4/17/2024

இஸ்ரோ ராக்கெட் எஞ்சினில் புதிய இலகுரக கட்டமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது!

4/17/2024 0
 இஸ்ரோ ராக்கெட் எஞ்சினில் புதிய இலகுரக கட்டமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது!
இஸ்ரோ ராக்கெட் எஞ்சினில் புதிய இலகுரக கட்டமைப்பு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது!
    இஸ்ரோ ராக்கெட் எஞ்சினில் உந்துவிசைக்கு பயன்படுத்தப்படும் நாசில் (Nozzle) எனப்படும் கட்டமைப்பை மிகவும் இலகுவான எடையில் உருவாக்கி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ராக்கெட்டின் நான்காம் நிலையில் (PS4) அதிக எடையுள்ள ஆய்வுக் கருவிகளை எடுத்துச் செல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய நாசில் கட்டமைப்பு கார்பன்-கார்பன் அமைப்பைக் கொண்டுள்ளது, இது பாரம்பரிய கொலம்பியம் அலாய் நாசில்களை விட 67% வரை குறைவான எடையைக் கொண்டுள்ளது. இதன் விளைவாக:

  • ராக்கெட்டின் உந்துவிசை திறன் அதிகரிக்கும்
  • எரிபொருள் திறன் மேம்படும்
  • PS4 நிலையில் 15 கிலோ வரை கூடுதல் எடையுள்ள ஆய்வுக் கருவிகளை ஏற்றிச் செல்ல முடியும்
    புதிய நாசில் கட்டமைப்பு திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் (VSSC) வடிவமைக்கப்பட்டு, மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ ஆராய்ச்சி மையத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

    இந்த புதிய தொழில்நுட்பம் இந்தியாவின் விண்வெளி ஆய்வு திறனை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய படியாகும், மேலும் எதிர்கால விண்வெளி ஆய்வுக் காரியங்களுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Group 4 General Tamil Important Questions and Answers published by Dinamani Part- 5

4/17/2024 0
Dinamani Newspaper Published important question of TNPSC (Tamil Nadu Public  Service Commission) Exam.  

TNPSC குரூப் 4, குரூப் 2 தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடக் குறிப்புகள். இதைத் படித்து நடைபெற இருக்கும் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்.

நன்றி: தினமணி நாளிதழ் 

நான்மணிக்கடிகை

நூல்குறிப்பு:
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நான்மணிக்கடிகை.
  • கடிகை என்றால் அணுகலன்(நகை)
  • நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.
  • ஒவ்வொரு பாட்டும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன.
ஆசிரியர் குறிப்பு:
  • பெயர்: விளம்பிநாகனார்.
  • விளம்பி என்பது ஊர்பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
உரைநடை: ஆராரோ ஆராரோ
  • தாளில் எழுதாமல் பிறர் பாடுவதை கேட்டு பாடுவது நாட்டுப்புற பாடல்
  • எழுதப்படாத வாய்வழியாக பரவுகிற கதைகள் வாய்மொழி இலக்கியம் என்பர்.
  • கானாப் பாடல், கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மீனவர்கள் பாடும் பாடலும் நாட்டுப்புற பாடலே.
  • நாட்டுப்புற பாடலை பல வகைகளாக பிரிப்பர்.
  • தாலாட்டு பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், சடங்குப் பாடல்கள், கொண்டாடப் பாடல்கள், வழிப்பாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள்.
சொற்பொருள்
  • மடவாள் - பெண்
  • தகைசால் - பண்பில் சிறந்த
  • உணர்வு - நல்லெண்ணம்
  • புகழ்சால் - புகழைத் தரும்
  • காதல் புதல்வர் - அன்பு மக்கள்
  • மனக்கினிய - மனத்துக்கு இனிய
  • ஓதின் - எதுவென்று சொல்லும்போது
துணைப்பாடம்: வீரச்சிறுவன்
  • ஜானகிமணாளன் எழுதிய அறிவை வளர்க்கும் அற்புத கதைகள் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட சிறுகதை இது.
  • பதினான்கு வயதுள்ள சிறுவன் குதிரையை அடக்கினான். அந்த சிறுவன் விவேகானந்தர்.
  • விவேகானந்தரின் இயற்பெயர் - நரேந்திரதத்.
  • புரட்சி துறவி - வள்ளலார்.
  • வீரத் துறவி - விவேகானந்தர்
இலக்கணமும் மொழித்திறனும்
  • தமிழ்ச்சொற்கள் நான்கு வகைப்படும். அவை: பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல். இவற்றில் முதன்மையானவை பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும்.
Courtesy: Dinamani
நன்றி: தினமணி நாளிதழ்

குறிப்பு:
1. வாசகர்கள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை deenapmn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.

