பிரதமர் மோடி பரிந்துரைத்த தேசிய மாணவர் படை விரிவாக்க திட்டத்துக்கு ராஜ்நாத் சிங் ஒப்புதல்
- பிரதமர் மோடி பரிந்துரைத்த பெரிய அளவிலான இந்த விரிவாக்க திட்டத்துக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்து உள்ளதாக ராணுவ அமைச்சகம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:- இந்த திட்டத்தின்படி மேற்படி 173 எல்லையோர மற்றும் கடலோர மாவட்டங்களில் 1000 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு தேசிய மாணவர் படை அறிமுகப்படுத்தப்படும். இந்த மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1 லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த படையில் சேர்க்கப்படுவார்கள். இதில் 3-ல் ஒரு பகுதியினர் மாணவிகளாக இருப்பர்.
- இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்படி எல்லையோர மாணவர்களுக்கு என்.சி.சி. பயிற்சி அளிப்பதற்காக மொத்தம் 83 தேசிய மாணவர் படை பிரிவுகள் மேம்படுத்தப்படும். இதில் ராணுவம் சார்பில் 53, கடற்படை மற்றும் விமானப்படை சார்பில் முறையே 20 மற்றும் 10 பிரிவுகள் மேம்படுத்தப்படும். இந்த எல்லையோர என்.சி.சி. மாணவர்களுக்கு ராணுவம் பயிற்சியளிக்கும். அதேநேரம் கடலோர பகுதி என்.சி.சி. பிரிவுகளுக்கு கடற்படையும், விமானப்படை தளங்கள் அமைந்திருக்கும் பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு விமானப்படையும் உதவும். என்.சி.சி.யை விரிவுபடுத்தும் இந்த திட்டம் மாநில அரசுகளின் உதவியுடன் செயல்படுத்தப்படும்.
மொரீஷியஸ் அருகே கடலில் கலந்த எண்ணெயை அகற்ற இந்தியா உதவி
- ஜப்பானை சேர்ந்த எண்ணெய் கப்பல் ஒன்று கடந்த மாதம் மொரீஷியஸ் கடல் பகுதியில் பவளப்பாறையில் மோதி உடைந்தது. இதனால் கப்பலில் இருந்த எண்ணெய் முழுவதும் கடலில் கொட்டியது. இதனால் மொரீஷியஸ் கடற்பகுதி முழுவதும் பெரும் மோசமடைந்தது. எனவே கடந்த வாரம் சுற்றுப்புறச்சூழல் அவசர நிலையை பிறப்பித்த பிரதமர் பிரவிந்த் ஜெகநாத், அந்த எண்ணெயை அகற்ற உகல நாடுகள் உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து கடலில் கொட்டிய எண்ணெயை அகற்றுவதற்கு 30 டன் தொழில்நுட்ப கருவிகளை விமானப்படை விமானம் மூலம் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. மேலும் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த சிறப்பு அதிகாரிகள் 10 பேரும் அங்கு உதவிக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் இரு மாவட்டங்களில் மீண்டும் '4ஜி' சேவை
- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்தாண்டு ஆகஸ்ட் 5-ல் நீக்கப்பட்டது. அதையடுத்து, மாநிலம், ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. பாதுகாப்பு கருதி, அங்கு, இணையதள சேவை உட்பட பல்வேறு சேவைகள் நிறுத்தப்பட்டன. பல சேவைகள் மீண்டும் அமலுக்கு வந்தன. ஆனால், ஜம்மு - காஷ்மீரில் மட்டும், 4ஜி இன்டர்நெட் சேவைக்கான தடை தொடர்கிறது. இந்நிலையில், காஷ்மீரிலுள்ள கன்தர்பால் மற்றும் உதம்பூர் மாவட்டங்களுக்கு சோதனை முயற்சியில் '4ஜி' இன்டர்நெட் சேவை வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள 'போஸ்ட் பெய்ட்' பயனாளர்களுக்கு இந்த வசதி தரப்பட்டுள்ளது. இன்று இரவு 9 மணி முதல் '4ஜி' சேவை வழங்கப்பட்டுள்ள நிலையில், செப்.,8 வரை இந்த வசதி சோதனை முயற்சியாக தரப்பட்டுள்ளது. அதேசமயம், மீதி உள்ள மாவட்டங்களில், '2ஜி' சேவை மட்டுமே தொடரும் என ஜம்மு காஷ்மீர் மாநில அரசு தெரிவித்துள்ளது.
