Type Here to Get Search Results !

Current Affairs in Tamil 25th May 2020 | TNPSC Download PDF | Video




1. கொரோனா பாதிப்பால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்கும் வகையில் எத்தனை கோடி ரூபாய் கடன் வசதி அளிக்க வேண்டும்' என, இந்தியாவுக்கு நம் அண்டை நாடான இலங்கை கோரிக்கை வைத்து உள்ளது?
A. 6,360 கோடி
B. 7,360 கோடி
C. 8,360 கோடி
D. 9,360 கோடி

கூடுதல் தகவல்: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 'கரன்சி ஸ்வாப் எனப்படும் செலாவணி பரிமாற்ற முறையின் கீழ், 8,360 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. 'சார்க்' எனப்படும் தெற்காசிய நாடுகளுக்கான ஒத்துழைப்பு அமைப்பின் மூலம், 3,040 கோடி ரூபாய் கடன் வழங்கும்படி, இந்தியாவிடம், இலங்கை ஏற்கனவே கேட்டுள்ளது. தற்போது, அதைத் தவிர கூடுதலாக, 8,360 கோடி ரூபாய் கடன் வழங்க வேண்டும் என, கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.


2. உலகின் அதிவேக இணைய சேவையை பதிவு செய்த நாடு எது?
A. இந்தியா
B. சீனா
C. ஆஸ்திரேலியா
D. இத்தாலி

கூடுதல் தகவல்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மொனஷ், ஸ்வைன்பேர்ன் மற்றும் ஆர்.எம்.ஐ.டி ஆகிய மூன்று பல்கலை.,களை சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து உலகின் அதிவேக இணைய சேவையை பதிவு செய்துள்ளனர். அதாவது, ஒரு விநாடிக்கு 44.2 டெரா பைட்ஸ் (44.2 TBps) என்ற வேகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, 1000க்கும் அதிகமான ஹெ.டி., தரத்தில் உள்ள படங்களை ஒரு விநாடியில் டவுன்லோடு செய்யும் வேகத்திற்கு சமமாகும்.


3. கீழ்கண்ட எந்த மாநில / யூனியன் பிரதேச அரசு சிக்கிம் மாநிலத்தை தனிநாடாக விளம்பரம் வெளியிட்டு சர்ச்சையானதை தொடர்ந்து, விளம்பரத்தை திரும்ப பெற்றது?
A. உத்திர பிரதேசம்
B. பஞ்சாப்
C. டில்லி அரசு
D. மேற்கு வங்காளம்

கூடுதல் தகவல்: சிவில் பாதுகாப்பு படையினருக்கான தன்னார்வலர்களை சேர்ப்பதற்காக அறிவிப்பு குறித்த விளம்பரம் டில்லி அரசு சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் நேபாளம், பூடான் போன்ற தனி நாடுகளைப் போல இந்தியாவை சேர்ந்த சிக்கிம் மாநிலத்தையும் தனி நாடு' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சிக்கிம் மாநிலம் 1975-ம் ஆண்டு மே 16-ம் தேதி இந்தியாவின் 22வது மாநிலமாக மாறியது.


4. ராஜிவ் குமார் கீழ்கண்ட எந்த அமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்?
A. இஸ்ரோ
B. டி.ஆர்.டி.ஒ
C. கொலிஜியம்
D. நீதி ஆயோக்


5. கீழ்கண்ட எப்படைப்பிரிவின் தலைவர்  'பி.எம்.கேர்ஸ்' (Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations) நிதிக்கு தனது சம்பளத்தில் மாதம் ரூ.50000 வழங்க முடிவு செய்துள்ளார்?
A. தரைப்படைத் தளபதி (ராணுவம்)
B. விமானப்படைத் தளபதி
C. கடற்படைத் தளபதி
D. முப்படைத் தளபதி

கூடுதல் தகவல்:
  • முப்படைத் தளபதி - விபின் ராவத்
  • The Prime Minister's Citizen Assistance and Relief in Emergency Situations Fund was created on 28 March 2020, following the COVID-19 pandemic in India. The fund will be used for combating, containment and relief efforts against the coronavirus outbreak and similar pandemic like situations in the future.


6. மக்களிடம் கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்வதற்காக நாடு முழுவதும் எத்தனை மையங்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளன?
A. 346 மையங்கள்
B. 131 மையங்கள்
C. 400 மையங்கள்
D. 450 மையங்கள்


7. நாட்டின் அந்தியச் செலவாணி கையிருப்பு மே 15 தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் எத்தனை கோடி டாலராக அதிகரித்துள்ளது?
A. 48,704 கோடி
B. 58,704 கோடி
C. 68,704 கோடி
D. 78,704 கோடி


8. கீழ்கண்ட எந்த நாட்டின் செனட் சீன நிறுவனங்களின் பங்குச் சந்தைகளில் இருந்து விலக்குவதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது?
A. இஸ்ரேல்
B. இத்தாலி
C. ஆஸ்திரேலியா
D. அமெரிக்கா


9. ஒடிசாவின் கீழ்கண்ட எந்த நகரத்தில் சூரியமயமாக்கலுக்கான திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது?
A. புவனேஷ்வர்
B. புரி
C. கோனார்க்
D. கட்டாக்


10. COVID-19 - ஊரடங்கிற்கு பிறகு தொடங்கிய உலகின் முதல் பெரிய விளையாட்டு நிகழ்வாக கீழ்கண்ட எந்த விளையாட்டு நிகழ்வு அமைகிறது?
A. லிகா சிரி ஏ லீக் கால்பந்து - இத்தாலி
B. பன்டெஸ்லிகா கால்பந்து லீக் - ஜெர்மனி
C. லா லிகா கால்பந்து - ஸ்பெயின்
D. லிகு-1 கால்பந்து - ஜெர்மனி


        Current Affairs in Tamil 25th  May 2020 | Video

Post a Comment

0 Comments

Labels