-->

Current Affairs in Tamil Medium - 14.08.2020

இந்தியாவில் நீண்ட காலம் பிரதமர் பதவி: நரேந்திர மோடிக்கு 4-வது இடம்
 • இந்தியாவில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர்களின் பட்டியலில் ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை தொடர்ந்து, பிரதமர் மோடி 4-வது இடத்தை பெறுகிறார்.
மாலத்தீவுக்கு இந்தியா ரூ.3,750 கோடி உதவி
 • மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதையடுத்து, மாலத்தீவில் 6.7 கி.மீ. தூர பிரமாண்ட பாலம் கட்டும் திட்டத்துக்கு இந்தியா ரூ.3 ஆயிரம் கோடி கடனாகவும், ரூ.750 கோடி மானியமாகவும் வழங்கும் என்று ஜெய்சங்கர் அறிவித்தார். தலைநகர் மாலே அருகில் உள்ள 4 தீவுகளுக்கு இந்த பாலம் இணைப்பு வசதியை அளிக்கிறது. மாலத்தீவு-இந்தியா இடையே வழக்கமான கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் ஜெய்சங்கர் கூறினார். மாலத்தீவுக்கு உணவு பொருட்கள், கட்டுமான பொருட்கள் வினியோகத்துக்கான ஒதுக்கீட்டை இந்தியா புதுப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை 1,382 பேர் உடல் உறுப்பு தானம்
 • இந்தியாவில் முதன் முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் கடந்த 2014-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம் அளிப்பதன் மூலம் 8 நபர்களுக்கு வாழ்வளிக்க முடியும். தமிழகத்தில் இதுவரை 1,382 கொடையாளர்களிடம் இருந்து 8 ஆயிரத்து 163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 5 முறையாக தமிழகம் முதலிடம் வகித்து மத்திய அரசின்விருதுகளை பெற்றுள்ளது.
 • ஏழை - எளிய மக்களுக்கு இலவசமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
 • உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளின் நலனை கண்காணித்து, அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைகளில் இருந்து அதற்கான விவரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெற்று, ஆய்வு செய்ய 10 ஆண்டுகளுக்கான தரவுகளை தேசிய அளவில் சேகரித்த முதல் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. 
அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், மன்னார்குடியை பூர்வீகமாக கொண்டவர்
 • அமெரிக்காவின் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ், தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பைங்காநாட்டை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் .கமலா ஹாரிஸ் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். கமலா ஹாரிஸ் தாத்தா கோபாலன், சிவில் சர்வீஸ் பணியில் 1930-ம் ஆண்டு பணியாற்றியவர். அப்போது ஜாம்பியா நாட்டிற்கு அகதிகளை கணக்கெடுப்பு செய்வதற்காக அப்போதைய ஆங்கிலேய அரசு கோபாலனை அனுப்பியுள்ளது.
 • பின்னர் கோபாலன், அமெரிக்காவில் குடியேறி உள்ளார். கோபாலனுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளில் சியாமளா கோபாலன் என்பவருக்கு மகளாக பிறந்தவர்தான் இன்று அமெரிக்கா துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ்.
டிரம்ப் முயற்சியால் இஸ்ரேல்- யு.ஏ.இ. இடையே அமைதி ஒப்பந்தம்
 • பல ஆண்டுகளாக நீடித்து வந்த இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதாக தவகல் வெளியாகியுள்ளன. இஸ்ரேலை தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு மத்திய கிழக்கு நாடுகளான எகிப்து, ஜோர்டான், லெபனான், ஈராக் , சிரியா, மற்றும் ஐக்கிய அரசு அமீரகம் உள்ளிட்ட அரசு நாடுகளும கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 
 • இந்நிலையில் கடந்த 1979-ல் எகிப்தும், 1994-ல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் திடீரென அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டன. தற்போது வளைகுடா நாடான யு.ஏ.இ. எனப்படும் ஐக்கிய அமீரகம் இணைந்துள்ளது. வளைகுடா நாடுகளில் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொண்ட முதல் நாடு யு.ஏ.இ.
