Ads 720 x 90

Current Affairs in Tamil 24th May 2020 | TNPSC Download PDF | Video





1. கீழ்கண்ட எந்த இந்திய பகுதிகளில் சீனா தனது படைகளை குவித்து வருகிறது?
A. டோக்காலாம்
B. லடாக்
C. வாகா
D. பாங்கோங்


2. உலக வங்கியின் பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் தெற்காசிய பிரிவு மேலாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதார வல்லுநர் யார்?
A. சி. ரங்கராஜன்
B. என்.நாராயண மூர்த்தி
C. ஆபாஸ் ஜா
D. ஹர்தீப்சிங் புரி


3. நாடுமுழுவதும் எத்தனை கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது?
A. 04 கோடி
B. 06 கோடி
C. 08 கோடி
D. 10 கோடி


4. "Mann Ki Baat - A Social Revolution On Radio" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்>
A. உமா சங்கர்
B. மாதுரி தீட்சித்
C. அருண்ஜெட்லி
D. அமிதாப் பச்சன்


5. ஐக்கிய நாடுகளின் பொது சேவை தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?
A. மே 15
B. மே 17
C. மே 20
D. மே 23

கூடுதல் தகவல்: 2002-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந்தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 23-ந்தேதியை ஐக்கிய நாடுகளின் பொதுசேவை தினமாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இந்நாளில் சிறப்பான பொதுசேவை செய்தவர்களுக்கு ஐ.நா. பொது சேவை விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. ஒரு பொது சேவை விருது விழாவை நடத்துகிறது. அப்போது உலக அளவிலான பொது சேவை நிறுவனங்களின் ஆக்கப்பூர்வமான சாதனைகளைப் பாராட்டி கவுரவப்படுத்துகிறது. ஐ.நா. பொது நிர்வாக நெட்வொர்க் பொது சேவை தினத்திற்கான சிறப்பு லோகோவைப் பயன்படுத்துகிறது. அதில் நீல நிறத்தில் மூன்று மனித உருவங்கள் இருக்கும். பொது சேவை என்ற வார்த்தை ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும். இன்று (ஜூன் 23-ந்தேதி) ஐக்கிய நாடுகளின் பொது சேவை நாளாகும்.

6. சர்வதேச ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
A. மே 10
B. மே 23
C. மே 25
D. மே 29

கூடுதல் தகவல்: பண்டைய கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதன்சில் நடத்தப்பட்டு வந்த இந்த போட்டி, 1894 ஜூன் 23ம் தேதி  சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உருவாக்கப்பட்ட பின்னர் தான் நவீன ஒலிம்பிக்காக பரிணாம வளர்ச்சி பெற்றது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கல்வியாளரும்  வரலாற்று ஆர்வலருமான பியரி டி கூபர்டின், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை நிறுவிய நாளே தற்போது சர்வதேச ஒலிம்பிக் தினமாக கொண்டாடப்பட்டு  வருகிறது. 1948-ல் தான் முதலாவது ஒலிம்பிக் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.


7. உலகில் பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ - Personal Protective Equipment) உற்பத்தி செய்வதில் இந்தியா எத்தனையாவது இடம் வகிக்கிறது?
A. முதலாவது
B. இரண்டாவது
C. மூன்றாவது
D. நான்காவது

கூடுதல் தகவல்: சீனாவைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குள் இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய பாதுகாப்பு உபகரணங்களை (பிபிஇ)  உற்பத்தி செய்கிறது. கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க பிபிஇ மிக முக்கியமானவையாகும்.


8. ‘Pradhan Mantri Vaya Vandana Yojana’ என்ற மூத்த குடிமக்களின் ஓய்வூதிய திட்டத்தை எந்த ஆண்டு வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
A. மார்ச் 31, 2022
B. மார்ச் 31, 2023
C. மார்ச் 31, 2025
D. மார்ச் 31, 2030


9. கரோனா நோயை எதிர்த்து போரிட 100 வளரும் நாடுகளின் அவசர நடவடிக்கைகளுக்கு உதவ உலக வங்கி அறிவித்துள்ள தொகை எவ்வளவு?
A. 100 மில்லியன் டாலர்
B. 160 மில்லியன் டாலர்
C. 180 மில்லியன் டாலர்
D. 200 மில்லியன் டாலர்


10. SWAYAM என்ற வார்த்தையில் S என்பதன் விரிவாக்கம் என்ன?
A. Scheme
B. Social
C. System
D. Study

கூடுதல் தகவல்: "Study Webs of Active-Learning for Young Aspiring Minds" is an Indian Massive open online course platform. SWAYAM is an initiative launched by the Ministry of Human Resource Development, Government of India under Digital India to give a coordinated stage and free entry to web courses, covering all advanced education, High School and skill sector courses. It was launched on 9th July 2017 by Honorable President of India.


Current Affairs in Tamil 24th  May 2020 | Video


Post a Comment

0 Comments