Imperialism - Imperialism in India
சீனாவில் ஏகாதிபத்தியம்
முதலாம் அபினிப் போர் (கி.பி. 1839- கி.பி. 1842)
- சீனா அரசு அபினி வணிகத்தை தடை செய்ததன் பொருட்டு ஆங்கிலேயர்களுக்கும் சீனப் பேரரசுக்கும் ஏற்பட்ட போர்தான் அபினிப் போர். இப்போரில் சீனா தோற்கடிக்கப்பட்டு கி.பி.1842 - ல் நான்கின் உடன்படிக்கை ஏற்பட்டது.
- ஹாங்காங் தீவை சீன இங்கிலாந்திற்கு நிரந்தரமாக தாரைவார்த்துக் கொடுத்தது.
தைபிங் கலகம் கி.பி. 1854
- நான்கிங் உடன்படிக்கையே பின்பற்றி பிற நாடுகள் சீனாவுடன் ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீனர்கள் கலகத்தில் ஈடுபட்டனர். இதுவே தைபிங் கலக மாகும்.
இரண்டாம் அபினிப் போர் (கி.பி. 1857- கி.பி. 1860)
- இரண்டாம் அபினிப் போரிலும் சீனா தோற்கடிக்கப்பட்டு கி.பி. 1860 பீகிங் உடன்படிக்கை ஏற்பட்டது. இதன்மூலம் ஆங்கிலேயர்கள் சீனாவின் கௌலூன் துறைமுகத்தை பெற்றனர்.
- மஞ்சு பேரரசியாரின் தூண்டுதல் பேரில் சீன இளைஞர்கள் கிளர்ச்சயில் ஈடுபட்டனர். இது பாக்ஸர் புரட்சி என்று அழைக்கப்படுகிறது.
1911 ஆம் ஆண்டு புரட்சி
- பிறநாடுகளின் ஏகாதிபத்தியத்தாலும் அமெரிக்க மற்றும் ஆங்கிலேய திறந்த வெளிக் கொள்கையாலும் சீன நாட்டை பங்கிட்டு கொண்டதன் விளைவாக 1911 ஆம் ஆண்டு புரட்சிக்கு வித்திட்டு சீனா குடியரசு நாடாக டாக்டர் சன்யாட்சென்னின் தலைமையில் உருவானது