4/06/2024

Library and Information Assistant Post in AIIMS (Andhra Pradesh)

4/06/2024 0
Library and Information Assistant Post in AIIMS (Andhra Pradesh)
All India Institute of Medical Sciences Madurai
Mangalagiri (Andhra Pradesh)
Mangalagiri - 522503.

AIIMS/MG/Admin/Recruitment /03/Non Faculty/2024/01 Date: 15.03.2024

Online applications are invited from eligible Indian citizens for the posts of various non faculty Group-A, Group-B and Group-C posts on DIRECT RECRUITMENT BASIS in All India Institute of Medical Sciences, Mangalagiri, AP. 

Name of the Post: Library and Information Assistant - 01 Post  Salary: Pay of Rs.35,400/- in Level 6 

Qualification: 
Essential: 1. Bachelor's degree in Library Science or Library and Information Service from a recognised University/Institute OR B.Sc. Degree or equivalent from a recognized University and Bachelor Degree of Post Graduate Diploma or equivalent in Library Science from a recognized University or Institute With 

2. 2 years Professional experience in a Library of under Central/State/ Autonomous/Statutory Organization/PSU/ University or recognized research and education institution. 

3. Ability to use computers-Hand on experience in office application, spread sheets and presentations 

Desirable : Diploma in Computer Application from a recognized University or Institute

For more details refer Notification PDF Link: Click Here





4/04/2024

TNPSC Group 4 General Tamil Important Questions and Answers published by Dinamani Part- 4

4/04/2024 0

Dinamani Newspaper Published important question of TNPSC (Tamil Nadu Public  Service Commission) Exam.  


TNPSC குரூப் 4, குரூப் 2 தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடக் குறிப்புகள். இதைத் படித்து நடைபெற இருக்கும் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்.

