட்டார ஊராட்சி விருதுகள் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கும்,
- சிறந்த கிராம ஊராட்சி விருதுகள் கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் (கிழக்கு) கிராம ஊராட்சி, ஈரோடு மாவட்டம் குருமந்தூர் கிராம ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம் அம்புகோவில் கிராம ஊராட்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் கிராம ஊராட்சி, கோவை மாவட்டம் இக்கரை பொழுவாம்பட்டி கிராம ஊராட்சி, காஞ்சீபுரம் மாவட்டம் மேவளூர்குப்பம் கிராம ஊராட்சி ஆகிய 6 கிராம ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டது.
கிராம சபை விருது
- ஊரகப் பகுதி மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களை வலுவான கிராம சபையின் பங்களிப்புடன் செயல்படுத்தியமைக்கான ‘நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கவுரவ கிராம சபை விருது’ கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த களவனூர் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது. கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தினை திறம்பட தயாரித்ததில் சிறப்பாக செயலாற்றியமைக்கான கிராம ஊராட்சி வளர்ச்சி திட்ட தேசிய விருது திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த டி.சி. கண்டிகை கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.
- கிராமப்புற குழந்தைகளின் நலனை பேணும் வகையிலான வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியமைக்கான ‘குழந்தை நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருது’ விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த அனுமந்தபுரம் கிராம ஊராட்சிக்கு வழங்கப்பட்டது.
ஸ்கோச் தங்க விருது மற்றும் தேசிய நீர் புதுமை விருது
- சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திற்கு, ‘டயல் பார் வாட்டர் 2.0’ என்ற திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஸ்கோச் தங்க விருது மற்றும் கல்குவாரிகளை சேமிப்பு நீர்த்தேக்கங்களாக மாற்றிய திட்டத்திற்காக வழங்கப்பட்ட தேசிய நீர் புதுமை விருது ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டன.
Post a Comment