Type Here to Get Search Results !

இந்தியாவில் 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் - பிரதமர் அறிவிப்பு

தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும். மித்ரா மெகா ஜவுளி பூங்காக்கள் ஜவுளித்துறையை மேலும் வலுப்படுத்த உதவும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். புதிதாக அமைக்கப்படவுள்ள ஜவுளி பூங்காக்கள் ஜவுளித்துறைக்கான அதிநவீன உள்கட்டமைப்பை வழங்கும். கோடிக்கணக்கான முதலீட்டை ஈர்க்கும் மற்றும் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கும். மேக் இன் இந்தியா மற்றும் 'மேக் ஃபார் தி வேர்ல்ட்' என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Labels