பொதுத்துறையில் சிறப்பாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்காக பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமிக்கு விருது
- இந்த ஆண்டிற்கான சிறந்த தொழில் முனைவோருக்கான விருது உள்பட பல்வேறு விருதுகளை தனியார் நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் வழங்கி கவுரவித்தார். பொதுத் துறையில் சிறந்த வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதற்கான விருதை பதிவுத்துறைத் தலைவர் ஜோதி நிர்மலாசாமிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
செயற்கை நுண்ணறிவுடன் கூடிய மின்னாளுமை ஊக்குவிக்கப்படும் தமிழக அரசின் புதிய கொள்கை வெளியீடு
- தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) இணைந்து, 15-ந் தேதி முதல் 19-ந் தேதிவரை காணொலிக் காட்சி வாயிலாக கனெக்ட்-2020 என்ற மாநாட்டை நடத்தின.
- சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதில் பங்கேற்று தகவல் தொழில்நுட்பவியல் துறையினால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு இணையப் பாதுகாப்பு கொள்கை-2020-ஐ வெளியிட்டார். இக்கொள்கை, மாநிலத்தில் இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், பாதுகாப்பு மீறல்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.
- அரசின் சமூக மற்றும் பொருளாதார நலத்திட்டங்களை இணையவழியில் நம்பகத்தன்மையுடன் கூடிய வெளிப்படையான முறையில் செயல்படுத்த, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒன்றான “பிளாக்செயின்” என்ற நம்பிக்கை இணையத் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு அரசுத் துறைகள் பயன்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு நம்பிக்கை இணையக் கொள்கை-2020-ஐ அவர் வெளியிட்டார்.
- தமிழ்நாடு அரசுத் துறைகள் மக்களுக்கான இணையவழி சேவைகளை வழங்குவதில் பயன்படுத்திக் கொள்வதற்கான உத்திகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கை -2020-ஐ முதல்-அமைச்சர் வெளியிட்டார். இதன்மூலம் வெளிப்படையான ஆளுமை மற்றும் வளர்ச்சி சார்ந்த இலக்குகளை தமிழ்நாடு எளிதாக எய்திட இயலும்.
கொரோனாவில் இருந்து மீண்டவர் எண்ணிக்கையில் முதலிடத்தில் இந்தியா
- இந்தியாவில் இதுவரை 42 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில், உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தை பெற்று உள்ளது.
தெற்கு ரெயில்வேயில் சிறந்த சேவை சென்னை சென்டிரல் இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேருக்கு டி.ஜி. விருது
- ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் சிறப்பாக பணியாற்றிய ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் டி.ஜி. விருதுக்காக 139 ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தேர்வாகி உள்ளனர். இதில் தெற்கு ரெயில்வேயில் ஒரு ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரி, இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. டி.ஜி. விருது பெற்றவர்கள் விவரம்.
- சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவனேசன்
- தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட தண்டையார்பேட்டை பாதுகாப்பு படை உதவி கமிஷனர் அணில்
- மதுரை கோட்ட சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார்
- சென்னை கோட்ட சப்-இன்ஸ்பெக்டர் பாலகுமார்
- திருச்சி கோட்ட தலைமை காவலர் ராமநாதன்
- சேலம் கோட்ட காவலர் பிரவீன்
- பாலக்காடு கோட்ட காவலர் நவீன்
‘ஐ.என்.எஸ். விராத்’ விமானந்தாங்கி கப்பலின் இறுதி பயணம் தொடங்கியது: குஜராத்தில் உடைக்கப்படுகிறது
- இந்திய கடற்படையில் பணியாற்றி வந்த ‘ஐ.என்.எஸ். விராத்’ விமானந்தாங்கி போர்க்கப்பல் மும்பையில் இருந்து குஜராத்துக்கு தனது கடைசி பயணத்தை தொடங்கியது. இங்கிலாந்து கடற்படையில் ‘எச்.எம்.எஸ். ஹெர்ம்ஸ்’ என்ற பெயரில் இயங்கி வந்த விமானந்தாங்கி போர்க்கப்பலை, இந்தியா கடந்த 1986-ம் ஆண்டு வாங்கியது. இது ஐ.என்.எஸ். விராத் என்ற பெயரில் இந்திய கடற்படையில் கடந்த 1987-ம் ஆண்டு பணியில் சேர்ந்தது. சுமார் 30 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய இந்த கப்பல் கடந்த 2017-ம் ஆண்டு இந்திய கடற்படையில் இருந்து விடுவிக்கப்பட்டது. இதை ரூ.38.54 கோடிக்கு குஜராத்தை சேர்ந்த ஸ்ரீராம் குரூப் நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.
