-->

உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை

உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34. தற்போது தலைமை நீதிபதி உள்பட 27 நீதிபதிகளுடன் உச்ச நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 775 நீதிபதிகள் பணிபுரிகின்றனர், அவர்களில் 106 பேர் பெண்கள். உயர்நீதிமன்றங்களின் மொத்த பலத்தில் 9.5 சதவீதம் பெண் நீதிபதிகள் உள்ளனர்.

  • 1950 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டதில் இருந்து 2013 ஆம் ஆண்டு வரை 4 பெண்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் 15 பெண் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
  • 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான 13 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்தில் 8 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் ஒன்றில் கூட பெண் தலைமை நீதிபதிகள் இல்லை என்று கிரிண் ரிஜிஜு பதிலளித்துள்ளார். 
  • நாட்டிலிருந்து 15 லட்சம் வழக்குரைஞர்களில் கிட்டத்தட்ட 2 லட்சம் பேர் பெண்கள், இது பதிவு செய்யப்பட்ட மொத்த வழக்குரைஞர்களில் சுமார் 15.31 சதவீதம்.

Related Posts

Post a Comment

Subscribe Our Posting