பணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பு குறித்த போட்டியில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதலிடம்
- பணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பு குறித்த போட்டியில், பெரிய மருத்துவமனை பிரிவில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது.
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்துடன் (ஐ.சி.எம்.ஆர்.) இணைந்து இந்திய சுகாதார நிறுவனங்களின் ஒருங்கமைப்பான சி.எ.எச்.ஓ. அமைப்பு சார்பில், மருத்துவமனைகளில் பணியாளர்கள் மற்றும் பணியிட பாதுகாப்பு குறித்த போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெளிநாடுகளை சேர்ந்த 7 மருத்துவமனைகள், உட்பட இந்தியாவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பங்கேற்றன.
- இதில் தமிழகத்தை சேர்ந்த 2 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 4 பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் மிகப்பெரிய அளவிலான மருத்துவமனை பிரிவில் வேலூரை சேர்ந்த சி.எம்.சி. மருத்துவ கல்லூரி, மருத்துவமனை முதல் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து 300 முதல் 600 படுக்கை வசதிகள் கொண்ட பெரிய மருத்துவமனை பிரிவில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை முதல் இடம் பிடித்துள்ளது.
அமெரிக்காவில் டிக்டாக், வீசாட் செயலிகளுக்கு தடை
- அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு கருதி சீன செயலிகளான டிக்டாக், வீசாட் செயலிகளுக்கு 20.09.2020 முதல் தடைவிதிக்கப்படுவதாக அந்த நாட்டின் வர்த்தகத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இது பற்றிய உத்தரவை வர்த்தக செயலாளர் வில்பர் ராஸ் நேற்று பிறப்பித்தார். “அமெரிக்க குடிமக்களிடம் இருந்து இந்த செயலிகள் மூலமாக அந்தரங்க தகவல்கள் சேகரிக்கப்படுவதால் தேச பாதுகாப்பு நலன்கருதி டிக்டாக், வீசாட் போன்ற செயலிகள் தடை செய்யப்படுவதாக” அவர் அறிவித்தார். அமெரிக்காவில் 10 கோடி பேர் டிக்டாக் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது
- இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் சதவீதம் 49 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இந்தியாவில் 541 மருத்துவக் கல்லூரிகள் : மத்திய அமைச்சகம்
- மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா முழுவதும் தற்போது 541 மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இதில் 280 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 261 தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஆகும். நாடு முழுவதும் உள்ள 541 மருத்துவக் கல்லூரிகளில் 80,312 இடங்கள் உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு 381 மருத்துவக் கல்லூரிகளில் 54,348 இடங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், அதிகபட்சமாக கர்நாடகத்தில் 60 கல்லூரிகள், உத்தர பிரதேசத்தில் 55 கல்லூரிகள் உள்ளன. மேலும் தமிழகத்தில் 26 அரசுக் கல்லூரிகள், 24 தனியார் கல்லூரிகள் உள்பட 50 கல்லூரிகள் உள்ளது என தெரிவித்தனர்.
அயோத்திக்கு செல்லும் 600 கிலோ எடைகொண்ட வெங்கலமணி
- அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு நித்யபூஜைக்காக 600 கிலோ எடையில் வெங்கலமணி தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் தயாரிக்கப்பட்டு அயோத்திக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த மகாமணியை ஒரு மினிலாரியில் வைத்து யாத்திரையாக ராமேசுவரத்திலிருந்து தொடங்கி 4552 கி.மீ. அதாவது 10 மாநிலங்கள் வழியாக பயணித்து நிறைவாக அயோத்தியில் சேர்க்கப்படும்.
