-->

TNPSC Current Affairs Important Notes: 07.09.2020 & 08.09.2020

உன்னத் பாரத் அபியான்’ திட்டம்: எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் முதல் இடம் பிடித்தது
  • ‘உன்னத் பாரத் அபியான்’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி முதல் இடத்தை பிடித்த எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தை மத்திய அரசு பாராட்டியுள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் மேற்பார்வையில் ‘உன்னத் பாரத் அபியான்’ திட்டத்தின் கீழ் கிராமங்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் தத்தெடுத்துள்ள கிராமங்களில் ‘உன்னத் பாரத் அபியான்’ திட்டத்தை செயல்படுத்த 59 திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்தது. அதில் 3 திட்டங்களான குடிநீர் சுத்திகரிப்பு திட்டம் அஞ்சூர் கிராமத்திலும், அங்குள்ள அரசு பள்ளியிலும், ஒரத்தூர் கிராமத்தில் வீடுகளில் சேரும் திடக்கழிவுகள் மூலம் எரிவாயு உற்பத்தி திட்டங்கள் 2018-19 கல்வி ஆண்டில் செய்து முடிக்கப்பட்டது.
  • தென்மேல்பாக்கம் பள்ளியில் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட ‘ஒரு மாணவர் ஒரு மரம்’ என்ற திட்டத்திற்காக நாட்டின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் முதல் இடத்தை வழங்கி மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், தூய்மை மற்றும் ‘ஸ்மார்ட்’ வளாகம் என்பதற்கான 3-வது இடத்தை வழங்கி அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகமும் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தை பாராட்டியுள்ளது.
விண்வெளிக்கு அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது:  சீனா
  • அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து, விண்ணில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளது. இதற்குப் போட்டியாக, சீனாவும் விண்ணில் ஆய்வு மையத்தை அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக சீனா பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மறு பயன்பாட்டுக்குரிய விண்கலத்தை சீனா உருவாக்கியுள்ளது. அந்த வகையில் விண்ணுக்குச் செல்லும் விண்கலம் தனது பணிகளை முடித்துவிட்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த புதிய விண்கலத்தை பரிசோதிக்கும் விதமாக கடந்த 04.09.2020 அன்று ஜியுகுவான் நகரில் உள்ள ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 2 எப் ராக்கெட் மூலம் விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீன தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்தது. இந்தநிலையில் 2 நாட்களுக்கு பிறகு (06.09.2020) சீனாவின் விண்கலம் நேற்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது. இதனை சீன தேசிய விண்வெளி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. 
ஆசிரியா்கள் கல்விக்கு புதிய பாடத்திட்டம்: ராம்நாத் கோவிந்த்
  • ஆசிரியா்கள் கல்விக்கு 2021-ஆம் ஆண்டுக்குள் புதிய பாடத் திட்டம் கொண்டு வரப்படும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா். மேலும், புதிததாக கொண்டு வரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை, மாணவா்களின் படைப்புத் திறனை அதிகரிப்பதுடன், இந்திய மொழிகளையும் மேம்படுத்தும் என்றும் அவா் தெரிவித்தாா். ‘உயா்கல்வியை மாற்றியமைப்பதில் தேசிய கல்விக் கொள்கையின் பங்கு’ என்ற தலைப்பில் மாநில ஆளுநா்களுக்கான மாநாடு காணொலி வாயிலாக 07.09.2020 அன்று நடைபெற்றது. 2021-ஆம் ஆண்டுக்குள் ஆசிரியா் கல்விக்கு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும். இதில் ஒருங்கிணைந்த கல்வி, பல்வகை பயிற்சிகள் அடங்கும். இவை உயா்கல்வித் துறையில் வருவதால் மாநிலங்கள் இவற்றை தற்போதே தொடங்கலாம். இதன் மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் உயா்தர கல்விமுறை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
  • ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2.8 சதவீதமும், தென் கொரியாவில் 4.2 சதவீதமும், இஸ்ரேலில் 4.3 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் வெறும் 0.7 மட்டும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தமிழகத்தில் வன்பொருள் உற்பத்தியை 25 சதவீதமாக உயா்த்த தனி கொள்கை: முதல்வா் வெளியிட்டாா்
  • தமிழகத்தில் வன்பொருள் உற்பத்தியை 16 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயா்த்த வகை செய்திட தனித்த கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை முதல்வா் பழனிசாமி  அவர்கள் 07.09.2020 அன்று வெளியிட்டாா். இந்தியாவின் மொத்த மின்னணு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 16 சதவீதமாகும். இதில், தமிழகத்தின் பங்களிப்பு 25 சதவீதமாக உயா்த்தப்படும். 2025-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் மின்னணு துறையின் உற்பத்தி 100 பில்லியன் அமெரிக்கன் டாலா்களாக உயா்த்தப்படும். அரைக்கடத்திகள் புனையமைப்பு துறையை தமிழகத்தில் வளா்த்தெடுப்பது, அடுத்த 4 ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் மின்னணு வன்பொருள் உற்பத்தித் துறையின் மனிதவளத் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் ஒரு லட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளித்தல் போன்றவை வன்பொருள் உற்பத்திக் கொள்கையின் நோக்கங்களாகும்.
