Type Here to Get Search Results !

Current Affairs Today in Tamil - Date: 24.02.2018

அமெரிக்க அரசு அமுல்படுத்தியது  ஹெச்1பி விசா லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு பாதிப்பு.
  • அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு (யுஎஸ்சிஐஎஸ்) வெளியிட்டுள்ளதாவது. ஹெச்1பி விசாவுக்கான புதிய கொள்கைகளுக்கு அமெரிக்க அரசு 23.02.2018 அன்று ஒப்புதல் அளித்தது. அது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.  ஹெச்1பி விசா நடைமுறைகளை கடுமையாக்கி அமுல்படுதியன் மூலம் இந்தியர்களும், அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகக் கூடும்.
58 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு மார்ச் 23, 2018 அன்று தேர்தல்.
  • கேரளம், ஆந்திரா, கர்நாடகம், பிகார், மகாராஸ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் காலியாக உள்ள 58 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு மார்ச் 23, 2018 அன்று தேர்தல் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கிடையேயான எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் தொடக்கம்:
  • இந்தியா,  ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் பயன்பெறும் இயற்க்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் துர்க்மெனிஸ்தான் நாட்டில் செர்கேதாபாத் என்ற இடத்தில் 23.02.2018 அன்று தொடங்கியது. 
எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் சாரம்சம்:
  • துர்க்மெனிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு இயற்க்கை எரிவாயு குழாய் 1840 கிலோமீட்டர் தொலைவுக்கு பதிக்கப்படுகிறது.
  • 2020 ஆம் ஆண்டிற்குள் இயற்க்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் முடிவடையும்.
  • நான்கு நாடுகளுக்கும் ஆண்டொன்றுக்கு 3300 கனமீட்டர் எரிவாயு விநியோகம் செய்யப்படும்.
  • இந்தியாவும் பாகிஸ்தானும் தலா 1400 கனமீட்டர் அளவுக்கும் மீதம் எஞ்சியுள்ள 500 கனமீட்டர் எரிவாயுவை ஆப்கானிஸ்தானும் பங்கிட்டுக்கொள்ளும்.
நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாள்கள் அதிகரிக்கப்படவேண்டும்: பிரணாப் முகர்ஜி
  • நாடாளுமன்ற கூட்டத் தொடர் செயல்படும் நாள்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
கூட்டத் தொடர் நாள்கள் குறித்த செய்தி 
  • கடந்த 1950-களில் மக்களவை அமர்வுகள் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 127 நாள்கள் நடைபெற்றன. மாநிலங்களவை அமர்வுகள் சராசரியாக 93 நாள்கள் நடைபெற்றன.
  • தற்போது இரு அவைகளிலும் அமர்வுகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 75 நாள்களாக குறைந்துவிட்டது. 
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ஓட்டுநர் உரிமங்களில் 30% போலியானவை 
  • நாடு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் ஓட்டுநர் உரிமங்களில் 30 சதவீதம் போலியானவை என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி தெரிவித்தார்.
  • நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் விபத்துகள் நேரிடுகின்றன. இதில் 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். . 
  • 2,000 மோட்டார் பயிற்சி மையங்களும் விரைவில் நாடு முழுவதும் திறக்கப்பட இருக்கின்றன. 
  • ஓட்டுநர் தேர்வு முடிந்ததும், சம்பந்தப்பட்ட நபருக்கு 3 நாள்களில் ஓட்டுநர் உரிமத்தை பிராந்திய போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஒ) அளிப்பது கட்டாயமாகும்
தனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி - ஒடிஸா
  • அணுகுண்டை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட தனுஷ் ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. ஒடிஸா மாநில கடற்பகுதியில் தனுஷ் ஏவுகணை, இந்தியக் கடற்படையிலுள்ள ராணுவத் தளவாட பிரிவால் 23.02.2018 அன்று  வங்காள விரிகுடா கடலில் பாராதீப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படைக் கப்பலில் இருந்து தனுஷ் ஏவுகணை செலுத்தப்பட்டது.
தனுஷ் ஏவுகணையின் சாராம்சம் 
  • தனுஷ் ஏவுகணையானது, ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்தில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கக் கூடியது. 
  • கடற்படையில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது.
  • தனுஷ் ஏவுகணை 350 கிலோ மீட்டர் தூரம் பறந்து செல்லக் கூடியது. 
  • அணுகுண்டுகள் உள்பட 500 கிலோ வெடிப்பொருள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது.
  • பல்வேறு கட்ட சோதனைகளில் கிடைத்த வெற்றியையடுத்து, இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் தனுஷ் ஏவுகணை ஏற்கெனவே  கடைசியாக கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி, தனுஷ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: கண்காணிக்கப்படும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான்
  • பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் விவகாரத்தில், பாகிஸ்தானை கண்காணிக்கப்படும் நாடுகள் பட்டியலில் வைப்பதற்கு, 'நிதி நடவடிக்கை அதிரடி படை' (எஃப்ஏடிஎஃப்) என்ற சர்வதேச அமைப்பு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி நடவடிக்கை அதிரடி படை' (எஃப்ஏடிஎஃப்)
  • பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த 1989-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட 
  • எஃப்ஏடிஎஃப்-ல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜெர்மனி, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 
  • சர்வதேச நிதி நடைமுறைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள விவகாரங்களில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
ஏர்டெல்-ஹுவே நிறுவனங்கள் இந்தியாவில் முதல் 5ஜி சோதனை
  • தொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த பார்தி ஏர்டெல் மற்றும் கைபேசி கருவிகளை தயாரித்து வரும் ஹுவே ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் முதல் 5ஜி சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளன.
ஏர்டெல் நெட்வொர்க் 5ஜி சோதனை
  • ஹரியாணா மாநிலம் மானேசரில் உள்ள ஏர்டெல் நெட்வொர்க் மையத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது, விநாடிக்கு டேட்டா வேகத்தின் அளவு 3 ஜிகாபைட் வரை எட்டப்பட்டது. 
  • தற்போதுள்ள 3.5 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட்-100 மெகாஹெர்ட்ஸ் மொபைல் நெட்வொர்க்கில் இது அதிகபட்ச அளவாக கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments

Labels