தனியார் ரயில்களின் நிறுத்தங்களை அந்தந்த நிறுவனங்களே தேர்வு செய்யலாம்: ரயில்வே துறை
- தனியார் ரயில்களை இயக்கும் நிறுவனங்களே நிறுத்தங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 150 ரயில்களை இயக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2023ல் தனியார் ரயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் பம்பார்டியர், ஆல்ஸ்டாம், சீமென்ஸ் உள்ளிட்ட 23 நிறுவனங்களை ரயில்களை இயக்க விருப்பம் தெரிவித்துள்ளன. பயணக் கட்டணங்களை சந்தை நிலவரத்தைப் பொறுத்து அந்தந்த நிறுவனங்கள் தீர்மானித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக எந்தெந்த நிறுத்தங்களில் ரயில்களை நிறுத்துவது என்பதை அந்தந்த நிறுவனங்களே தீர்மானிக்கலாம்.
தமிழக அரசின் முக்கிய விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டோர்க்கு முதல்வர் விருது வழங்கி கெளரவித்தார்.
- 74-வது சுதந்திர தினம் தலைமைச் செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு சாதனைகளைப் புரிந்த சாதனையாளா்களுக்கு விருதுகளை முதல்வா் பழனிசாமி வழங்கினாா்.
- முதல்வரின் சிறப்பு விருது - கரோனா நோய்த் தடுப்புப் பணியில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளா் செளமியா சுவாமிநாதனுக்கு முதல்வரின் சிறப்பு விருது அளிக்கப்பட்டது.
- டாக்டா் ஆ,ப.ஜெ. அப்துல் கலாம் விருது - பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு கல்வியை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஆனந்தம் இளைஞா் அறக்கட்டளையின் நிறுவனா் - ச.செல்வகுமார் (இந்த விருதானது, 8 கிராம் தங்கத்தால் ஆன பதக்கம், ரூ.5 லட்சம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியன அடங்கியது.)
- கல்பனா சாவ்லா விருது - பெரம்பலூா் மாவட்டத்தில் கொட்டரை நீா்த்தேக்கப் பகுதியில் நீரில் தத்தளித்து உயிருக்குப் போராடிய நான்கு பேரை துணிச்சலுடன் அந்தப் பகுதியைச் சோந்த அத்தியூா் கிராமத்தின் செந்தமிழ்ச்செல்வி, ஆனந்தவள்ளி, ஆதனூா் வடக்கு கிராமத்தின் முத்தம்மாள் ஆகியோா் காப்பாற்றினா். மூன்று பெண்களின் துணிச்சலான செயலைப் பாராட்டி அவா்களுக்கு கல்பனா சாவ்லா விருதினை முதல்வா் அளித்தாா். (இந்த விருதானது ரூ.5 லட்சம் காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் அடங்கியதாகும்).
- சிறந்த கூட்டுறவு வங்கி விருது - சேலம் மத்திய கூட்டுறவு வங்கி
- சிறந்த சமூக பணியாளர் விருது - கி.சாந்தகுமாா்
- சிறந்த சமூக சேவகருக்கான விருது - கோவை மாவட்டத்தைச் சோந்த கோதனவள்ளி தோவு செய்யப்பட்டாா்
- பெண்களுக்கு சிறப்பான சேவைகளைச் செய்த கிரீட் எனப்படும் கிராமப்புற கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டு மையமானது சிறந்த நிறுவனமாகத் தோவு செய்யப்பட்டது.
- மாற்றுத் திறனாளிகள் நலன் விருது - மாற்றுத் திறனாளிகளுக்காக மிகச் சிறந்த சேவை புரிந்த சென்னை மயிலாப்பூா் சி.எஸ்.ஐ., காதுகேளாதோா் மேல்நிலைப் பள்ளி, சேலம் மாவட்டம் ஜாஹிா் அம்மாபாளையத்தைச் சோந்த டாக்டா் சியாமளா, மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு அளித்த நிறுவனமாக சக்தி மசாலா நிறுவனம்
- சிறந்த மாநகராட்சியாக வேலூா் மாநகராட்சியும் (ரூ.25 லட்சம்),
- சிறந்த நகராட்சிகளாக விழுப்புரம் (ரூ.15 லட்சம்) நகராட்சி முதல் பரிசையும், கரூா் (ரூ.10 லட்சம்) இரண்டாவது பரிசையும், கூத்தநல்லூா் (ரூ.5 லட்சம்) மூன்றாவது பரிசையும் பெற்றது.