3 கோடி மக்கள் பட்டினியால் இறக்கும் அபாயம்: உலக பணக்காரர்கள் உதவ ஐநா அழைப்பு
- உலகில் 3 கோடி மக்கள் வறுமை பாதிப்பால் உணவுக்குக் கூட வழி இல்லாமல் இறக்கும் தருவாயில் இருப்பதால் அவர்களுக்கு உதவ உலகப் பணக்காரர்களுக்கு ஐக்கிய நாடுகள் அவை அழைப்பு விடுத்துள்ளது. பேசிய ஐக்கிய நாடுகள் அவையின் உணவுத் திட்டத் தலைவர் டேவிட் பீஸ்லி வறுமையால் பாதிக்கப்படும் மக்களை மீட்க உலகப் பணக்காரர்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
- “கரோனா நெருக்கடியால் உலகம் முழுவதும் 27 கோடி மக்கள் பட்டினியின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இவர்களில் 3 கோடி பேர் பட்டினியால் இறக்கும் அபாயத்தில் உள்ளனர்.” எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “உலகளவில் சுமார் 270 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர்.
- இந்த ஆண்டு 138 மில்லியன் மக்களை கூடுதலாக வறுமையை நோக்கி செல்ல உள்ளனர். உலக உணவுத் திட்டத்திலிருந்து அவர்களுக்கு உதவி கிடைக்காவிட்டால் அவர்கள் இறக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர்.” எனத் தெரிவித்துள்ளார்.
சூதாட்ட விளையாட்டு செயலிகளுக்குத் தடை: கூகுள்
- விளையாட்டுகளின் மீது பந்தயம் வைக்கும் சூதாட்ட செயலிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. விளையாட்டு போட்டிகளின் மீது இணையம் மூலம் பந்தயம் வைத்து விளையாடும் செயலிகள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் கூகுள் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் வரும் 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனிடையே ஐ.பி.எல்.போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் செயலிகளுக்குத் தடை விதிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூகுள் தெரிவித்துள்ளதாவது, ஆன்லைன் சூதாட்ட விடுதிகளை அனுமதிக்க மாட்டோம். விளையாட்டு பந்தயத்தை எளிதாக்கும் எந்தவொரு கட்டுப்பாடற்ற சூதாட்ட பயன்பாடுகளையும் ஆதரிக்க மாட்டோம். வெளிப்புற வளைதளம் மூலம் இணைய சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டு பணம் ஈட்டும் முறையும் எங்கள் விதிகளுக்கு புறம்பானது. பயனாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவே இத்தகைய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
40 சதவிகிதம் பாடத்திட்டங்கள் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
- குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைக்கு 15 நாள் தடைவிதித்த துபாய்
- இந்தியாவில் இருந்து துபாய்க்கு இயக்கப்பட்ட விமானங்களில் பயணிகள் கொரோனா தொற்றுடன் பயணித்ததால், அக்.,2 வரை 15 நாட்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் தடை விதித்துள்ளது.
பூமியின் சுற்றுப்பாதையில் இந்தியாவின் 49 செயற்கை கோள்கள்
- பூமியின் சுற்றுப்பாதையில் இந்தியாவின் 49 செயற்கை கோள்கள் பல்வேறு பயன்பாட்டிற்காக சேவை செய்து வருகின்றன என இஸ்ரோவின் யு.ஆர் ராவ் செயற்கைகோள் மைய இயக்குனர் குன்ஹிகிருஷணன் தெரிவித்து உள்ளார். கடந்த 2019 -2020 ம் ஆண்டுகளில் இந்தியா 12 செயற்கை கோளை உருவாக்கியது. அவற்றில் எட்டு செயற்கைகோள்கள் ஏவப்பட்டு விட்டன. மீதமுள்ள நான்கு செயற்கைகோள் ஏவுதலுக்கு தயாராக உள்ளன.