- இந்தியாவில் உடைக்கப்படும் 2-வது விமானந்தாங்கி கப்பல் ஐ.என்.எஸ். விராத் ஆகும். முன்னதாக ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பல் கடந்த 2014-ம் ஆண்டு மும்பையில் உடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிகாரில் ரூ.14000 கோடியில் நெடுஞ்சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி
- பிகாரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்ட உள்ளார். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மாநிலத்தில் போக்குவரத்துக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ரூ.14 ஆயிரத்து 258 கோடி மதிப்பில் 9 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு 21.09.2020 அன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் மாநிலத்தின் 45,945 கிராமங்கள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 350 கி.மீ நீளம் அமைக்கப்பட உள்ள இந்த நெடுஞ்சாலை மூலம் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மேம்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய யோகா போட்டி: ஈரோட்டைச் சேர்ந்த 4 வயது சிறுவனுக்கு இளம் சாதனையாளர் விருது
- கூகுள் சேமிப்பகத்தில் உள்ள கழிக்கப்பட்டக் கோப்புகள் 30 நாள்களுக்குப் பிறகு தானாக நீக்கப்படும் என்ற அறிவிப்பை கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் டிரைவ் என அழைக்கப்படும் கூகுள் சேமிப்பகம் தங்களது பயனர்களுக்கு கோப்புகளை சேமிக்கும் வசதியை வழங்கி வருகிறது. தற்போது, கூகிள் சேமிப்பகத்தில் கழிக்கப்பட்ட கோப்புகளை காலவரையின்றி வைத்திருக்கும் முறை நடைமுறையில் உள்ளது. முன்னதாக கழிக்கப்பட்டக் பகுதியில் உள்ள (ட்ராஸ்) கோப்புகள் பயனரால் காலியாக்கப்படும் வரை காலவரையின்றி தக்கவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 13 முதல், கூகுள் சேமிப்பகத்தில் உள்ள கழிக்கப்பட்டக் கோப்புகளை அதன் இயங்குதளத்தில் இருந்து 30 நாட்களுக்கு பிறகு தானாக நீக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
முன்களப் பணி வீரர்களை பாராட்டும் 'சலாம் சென்னை': குறும்படம் வெளியீடு
- கரோனா வைரஸ் எதிர்ப்பு பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் முன்கள பணி வீரர்களை பாராட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பங்கேற்று நடித்துள்ள “சலாம் சென்னை” என்ற குறும்படத்தின் குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார். கரோனா வைரஸ் எதிர்ப்பு பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் முன்கள பணி வீரர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோரை பாராட்டும் வகையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் (IPL) அணி வீரர்கள் பங்கேற்ற “சலாம் சென்னை” என்ற குறும்படம் Happy Unicorn என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு Think Music என்ற நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.
ஐ.நா. பொது சபைக் கூட்டத்தின் இரு அமர்வுகளில் மோடி பங்கேற்பு
- செப்டம்பர் 21 ஆம் தொடங்க உள்ள ஐ.நா. பொது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்க உள்ளதாக ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
- செப்டம்பர் 30 ஆம் தேதி 'நிலையான வளர்ச்சிக்கு பல்லுயிர் மீதான அவசர நடவடிக்கை' என்ற கருப்பொருளுடன் பல்லுயிர் உச்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "இது ஐ.நா. பொது சபையின் பல்லுயிர் பற்றிய முதல் உச்சி மாநாடு ஆகும். இந்த உச்சிமாநாட்டில் நமது சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பங்கேற்க உள்ளார்" என்று அவர் கூறினார். உலகின் 10 பெரிய பல்லுயிர் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும், பல்லுயிர் துறையில் இந்தியா முக்கிய பங்கு வகித்துள்ளது.
- உலக மாநாட்டின் 25 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் ஒரு முக்கியமான நிகழ்வு அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி ரானி கலந்து கொள்ளவுள்ளார்,
- "அக்டோபர் 2 ஆம் தேதி, ஐ.நா. அணு ஆயுதங்களை முற்றிலுமாக அகற்றுவதற்கான சர்வதேச தினத்தை நடத்துகிறது. இதில், வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இந்தியாவின் கருத்துக்களை வழங்கவுள்ளார்.
7 ஆண்டு இடைநீக்கத்திற்கு பின் மீண்டும் ரயில் சேவையை தொடங்கும் நேபாளம்
- நேபாளத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூர் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. நேபாளத்தில் ஜனக்பூர் முதல் ஜெயாநகர் வரையிலான குறுகிய ரயில் பாதையில் பயணிகள் சேவை வழங்கப்பட்டது. சில காரணத்திற்காக இது 7 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. தற்போது இங்கு அகல ரயில் பாதை உள்ளிட்ட சில பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் இந்தியாவில் இருந்து காத்மாண்டு வாங்கிய இரண்டு செட் தண்டவாளங்கள் ஜனக்பூர் நகருக்கு வந்துள்ளதால் 7 வருட இடைநீக்கத்திற்குப் பிறகு பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்க நேபாளம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் எரிபொருள் தேவை நடப்பாண்டில் 11.5 சதவீதம் குறையும்: பிட்ச் சொலுசன்ஸ்
- பிட்ச் சொலுசன்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் எரிபொருள் தேவை 11.5 சதவீதம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.6 சதவீதம் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர், தொழில்துறை ஆகிய அனைத்து நிலைகளிலும் எரிபொருள் தேவை குறைந்துள்ளதால் அது செங்குத்தான சரிவை சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் நடப்பாண்டில் எரிபொருள் தேவை 9.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில் அது மறு ஆய்வு செய்யப்பட்டு அது மேலும் குறைந்து 11.5 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை: ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்றம்
- பார்லி மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 14ல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் ராஜ்யசபாவில் ஹோமியோபதி மத்திய கவுன்சில் திருத்த மசோதா 2020 மற்றும் இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் திருத்த மசோதா 2020 உள்ளிட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு வழியே நிறைவேற்றப்பட்டன.
- இம்மசோதாவின் படி மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தொற்றுநோய் சட்டத்தின் மூலம் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் கைதானால், அவர்களுக்கு ஜாமின் வழங்கப்படாமல் 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். மேலும் ரூ 50,000 முதல் ரூ 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும்: மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டம்
- புதிய கல்விக்கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Post a Comment