பூடானில் முதல்முறையாக முழு ஊரடங்கு அமல்
 • கொரோனா நோய் பரவுவதை தடுத்து நிறுத்துவதற்காக பூடானில் நாடு முழுவதும் முதல்முறையாக முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில், அனைத்து பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் திறக்க அனுமதியில்லை. தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அரசு அறிவித்து உள்ளது.மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அரசு வலியுறுத்தி உள்ளது.
மருத்துவ பட்டங்களை அங்கீகரிக்க முடியாது: பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
 • ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மருத்துவப் பல்கலைகள் அளிக்கும் பட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்க முடியாது என இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது. காஷ்மீரிலிருந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு படிப்பதற்காக செல்பவர்கள், அங்கு பயங்கரவாத முகாம்களின் பயிற்சி பெற்று இந்தியாவுக்குள் ஊடுருவுவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில், இந்திய மருத்துவக் கவுன்சில் புதிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மருத்துவப் பல்கலைகள் அளிக்கும் பட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்க முடியாது என, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.
 • மேலும், ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என அனைத்து பகுதிகளும், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான் எனவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரிகள், இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
ரஷ்ய கொரோனா தடுப்பூசியை பிரேசிலில் தயாரிக்க ஒப்பந்தம்
 • ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி, பிரேசிலில் தயாரிக்க அந்நாட்டின் நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்துள்ளது. ரஷ்யா உலகிலேயே முதலாவதாக கொரோனா தடுப்பூசியினை பதிவு செய்துள்ளது. அந்நாட்டின் கமாலயா நிறுவனம் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பிரேசில் நாட்டின் பரானா மாகாணத்தினைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்று ரஷ்ய கொரோனா தடுப்பூசி மருந்து 2021ம் ஆண்டு இறுதியில் தயாரிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. அம்மருந்தினை பிரேசில் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் விநியோகிக்க டெக்பார் என்ற அந்த நிறுவனம் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பிரேசில் சுகாதார கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கும் பட்சத்தில் கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கான 3ம் கட்ட பரிசோதனையில் ரஷ்யாவுடன் பங்கேற்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரூ.2,800 விலையில் ரெம்டெசிவிர் மருந்து; ஜைடஸ் கெடிலா நிறுவனம் அறிமுகம்
 • கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் உயிர்காக்க வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை, ரூ.2,800 என குறைந்த விலையில் ஜைடஸ் கெடிலா நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. ஜைகோவி-டி என்ற பெயரில் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம், மனிதர்கள் மீதான பரிசோதனையின் 2-ம் கட்டத்தில் இருக்கிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்தை, இன்று அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில், ஹெட்ரோ லேப்ஸ், சிப்லா, மைலான், ஜூப்ளியன்ட் லைப் சயின்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து 5வது நிறுவனமாக ஜைடஸ் கெடிலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
 • ரெம்டாக் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ள இந்த மருந்தின், 100 எம்.ஜி., அளவு கொண்ட ஒரு மருந்தின் விலை ரூ.2,800 என நிர்ணயம் செய்துள்ளது. குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இம்மருந்தை, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்க வழிவகை செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரெம்டெசிவிர் மருந்துகளில், இம்மருந்து தான் மிகக் குறைந்த விலை என்பது குறிப்பிடத்தக்கது.
'ரஷ்யாவின் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்த தயார்': பிலிப்பைன்ஸ் அதிபர்
 • 'ரஷ்யா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை, மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த தயார்' என, பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்துள்ளார்.  ''ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து, மனித இனத்திற்கு நன்மை பயக்கும் என நம்புகிறேன். நான் ரஷ்யாவின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். ரஷ்யாவின் தடுப்பு மருந்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நாங்கள் தயார்,'' என்றார். மேலும், 'ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து சோதனைக்கு, முதலில் என்னையே நான் உட்படுத்துவேன்' எனவும் டியுடெர்ட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting