-->

Current Affairs in Tamil 28th June 2020 | TNPSC, UPSC, RRB, TN-TRB, TN-TET Exams

1. நாடு முழுதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் அவசர சட்டத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் நாடு முழுதும் எத்தனை நகர கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன?
A. 1,482 
B. 2,482 
C. 3,482 
D. 4,482 

2. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பின் எத்தனையாவது மாநாடு 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடைபெற்றது?
A. 25 - ஆவது 
B. 35 - ஆவது 
C. 36 - ஆவது 
D. 37 - ஆவது 

3. தென் சீன கடலின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ள சீனாவுக்கு கீழ்கண்ட எந்த அமைப்பு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது?
A. ஐரோப்பிய யூனியன் 
B. ஐக்கிய நாடுகள் சபை 
C. நேட்டோ அமைப்பு 
D. ஆசியான் 

4. உலகின் மிகப்பெரிய கொரோனா மருத்துவமனை எங்கு திறக்கப்பட உள்ளது?
A. வாஷிங்டன் 
B. பெய்ஜிங் 
C. பாரிஸ் 
D. புது டெல்லி 

5. கீழ்கண்ட எந்த மாநிலத்தின் வனப்பகுதியை அதிகரிக்கும் பொருட்டு அம்மாநில முதல்வர் "ஹரிதா ஹராம் திட்டத்தை" துவக்கியுள்ளார்?
A. ஆந்திர பிரதேசம் 
B. தெலுங்கானா 
C. கர்நாடகா 
D. மத்திய பிரதேசம் 

6. பஞ்சாப் , ஹரியானா மாநிலங்களுக்கு கீழ்கண்ட எந்த நகரம் ஒரே தலைநகரமாக செயல்பட்டு வருகிறது?
A. ராய்ப்பூர் 
B. சண்டிகர் 
C. ஜெய்ப்பூர் 
D. அமிர்தசரஸ்

7. விஸ்டன் இந்தியா பேஸ்புக்கில் நடத்திய கணிப்பின்படி கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் யார்?
A. சச்சின் டெண்டுகர்
B. ஜாகீர் கான்
C. வெங்கடேஷ் பிரசாத் 
D. ராகுல் திராவிட்

8. சமீபத்தில் பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் முதன் முதலாக கீழ்கண்ட எந்த இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது?
A. கணேஷ் கோயில்
B. விஷ்ணு கோயில்
C.  ஸ்ரீ கிருஷ்ணா கோயில் 
D. ராம் கோயில்

9. இந்தியாவுக்கு வெளியே முதல் யோகா பல்கலைக்கழகத்தைத் திறக்க கீழ்கண்ட எந்த நாடு அடிக்கல் நாட்டியது?
A. அமெரிக்கா 
B. சீனா 
C. ஜப்பான் 
D. தாய்லாந்து 

10. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட தொடர் முடக்கத்தால் ஏற்பட்ட சிரமங்களைத் தடுக்க சிறு வணிகங்களுக்கு உதவ முத்ரா திட்டத்தின் கீழ் ஷிஷு ( Shishu Loan - குழந்தைக் கடன்) கடன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு  எத்தனை சதவீத வட்டி மானியத்தை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?
A. இரண்டு 
B. மூன்று 
C. நான்கு 
D. ஐந்து 

Related Posts

Post a Comment

Subscribe Our Posting