Ads 720 x 90

10th Standard Social Science for TNPSC Exams - 1

1. Imperialism - Imperialism in India and China - தமிழில் முக்கிய குறிப்புகள் 
         
ஏகாதிபத்தியம் இந்தியா - சீனா

ஏகாதிபத்தியம் என்ற சொல் இம்பிரியம் (Imperium) என்ற லத்தின் சொல்லில் இருந்து வந்தது.  இதன் பொருள் ஆதிக்கம்  என்பதாகும் 

காலனி ஆதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியம் பின்பற்றிய காலம் 
  • காலனி ஆதிக்கம் - கி.பி  1492 ஆம் ஆண்டு முதல் 1763  கி.பி  ஆம் ஆண்டு வரை 
  • ஏகாதிபத்தியம் - கி.பி 1870 ஆம் ஆண்டு முதல் 1945  கி.பி  ஆம் ஆண்டு வரை 
காலனி ஆதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியம் - கருத்துரு 
  • ஜெர்மனியும் மற்றும் இத்தாலியும் ஆகிய நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்ட  ஆண்டு - 1870
  • ஜெர்மானியப் பேரரசு சீனாவிடம் இருந்து ஷான்டுங் தீபகற்பத்தின் மீது 99ஆண்டுகளுக்கான குத்தகை உரிமம் பெற்றுருந்தது
  • பிரிட்டன் மற்றும் ரசியா பாரசிக நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்ட ஆண்டு - 1907
  • பிரான்சு மொராக்கோ மீது தனது பாதுகாப்பை நிலைநாட்டிய ஆண்டு - 1912
  • பாரிசு அமைதி மாநாடு நடைபெற்ற ஆண்டு - 1919
இந்தியாவில் ஏகாதிபத்தியம்
  • ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழு இங்கிலாந்தில் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1600
  • ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழு முகலாய பேரரசர் ஜகாங்கீரின் அனுமதி பெற்று வணிக தளம் ஏற்படுத்திய இடம் - சூரத்
  • போர்ச்சுகீசிய கிழக்கிந்திய வணிகக் குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1664
  • போர்ச்சுகீசிய கிழக்கிந்திய வணிகக் குழு பதினான்காம் லூயியின் அமைச்சராக இருந்த கால்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது
  • பிரான்சு மற்றும் ஆங்கிலேயர்களுக்கிடையே ஏற்பட்ட பகமையின் விளைவு - கர்நாடா போர் 
இந்தியாவில் போர் 
பிளசிப்போர் - கி.பி.1757
  • ஆங்கிலேயரின் வரியில்லா வணிகம் கொள்கைக்கு எதிர்ப்பின் காரணமாக சிராஜ்உத் தெளலா மற்றும் ராபர்ட் கிளைவ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்டது. முடிவில் 24 பர்க்கானாக்களில் வரியில்லா வணிகம் செய்ய தடையில்லா உரிமம் பெற்றது ஆங்கில கிழக்கிந்திய வணிகக் குழு
பக்சார் போர் - கி.பி.1764
  • வங்காளத்தை ஆளும் தனி உரிமையே முகலாய மன்னர் இரண்டாம் ஷா ஆலமிடமிருந்து பெற்றது 
  • வெல்லெஸ்லி பிரபு - துனைப்படைத்திட்டம் 
  • டல்ஹௌசி பிரபு - வாரிசு இழப்புக்கொள்கை  
  • விக்டோரியா மகாராணி பேரறிக்கை - 1858
  • இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு - 1947

Post a Comment

0 Comments