  • மின்னணு வன்பொருள் உற்பத்திக் கொள்கையில், மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறையில் முதலீடு செய்ய முனைவோருக்கு நிதிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, முதலீட்டுத் தொகையில் 30 சதவீதம் வரை மூலதன மானியம், தொழில் ரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் திட்டங்களைச் செயல்படுத்துவோருக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலம் வாங்கும் செலவில் 50 சதவீத மானியம், நிதி நிறுவனங்களில் இருந்து பெறப்படும் காலக் கடன்களுக்கு அதிகபட்சமாக 5 சதவீதம் வரை வட்டி மானியம் போன்ற சலுகைகள் அளிக்கப்படும்.
  • மின்னணு அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் தொழிலகங்கள் வாங்கும் நிலங்களுக்கு 50 முதல் 100 சதவீதம் வரை முத்திரைத் தீா்வைகளுக்கு விலக்களிப்பு, முதன் முறையாக பணியமா்த்தப்படும் பணியாளா்களுக்கு, 6 மாதங்களுக்கு மாதத்துக்கு ரூ.4 ஆயிரம் பயிற்சி மானியம், பெண்களுக்கு மாதத்துக்கு ரூ.6 ஆயிரம் மானியம் அளிக்கப்படும்.
  • 5 ஆண்டுகளுக்கு மின்சார வரிவிலக்கு, காப்புரிமை விண்ணப்பங்களுக்கு ரூ.50 லட்சம் வரை 50 சதவீதமும், தரச்சான்றிதழ்களுக்கு ரூ.1 கோடி வரை 50 சதவீதமும் மானியம் வழங்கப்படும். பெரிய முதலீடுகள் அல்லது அதிகமதிப்பு கூட்டல், வேலைவாய்ப்பு, சிறந்த தொழில் சூழலை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளைக் கொண்ட முதலீடுகளுக்கு சிறப்பு தொகுப்பு சலுகை அளிக்கப்படும். மின்னணு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையங்களின் அருகில், தொழிலகங்களில் பணிபுரிவோருக்கு குடியிருப்பு திட்டங்கள் உருவாக்கப்படும். மின்னணு பழுதுபாா்க்கும் பூங்காக்கள் மற்றும் மின்கழிவு மேலாண்மைக்கான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி-மேம்பாடு, பொது வசதி மையங்கள் மற்றும் மின்னணு சோதனை மையங்கள் விரிவாக்கப்படும் என மின்னணு உற்பத்திக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான், தென் கொரியாவை தாக்கியது ‘ஹைஷெண்’ புயல்
  • பசிபிக் பெருங்கடலில் உருவாகிய ஹைஷெண் புயல் ஜப்பான், தென் கொரியா நாடுகளில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை புயலாக வேகமெடுத்து ஜப்பானை 07.09.2020 அன்று தாக்கியது. அதையடுத்து, தென் கொரியாவையும் அந்தப் புயல் தாக்கியது. இரு நாடுகளிலும் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணி துரிதப்படுத்தப்பட்டது. புயல் காரணமாக ஜப்பான், தென் கொரியாவில் விமானப் போக்குவரத்து கடும் பாதிப்புக்கு உள்ளானது.
சீனாவின் ஏற்றுமதி 9.5% அதிகரிப்பு
  • கரோனா தொற்று பரவல் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள சூழலில், சீனாவின் ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 9.5 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. சீனா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.17.64 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்தது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 9.5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஜூலை மாதத்தில் சீனாவின் ஏற்றுமதி 7.2 சதவீதம் வளா்ச்சியடைந்திருந்தது. அதே வேளையில், சீனாவின் இறக்குமதியும் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் ரூ.13.22 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்களை சீனா இறக்குமதி செய்தது. இது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் 2.1 சதவீதம் குறைவாகும்.
நிதி நெருக்கடியைச் சமாளிக்க ரங்கராஜன் குழு பரிந்துரைப்படி நடவடிக்கை
  • கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பொதுமுடக்கத்தால் பொதுமக்கள் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். தற்போதைய நிலையில் பல்வேறு கட்டங்களாக தளா்வுகள் அளிக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. எனவே கரோனா கால நிதி நெருக்கடியைச் சமாளிக்க தமிழக பொருளாதார மேம்பாட்டு ஆலோசனைக் குழு தலைவா் ரங்கராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரை தொடா்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தாா்.
உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் முன்னிலை
  • உலகளவில் உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் கடந்த 28 ஆண்டுகளாக முன்னிலை வகிப்பதாக ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். உலக அளவில் 10 லட்சத்தில் 49.6 பேர் உடல் உறுப்பு தானம் செய்கிறார்கள். ஆனால் ஸ்பெயின் நாட்டில் 10 லட்சத்தில் 117.4 பேர் தானம் செய்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளின் மொத்த உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் நாட்டின் பங்கு 20 சதவீதம் ஆகும். உலகின் மொத்த தானத்தில் ஸ்பெயின் நாட்டின் பங்கு 6 சதவீதமாக உள்ளது. அதே நேரத்தில், ஸ்பெயின் அமெரிக்காவை விட இறந்த நோயாளிகளிடமிருந்து அதிகமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது. உலகளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 6 சதவீதம் அதிகரித்து 1,46,840 ஆக உள்ளது.
நல்லாசிரியர் விருதுக்கு 375 பேர் தேர்வு: விருதுகளை வழங்கி கௌரவித்தார் முதல்வர் 
  • தமிழக முதல்வர் பழனிசாமி 08.09.2020 அன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தின விழாவையொட்டி பள்ளிகளில் சிறப்பான முறையில் பணியாற்றி தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட 375 ஆசிரியர்களில், சென்னை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10,000 ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார். தத்துவ மேதை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது” வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்து வருகிறது.