நன்றி: தினமணி நாளிதழ் 

பறவைகள் பலவிதம்
  • திருவெல்வேலி மாவட்டம் கூத்தனகுளத்தில் மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை, ஏனென்றால் அங்கு கூடும் பறவைகள் பயந்து விடாமல் இருக்கவே.
  • உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்திற்குப் பெயர் - பறவைகள் சரணாலயம்.
  • அதிக பணி அல்லது அதிக வெயிலின் காரணமாக புறவைகள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு பறந்து செல்வது - வலசை போதல்
  • பறவைகள் நமக்கு பருவகால மாற்றத்தை உணர்த்துகின்றன.
  • ஒரு நாட்டில் பழம் தின்றுவிட்டு, மற்றொரு நாட்டில் எச்சமிடுவதன் காரணமாக அங்கு மரம், செடி, கொடி போன்றவை உருவாக பறவைகள் காரணமாகின்றன.
  • வயல்வெளிகளில் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள், வண்டுகளை தின்று விவசாயிகளுக்கு உதவுகின்றன.
பறவைகள் ஐந்து வகையாக பிரிப்பர்.
1. தென்னை குடித்து வாழும் பறவைகள்
2. பழத்தை உண்டு வாழும் பறவைகள்
3. பூச்சியை தின்று வாழும் பறவைகள்
4. வேட்டையாடி உண்ணும் பறவைகள்
5. இறந்த உடல்களை உண்டு வாழும் பறவைகள்.
  • பூநாரையானது நிலத்திலும் அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும் வாழக்கூடியது. கடும் வெப்பத்தையும் எதிர்கொள்ளும் தன்மை கொண்டது.
  • சமவெளி மரங்களில் வாழும் சில பறவைகள்: மஞ்சள் சிட்டு, செங்காகம், கடலைக்குயில், பனங்காடை, தூக்கணாங்குருவி.
  • நீர்நிலையில் வாழும் சில பறவைகள்: கொக்கு, தாழைக்கோழி, பவளக் காலி, ஆற்று உள்ளான், முக்குளிப்பான், நாரை, அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், ஊசிவால் வாத்து.
  • மலைகளில் வாழும் சில பறவைகள்: இருவாச்சி, செந்தாலைப் பூங்குருவி, மின்சிட்டு, கருஞ்சின்னான், நீலகிரி நெட்டைகாலி, பொன்முதுகு, மரங்கொத்தி, சின்னக்குறுவான், கொண்டாய் உலவரான், இராசாளிப் பருந்து, பூமன் ஆந்தை.
  • தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயம் = 13
  • பருவ காலத்தை மனிதர்களுக்கு உணர்த்துபவை - பறவைகள்
  • உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளை பரப்புவது - பறவைகள்.
  • நம் நாட்டில் சுமார் 2400 வகைப்பறவைகள் உள்ளன.
  • பறவைகள் பருவ நிலை மாற்றத்தால் இடம் பெயருவதை - வலசை போதல் என அழைப்பர்.
  • வெயிலும், மழையும், பனியும் மாறி மாறி வருவதை - பருவநிலை மாற்றம் என அழைப்பர்.
  • அதிக பனிப்பொழியும் மாதம் - மார்கழி மாதம்.
  • அதிகம் வெயில் அடிக்கும் காலத்தை - கோடைக்காலம் என அழைப்பர்.
  • நிலத்திலும், அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்; கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை - பூ தாமரை.
தமிழ்நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயங்கள்:
  1. வேடந்தாங்கல்
  2. கரிக்கிளி(காஞ்சிபுரம் மாவட்டம்)
  3. கஞ்சிரால்குளம்
  4. சித்திரஸ்குடி
  5. மேலக் செல்வனூர் (இராமநாதபுரம் மாவட்டம்)
  6. பழவேற்காடு (திருவள்ளுவர் மாவட்டம்)
  7. உதயமார்த்தாண்டபுரம்(திருவாரூர் மாவட்டம்)
  8. வடுவூர் (தஞ்சை மாவட்டம்)
  9. கரைவெட்டி(பெரம்பலூர் மாவட்டம்)
  10. வேட்டங்குடி(சிவகங்கை மாவட்டம்)
  11. வெள்ளோடு (ஈரோடு மாவட்டம்)
  12. கூந்தன்குளம் (திருவெல்வேலி மாவட்டம்)
  13. கோடியக்கரை(நாகப்பட்டினம் மாவட்டம்)
தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன் குளம்.