- தற்போது ஜிசாட் -1 மைக்ரோசாட் 2-ஏ, ஜிசாட் -12 ஆர் மற்றும் ரிசாட் -2 பிஆர் 2 ஆகியவை எவுதலுக்கு தயார் நிலையில் உள்ளன. பூமியின் சுற்றுப்பாதையில் இந்தியாவின் 49 செயற்கை கோள்கள் பல்வேறு பயன்பாட்டிற்காக சேவை செய்து வருகின்றன அவற்றில் தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பிற்காக 19, பூமி கண்காணிப்பு நோக்கத்திற்காக 20, கப்பல்படைக்கு உதவுவதற்காக 8, வானிலை ஆராய்ச்சிக்காக 2, இவை தவிர ஆஸ்ட்ரோசாட், சந்திராயன்-2(ஆர்பிட்டர்), மற்றும் செவ்வாய் கிரகத்தை சுற்றிவரும் மங்கல்யான் உள்ளிட்டவை அடங்கும்.
- மேலும் இந்திய விண்வெளி நிறுவனம் இதுவரை 33 நாடுகளைச் சேர்ந்த 319 செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் வைத்துள்ளது. சமீபத்திய புள்ளிவிவரங்கள் படி அமெரிக்கா பூமி சுற்றுப்பாதையில் 1300 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களைக் கொண்டுள்ளன, சீனா மற்றும் ரஷ்யா முறையே 363 மற்றும் 169 என கொண்டு உள்ளன. மொத்தமாக 2600 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் உள்ளன.
கொரோனா கூடுதலாக 150 மில்லியன் குழந்தைகளை வறுமையில் தள்ளுகிறது : யுனிசெப்
- கொரோனா தொற்றுநோயால் பல பரிமாண வறுமையில் (Multi-dimensional Poverty) வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 1.2 பில்லியனாக உயர்ந்துள்ளது என்று யுனிசெப் பகுப்பாய்வு தெரிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று நோயால் உலகளவில் கூடுதலாக 150 மில்லியன் குழந்தைகள் வறுமையில் மூழ்கியுள்ளனர். இது உலகெங்கிலும் பல பரிமாணங்களால், வறுமையில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கையை சுமார் 1.2 பில்லியனாகக் கொண்டுள்ளது என்று யுனிசெப் தெரிவிக்கிறது.
ஐ.நா., இளம் தலைவர்கள் குழுவுக்கு 17 பேர் தேர்வு
- ஐ.நா.,வின், இளம் தலைவர்களுக்கான நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குழுவில், டில்லியைச் சேர்ந்த, உதித் சிங்கால், 18, உட்பட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 17 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஐ.நா., பொதுச் செயலரின் இளையோருக்கான துாதர், ஜெயத்மா விக்ரமநாயகே வெளியிட்டுள்ள அறிக்கை:சமூக மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் இளைஞர்களை ஊக்குவித்து, கவுரவிக்கும் வகையில், இளையோருக்கான நிலைத்த வளர்ச்சி இலக்குகள் குழு தேர்வு செய்யப்படுகிறது.இந்தாண்டின் இளையோருக்கான, நிலைத்த வளர்ச்சிக் குழுவில், இந்தியா, பாக்., சீனா உள்ளிட்ட, நாடுகளைச் சேர்ந்த, இளம் தலைவர்கள், 17 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
- டில்லியைச் சேர்ந்த, 'பிரிட்டிஷ் பள்ளி' மாணவரான, உதித் சிங்கால், தனது, 'கிளாஸ் 2 சாண்ட்' திட்டத்தின் மூலம், கழிவு பாட்டில்கள் இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளார்.'சிலிக்கா' பிளாஸ்டிக் ஆதிக்கத்தால், பழைய கண்ணாடி பாட்டில்களுக்கு, நல்ல விலை கிடைப்பதில்லை. இதையடுத்து, உதித் சிங்கால், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பழைய பாட்டில்களை சேகரித்து, உயர்தரமான 'சிலிக்கா' மணலாக மாற்றுகிறார். இந்த வகையில், 8,000 பாட்டில்கள் மூலம், அவர், 4,815 கிலோ சிலிக்கா மணலை தயாரித்துள்ளார்.
Post a Comment