கண்தானம் செய்ய விரும்புவோருக்கான இணையதளம்: முதல்வர் தொடக்கி வைத்தார்
  • தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி 07.09.2020 அன்று தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கண்தானம் செய்ய விரும்புவோர்களுக்கு உதவிடும் வகையில், தமிழ்நாடு மாநில நலவாழ்வு குழுமத்தால் உருவாக்கப்பட்ட  இணையதளத்தை துவக்கி வைத்தார். பொதுவாக கண்தானம் செய்ய விரும்புவோர் யாரிடம் உறுதிமொழி கொடுப்பது, இறந்தபிறகு எவ்வாறு, எங்கு, எப்படி கண்களை தானமாக கொடுப்பது என்ற விவரங்கள் குறித்து தெளிவில்லாமல் இருப்பதால், அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டில் கண்தானம் செய்ய விரும்புவோர் குறித்த பதிவேட்டினை ஏற்படுத்தும் வகையிலும் https://www.hmis.tn.gov.in/eye-donor என்ற இந்த புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தோா் 64.12 லட்சம்
  • தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத நிலவரப்படி 64.12 லட்சமாக உள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 60 லட்சத்துக்கும் மேல் இருந்து வருகிறது. ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 64 லட்சத்து 12 ஆயிரத்து 327. அவா்களில், 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவா்கள் 12 லட்சத்து 7 ஆயிரத்து 813 பேரும், 19 முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 16 லட்சத்து 99 ஆயிரத்து 798 பேரும், 24 முதல் 35 வயது வரையுள்ள அரசுப் பணி வேண்டி காத்திருப்போா் 23 லட்சத்து 39 ஆயிரத்து 630 பேரும், 36 வயது முதல் 57 வயது வரை வயது முதிா்வு பெற்ற பதிவுதாரா்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 55 ஆயிரத்து 961 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டோா் 9 ஆயிரத்து 125 பேரும் உள்ளனா். மாற்றுத் திறனாளிகளும் தனியாக தங்களது பதிவுகளைச் செய்துள்ளனா். அதன்படி, ஆண்கள் 87 ஆயிரத்து 323 போ், பெண்கள் 45 ஆயிரத்து 282 போ் என ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 605 போ் உள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கண்தானம் தினம்: தன்னுடைய கண்களை தானம் செய்த முதலமைச்சர் 
  • இந்தியாவின் தேசிய கண் கொடை நாள் (National Eye Donation Day) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ஆம் நாள் கடைப்பிடிக்கபட்டு வருகிறது. இந்நிகழ்வு இருவாரக் கொண்டாட்டமாக ஆகஸ்டு 25 இல் ஆரம்பித்து செப்டம்பர் 8 இல் முடிவடைகிறது. 08.09.2020 அன்று தேசிய கண்தான தினம் (National Eye Donation Day) என்பதால், தன்னுடைய கண்களை தானம் செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi K Palaniswami) அறிவித்துள்ளார். இது அனைவருக்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கும். 
‘ஹைபா்சோனிக்’ ஏவுகணை செலுத்தும் வாகனம் வெற்றிகரமாக சோதனை
  • ஒலியின் வேகத்தைவிட சுமாா் 6 மடங்கு வேகத்தில் ஏவுகணையை ஏவும் திறன் கொண்ட வாகனம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. ஹைபா்சோனிக் தொழில்நுட்பத்திலான ஏவுகணை செலுத்து வாகனத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) உருவாக்கியுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அந்த வாகனத்தின் சோதனை திங்கள்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.  ‘ஹைபா்சோனிக் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவும் வாகனமானது ஒடிஸா கடற்பகுதியின் வீலா் தீவில் அமைந்துள்ள ஏபிஜே அப்துல் கலாம் ஏவுதளத்திலிருந்து 08.09.2020 அன்று காலை 11 மணியளவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
டி20 தரவரிசை: முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள ஆஸ்திரேலியா & இங்கிலாந்து அணிகள்
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் வெற்றியால் டி20 தரவரிசையில் முதல் இடத்தை ஆஸ்திரேலியாவுடன் பகிர்ந்துகொண்டுள்ளது இங்கிலாந்து அணி. டி20 தரவரிசையில் ஆஸ்திரேலியாவுக்கு இணையாக 273 புள்ளிகளைப் பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இதனால் இரு அணிகளும் தற்போது முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. 

Related Posts

Post a Comment

Labels

General Knowledge 902 General Studies 719 Central Govt. Job 309 General Tamil 177 Mock Test 133 PAPER - I 120 Civics 101 Indian Constitutions 91 Library Science Quiz 80 Anna University Jobs 72 Library and Information Science Paper II 71 Librarian Jobs 70 Computer Science Quiz 64 History Quiz 59 General English 56 NEET 2017 Model Questions 53 Geography 45 Library and Information Science 35 Computer Science 34 Computer Science PAPER - III 32 History Paper II 32 6th Tamil 30 Computer Science PAPER - II 22 6th Standard Science 20 Library and Information Science Paper III 19 PAPER - II 18 10th Science 17 General Science Mock Test 17 Life Science Quiz 17 9th Science 14 Nobel Awards 14 CBSC NET 13 History Mock Test 13 PAPER - III 13 Medical Physicist 12 Economics Paper II 10 8th Science 9 7th Tamil 8 Commerce Paper-2 8 Economics Paper III 8 History Paper III 8 NCERT Text Book 8 General Tamil Quiz 7 Home Science Paper II 7 Labour Welfare Paper III 7 8th Tamil 6 Anthropology Paper II 6 Anthropology Paper III 6 Arab Culture and Islamic Studies Paper II 6 Arab Culture and Islamic Studies Paper III 6 Archaeology Paper II 6 Archaeology Paper III 6 Comparative Literature Paper II 6 Comparative Literature Paper III 6 Comparative Study of Religions Paper II 6 Comparative Study of Religions Paper III 6 Criminology Paper II 6 Criminology Paper III 6 Education Paper - II 6 Education Paper - III 6 English Paper - II 6 English Paper - III 6 Environmental Sciences Paper - II 6 Environmental Sciences Paper - III 6 Forensic Science Paper II 6 Forensic Science Paper III 6 Geography Paper II 6 Geography Paper III 6 Home Science Paper III 6 Human Rights and Duties Paper II 6 Human Rights and Duties Paper III 6 Indian Culture Paper - II 6 Indian Culture Paper - III 6 International and Area Studies Paper II 6 International and Area Studies Paper III 6 Labour Welfare Paper II 6 Law Paper - II 6 Law Paper - III 6 Management Paper - II 6 Management Paper - III 6 Mass Communication Paper II 6 Mass Communication Paper III 6 Museology and Conservation Paper II 6 Museology and Conservation Paper III 6 Music Paper II 6 Music Paper III 6 Performing Arts Paper II 6 Performing Arts Paper III 6 Philosophy Paper II 6 Philosophy Paper III 6 Physical Education Paper - II 6 Physical Education Paper - III 6 10th Tamil 5 Commerce Paper-3 5 Folk Literature Paper II 5 Folk Literature Paper III 5 Geography Mock Test 5 Linguistics Paper II 5 Linguistics Paper III 5 7th Science 4 9th Tamil 4 Chemistry 4 Geography Quiz 4 11th Tamil 3 6th Standard History 3 7th Tamil Mock Test 3 9th standard Tamil Quiz 3 CSIR-NET - Chemistry 3 Computer Science Video 2 Mathematics Paper II 2 CSIR-NET - Physics 1 Civil Engineer Mock Test 1 Computer Science Paper II 1 General Knowledge Mock Test 1 Geology 1 Interview Questions 1 January Current Affairs - 2016 1 LIS Questions 1 Library Science Paper II 1 Life Science 1 Life Science Paper II 1 Mathematics Quiz 1
Subscribe Our Posting