பாம்புகள் ஊர்வன வகையை சார்ந்தவை.
  • சில பாம்புகள் குட்டிபோடும், பெரும்பாலானவை குஞ்சி பொரிப்பன.
  • பாம்பின் உலகில் மனித இனம் தோன்றுவதற்கு பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.
  • உலகம் முழுவதும் 2750 வகை பாம்புகள் உள்ளன. இந்தியாவில் 244 வகை பாம்புகள் உள்ளன.
  • 52 வகை பாம்புகளில் மட்டுமே நச்சுத்தன்மை வாய்ந்தவை.
  • பாம்பு பால் குடிக்காது. அவை விழுங்குகிற எலி, தவளைகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தே அதற்கு போதும்.
  • பாம்பானது, தான் பிடிக்கும் இரையை கொள்ளவும், செரிமானத்திற்காகவும் தான் தன்னுடைய பற்களில் நஞ்சு வைத்துள்ளது.
  • பாம்புகளுக்கு காது கேட்காது. அவை தரையில் ஏற்படும் அடிருகளை உணர்ந்து செயல்படும்.
  • வயலிலுள்ள எலிகளை பாம்பு அழிப்பதால், பாம்புகளை விவசாயிகளின் நண்பன் என்று அழைக்கப்படும்.
  • பாம்புக்கு காற்றில் வரும் ஓசைகளை கேட்க இயலாது. தரையில் ஏற்படும் அதிர்வுகளை உணர்ந்து, அதன்மூலம் பாம்பு முன்னெச்சரிக்கையாக இருக்கிறது.
  • பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தை அசையாமல் வைத்து, கட்டுபோட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
  • இந்தியாவில் உள்ள ராஜநாகம் தான் உலகிலேயே மிக நீளமான பாம்பு. 15 அடி நீளமுடையது. கூடுகட்டி வாழும் ஒரே வகை பாம்பு இது. ராஜநாகம் மற்ற பாம்புகளையும் உணவாக்கி கொள்ளும்.
  • ஒரு பாம்பை கொன்றால், அதன் இணைபாம்பு பழி வாங்கும் என்று சொல்வதுண்டு. இது உண்மையன்று, கொள்ளப்பட்ட ஒருவகை வாசனைத் திரவியம் மற்றப் பாம்புகளையும் அந்த இடம் நோக்கி வரவழைக்கிறது. பழிவாங்க, பாம்புகள் வருவதில்லை.
  • பாம்பு தன் நாக்கை அடிகடி வெளியே நீட்டும். அவ்வாறு செய்வதால் சுற்றுபுரத்தின் வாசனையை அறிந்து கொள்ளத் தான் அவ்வாறு செய்கிறது.
  • நல்ல பாம்பின் நஞ்சு கோப்ராக்சின் (Cobrozincobrozin) எனும் வலி நீக்கும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
  • இந்திய அரசு வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி, தோலுக்காகப் பாம்புகள் கொள்ளபடுவதைத் தடுக்க சட்டம் நிறைவேற்றி உள்ளது.
  • பாம்புகளின் பற்கள் உள்நோக்கி வளைந்திருக்கும். இரையைப் பிடித்தால் தப்பவிடாது. பாம்புகள் இரையை மென்று தின்பதில்லை, அப்படியே விழுங்குகின்றன.
இலக்கணமும் மொழித்திறனும்
  • தமிழில் உள்ள முதல் எழுத்துகள் மொத்தம் - முப்பது.அவை:
  • உயிர் எழுத்துக்கள் - பன்னிரண்டு
  • மெய் எழுத்துக்கள் - பதினெட்டு
  • உயிரும் மெய்யும் சேர்ந்து 216 உயிர்மெய் எழுத்துகள்ளை உருவாக்குகின்றன.
  • அன்றாடப் பேச்சில் பயன்படும் உயிர்மெய் எழுத்துகள் - கி, சி, பி, டி, தி, மி
  • அ, இ, உ, எ, ஒ - ஆகிய ஐந்தும் குறில் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களோடு சேரும்போது உயிர்மெய்க்குறில் எழுத்துக்கள் உண்டாகின்றன.
  • ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஓள - ஆகிய நெடில் எழுத்துக்கள் மெய் எழுத்துக்களோடு சேரும்போது உயிர்மெய்நெடில் எழுத்துக்கள் உண்டாகின்றன.
  • வண்மை - கொடைத் தன்மை
  • வன்மை - கொடுமை
  • மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம் - தந்தம்
  • ஆறுகள் மாசு அடையக் காரணம் - தொழிற்சாலைக் கழுவு
  • மழை குறையக் காரணம் - காடுகள் அழிப்பு
  • உலகம் வெப்பமடையக் காரணம் - வண்டிகளின் புகை
Courtesy: Dinamani
நன்றி: தினமணி நாளிதழ்

குறிப்பு:
1. வாசகர்கள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை deenapmn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.

4/01/2024

TNPSC Group 4 General Tamil Important Questions and Answers published by Dinamani Part- 3

4/01/2024 0

Dinamani Newspaper Published important question of TNPSC (Tamil Nadu Public  Service Commission) Exam.  


TNPSC குரூப் 4, குரூப் 2 தேர்வுக்கான பொதுத்தமிழ் பாடக் குறிப்புகள். இதைத் படித்து நடைபெற இருக்கும் TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள்.