- சிறந்த பேரூராட்சிகளின் வரிசையில் சேலம் மாவட்டம் வனவாசி (ரூ.10 லட்சம்) முதல் பரிசையும், இரண்டாம் பரிசு சேலம் மாவட்டம் வீரபாண்டிக்கு ரூ.5 லட்சமும், கோவை மாவட்டம் மதுக்கரைக்கு ரூ.3 லட்சமும் வழங்கப்பட்டது.
- முதலமைச்சரின் மாநில இளைஞா் விருது - மதுரை மாவட்டம் அருண்குமாா், கடலூா் மாவட்டம் ராம்குமாா், சென்னையைச் சோந்த எஸ்.அம்பேத்கா், கடலூா் மாவட்டம் மு.புவனேஸ்வரி (ரூ.50 ஆயிரம் காசோலை, பாராட்டுச் சான்று, பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய, இளைஞா் விருதினை முதல்வா் பழனிசாமி வழங்கினாா்)
துணை முதல்வரின் துறை உள்பட 3 துறைகளுக்கு நல்ஆளுமை விருதுகள்
- நிதித் துறையின் கீழ் வரும் கருவூலத் துறையின் செயல்பாடுகள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக நிதித் துறை முதல் பரிசுக்கு தேர்வாகியுள்ளது.
- கரோனா நோய்த் தொற்று தடுப்புக்காக சென்னை மாநகராட்சி சாா்பில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. இதற்காக சென்னை மாநகராட்சி இரண்டாவது பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- தண்ணீரை சிக்கனமாகச் சேமித்து அதனை விவசாயத்துக்கு பயன்படுத்தும் நுண்ணீா் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேளாண்மைத் துறைக்கு மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது.
- நல்ஆளுமைக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் - கரோனா நோய்த் தொற்றுக்காக பல்வேறு மருந்துகளைத் தொடா்ச்சியாக வழங்கிட தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் நடவடிக்கை எடுத்தது. இதேபோன்று, சைபா் குற்றத் தடுப்புப் பிரிவானது கரோனா தொற்றியவா்களைக் கண்டறிந்து தகவல்களைச் சேகரிக்கும் பணியில் தீவிரம் காட்டியது. எனவே, இரண்டு துறைகளின் செயல்பாடுகளையும் பாராட்டி நல்ஆளுமைக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
2022-இல் இந்தியா முழுமையாக சுயச்சாா்பு அடைய வேண்டும்
- '2022-ஆம் ஆண்டில் இந்தியா முழுமையான சுயச்சாா்பு நிலையை எட்டவேண்டும். அதற்கு நாம் புத்துணா்ச்சியுடனும், உறுதியுடனும் பணியாற்ற வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளாா்.
தேசியக் கொடியை ஏற்ற பிரதமருக்கு துணை நின்ற பெண் ராணுவ அதிகாரி
- நாட்டின் 74-ஆவது சுதந்திர தினத்தையொட்டி தில்லி செங்கோட்டையில் பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினாா். அவா் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பெண் ராணுவ அதிகாரி ஸ்வேதா பாண்டே துணைநின்றாா். உத்தர பிரதேசத் தலைநகா் லக்னௌவை சோந்த ஸ்வேதா பாண்டே கடந்த 2012-ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைக்கப்பட்டாா். சென்னையிலுள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் அவா் பயிற்சி பெற்றாா். பயிற்சியில் சிறந்து விளங்கியதற்காக பதக்கத்தையும் அவா் வென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பிரிட்டனில் 2-ஆம் உலகப் போா் வெற்றி தினக் கொண்டாட்டம்
- இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், நேசப் படைகளிடம் ஜப்பான் சரணடைந்த 75-ஆவது ஆண்டு தினம், அமெரிக்கா, பிரிட்டனில் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்பட்டது. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அமெரிக்கா இரு அணுகுண்டுகளை 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் வீசியது. இதனால் அந்த நகரங்களில் பேரழிவு ஏற்பட்டது.அதையடுத்து, அதே ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நேசப் படையிடம் ஜப்பான் சரணடைந்தது. அதையடுத்து, இரண்டாம் உலகப் போா் முடிவுக்கு வந்தது. அந்த நிகழ்வின் 75-ஆவது ஆண்டு தினம் வெற்றி தினமாக பிரிட்டனில் ஆகஸ்ட் 15 அன்று கொண்டாடப்பட்டது.
Post a Comment