நன்றி: தினமணி நாளிதழ் 

இலக்கணமும் மொழித்திறனும்
  • நாம் பேசும் மொழி மற்றும் எழுதும் மொழியை முறையாகப் புரிந்து கொள்வதற்கு தேவைப்படுவது - இலக்கணம்.
  • அ - எழுத்து குறிப்பது மனிதனை.
  • |- என்ற முதுகுக்கோடு குறிப்பது - பழங்காலத்தில் வேட்டை ஆடுவதற்கு மனிதன் முதுகில் சுமந்த அம்புக்கூட்டைக் குறிக்கிறது.
  • மனிதர்களை போன்று இனமும் நட்பும் கொண்டது - எழுத்துக்கள்.
  • ங் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து க. எ.கா: சிங்கம், தங்கை.
  • ஞ் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து ச. எ.கா: மஞ்சள், அஞ்சாதே
  • ண்ட, ந்த, ம்ப, ன்ற என்னும் எழுத்துகள் பெரும்பாலும் சேர்ந்தே வரும். எசகா: பண்டம், பந்தல், கம்பன், தென்றல்.
  • நட்பு எழுத்துக்களை இன எழுத்துகள் என இலக்கணம் கூறுகிறது.
  • க், ச்,த், ப் ஆகிய மெய்யெழுத்துக்கள் தன் எழுத்துகளுடன் மட்டும் சேரும். எ.கா: பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.
  • தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துகளுடன் சேரும் மெய்யெழுத்து - ர், ழ். எ.கா: சார்பு, வாழ்க்கை
  • முயற்சி திருவினை ஆக்கும் எனக் கூறியவர் - திருவள்ளுவர்.
  • கவலையை மறக்க உரிய வழி - ஏதாவதொரு வேலையில் ஈடுபடுவது.
  • எண்பத்தேழு வயதுவரை உ.வே.சா. தமிழுக்காக உழைத்தார். முயற்சிக்கு வயது வரம்பு கிடையாது.
  • முயற்சிக்கு நோய் தடை இல்லை.
நாலடியார்
  • சொற்பொருள்:
  • அணியார் = நெருங்கி இருப்பவர்
  • என்னாம் = என்ன பயன்?
  • சேய் = தூரம்
  • செய் = வயல்
  • அனையர் = போன்றோர்
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று - நாலடியார்.
  • நானூறு பாடல்களைக் கொண்டது - நாலடியார்.
  • அறக்கருத்துக்களைக் கூறுவது - நாலடியார்.
  • நாலடி நானூறு என்ற சிறப்பு பெயர் உடையது - நாலடியார்.
  • சமண முனிவர்கள் பலர் பாடிய தொகுப்பு நூல் - நாலடியார்.
பதினெண்கீழ்க்கணக்கு:
  • சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களுமாக மொத்தம் பதினொட்டு நூல்கள். - இவற்றை மேல்கணக்கு நூல்கள் எனக் கூறுவர்.
  • சங்கநூல்களுக்குப்பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு - பதினெண்கீழ்க்கணக்கு
  • பதினெண் என்பது - பதினெட்டு என்று பொருள்.
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை - அறநூல்களே.
  • கீழ்க்கணக்கு நூல்கள் எனவும் கூறப்படும் நூல் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.
  • நன்மை செய்வோர் வாய்க்காலைப் போன்றவர்.
சொற்பொருள்:
  • வண்மை = கொடை (வன்மை = கொடுமை)
  • உழுபடை = விவசாய கருவிகள்
  • தமிழ்மகள் = ஒளவையார்.
  • கோணி - சாக்கு
  • தலை சாயுதல் - ஓய்ந்து படுத்தல்
  • ஞாலம் - உலகம்
  • உவந்து செய்வோம் - விரும்பிச் செய்வோம்
  • நெறியினின்று - அறநெறியில் நின்று
  • சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் - ஒளவையார்.
  • தமிழ்மகள் எனபடுபவர் - ஒளவையார்.
  • தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கவிஞர் - பாட்டுக்கொரு புலவன் பாரதியார்.
  • காலம்: 11.12.1882 - 11.09.1921
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி என்றவர் கவிமணி.
Courtesy: Dinamani
நன்றி: தினமணி நாளிதழ்

குறிப்பு:
1. வாசகர்கள் மற்றும் போட்டியாளர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை deenapmn@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.
3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.